Wednesday, December 26, 2012

சுனாமி சுழன்று எட்டு- பின்னால் சில எட்டுக்கள்




கடந்த 2004-டிசம்பர் -26 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். அமைதியான அதிகாலை அமைதியான பொழுது உலகையே ஒருமுறை உசுப்பி விட்டது.  இந்தோனேஸியாவின் சுமாத்திரா தீவுகளிற்கருகில் கடலடியில் புவிததகடுகளிற்கிடையே ஏற்பட்ட உரசல்கள் காரணமாக ஏற்பட்ட நிலநடுக்கம்  பாரிய சுனாமிப் பேரலைகளை உருவாக்கின. இது ரிச்டர் அளவுப்படி 9.0 ரிச்டர்களைக் காட்டியது இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா,மலேசியா, மாலைதீவு, பர்மா, கென்யா,தன்ஸானியா,மடகஸ்கார், சீஸெல் தீவுகள், அந்தமான் நிகோபார்  என இந்து சமுத்திரத்தை சூழ்ந்த பல நாடுகள், தீவுகள் பாதிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர், சொத்துக்களின் இழப்போ மிகப்பல. உலகெங்கும் 2 லட்சம்  முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர், பல்லாயிரம் பேர் அகதிகளாயினர், மனநலம் பாதிக்கப்பட்டனர், காணாமல் போயினர், உறவுகளை இழந்தனர்.
உலகிலே இடம்பெற்ற கொடூரமான இயற்கையளிவுகளில் இது 6வது இடத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு சோக சாதனையை எட்டிக் கொண்டது
1960ற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி இதுவாகும்


இவ் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள்
 பூர்த்தியாகின்றது.


சுனாமி வர காரணம் என்ன ?

தரையில் பூமியதிர்சி  ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் சேதமாகின்றன. மலைப்பகுதியில் உண்டாகும் போது எரிமலை உருவாகிறது. இதுவே கடற்பரப்பில் பூகம்பம் உண்டாகும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாகின்றன. இவற்றின் வேகம் ஆரம்பமான இடத்திலிருந்து, கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். 

சாதாரண மாக கடல் அலையின் உயரம் 7 அடிக்கு எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடியளவில் இருக்கும். ஆனால் அன்றைய தினம் இந்த அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளுகிறது.

சுனாமியை தடுக்க முடியா விட்டாலும், அது வரும் முன் கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வைக்கலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன் ஆழிப் பேரலைகள் உருவாகின்றனவா என்பதை கண்டறிய, சுனாமி எச்சரிக்கைக்கருவிகள் பெருங்கடல்களில் அமைக்கப் பட்டுள்ளன. இது கடலில் நீர் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். 

இதன் அடிப்படையில் அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்துவதாக உணர்ந்தால் எச்சரிக்கை தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படப் போகும் அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம். 

Saturday, December 22, 2012

உருளைக்கிழங்கில் அரபு எழுத்துக்கள்


இன்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் இல 152ஏ, அல் அக்ஸா வீதி, மட்டக்களப்பு தரவை-1, சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆதம் லெப்பை முஹம்மது ஜாபிர் என்பவரது வீட்டில் வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

காலை வேளையில் சமையலுக்காக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு துண்டங்களில் அல்லாஹ் என்ற இறை நாமம் மற்றும் திருக்கலிமா என்பவை அரபு மொழியில் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மற்றும் இவ்விடயம் தொடர்பாக அஷ்ஷெய்ஹ் சாஜித் அலி முப்தி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. உருளைக் கிழங்கு துண்டங்களை நேரடியாக அவதானித்து, பரிசீலித்த முப்தி அவர்கள் இது தொடர்பாக தெரிவித்த செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.

Sunday, December 9, 2012

சம்மாந்துறைப் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய த்தில் 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விா



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் பாராட்டு விழாவும் அப்துல் மஜீத் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக அம்பாவரை மாவட்ட சிறீ-லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபைத் தவிசாளருமான அல்-ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் கல்லூரி அதிபர் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இவ் விழாவில் கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.

