முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களின் தேசிய கட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும், மறைந்த மாகாண சபை உறுப்பினருமான எம்.வை.எம்.மன்சூர் அவர்களின் 21வது சிரார்த்த தினமும் கத்தமுல் குர் ஆன் நிகழ்வும் 30.01.2011 ஆகிய நேற்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தவிசாளரும், கெளரவ நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதில் கட்சி அங்கத்தவர்களும் பெருந்திரலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Monday, January 31, 2011
மறைந்த மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம்.மன்சூர் அவர்களின் 21வது சிறார்த்த தினமும் கத்தமுல் குர் ஆனும்
முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களின் தேசிய கட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும், மறைந்த மாகாண சபை உறுப்பினருமான எம்.வை.எம்.மன்சூர் அவர்களின் 21வது சிரார்த்த தினமும் கத்தமுல் குர் ஆன் நிகழ்வும் 30.01.2011 ஆகிய நேற்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தவிசாளரும், கெளரவ நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதில் கட்சி அங்கத்தவர்களும் பெருந்திரலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
Friday, January 28, 2011
அம்பாறையில் எட்டு கட்சிகளும் 156 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் 48 சுயேச்சைகளின் மனு நிராகரிப்பு
அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு எட்டு அரசியல் கட்சிகளும் 156 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் குதித்துள்ளன.
இங்கு மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் 48 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
அம்பாறை நகர சபை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் 17 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெறவுள்ளது.
காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசசபைகளில் ஈரோஸ் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுவும் ஜனதாக் கட்சி பெரமுனயின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பன இங்கு போட்டியிடுகின்றன.
அம்பாறை நகர சபை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் 17 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெறவுள்ளது.
காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசசபைகளில் ஈரோஸ் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுவும் ஜனதாக் கட்சி பெரமுனயின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பன இங்கு போட்டியிடுகின்றன.
Thursday, January 27, 2011
நேற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்
நேற்று பிரதேச சபைக்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றது. இப் பிரதேச சபைக்கான தேர்தல் மார்ச் 17ம் திகதி இடம்பெற்றவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இம் முறை அதிகமான சுயேட்சைக் குழுக்களும், பிரதான கட்சிகளும் கூட நிராகரிக்கப்பட்டுள்ளது.
Saturday, January 22, 2011
சம்மாந்துறையில் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் திருத்தவேலை
சம்மாந்துறையில் அடைமழையினால் பாதிக்கப்பட்ட வீதிகளை சம்மாந்துறை பிரதேச சபையினரும், சம்மாந்துறை பொலிஸாரும் இணைந்து வீதி திருத்த வேலைகளில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை இணையக் குழுவினர் இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்குவதற்காக தயாராகி வருகின்றனர்.
சம்மாந்துறை இணையத்தளக் குழுவினர் தற்பொழுது மும்முறமாக நிவாரணம் வழங்குவத்ற்காக தற்பொழுது மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உதவ விரும்புவோர் உதவலாம் இதற்காக எமது இணையத்தளக் குழுவினர் 24 மணி நேரமும் விழித்திருக்கின்றோம்.
Sunday, January 16, 2011
கிழக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்களை நீர்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் இன்று நேரடியாகப் பார்வையிட்டார்
பெறுமளவான நெல் உற்பத்தி செய்யும் மாவட்டமான அம்பாரை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட வளத்தாப்பிட்டி குளம், வீரக்கொட அணைக்கட்டு மற்றும் அத்தியடி அணைக்கட்டு என்பவற்றை அமைச்சர் நிமால் சிறிப்பாலடி சில்வா பர்வையிட்டார். மேலும் கல்லோயா குளம் , கொண்டவட்டுவான் போன்ற குளங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். இதன் போது பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக புண்ருத்தாபனம் செய்யுமாறு உயர் அதிகாரிகளை பணித்தார். மேலும் இவ் விஜயத்தில் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, கிழக்கு மாகான சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் அவர்களும் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியளாலர்கள் மற்றும் சம்மன்துறை ஜானாதிபதி இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இலவச வைத்தியமுகாம்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர். ஏம்.எஸ். இப்றாலெவ்வை அனுசரனையில் - சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏ. இஸ்ஸடீன் தலைமையிலான குழுவினர் 2011.01.16 மஜீட்புரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச வைத்திய முகாமை நடாத்தினர்.
