www.sammanthurai.tk என்ற இணையத் தளத்தின் மூலம் எமது ஊர் நடப்புகளை உலகளாவிய ரீதியில் எடுத்துக் கூறும் தங்களின் முயற்ச்சி வெற்றியடைய இவ்விணைய்யத் தளத்திற்கு எனது ஆசிச் செய்தியை வழங்குவதில் உளப்பூரிப்படைகிறேன்.
ஒரு சமூகம் மேன்மையடைய வேண்டுமானால் அச்சமூகத்தைப் பற்றிய நாட்டு நடப்புகள் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தை விழிப்படையச் செய்ய, நீங்கள் அதி உச்சமான சேவையை முன்னெடுக்கின்றீர்கள். இச் சேவை நெடுங்காலம் நிலைத்திருக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
எமது சமூகத்தின் இளைஞர்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.எமது சமூக நலனுக்காக சுறு சுறுப்பாக இயங்க களமியங்கியிறுக்கின்றார்கள்.முன்னேற்றப் பாதையில் மிகச் சிறப்பாகப் புறப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையிலும்,தொழிநுட்பத் துறையிலும் இன்னும்மின்னும் எத்தனையோ துறைகளிலும் உயர்வடைந்திருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற-சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது.
எனவே, சமூகப்பணியில் இவர்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும். புதுவொளி பிறக்கட்டும் எனக்கூறி இவ்விணைய தளம் நின்று நீடுழிகாலம் வாழ வளர வாழ்த்துகின்றேன்.
இது-
M.L.A.அமீர் T.A
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகணசபை.
2010.10.31
Sunday, October 31, 2010
Saturday, October 30, 2010
ஐக்கிய அமெரிக்கா தூதரகத்தின் அதிகாரிகளால் லொத்தரி வீசா பற்றிய அறிவுறுத்தல் கருத்தரங்கு
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளினால் லொத்தர் வீசா நிகழ்ச்சி பற்றிய விளக்கவுரை சம்மாந்துறையில் நடைபெறவுள்ளது.இலவசமாக எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றிய விளக்கவுரை தமிழ்,சிங்கள மொழிபெயர்ப்புடன் வழங்கப்படும்.அனைவருக்கும் அனுமதி இலவசம்.
இடம்:அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
திகதி : ஒக்டோபர் 31.2010
மாலை: 03.00 மணி
இடம்:அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
திகதி : ஒக்டோபர் 31.2010
மாலை: 03.00 மணி
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய முன்பள்ளிக் கட்டிடம் திருத்துவதற்காகவும், வகுப்பறைத் தரையை செப்பனிடுவதற்காகவும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ எச்.எம்.ஹரீஸ் அவர்கள் ஒதுக்கித் தந்துள்ளார்.
பாடசாலைக் கட்டிட சிறு திருத்தத்திற்காக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள்.
மேலும் பாடசாலை அபிவிருத்திற்காக கெளரவ விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள் என பாடசாலை அதிபர்கள் ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவித்தார்.
பாடசாலைக் கட்டிட சிறு திருத்தத்திற்காக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள்.
மேலும் பாடசாலை அபிவிருத்திற்காக கெளரவ விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள் என பாடசாலை அதிபர்கள் ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவித்தார்.
Friday, October 29, 2010
சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு ஒரு தொகுதி மரக்கன்றுகள் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்புப் பல்கலைக்கழக கணணிப் பிரிவின் தொழிநுட்பக் கருத்தரங்கில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்களும் 2010.10.29 ஆகிய இன்று கலந்து கொண்டுள்ளனர்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் தகவல் தொழிநுட்ப கருத்த்தரங்கில் கொழும்பில் தற்பொழுது கலந்து கொண்டுள்ளனர்.இதில் பல்வேறுபட்ட பயனுள்ள விடயங்களை பெற்றுக் கொண்டனர் என எமது செய்தியாளர் எம்.எம்.தில்ஷாத் தஸ்னீம் தெரிவித்தார்.மேலும் இத் தகவல் தொழிநுட்பக் கருத்தரங்கானது கொழும்புப் பல்கலைக்கழக கணணிப் பிரிவில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இம் மாணவர் குழுவை பின்வரும் ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.எம்.ஹசீம்,எஸ்.எம்.ஹில்மி, எ.பி.சம்சுனா, திருமதி.செய்னுல் ஆப்தீன்
எம்.பி.எம்.ஹசீம்,எஸ்.எம்.ஹில்மி, எ.பி.சம்சுனா, திருமதி.செய்னுல் ஆப்தீன்
Thursday, October 28, 2010
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய விழாக் கொண்டாட்டம் சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில்
தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய விழாக் கொண்டாடும் தினமாக 2010ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகளைச் செய்து கொள்ளும் வகையில் மாணவர்களிடமிருந்தும்,ஆசிரியர்களி டமிருந்தும் நூல்களைப் பெற்றுக் கொள்வதையும் மாணவர்களுக்கான நூல்களை சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஜனாப் எ.எ.ஜப்பார்,நூலகர் ஜனாப் எ.எல்.எம்.ஜாபிர் படங்களில் காணலாம்.