Saturday, December 8, 2012

ஐந்தில் மூன்று நிரூபிப்பு!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களில் 5 குற்றச்சாட்டுக்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டதாகவும் அதில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

1ம் 4ம் 5ம் குற்றங்களில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார் எனவும் 2ம் 3ம் குற்றங்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

adaderana

Thursday, December 6, 2012

புலமைப்பரிசில் மாணவர்களை பாராட்டும் விழா-2012


 சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 26 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் 2012.12.05 அந் திகதி அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த  பாரட்டு விழாவில் சித்தி பெற்ற மாணவர்களையும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியைகளான ஜனாபா RUM. மன்சூர், AB. பரீதா RU. றிம்லான் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வைபவத்தில் புலமைப்பரிசில் நிகழ்வில் வலயத்தில் 179 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை தட்டிக்கொண்ட MBM. தஸ்னீம் என்னும்  மாணவனுக்கு விசேட பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது என்பதை சுட்டிகாட்டுதல் பொருத்தமாகும். 

அ.ம. தாஹா நழீம்

அம்பாறை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடை

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்படுகிறது.

  நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை மின் தடை அமுலில் இருக்கும் என்று கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பிரதேசத்திலுமே மின் தடை இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரிய திருத்த வேலைகளுக்காகவே இம்மின்சாரத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், இந்நாட்களில் ஏதாவது ஒரு சில நேரங்களில் பொது மக்களின் நலன் கருதி குறித்த சில நிமிடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதனால் மின் தடை அமுலில் உள்ளபோது எவரும் தமது வீடுகளில் தனிப்பட்ட முறையில் மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தாம் கண்டிப்பாக கேட்டுக் கொள்வதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கை மின்சார சபை பொறுப்பாக இருக்காது எனவும் கூறினார்.


thanks  adaderana

Friday, November 30, 2012

துருக்கியின் மறுமலர்ச்சி

துருக்கி மார்க்கம் போதிக்கும் பாடசாலைகளில் ஹிஜாப் தடையை நீக்கியுள்ளது. இந்த முன்னெடுப்பானது அங்குள்ள மதச்சாரபற்ற சக்திகளின் விமர்சனங்களைத் துண்டியுள்ளதுடன், துருக்கி அரசாங்கம் ஒர் இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலை நோக்கி நகர்வதற்கான சிறந்த சாட்சி இதுவேனவும் கூறியுள்ளன. 
துருக்கிய அரசியல் களத்தில் கல்வித்துறையானது. ஒரு முக்கிய மோதல் தளமாகக் கருதப்படுகின்றது. ஏ.கே.பி கட்சியின் பிரதம மந்திரி ரஜப் தையிப் அர்துகானின் முக்கிய ஆதரவாலர்களாக இருப்போரும், கபடமாக இஸ்லாமிய பெறுமானங்களை நுழைவிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தும் மதச்சார்பற்றவாதிகளும் இத்தனத்தின் மீதே மோதிக்கொள்கின்றனர்.
மதச்சார்பற்ற சக்திகளுக்கு தீ மீது எண்ணெய் ஊற்றும் நிகழ்வாக இருந்தது, இவ்வருடம் அர்துகான் தமது முக்கிய இலக்காக குறிப்பிட்ட ஆன்மீக பக்குவமுடைய இளைஞர்களை உருவாக்குவது
என்பதாகும். மட்டுமன்றி கடந்த தசாப்தம் முழுவதிலும் ஏ.கே.பி அரசாங்கம் கல்வித்திட்டத்தில் செய்து வந்த மாற்றங்கள், மார்க்கப் பாடசாலைகளது பங்கினை மேலும் வலுவூட்டியிருந்தன. மேலும், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட மாற்றங்களுக்கு அமைய 2013-2014 ஆம் ஆண்டுகளில் அமுலில் வரும் வகையில் சாதாரண பாடசாலைகளிலும் அல்குர்ஆன் பாடங்களுக்கு ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள் பற்றி அர்துகான் மட்ரிடில் நடைபெற்ற ஒர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிடும் போது நாம் அனைவருக்கும் அவரகளது விருப்புக்கு, அவர்களது பண்பாட்டுக்கு ஏற்ப தமது பிள்ளைகளை அணிவிக்க இடமளிப்போம். இவை அனைத்தும் பொது வேண்டுதலின் விளைவாக எடுக்கப்பட்ட படிப்படியான மாற்றங்களாகும்.
துருக்கிய சாதாரண வாழ்க்கையிலும் இந்த மார்க்க சார்பான நிலைப்பாடுகளுக்கும் மதச்சார்பற்ற நிலைப்பாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகளைக் காணமுடியும். 1923 ஆம் ஆண்டு முதல் தம்மை மதச்சார்பின்மையின் பாதுகாவளர்களாக சுய நியமனம் செய்து கொண்ட இராணுவத்தை அவரகளது அதிகாரங்களிலிருந்து குறைப்புக்களைச் செய்ததெல்லாம் இந்த அர்துகானின் கடந்த தசாப்த ஆட்சியாகும். இதை இஸ்லாமிய வேர் கொண்டதாக மதச்சார்பற்ற சக்திகள் வர்ணித்த போதும், அதை அர்துகான் அரசு மறுத்தே வந்துள்ளது.
இந்நிலையிலே அண்மைக்காலம் வரை இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறமுடியும் என்று நினைக்கக் கூட முடியாத, ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் பாரியார்கள் ஹிஜாபுடன் சமூகமளித்திருக்க இராணுவ தளபதிகள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி மாளிகையி்ல் நடைபெற்றது.
இதேவேளை கம்ஹீரியாத்என்ற மதச்சார்பற்ற பத்திரிகை இதனை கல்வியை இஸ்லாமியமயப்படுத்தலுக்கான முதற்படியே இது எனக் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீனுக்கு அங்கீகாரம்

