Sunday, November 18, 2012

இஸ்ரேலுக்கு அர்தூகானின் பலமான செய்தி

இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுக்கு, துருக்கிய பிரதமர் ரஜப் தய்யிப் அர்தூகான் பலமான செய்தி ஒன்றை விடுத்துள்ளார். 2012 இன் நிலமைகள் 2008 இலிருந்து பல வகையில் மாறுபட்டிருக்கிறது என்பதே அந்த செய்தியாகும்.
2008 இல் தேர்தலுக்கு முன்னர், இஸ்ரேல் காஸாவை கடுமையாகத் தாக்கியது. இப்போது மீண்டும் தேர்தல் வந்துள்ளது. இஸ்ரேல் அதையே மீண்டும் செய்கிறது என எகிப்தில் இடம்பெற்ற துருக்கி - எகிப்திய வர்த்தக மன்றத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களைக் குரூரமாகக் கொல்வதில் இஸ்ரேல் மிகவும் மோசமாக உள்ளது. அந்நாடு துருக்கிக்கும் இதையே செய்தது. காஸாவுக்கு மனிதாபிமான உதவியைக் கொண்டு சென்ற மாவி மர்மரா கப்பலில் பயணித்த 9 துருக்கிய பிரஜைகளை சர்வதேச கடலில் வைத்து அவர்கள் கொன்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் லாவோஸில் இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு இதனையே சொன்னேன்: சிறுவர்களை எப்படிக் கொல்வது என்பது இஸ்ரேலுக்கு நன்கு தெரியும். முறையற்ற விதத்தில் இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

2008 இல் 1500 பேரைக் கொன்றதோடு, அவர்கள் 5000 பேரைக் காயப்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்குள் இஸ்ரேல் இந்த தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரேலும் காஸாவும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   
பலஸ்தீன – இஸ்ரேலிய விவகாரத்தைத் தீர்ப்பதில் அரசியலுக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்கும் மட்டும் சம்பந்தம் இல்லை. பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வு என்பவற்றுடனும் இது தொடர்புபட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.