மின்னல் தாக்கத்தினால் இளம் குடும்பஸ்த்தர் பலி



சடலம் உடனடியாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. சம்மாந்துறைப் பொலிஸார் இது தொடர்பான் மேல் விசாரணைகளை நடத்துகின்றனர்.
Wednesday, October 27, 2010
சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களினை பாராட்டு விழா
சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களினை பாராட்டும் விழாவில் கெளரவிக்கப்பட்ட மாணவர்களுடன் பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல் மெளலவி,ஆசிரியர்களான ஏ.எல்.எம்.ஜாபீர்,ஏ.பீ.பரீதா, எம்.ஐ.ஸமினா பிரதிக் கல்விப் பணிப்பாளர் அமீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ,ஏ.றசூல்,அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி யூ.எல்.எம்.புகாரி உப பீடாதிபதி ஏ.எல்.எஸ்.ஏ.சத்தார்,பிறை எப்.எம் வானொலி அறிவிப்பாளர் யூனுஸ் கே றஹ்மான் ஆகியோர் காணப்படுகின்றனர்.
Tuesday, October 26, 2010
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப் பாதையில் வெற்றி நடை போடுகிறது



சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையானது அபிவிருத்தியின் உச்ச வரம்பை தொடுமளவுக்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் குறுகியகாலத்தில் எட்டியுள்ளது. தற்பொழுது பல்வேறுபட்ட சிகிச்சை முகாம்கள் எமது வைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது.இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

Monday, October 25, 2010
கிழக்கு மாகாண மட்டத்திலான விஞ்ஞான வினாடி வினாப்போட்டி பரிசளிப்பு விழா
கிழக்கு மாகாண மட்டத்திலான விஞ்ஞான வினாடி வினாப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவி செல்வி.முஹம்மட் றபீக் ஹன்ஷா இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.இவருக்கான வெள்ளிப் பதக்கத்தையும்,சான்றிதழையும் பாடசாலை ஆராதனையில் வைத்து வித்தியாலய அதிபர் ரீ.எம்.தெளபீக் மாணவிக்கு வழங்குவதைக் காணலாம்.
Sunday, October 24, 2010
மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரஃப் அவர்களின் நினைவு மலர் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
23.10.2010
அன்று மாலை 04.45 இற்கு சம்மாந்துறை நகர மண்டபத்தில் மறைந்த தலைவர்
மர்ஹூம் அஸ்ரஃப் அவர்கள் மண்ணை விட்டுப் பிரிந்து ஒரு தசாப்தத்தை
முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக தமிழ்ச் சங்கத்தின் கனவுகள்
கலைக்கப்பட்ட அஸ்ரஃப் எனும் "அடையாளம்" கவிதைத் தொகுப்பு நூல் விழாவானது
வெகு விமர்சையாக சம்மாந்துறை மண்ணில் அரங்கேறியது.இதில்
புத்திஜீவிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரமுகர்களோடு தலைவர்
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் ஆதரவாஅளர்கள் மற்றும் போட்டியில் பங்குபற்றிய
கலைஞர்களும் இவ் விழாவில்
கலந்து சிறப்பித்தனர்.
Saturday, October 23, 2010
முன்பள்ளி சிறார்களின் கண்கவர் பிரமாண்டக் கண்காட்சி
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளும் இணைந்து நடாத்திய சின்னஞ் சிறார்களின் ஆக்கபூர்வமான அற்புதத் திறமைகள் இன்று சம்மாந்துறை அல்-ம்ர்ஜான் மகளிர் கல்லூரியில் உத்தியோகபூர்வ அரங்கேற்றம் சுமார் காலை 9.25 மணியளவில் இடம்பெற்றது.இதில் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் பல்வேறு வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் போன்றோர் பிரசன்னமாகி இருந்தனர்.மேலும் இந் நிகழ்வானது அனைத்து மக்களினதும் உள்ளங்களையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறையில் திடீர் விபத்துக்களில் ஒருவர் மரணம் இருவர் படுகாயம்
இன்று 23.10.2010 நண்பகல் 12.30 மணியலவில் சம்மாந்துறை நெல்லுச் சேனை வட்டையில் கிறவல் மணல் ஏற்றலுடன் தொடர்புடைய உழவு இயந்திரமும் பெட்டியும் திடீரென பாதையை விட்டு வாய்க்காலுக்குள் பாய்ந்ததன் காரணமாக சாரதி எப்.சிராஜ்.வயது 19(பத்து வீட்டுத்திட்டம்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் மரணமானார்.