இவ் வைத்திய முகாமில் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் றுக்மண் ஜயபால மற்றும் வைத்தியர்களான ஏ.ஆர்.எம். நியாஸ், எம். மர்சூக், ஏ. சபீர், ஏ. இஸ்ஸானா மற்றும் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோகர் ஐ.எல். றாஸீக் தலைமையிலான சுகாதார பரிசோகர்கள் குழுவும், தாதியர் மேற்பார்வையாளர் ரீ.எல்.ஏ. றசூல் தலைமையிலான குழுவினரும், மஜீட்புர வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அமீர்அலி பிரதி அதிபர் எம்.ஐ. முஸம்மில் மற்றும் ஆசிரியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் இவ் இலவச வைத்திய முகாமில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்கினர்.
Saturday, January 15, 2011
www.saynotodowry.tk இணையத்தளத்தின் அனுசரனையில் சம்மாந்துறை இணையத்தளக் குழுவினர் வெள்ள நிவாரணம் வழங்கினர்.
சீதனம் வாங்காதோர் விழுமிய அமைப்பின் அனுசரனையில் சம்மாந்துறை இணையத்தளத்தினூடாக 14.01.2010 ஆகிய நேற்று வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சுமார் 170 பேருக்கு உலர் உணவும் 80 பேருக்கு பணம் மற்றும் அப்பியாசப் புத்தகங்களும் வழங்கினர். எமது இணையத்தளக் குழுவினர் இவ்வாறான மேலும் பல உதவிகளை வழஙுவதற்காக தயாராக உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் எமது இணையத்தளக் குழுவை தொடர்பு கொள்ளுமாறு மிகவும் விணயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
Friday, January 14, 2011
சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உடமைகள் விபரம்
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் - 15779
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - 62607
குடிபெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை - 5675
குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை - 22525
பாதிக்கப்பட்ட வீட்டுத்தோட்டங்கள் - 225
பாதிக்கப்பட்ட சுயதொழில் பெறும் குடும்பங்கள்-495
பாதிக்கப்பட்ட நெற்பயிற்ச்செய்கை நிலங்கள் - 25000 ஏக்கர்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - 62607
குடிபெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை - 5675
குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை - 22525
பாதிக்கப்பட்ட வீட்டுத்தோட்டங்கள் - 225
பாதிக்கப்பட்ட சுயதொழில் பெறும் குடும்பங்கள்-495
பாதிக்கப்பட்ட நெற்பயிற்ச்செய்கை நிலங்கள் - 25000 ஏக்கர்
Wednesday, January 12, 2011
சம்மாந்துறையில் துஆப் பிரார்த்தனை செய்யுமாறு பள்ளிவாசல்களில் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.
கிழக்கு
மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு
அதிகரித்து வருகின்றது. இதில் எமது சம்மாந்துறை மண்ணும் கடும்
பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. மழையும் விடுவதாக இல்லை வெள்ளம்
அதிகரித்துவருகின்றது
பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்திருக்கின்றது
இதனால் மக்கள் சொல்லொனாத் துயரில் மூழ்கியுள்ளனர்.
