Monday, September 10, 2012

எந்தக் கூட்டமைப்புடன் கூட்டு? – ‘கிங் மேக்கர்’ முஸ்லிம் காங்கிரஸ்

 மாகாணசபைத் தேர்தலில் 7 ஆசனங்களை வென்று தீர்மானிக்கும் சக்தியாக
மாறியுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எந்தக் கட்சியுடன் கூட்டுச்
சேர்ந்து ஆட்சியமைக்கும் சக்தியாகத் திகழ்வது என்பது தொடர்பாக
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.14 ஆசனங்களை வென்று சாதாரண பெரும்பான்மைப்
 பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய சுதந்திர
 முன்னணி பெற்ற ஒரு ஆசன ஆதரவையும் சேர்த்து 15 ஆசன பலத்துடன் இருக்கிறது.இதேவேளை, 11 ஆசனங்களை வென்றுள்ள தமிழரசுக்
 கட்சிச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய
தேசியக் கட்சியின் 4 ஆசன ஆதரவையும் சேர்த்து 15 ஆசன – சமபலத்துடன்
இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய
 மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா
கூட்டுச் சேரப்போகிறது என்பதைப் பொறுத்தே கிழக்கு மாகாணசபை ஆட்சி அமையும்
என்ற நிலை உருவாகியிருக்கிறது.கிழக்கு மாகாணத்தில் அதிக பேரம் பேசும் சக்தியை சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரசுக்கு வழங்கியிருப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தை உச்ச அளவில்
பயன்படுத்துவதற்கு அந்தக் கட்சி முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது.முஸ்லிம் முதலமைச்சர், சிறுபான்மை
இனங்களைப் பாதிக்கும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படக்கூடாது என்பது போன்ற
பிரதான நிபந்தனைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்து வருவதாக கட்சி
வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.எனினும், முதலமைச்சர் பதவியை வழங்க ஐக்கிய
 மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பின்னடிப்பதாகவும், முஸ்லிம் பிரதிநிதி
ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக
இருப்பதாகவும், இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்தியில் மேலும் 2
அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், கிழக்கு மாகாண
முதலமைச்சர் பதவியை பிள்ளையான் அல்லது கருணா தரப்புக்கு வழங்குமாறு ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்வதால் கிடைக்கக்கூடிய முதலமைச்சர்
பதவியா? அல்லது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்வதால்
முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், மத்தியில் கிடைக்கக்கூடிய மேலதிக
அமைச்சுப் பதவிகளா என்று தீர்மானிக்கவேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ்
தள்ளப்பட்டிருக்கிறது.மேலதிகமாக, இந்த விடயத்தில் இந்திய மற்றும் அமெரிக்க அழுத்தங்களும்
பின்னணியில் செயற்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.முஸ்லிம் காங்கிரசின் பிரதான தளமாக
கிழக்கு மாகாணம் இ்ருந்தாலும், கிழக்குக்கு வெளியே நாட்டின் ஏனைய
பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நலன்கள் குறித்தும் முஸ்லிம் காங்கிரஸ்
கவனம் செலுத்தவேண்டிய தேவை இருப்பதால், கிழக்கு மாகாணசபை விடயத்தில் அது
எடுக்கும் முடிவு, தேசிய ரீதியாக அதற்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச நலன்களை
 அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்றும், இதில், மாகாண மற்றும்
சர்வதேச தரப்புக்களின் அழுத்தங்கள் தீர்மானிக்கும் விடயமாக இருக்க மாட்டாது
 எனவும், முஸ்லிம் காங்கிரசுடன் நெருக்கமான மூத்த ஊடகவியலாளர் ஒருவர்
தெரிவித்தார்.இதனடிப்படையில் பார்க்கும்போது,
தமிழரசுக்கட்சி முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச சலுகையான
முஸ்லிம் முதலமைச்சர் பதவியை, மத்திய அரசுடன் பேரம் பேசக்கூடிய அதிகபட்ச
காரணியாகப் பயன்படுத்தி, மத்திய அரசிடம் கூடுதல் இலாபங்களைப் பெற்று,
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆட்சியமைப்பதற்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.