உழவு இயந்திரத்துடன் உதவிக்குச் சென்ற 18 வயது மதிக்கத்தக்க முஸம்மில் என்பவர் ப்டுகாயம் அடைந்த நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை திடீர் விபத்தில் மரணமடைந்த சிறாஜின் நண்பர் மலையடிக் கிராமம்-3 இல் வசிக்கும் முபாரக் (19வயது) வைத்தியசாலைக்குச் சென்று நிலைமையை அவதானித்து மரணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளுக்காக வீடு நோக்கி வந்து கொண்டிருக்கையில் பி.ப.2.50 சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் இலங்கை வங்கிகும் அல்-மர்ஜான் மகளிர் வித்தியாலத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிளில் பிராயணிக்கையில் அதே திசையை நோக்கி பின்னால் வந்து கொண்டிருந்த பாரஊர்தி(ரம் ரெக்)மோதி விபத்துக்குள்ளக்கியதனால் முபாரக்கும் படுகாயம் அடைந்து சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெருவதையும் பின்னர் அதி தீவிர சத்திர சிகிச்சைக்காக அம்பாரை போதனா வைத்தியசாலையில் இடம் மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மரணமடைந்தவர் தொடர்பான மரண விசாரணையினை இரவு 7.50 கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று அவதானித்ததுடன் இரவு 8.05 இற்கு சம்மாந்துறை வைத்தியசாலையில் இருந்து ஜனாஸா குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.விபத்துடன் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வ்ருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Friday, October 22, 2010
நட்புறவுக்கான மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி
சம்மாந்துறை தேசிய பாடாசாலை மைதானத்தில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்திற்கும்,காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டியானது 22.10.2010 ஆகிய இன்று பி.ப.4.00 மணிக்கு ஆரம்பமாகியது.மிகவும் உற்சாகமான எதிர்பார்ப்புகள் பல ரசிகர்களின் முகத்தில் முகபாவனைக் காட்டும் வகையில் இறுதிவரைப் போட்டியானது விறு விறுப்பான முறையில் அரங்கேரியது.இதில் ஏசியன் அணியானது 2 கோல்களையும் காரைதீவு விளையாட்டுக் கழத்தினர் ஒரு கோலினையும் பெற்று சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி வாகை சூடினர்.
சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு திடீர் விஜயம்.
Thursday, October 21, 2010
தகவல் தொழிநுட்ப விழிப்புணர்வூட்டும் பயிற்ச்சிப் பட்டறை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் e-Village ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்ச்சிப் பட்டறையானது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் 21.10.2010 ம் திகதி இடம்பெற்றது.இதில் மாகாண செயற்திட்ட முகாமையாளர் E.K.S.P.கலாநிதி,e-Village நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நந்தசிறீ மற்றும் மாண்புமிகு மாகாண கல்வி,கலச்சார அலுவல்கள்,நிலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மாகணக் கல்விப் பணிப்பாளர் M.T.A.ஹிசாம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சுகாதாரக் கழகங்களுக்கு இடையிலான போட்டிப் பரிசளிப்பு விழா
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சுகாதாரக் கழகங்களை மேம்படுத்தும் செயற்திட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் கழகங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வில் வெற்றி ஈட்டிய பாடசாலைக் கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.
2010.10.20ம் திகதி ச்ம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வில் ச்ம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியலாயம்,வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்,வீரச்சோலை அ.த.க பாடசாலை,மல்வத்தை புது நகர் அ.த.க. பாடசாலை,சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி போன்ற பாடசாலை சுகாதாரக் கழக உறுப்பினர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர்.
இவர்களுக்கான விருது,சான்றிதழ்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் V.T.சகாதேவன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.அஸீஸ் முகைதீன்,சுகாதாரக் கழக செயற்பாட்டாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
Wednesday, October 20, 2010
சம்மாந்துறை அல்-உஸ்வா பகல் பராமரிப்பு நிலையப் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்
சம்மாந்துறை அல்-உஸ்வா பகல் பராமரிப்பு பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மாகா வித்தியாலய மைதானத்தில் பாடசாலையின் அதிபர் ரசூல் B.A அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக கல்முனைக் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M.P.A.தெளபீக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.கெளரவ அதிதியாக GAFSO அமைப்பின் பணிப்பாளார் A.J.காமில் இம்தாட் உம் சமாதான கற்கை நிலையப் பணிப்பாளர் கலாநிதி S.L.A.றியாஸ் சிறப்பு அதிதிகளாக ஜெனீஸ் வித்தியாலய அதிபர் K.M.ரபீக், ஊடகவியலாளர்களான J.M.ஹனீபா, சுடர் ஒளி உதவி ஆசிரியர் வரலாற்று ஆய்வாளர் ஜலீல்-ஜீ மற்றும் அல்-உஸ்வா சமூக சேவை அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் மெளலவி முஸ்தபா அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tuesday, October 19, 2010
உலக கை கழுவல் தின நிகழ்வுகள்


Monday, October 18, 2010
சம்மாந்துறை பொலிஸ் வீதியில் விபத்துச் சம்பவம்
மற்றுமொரு ஹஜ் யாத்திரைக் குழுவானது இன்று பயணமாகிறது சம்மாந்துறையில் இருந்து
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474565
feature content slider
Content right
.
.
.