இஸ்ரேலின்  தாக்குதல்களுக்கு இலக்காகிவரும் பலஸ்தீனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகள் வாக்களித்துள்ளன மற்றும்  எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித் துள்ளன.ஆனால் இந்த வாக்கெடுப்பில் 41 நாடுகள் பங்கேற்கவில்லை.
இதன்படி உறுப்புரிமையில்லா கண்காணிப்பாளர் நாடாக பலஸ்தீனை ஐ.நா.சபை அங்கீகரிப்பதற்கு அதன் பொதுச் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது தனி நாடு கோரும் பலஸ்தீனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பு முடிவு மூலம் இரு நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பலஸ்தீனத் தலைவர் மொஹமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வாக்கெடுப்பானது சமாதான முனைப்புக்களைப் பின்னடையச் செய்யும் என இஸ்ரேல் பிரதிநிதி கூறியுள்ளார்.
பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் ரமல்லா நகரில் பாரியளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கிரக ஒழுங்கு- அரிய நிகழ்வு

எதிரவரும் டிசம்பர் 3ம் திகதி 3 கிரகங்கள் நேர்கோட்டில் வரவுள்ளன.
சில இணையத்தளங்களின் தகவல்களின் படி 2737 வருடங்களுக்கொருமுறை நிகழும் இவ்வரிய நிகழ்வு எகிப்தின் மர்மப் பெட்டகமான கீஸா பிரமிடுகளின் மேல் வானிலே 3 கிரகங்களும் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சனி, வெள்ளி, புதன் கிரகங்களே இவ்வாறு அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Wednesday, November 28, 2012

பெரியபள்ளிவாசலில் கிரகணத் தொழுகை

இன்று  சந்திர கிரகரணமாகும். கிரகணத்தை முன்னிட்டு இதனால் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலிலும் விஷேட கிரகணத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நெடு நேரம் நடாத்தப்பட்ட இத்தொழுகையில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறைந்த அமைச்சருக்கான கதமுல் குர்ஆன் நிகழ்வு

மறைந்த அமைச்சர் அல் ஹாஜ் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது  வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கதமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் மாலைவட்டம் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 2012-11-29 அதிகாலை சுபஹுத் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் பெருமளவானோர் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்தித்ததோடு அன்னாரின் நற்பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.

இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம்

இந்த வருடத்தின் இரண்டாவதம் இறுதியானதமான சந்திர கிரகணம் இன்று (2012-11-28) திகதி இடம்பெற்றது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படும் இவ்வரிய நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே அதே போல் நிகழும்.
இவ்வாறான கிரகணமொன்று இன்று இடம்பெற்றது. அதனை இலங்கையில் சிறிதளலு காணக்கூடிய வாய்யு இருந்தது எனினும் காலநிலை மாற்றம் காரணமாக முகில்கள் சூழ்ந்த நிலையில் வானம் காணப்பட்டது. இதனால் கிரகணத்தை தெளிவாக பார்க்க கூடிய வாய்ப்பு  பல இலங்கையர்களுக்கு தவறவிடப்பட்டது.  

மர்ஹும் எம்.ஏ.அா்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு

சம்மாந்துறை அரசியல் சமூக வரலாற்றில் அதிககாலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மறைந்த முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு தினம் இன்றாகும் .
1926-10-15ம் திகதி அஹமது லெப்பை உடையார் முகம்மதலி , அப்துல் மஜீட் வன்னிமை கதீஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சம்மாந்துறை அரசினர் தமிழ்ப்பாடசதலையிலே ஆரம்பக் கல்விகற்ற இவர் . மட்டக்ளப்பு சிவானந்தா வித்தியாலயத்திலே தனது இடைநிலை கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பல்கலைக்கழகம் பிரவேசித்த அன்னார் கிழக்கிலங்கையிலேயே முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக 1949ம் வருடம் வெளியானார்.

சம்மாந்துறை மக்களின் வாழ்வாதார, கல்வி, விவசாய, பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பட்டின சபைத் தவிசாளராகவும், தவிசாளராகவும், மாவட்ட அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவம், அமைச்சராகவும் பல்துறைகளிலும் இருந்து சமூகப்பணி செய்தார்.

சேவையின் சிகரமென புகழப்பட்ட இவர் கடந்த 2011ம் வருடம் நவம்பர் 29ம் திகதி சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் இறையடி எய்தினார்.

சம்மாந்துறையின் முதலாவது வரலாற்று ஆவணப்படம் வெளியீடு

சம்மாந்தறையின் வரலாற்றெழுதியலின் ஒரு மறுமலர்சியுகம் 2012ல் ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக சம்மாந்தறையின் வரலாற்றில் அதிகளிவான வரலாற்று தொகுப்புகள் வெளியாகியுள்ள வருடமாக 2012ம் வருடத்தைக் கொள்ளலாம்
வெண்முத்து, அறுவடை, ஈழத்தின் இன்னுமொரு மூலைக்குப் பின்னர் மீலாத் மலர், திறப்பு விழாமலர்கள் , பட்டறை  வரை ஆங்காங்கே சேகரிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் 2012ம் வருடத்தில் சம்மாந்துறையின் முதலாவது வரலாற்றுத் தொகுப்பு தனி நூலாக “சம்மாந்துறை பெயர் வரலாறு“ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. அதன் பின்னர்  “சம்மாந்துறை அரசியல் வரலாறு” எனும் நுர்ல் வெளியானது. அதன்பின்னர் பிரதேச செயலகத்தின் தகவல் களஞ்சியமான பட்டறை வெளியானது, பின்னர் சம்மாந்துறையிலுள்ள குடிகள் பற்றிய “முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை“ எனும் நூல் அண்மையில் வெளியானது.

இந்த வரிசையில் டீகே இணைய குழுமமும் இணைந்து கொள்கின்றது சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை என்ற முதலாவது ஆவணப்படத்தை கடந்த 2012-11-26ம் திகதி இமய விழாவில் வெளியிட்டு வைத்தது.

