Sunday, September 9, 2012

தீர்மானம் மேற்கொள்வதில் அவசரப்படமாட்டோம் - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கப்பெற்றுள்ள
வாக்குகள் தமக்கு தோல்வியல்ல என தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் இது
முஸ்லிம்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின்
அடுத்தகட்ட நடவடிக்கை யாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன்
அலியிடன் யாழ் முஸ்லிம் வினவியது. இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட
அவர் கூறியதாவது,

இடர்பாடுகள், அச்சுறுத்தல்கள் அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கிடையேதான்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்றுள்ளது.
அம்பாறையில் நாம் தனித்து 4 நின்று ஆசனங்களைப் பெற்றுள்ளோம். உண்மையில்
இதுதான் வெற்றி. திகாமடுல்ல முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு 3
தொகுதிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். அவர்களுக்கும் முஸ்லிம்
காங்கிரஸுக்கு கிழக்கு மாகாணம் பூராகவும் வாக்களித்தமக்களுக்கு நன்றி
சொல்கிறோம்.

மக்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடாகவே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தல்
முடிவுகளை நோக்குகிறது. மக்களின் தீர்மானத்திற்கமையவே எமது முடிவுகளும்
அமையும். இருந்தபோதும் எந்தக்கட்சி ஆட்சியமைக்க உதவுவது என்ற தீர்மானத்தை
அவசப்பட்டு மேற்கொள்ளமாட்டோம். முஸ்லிம் சமூகத்தை முதன்மைப்படுத்தியே
எமது திர்மானங்கள் அமையும்.

கிழக்கு மாகாண ஆட்சி மற்றும் முஸ்லிம் முதலமைச்சர் தொடர்பில் எந்தக்
கட்சியுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு நடாத்தும். நாங்கள் ஜனநாயக
கட்சி. அந்த அடிப்படையில் நாங்கள் இதற்கான உரிமையை பெற்றுள்ளோம்.

அத்துடன் நாளை திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்
முக்கியஸ்தர்கள் ஒன்றுகூட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து
ஆராயவுள்ளதாகவும் ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.