Wednesday, September 12, 2012

கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கே! மத்திய அரசிலும் இரு அமைச்சுகள்; ஜனாதிபதி தீர்மானம்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
 அதேவேளை மத்திய அரசாங்கத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்இ தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கவும் அக்கட்சியின் மேலும் மூன்று எம்.பி.க்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அறிய வருகின்றது.

கிழக்கில் ஆட்சி அமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்து கொள்ள வேண்டுமாயின் தாம் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தலைவர் ஹக்கீம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

அவற்றுள் உள்ளடங்கிய கோரிக்கைகளில் சிலவையே மேற்படி விடயங்களாகும். இவற்றை ஏற்பதாக அறிவித்துள்ள ஜனாதிபதிஇ அம்பாறை கரையோர மாவட்ட கோரிக்கையை பிறகு பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என அறிய முடிகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருகின்ற நிலையில் அரசுஇ முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசின் இந்தத் தீர்மானம் நேற்றிரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை கிழக்கு மாகாண ஆட்சியை எவ்வாறு அமைப்பதுஇ மாகாண அமைச்சுகளில் எவரை நியமிப்பது என்பன உட்பட்ட பல விடயங்களை மு.கா.வுடன் பேச ஜனாதிபதியின் பணிப்பில் உயர்மட்ட அமைச்சர் குழுவொன்று தயாராகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது விடயத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம்இ தமது கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுக்கும் வரை அரச தரப்பு காத்திருப்பதாக மேலும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இன்று இரவு அல்லது நாளை காலை முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கும் என மு.கா.தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.