Monday, November 26, 2012

இமயவிழா 2012-400000 பார்வைகள்

சம்மாந்தறை டீகே இணையதளம் நான்கு இலட்சம் வாசகர்களைக் கடந்துள்ளது.
மேற்படி இமயம் நோக்கிய இந்த நிகழ்வைக் கொண்டாடும் முகமாக இன்று டீகே மீடியா குழுமத்தினால் இமய விழா நிகழ்வொன்று சம்மாந்தறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
கடந்த 2008 ம்வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய ஊடகம் கடந்த நான்கு வருடங்களில் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் சேவைகள் என்பன பற்றிய கண்ணோட்டமும். சம்மாந்துறை 2012 எனும் தொகுப்புப் பார்வையும். இணைய தளத்தின் 400000 பார்வையாளர்களை தாண்டிய நிலைகள் பற்றிய 400000 பார்வைகள் எனும் நிகழ்வும் இடம்பெற்றது மற்றும் விஷேடமாக டீகே இணைய குழுமத்தின் கூட்டு முயற்சியில் உருவான ” சம்மாந்தறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை“ எனும் ஆவணப்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சம்மாந்தறை வரலாற்றில் முதன்முதலாவது ஒளிப்பதிவு வரலாற்று ஆவணப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுக்கு அதிதிகளாக சம்மாந்தறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் , மற்றும் மத்தியஸ்த சபை தலைவர் எஸ் அப்துல் றாஸிக், முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாஹீம், மற்றும் கவிஞரும் ஆய்வாளருமான பௌஸ்தீன் அவர்களும்  கெப்ஸோ நிறுவனத்தை சேர்ந்த சகோதரர் இம்டாட் மற்றும் பல பிரமுகர்களம் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்

Saturday, November 24, 2012

KINDS 21 அமைப்பின் இலவச செயலமர்வு


சம்மாந்துறை Kinds-21 Association அமைப்பின் ஏற்பாடடில் இலவச செயலமர்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப் பரிட்சையை எழுதவிருக்கும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வு இரண்டாவது நாளாக விஞ்ஞானப்பாடத்திற்காக இடம்பெற்றிருந்தது. 250-300 வரையிலான மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர். ஏற்கனவே ஆங்கில பாடத்திற்கு நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 27ம் திகதி அமைப்பினரால் அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் கணித பாடத்திற்கும் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

முர்சி முக்கிய தீர்மானம்

வியாழன் இரவு ஜனாதிபதி முர்ஸியின் பேச்சாளரின் அறிவிப்புக்களை அடுத்து எகிப்து அரசியல் களம் அதிர்ந்து போயுள்ளது. காஸா தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட சூடு  தணிவதற்கு முன்னாலே முர்ஸியின் இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முபாரக் கால அதிகாரிகளை களை எடுக்கும் ஒர் நகர்வாகவே நேற்றைய தீர்மானங்கள் நோக்கப்படுகின்றது.
முர்ஸியினால் நேற்று அரசியல் யாப்புக்கு சேர்க்கப்பட்ட விடயங்கள், 2011 ஆம் ஆண்டு புரட்சியினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றது. முர்ஸியின் இந்த அறிவிப்பினைத் தொடரந்து தஹ்ரிரில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் தமது ஆதரவுக் குரல்களை எழுப்பினர்.
 முர்ஸியினால் நேற்று அறிவிக்கப்பட்ட யாப்புக்கான முக்கிய சேர்க்கைகளாவன 
1. ஜனாதிபதியினால் அறிவிக்கப்படுகின்ற அறிவிப்புக்கள், சட்டங்கள் மற்றும் யாப்புக்கான சேர்க்கைகள் அனைத்தும் நீதித்துறை உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும் செயலிழக்கச் செய்யவோ தாக்கல் செய்யவோ முடியாது.
2. எகிப்துக்கான யாப்பு வரைஞர் குழு மற்றும் பாரளுமன்ற உயர் சபையான ஸூரா சபை என்பன நீதித்துறை உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும் செயலிழக்கச் செய்யவோ களைக்கப்படவோ முடியாது. மேலும், யாப்பு வரைவுக்கான காலவரையறை இரண்டு மாதங்களினால் நீடிக்கப்படுவதுடன் யாப்பு ஆவணப்படுத்தலுக்கான காலம் 8 மாதங்களாக நீடிக்கப்படுகிறது.
3. ஜனவரி 25 தொடக்கம் புரட்சியில் ஈடுபட்டோரை கொலை செய்தல், அவர்களை காயப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டோருக்கான சட்டத்தீர்ப்புக்களை மீள்தீர்ப்புக்கு உட்படுத்தல். மற்றும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து அரச அதிகாரிகளையும் ஓய்வு பெறச்செய்தல்.
4. சட்ட  மா அதிபர் அப்துல் மவ்ஜீத் மஹ்முத் ஓய்வுக்கு உட்படுவதுடன் அவரது பதவிக்கு தளத் இப்றாஹீம் நியமிக்கப்படுகிறார்.

