Monday, October 15, 2012

உலக கைகழுவுதல் தினக் கொண்டாட்டம்

நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரிக்கும் போது அவனது சிந்தனைகளும் தேவைக்கேற்றாற் போல் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கும். இன்று பல்வேறு நோக்கங்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் பல நாட்களை முக்கியப்படுத்தும் நோக்கோடு அவைகளை சர்வதேச தினங்களாக மாற்றி அதன் தேவை மக்கள் மத்தியில் புரிய வைக்க கையாளும் ஒரு யுக்தி தான் இந்த சர்வதேச தினங்களாகும்.

அந்த வகையில் இன்று 15.10.2012 ஆந் திகதியன்று உலக கைகழுவுதல் தினமாகும். அதனை சிறப்பாகவும், மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் கொண்டாடுமுகமாகவும். ஐக்கிய நாடுகளின் யுனிசேப் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பாடசாலை மட்டத்தில்  கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றது என நான் சொன்னால் அது மிகையாகாது.

இந்த வகையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தங்களுடைய மாணவ சமூதாயத்திற்கு இந்த தினத்தை நினைவு கூறும் நிகழ்வும் வித்தியாலய முன்றலில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அப்பகுதிக்குப் பொறுப்பான சுகாதார பரீசோதகர் ஏ.எம். றம்ஸான் கலந்து கொண்டதோடு அந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

இந்த நிகழ்வை இப்பாடசாலை சுகாதாரக்கழகம் ஏற்பாடு செய்தது இதற்கு வழிகாட்டியாக இப்பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியை திருமதி வை. அமிர்தசங்கர் ஒத்துழைப்பு வழங்கியதோடு, இ்ந்நிகழ்வு சிறப்பாக நடைபெற இப்பாடசாலையின் செயற்பாடுகளில் பங்கு வகிக்கும் ஏ.எம். தாஹாநழீம் ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்கள் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்ற அறிவுறுத்தல் பிரதேச சுகாதாரப் பரிசோதகர் அவர்களால் சிறப்பாக செய்து காட்டப்பட்டதோடு மாணவர்களும் அதில் கலந்து சிறந்த பயிற்சியினைப் பெற்றுக் கொண்டார்கள் என இங்கு குறிப்பிட வேண்டும்.

தகவல் ஏ.எம். தாஹா நழீம்

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.