Saturday, September 8, 2012

இன்றைய தேர்தல் வாக்களிப்பின்போது பத்து வன்முறைச் சம்பவங்கள், இருவர் கைது - பெப்ரல் அமைப்பு

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டு வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் நிலையில், இதுவரையில் 10 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இல்லை எனவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுரம் வெளியிடல், விருப்பு இலக்கத்தை பார்வைக்கு வைத்தல் உள்ளிட்டவை குறித்தே முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து சிலரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் எனினும் பொதுவாக நோக்குமிடத்து தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியோர் என்ற வகையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் போலியாக வாக்களிக்க முனைந்தார் என கிண்ணியாவிலும் மற்றையவர் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என ஹொரவப்பொத்தானையிலும் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.