Thursday, November 22, 2012

மாபெரும் கண்டணிப் பேரணி











 இஸ்ரேலிய யுதர்களின் பலஸ்தீன் காஸா மீதான வெறியாட்டத்தைக் கண்டித்து இன்று மாபெரும்  கண்டணப் பேரணி அமைதியான முறையில் தென் கிழக்குப் பல்கலைக் கழக ஒலுவில் வளாகத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் மாணவர் பேரவையின் தலைமையில் இடம்பெற்றது.

Wednesday, November 21, 2012

இஸ்லாமிய புதுவருடத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொண்டாட்டம்


வௌ்ளிக்கிழமை (16.11.2012) ஆரம்பமான இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1434முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொறலை அஹதிய பாடசாலையுடன் இணைந்து பாடசாலையின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் முஹர்ரம் பிரதான நிகழ்வை தெமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இல் நடாத்தியது.
மேற்படி நிகழ்வில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மேலதிகச் செயலாளர் எம்.ஐ.அமீர்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவிஉதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன், ஜனாதிபதியின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஹஸன் மௌலானசரத் ஹெட்டியாராச்சி, , மற்றும் அஹதியாப் பாடசாலைகளின் சம்மேளன அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பணிப்பாளர் நவவிஹஸன் மௌலானாஅருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி,அஹதியா பாடசாலை அதிபர் ஷிப்லி ஹாசிம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அஹதியாவின் 25 வருட கால சேவையை பாராட்டி அதிதிகளால் ஷிப்லி ஹாசிமுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
Hijri1
Hijri8
Hijri7
Hijri2

வாகன விபத்தில் ஒருவர் பலி

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று, கோமாரி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் அக்கரைப்பற்று- மட்டக்களப்பு தனியார் பஸ்ஸின் நடத்துனருமாவர்.

பயணிகளுடன் மட்டக்களப்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முற்பட்ட போது மிதிபலகையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், இவரின் தலையில் பஸ் ஏறியமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொட்ர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் விஜயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 






கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்


கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
புதிய மாணவர்கள சேர்ந்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் 2012.11.21ஆந் திகதி முதல் பாடசாலையில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
சிறந்த கல்விச் சமூகம் ஒரு நாட்டிற்கும், அந்தச் சமூகத்திற்கும், அந்த பிரதேசத்திற்கு சிறந்த சொத்தாக காணப்படுகின்றது. அவ்வாறான பணிகளை 1938ம் ஆண்டு தொடக்கம் இந்த மண்ணிலிருந்து செய்து வரும் இந்த பாடசாலையானது பல கல்விமான்களை பல அறிஞர்களையும் இந்த சமூகத்திற்கு வழங்கி அதன் பெருமையை நாளாந்தம் தெரியப்படுத்திக்கொணடிருக்கின்றன.

