Friday, December 30, 2011

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்க ஏற்பாடு, உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக பணிப்பு, விசேட பேட்டியில் உபவேந்தர் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப  பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளை இப்பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்கு குவைத் அரசாங்கம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு முன்வந்துள்ளது என்று உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் தெரிவித்தார்.

உபவேந்தர் இஸ்மாயில் அவர்களது பேட்டியின் சில பகுதிகளை இங்கு தருகின்றோம்

கேள்வி:
நீங்கள் உபவேந்தராகப் பதவியேற்ற பின்னர் இப்பல்கலையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பில் குறிப்பிட முடியுமா?

2009 ஜுன்  மாதமளவில் நான் பதவியேற்றேன். எனது காலப்பகுதியில்   பல்கலை அபிவிருத்தியிலும் மாணவர் கல்வி மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குறிக்கோள்:

நான் உபவேந்தர் பதவியை ஏற்பதற்கு  முன்னரே என்னிடம் ஒரு தூரநோக்கு சிந்தனை இருந்து வந்தது. அதாவது இதனை ஒரு சர்வதேச தரத்திலான ஒரு பல்கலைகழகமாக தரமுயர்த்த வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்admin

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை நான் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறேன். என்றாலும் ஒரு சில மாதங்களில் எமது இலக்கை அடைந்து விட முடியாது. நான் வரும்போது 10 ஏக்கர் பரப்பிலேயே பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.ஆனால் அதனை நாம் 200 ஏக்கர் பகுதிக்கு விஸ்தரிப்புச் செய்து கற்றல் செயற்பாடுகளுக்கான சூழலாக மாற்றி அழகு படுத்தியுள்ளோம்.

அபிவிருத்தி என்பது தானாக வருவதில்லை. கற்றல்-கற்பித்தல்-ஆய்வு நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்கின்ற  போதே அதனை அடைந்து கொள்ள முடியும். எனினும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னே ற்றம்  கண்டு வந்த போதிலும் ஆய்வு சம்பந்தமான நடவடிக்கைகள் எதிர்பார்த்தளவு இருக்கவில்லை. அதற்காக இரண்டு முறை சர்வதேச ஆய்வு மாநாடுகளை எமது பல்கலையில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளோம். இதன் மூலம் தேசிய, சர்வதேச ரீதியிலான கவனத்தை ஈர்த்து பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளும் நல்லுறவும் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளன.

அத்துடன் போருக்கு பின்னரான எமது நாட்டின் அபிவிருத்தி பற்றியும் சமாதான சூழ்நிலை பற்றியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  அரசின் செயற்பாடுகள், உண்மையான நிலைவரம் தொடர்பிலும் எமது நாடு பற்றி சர்வதேச மட்டத்தில் நிலவும் தப்பபிப்பிராயங்ககளை நிவர்த்திப்பதற்கும் இவ்விரு ஆய்வு மாநாடுகளும் பெரிதும் உதவியுள்ளன

கேள்வி:  
அபிவிருத்தி தொடர்பில் உயர் கல்விஅமைச்சரின் முழுமையான  ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கிறதா?

அமைச்சர் எஸ். பி.திசாநாயக்க அவர்கள் உயர் கல்வி அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் பல்கலைகழக கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பல்கலை மாணவர்களை தொழில் தேடி வரும் வகையில் அவர்களுடைய கல்வித்தகைமை அமைந்திருக்க வேண்டும் என்பதே அமைச்சரின் முக்கிய குறிக்கோளாகும்.

பல்கலைகழக கல்வியை பூர்த்தி செய்து விட்டு தொழில் வாய்ப்புக்காக போர்க்கொடி தூக்குபவர்களாக இருக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் அவர்கள் இம்மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.DSC06469
அத்துடன் பல்கலை அபிவிருத்திக்கு கூடுதல் நிதியை கொடுத்து பின்னர் அப்பல்கலைகழகமே சம்பாதித்து தமது தேவையை நிறைவு செய்து கொள்ளும் நிறுவனமாக மாற  வேண்டும்  என்பதே அவரின் தூரநோக்க சிந்தனைகளாகும்.

எமது பல்கலைக்கழக அபிவிருத்தியில் அமைச்சர் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றார். அவர்கள் பதவியேற்று முதன் முறையாக எமது பல்கலைக்கழகத்திற்கே விஜயம் செய்தார். இது வரை 3  தடவைகள் வருகை தந்துள்ளார்
கடைசியாக வருகை தந்த போது எமது பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழிநுட்ப பீடத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னை பணித்துள்ளார் அது எமக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்

கேள்வி:  
வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குதல் பற்றி?