இதன்
காரணமாக மழை மற்றும் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி விசேட துஆ
மற்றும் தொழுகைகளில் ஈடுபடுமாறு அனைத்துப் பள்ளிவாயில்களின்
ஒலிபெருக்கிகளிளும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எமது மக்களின் துயர்போக்க நாமும் பிரார்த்திப்போமாக
Tuesday, January 11, 2011
சம்மாந்துறையில் தொடர்ந்து வெள்ளம் உதவ விரும்புவோர் உதவலாம்
சம்மாந்துறையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக எமதூரின் பல்வேறு பிரதேசங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது. இவ்வெள்ளத்தினால் பெருமளவான மக்கள் தமது உடைமைகள் இருப்பிடங்களை இழந்தவர்களாக தற்பொழுது பாடசாலைகளில் தஞ்சமடைந்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கான எதுவித உதவியும் கிடைக்கவில்லை எனவும் தாம் இரவு உண்ட உணவுடன் காணப்படுவதாக சம்மாந்துறை கையர் பள்ளியில் காணப்படும் ஒரு தமிழ் சகோதரர் குறிப்பிட்டார். இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0752912336
Sunday, January 9, 2011
சனி இரவு சம்மாந்துறையில் பெய்த அடைமழையினால் 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
2011.01.08 நள்ளிரவு 12.30 அளவில் எமது இணையத்தள குழுவினரும், ஊடகவியலாளர் தேசமான்ய ஜலீல் ஜீயும், உஸ்வா நிறுவன பணிப்பாளர் சாமஸ்ரீ தேசகீர்த்தி ஐ.எல்.எம். முஸ்தபா அவர்களும் வெள்ளப் பாதிப்பு நிலமைகளை அவதானிக்க களம் இறங்கினர்.
முதலில் மலையடிக்கிராமம் 2, 3களில் வளவுகளுக்குள் மழைநீர் தேங்கி கிடந்தது. இதன்காரணமாக வீடுகளுக்குள் அண்ணளவாக 1 அடி உயரத்திற்கு மழைநீர் புகுந்தது. இதனால் இரவு வேளைகளில் 25 குடும்பங்கள் முற்றாகப்பாதிக்கப்பட்டு அல்-உஸ்வா மத்திரஸா கட்டிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
சம்மாந்துறையின் தாழ்வான பிரதேசங்களில் வெள்ளம் நிறைந்திருத்தது, மேலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிவருகையில் ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் அதிகமாக காணப்பட்டது.
இரவு 2.35 மணியளவில் சுற்றிப்பார்க்கையில் சம்மாந்துறையின் தென்னம்பிள்ளைக் கிராமத்திலுள்ள 50 குடும்பங்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருந்ததும் நள்ளிரவில் பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடங்களை நாடிச் சென்ற அவலநிலை அரங்கேறியது.
மேலும் செட்டிட வட்டை பிரதேசத்தை 3.05 சென்றடைந்தனர் அங்கும் 9 குடும்பங்கள் வீட்டுக்குள்ளிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.
3.30க்கு கோரக்கர் கோயில் பிரதேசத்தினை அடைந்தபோது கோயிலுக்கு அருகாமையிலிருந்த 15 வீடுகளின் முற்றங்கள், வளவுகள் நீர் நிலையாக காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
4.15 அலவக்கரை பிரதேசத்தின் தாழ்வான பகுதியினூடாக செல்கையில் அனைத்து வீடுகளின் வளவுகளிலும் மழைவெள்ளம் நிறைந்திருந்தது.
4.30 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வீதியால் வீரமுனைக் கிராமத்தை அடைந்தோம் மிகப் பரிதாபகரமான நிகழ்வாக அதிகாலையில் சம்மாந்துறையிலுள்ள அனைத்து தண்ணீர்களும் கரைசேரும் வழியாக வீரமுனையின் தாழ்வான பகுதி காணப்பட்டது. அதிகமான மழைநீர் ஒன்று சேர்ந்து வந்ததால் எதுவும் சமாளிக்க முடியாமல் வீடுகளுக்குள் திடீரென வெள்ளம் புகுந்தது.