இந்த  வகையில் அதன் வளர்ச்சியிப்பாதையில் அதற்கான ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் சம்மாந்துறை சமூகத்திற்கும், ஏனைய அரசியல்வாதிகளுக்கும் நன்றிகளைச் சொன்னால் ஒன்றும் சேர்வடைந்து போவதில்லை.
மேலும் பல சாதனைகளை நடாத்த திட்டமிட்டுல்ல இந்தப்பாடசாலை எதிர்வரும் காலங்களில் ஒரு சிறந்த ஆரம்ப நிலைப்பாடசாலையாக தோற்றம் பெறுவதற்கான முனைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றது. அதன் ஊடாக ஆரம்ப மாணவர்களின் கல்வி நிலையை விருத்தி செய்து அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் ஈடாக சிறந்த கல்விச் சமூகத்தை பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
-    ஏ.எம்.தாஹா நழீம்

21-11-12 பாலின்ரோம் திகதி

பாலின்ரோம் palindrome என்பது ஒரு வார்த்தை அல்லது ஒரு எண்தொடர் அல்லது ஏதோ ஒரு வரிசை, முன்னால் இருந்தோ அல்லது பின்னால் இருந்தோ வாசிக்கும் போது ஒரே மாதிரியாக அமைந்திருத்தல் ஆகும்.

உதாரணமாக “விகடகவி“ என்ற சொல்
“மாடு பாடுமா“ என்ற வசனம் பொன்றவை
இது போலவே திகதிகளிலும் பாலின்ரோம் திகதிகள் உண்டு

அவ்வாறான ஒரு திகதியே 21-நவம்பர்-2012 ஆகும் அதாவது இதனை எழுதும் போது திகதி-மாதம்-வருடம் என்ற ஒழுங்கில் எழுதும் போது 21-11-12 என வரும் . இவ்வாறான திகதிகள் அரிதாகவே காணப்படகின்றன.

Tuesday, November 20, 2012

ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டுசம்மாந்துறையில் மர நடுகை




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் பதவியேற்பின்  இரண்டாவது பதவிக் காலத்தின் 2வது வருடப் நிறைவையிட்டும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் சம்மாந்துறை தொகுதியின்  சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமைமையில் மரம் நடுகை நிகழ்வும், பிராத்தனையும் இன்று சனிக்கிழமை (2012-11-20) காலை சம்மாந்துறை  சென்னல் கிராம நிலையத்தில் நடைபெற்றது .

 இந்நிகழ்வில், பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான்,  பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.எம்.சிப்லி, எம்.ஐ.றனூஸ், எம்.பி.முகைதீன், தியாகரன் ஆகியோரும் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் உட்பட பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது,  ஜனாதிபதியின் தேக ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும்  சம்மாந்துறை மத்தயஸ்த சபையின் தவிசாளரும் உலமா சபையின் செயலாளருமான மௌலவி எம்.ஐ.அச்சு முகம்மது அவர்களின்  துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

குடி வழிமுறை தகப்பன் வழியே- அஷ்ஷைஹ் எம்.பி.அலியார் ஹஸ்ரத்


Monday, November 19, 2012

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், ஜனதிபதியின் 67 அகவையை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம்

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், ஜனதிபதியின் 67 அகவையை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம்

எமது ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது என்பதை நாங்கள் அறிந்த விடயமே. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் மர நடுகை, மதசார்பான நடவடிக்கைகள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

 

கல்வி அமைச்சின் சுற்று நிருபதிற்குகமைவான முறையில்  சம்மாந்துறையில் உள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான பிள்ளைகளை சித்தியடைவைக்கும் பாடசாலையான கமு/ சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது அரசியல் சார்பான ஒரு பிரமுகரின் பிரசன்னத்துடன் நடாத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றுநிருபத்தில் கோரப்பட்டிருந்தததும் இங்கு ஒரு முக்கிய விடயமாகும்.

இந்த கோரிக்கைக்கமைவாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் சமாதான கல்விக்கான  இணைப்பாளராகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஏ. முகம்மட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தார்.