எமது நாட்டு பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதன் மூலம் அவற்றை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முடியும் என்ற நோக்கமும் அவரிடம் உள்ளது.இவற்றுக்கேல்லாம் நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.


பகிடிவதை:  ஒழிப்பு

எமது பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ஒழிக்கும் நடவடிக்கை முழு வெற்றி அடைந்துள்ளது  கடந்த 2 வருடங்களில்  பகிடிவதை செயற்பாடுகள் பெருமளவு குறைந்துள்ளது. அவற்றை முடியுமானவரை தடுத்து ள்ளோம். மாணவர்களின் ஒழுக்கம் மேம்பட்ட நிலையில் உள்ளது  ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று போராட்டங்கள் மற்றும் ஒழுங்கீனமான செயற்பாடுகளை  நீங்கள் இங்கு  காண முடியாது. இங்கு நல்லதொரு கற்றல் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இன்னுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால்  குவைத்   அரசின் நிதி உதவியுடன் பாரிய அபிவிருத்திப்பணிகள் மேற்ற்கொள்ளப்பட்டு வருகின்றன. தான் உபவேந்தராகப் பதவியேற்ற பின் முதலாவது  கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதற்கு குவைத்  முன்வந்துள்ளது


மாணவர்களுக்கு அதி சிறந்த முறையில் சகல வகையான வசதிகளையும் உட்கட்டமைப்புகளையும் செய்து கொடுத்து வருகின்றோம். அவை நிறைவடையும் நிலையில் DSC06517உள்ளன.இவ்வேலைத்திட்டங்கள் முழுமையடையும் பட்சத்தில் நிச்சயமாக இப்பல்கலைக்கழகம் ஒரு சிறந்த நிறுவனமாக திகழும் என்பதில் சந்தேகம் கிடையாது.


அதேவேளை மூவின மாணவர்களும் வந்து கற்கக்கூடிய வசதிகளையும் சமய கலாசார விழுமியங்களை பேனுவதற்கான ஏற்பாடுகளையும் இங்கு செய்து கொடுத்துள்ளோம். அந்த வகையில் முஸ்லிம், சிங்கள மற்றும்  இந்து மாணவர்களின் நலன் கருதி மதவழிபாட்டுத் தளங்களை  அமைத்துக் கொடுத்துள்ளோம். அதற்கு  மேலாக சர்வதேச ரீதியாகவும் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பல இனங்கள் பல கலாசரங்கள் பல மொழிகள் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக இது மாற்றமடைவதன் மூலமே சர்வதேச தர கணிப்பீட்டுக்கு எமது பல்கலைக்கழகத்தை உட்படுத்த முடியும்.

விசேட கற்கை நெறிகள்

அத்துடன் விஞ்ஞான பீடத்தில் கணணி,புள்ளிவிபரவியல்,பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் உயர் கல்விக்காக நாட்டம் கொண்டவர்களின் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக MBA கற்கை நெறியை ஆரம்பித்து - மிகவும் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. இவை தவிர சமுகத்தை சிறந்த முறையில் வழிநடத்தவும் DSC08120திறமைசாலிகளை வளர்த்து விடுவதற்காகவும் விரிவாக்கல் கற்கை நிலையத்தின் மூலம் குறுகிய கால டிப்ளோமா கற்கை நெறிகளை நடாத்தி வருகின்றோம்.

சமுக உறவுகளை வளர்பதற்காக பல்வேறு தரப்பினரையும் உள்வாங்கி  சமுக பொருளாதார அரசியல்  ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு வகையான கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றோம்.

அத்துடன் எமது பல்கலையில் இருந்து அதிக விரிவுரையாளர்களை கலாநிதி மற்றும் முதுமாணி நெறிகளை பயில்வதற்காக சர்வதேச ரீதியில் ல் அங்கிகாரம் பெற்ற பல்கலைகலகங்களுக்கு அனுப்பியுள்ளோம்.

பல்கலை கட்டுமான பணிகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனக்களின் உதவிகளை பெற்று வருகிறோம். இப்பல்களைக்கலகத்தை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் நவீன வடிகாலமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அம்பாறை DCC கூட்டத்தில் இவ்வேலை திட்டத்திற்கென  நிதி ஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.