உயிரைக்காப்பாற்ற பிள்ளைகளை கையில எடுத்தனர் உடமைகளை மழைவெள்ளம் வீட்டுக்குள் புதுந்து அள்ளிச் சென்றது. என்ன பரிதாபம் 50க்கு மேற்பட்ட சகோதர இனக்குடும்பங்களும் 30க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களும் நேரடியாகப் பாதிக்கப்ட்டதை உணரமுடிந்தது.
காலை 5.30க்கு வீரமுனை உடங்கா - 02ம் பிரிவின் வயல் ஓரத்தில் உள்ள 35க்கு மேற்பட்ட குடும்பங்கள் நேரடி பாதிப்புக்குள்ளாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
காலை 5.50க்கு மையவாடிப்பிரதேசத்தின் மலையடிக்கிராமம் - 02 கிராம சேவகர் பிரிவில் இடுப்பு நிறைந்த மழை வெள்ளத்தில் நீந்திக் கொண்டு 36 குடும்பங்கள் தமது பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடத்தை நோக்கி தஞ்சம் புகச் சென்றனர்.
பிஞ்சுக் குழந்தைகளுடன் எதுவித உணவு, ஏனைய வசதிகளையும் எடுத்துக் கொள்ளாமல் அவசரம அவசரமாக பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர்.
காலை 8.00 மணியளவில் உஸ்வா மத்ரஸா ஓர் அகதிமுகாம் 75 பேருடனும் வீரமுனை ஆர்கேஎம். வித்தியாலயத்தில் 90 பேருடன் ஓர் அகதிமுகாம். கயறுப்பள்ளி (ஸபூர் வித்தியாலயத்தில்) 85 குடும்பங்களுடன் ஓர் அகதிமுகாம் இயங்கி வருகிறது.
காலை 9.00 மணியுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது முறியாண்டி, மாவடிப்பள்ளி பிரதான பாதைகள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளானது.
ஒவ்வொரு அகதிமுகாமையும், பாதிக்கப்ட்ட இடங்களையும் பொதுமக்களையும் காத்துக் களத்துக்குச் சென்று உதவி பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத்அலி கண்ணாளர் ஏ.எல். மஃறூப், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம். இத்ரீஸ் ஆகியோர் அடங்கிய குழு பாதிப்புகளை பார்வையிட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரிவின் கிராம சேகவர்களை உரிய துரித நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிப்புரை வழங்கியதுடன், சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கினார்கள்.
15000க்க மேற்பட்ட குடும்பங்கள் பெய்து வரும் தொடர்மழையால் பாதிப்புக்குற்பட்டுள்ளதாக பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர் ஏ.எம். இத்ரீஸ் தகவல் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டிய விடயமாகும்.
Saturday, January 8, 2011
சம்மாந்துறையில் பெருவெள்ளம் மக்கள் குடிபெயர்வு
எமது ஊரில் சில நாட்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக இன்று சுமார் அதிகாலை 1.30 மணியளவில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலையடிக் கிராமம் முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்மாந்துறை வீரமுனையின் சில பகுதிகளும் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது. சம்மாந்துறை மலையடிக்கிராம மக்கள் தமது பெயர்வை அல்-உஸ்வா அனாதைகள் இல்லத்தை நோக்கி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான படங்கள் மற்றும் மேலதிக செய்திகள் இன்னும் சில கணத்தில் வெளிவரும் காத்திருங்கள்.
Friday, January 7, 2011
எஸ்டபா சங்கத்தினர் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மீன்தொட்டி அன்பளிப்பு
Thursday, January 6, 2011
சம்மாந்துறை இணையத்தளக் குழுவினர் எமது பிரதேச சபைத் தவிசாளருடைய சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவிப்பு
இன்று நண்பகல் 12.00 மணியுடன் பிரதேச சபைகள் கலைக்கப்பட்டுள்ளது எனவே சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எமது சம்மாந்துறை மண்ணுக்காய் செய்த பெரும் அபிவிருத்திக்கும், சேவைக்குமாக எமது இணையக்குழு பிரதிநிதி பிரோஸ் அவர்கள் எமது சம்மாந்துரை பிரதேச சபைத் தவிசாளர் அவர்களுக்கு எமது இணையக் குழு சார்பாக நன்றிகளைத் தெரிவித்தார்.