அத்துடன் இப்பாடசாலை அதிபர் TM. தௌபீக் மற்றும் இப்பாடசாலையின் செயற்பாட்டாளர் .AM. தாஹா நழீம் தரம் -5 கற்பிக்கும் ஆசிரியைகளான RUM.மன்சூர், AU. றிம்லான், AB. பரீதா ஆகியோர்  இந்த நிகழ்வில் கலந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஜனாதிபதி அவர்களின் 67 பிறந்த தின நிகழ்வை மிக விமர்சியாக கொண்டாடினார்கள். 





Sunday, November 18, 2012

இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு-யூசுப் அல் கர்ளாவி

ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி சென்ற வெள்ளிக்கிழமை முதன் முறையாக உலகப் புகழ்பெற்ற ஜாமிஉல்-அஸ்ஹரில் (அல்-அஸ்ஹர் பள்ளிவாசல்) ஜும்ஆ பிரசங்கத்தை நிகழ்த்தினார். “உலகின் முன்னணி பள்ளிவாசல்கள் பலவற்றில் நான் பேசி இருக்கிறேன். ஆனால், அல்-அஸ்ஹரில் பேசுவது இதுவே முதல் முறை“ என அவர் அங்கு குறிப்பிட்டார்.
இதன்போது, காஸாவில் தற்போது இடம்பெற்றுவரும் தாக்குதலை கண்டித்தமைக்காக எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸிக்கும் கட்டார் நாட்டுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

காஸா மீதான இஸ்ரேலின் அடாவடித்தனத்தை அவர் இப்பேருரையில் வன்மையாகக் கண்டித்தார். “கொல்லப்படும் அளவுக்கு காஸா மக்கள் என்னதான் செய்தார்கள்?. இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு. வரலாறு முழுவதும் அது அதனையே செய்து வந்திருக்கிறது“ எனவும் அவர் சாடினார்.

சிரிய மக்களுக்கு எதிராக பஷார் அல் அஸத் செய்யும் கொடுமைகளையும் அவர் கண்டித்துப் பேசினார்.

உலக இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியத்தின் தலைவராக கர்ளாவி உள்ளார். ஜமால் அப்துன் நாஸரின் காலத்தில் எகிப்தில் இருந்து வெளியேறிய அவர் கட்டாரில் தற்போது வாழ்ந்து வருகிறார்.

2011 ஜனவரி 25 புரட்சியின் காரணமாக முபாறக் வீழ்த்தப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர், தஹ்ரீர் சதுக்கத்தில் கர்ளாவி குத்பாவை (வெள்ளிக்கிழமை நிகழ்த்தும் மார்க்க உரை) நிகழ்த்தினார். இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
கர்ளாவி 1926 இல் எகிப்தில் பிறந்தார். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அவர், இன்று சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அறிஞராகத் திகழ்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதியின் பிறந்தநாள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 ஆவது பிறந்த தினம் இன்றாகும் அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டும், அவர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று இன்று 8 ஆவது வருடமாவதை முன்னிட்டும் நாட்டின் பல பகுதிகளில் விசேட நிகழ்வுகளும் மரநடுகை நிகழ்வுகளும்  முதியோர் கெளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 1945ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி ஹம்பாந்தோட்டையில் பிறந்தார். 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது வருட பூர்த்தியும் அவரின் பிறந்த நாளும் அதாவது ஒரே நாளில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

இஸ்ரேலுக்கு அதனைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதாம்: ஒபாமா

காஸாவில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தன்னைப் பாதுகாப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
“தனது மக்களை நோக்கி ஏவுகணைகள் மழைபோல் வந்து தாக்கும்போது, உலகில் உள்ள எந்த நாடும் அதை சகித்துக் கொள்ளாது. தன்னைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை நாம் முழு மனதாக ஆதரிக்கிறோம்“ என அவர் தெரிவித்துள்ளார். அவர் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின்போது தாய்லாந்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் தரைவழியாக காஸாவை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும், எகிப்து இதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.

நன்றி (மீள்பார்வை)

Pages

Pages

Visitors

474562

feature content slider

Content right

.

.

.