போர் முழக்கத்திற்கு மத்தியிலும் காஸா மக்கள் திடமாகவே உள்ளனர் – எகிப்திய பிரதமர்
தான்
காஸாவுக்கு விஜயம் செய்தபோது, போர் முழக்கத்திற்கு மத்தியிலும் மக்கள்
திடமாக உள்ளதைக் கண்டதாக எகிப்திய பிரதமர் ஹிஸாம் கந்தில், துருக்கி-
எகிப்திய வர்த்தக மன்றத்தின் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப்
படையினரால் கொல்லப்பட்ட சிறு குழந்தை ஒன்றைக் கண்டபோது, தனது உள்ளம் ஆழமாக
வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியைப்
பேணுவதற்காக துருக்கியும் எகிப்தும் இணைந்து பணியாற்றுவதாக அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை
மக்கள் வீடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து இருப்பதாக சில தகவல்கள்
வெளிவந்துள்ளன. மரணத்தை கூட்டாக எதிர்கொள்வது ஒரு அருள் என ஒருவர்
தெரிவித்துள்ளார்
நன்றி மீள்பார்வை
No comments:
Post a Comment