Tuesday, January 4, 2011
சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் லொறி ஒன்று குடை சாய்ந்துள்ளது.
போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து



தான் சென்ற வருடம் இத் தோட்டத்தைச் செய்ய ஆரம்பித்ததாகவும் தற்பொழுது தனது பயிர்ச் செய்கையில் பூரண வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.மேலும் இவர் கூறுகையில் தான் ஓர் புதிய இன வெண்டி ஒன்றைக் கலப்புச் செய்து உருவாக்கியுள்ளதாகவும்,அது சிறிய பருவத்திலேயே காய்க்கக் கூடியது எனவும் அத்துடன் சிறந்த நோய் எதிர்ப்புள்ள வீரியமான இனம் இது எனக் குறிப்பிட்டார்.இவ்வாறான திறமையுள்ள எத்தனையோ திறமைசாலிகள் எமது ஊரிலே காணப்பட்ட பொழுதும் அவர்களுடைய திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.எனவே இவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வர எமது செய்திப் பிரிவு தொடர்ச்சியாக உழைக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான திறமைகளை நீங்களும் இனங்காட்டலாம்.
Monday, January 3, 2011
முதலாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்!
பிறந்திருக்கும் 2011 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாக
உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் புதிய கல்வியாண்டில் 202 நாட்கள் நடைபெற வேண்டுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கான பாடசாலைத் தவணை அட்டவணை விபரம் வருமாறு,
சிங்கள தமிழ்ப் பாடசாலைகள் முதலாம் தவணை ஜனவரி 3 முதல் ஏப்ரல் 08 வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 25 முதல் ஆகஸ்ட் 4 வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரையும்.
முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை ஜனவரி 3 முதல் ஏப்ரல் 8 வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 18 முதல் ஜூலை 29 வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரையும் இடம்பெறும்
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் புதிய கல்வியாண்டில் 202 நாட்கள் நடைபெற வேண்டுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கான பாடசாலைத் தவணை அட்டவணை விபரம் வருமாறு,
சிங்கள தமிழ்ப் பாடசாலைகள் முதலாம் தவணை ஜனவரி 3 முதல் ஏப்ரல் 08 வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 25 முதல் ஆகஸ்ட் 4 வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரையும்.
முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை ஜனவரி 3 முதல் ஏப்ரல் 8 வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 18 முதல் ஜூலை 29 வரையும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 5 முதல் டிசம்பர் 9 வரையும் இடம்பெறும்
Saturday, January 1, 2011
சம்மாந்துறையில் வீதி விபத்து.
சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் காயங்களுடன் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை நாம் அவதானமாக இருந்து கட்டுப்படுத்த வேண்டும் என விழிப்பூட்டுகின்றோம்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் 2011ம் ஆண்டிற்கான முதல் நாள் ஒன்று கூடல்
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் 2011ம் ஆண்டிற்கான முதல் நாள் ஒன்று கூடல் இன்று சுமார் 10.00 மணியளவில் வைத்தியர் திரு. இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக திருமதி இஸ்ஸடீன் அவர்களும் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இக் கூட்டத்தில் எமது வைத்தியசாலை வளர்ச்சிக்காக அனைத்து ஊழியர்களும் பாடுபட வேண்டும் எனவும் முன்னைய பழைய வைத்தியசாலையாக இன்றி தற்பொழுது அனைவரு தலை நிமிர்ந்து நிர்க்கக் கூடிய அளவு முன்னேற்றம் கண்டுள்ள வைத்தியசாலையாக எமது வைத்தியசாலையாக வலம் வருகின்றது என உரையாற்றிய றசூல் அவர்கள் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474564
feature content slider
Content right
.
.
.