Thursday, September 27, 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடக பயிற்சிப்பட்டறை


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
ஏற்பாட்டில் சமூக ஊடக பயிற்சிப்பட்டறை
இணையதளங்கள்இ வலைப்பூக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆர்வமுடைய இளைஞர் யூவதிகளை இனங்கண்டு அவர்களை முறையாக பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் திட்டமிட்டுள்ளது.
நவீன உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் சமூக ஊடகத்துறையில் வினைத்திறனுடன் செயற்பட கூடிய வகையில் இளைஞர் யூவதிகளை பயிற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளையூம் சேர்ந்த இளைஞர் யூவதிகள் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்ற போதிலும் ஊடக தாற்;பரியங்கள் குறித்த உரிய பயிற்சிகளும் வழிகாட்டல்களும் இல்லாததன் காரணமாக சமூக ஊடகங்கள் வாயிலாக ஆக்கபூர்வமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டே ஆர்வமுடையவர்களை முறையாக பயிற்றுவிப்பதன் மூலம் சிறந்ததொரு ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்பி ஆளுமை மிக்க சமூக ஊடக செயற்பாட்டாளர்களை உருவாக்க முடியூம் என மீடியா போரம் கருதுகிறது.
மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படவூள்ள இப்பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர் யூவதிகள் தமது பெயர் விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் றிப்தி அலிக்கு 0773630668 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது சகைவால.யடi@பஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ எதிர்வரும் ஒக்டோபார் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியூம்.
இந்த பயிற்சிப்பட்டறைகளில் அனுபவம் வாய்ந்த விரிவூரையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கவூள்ளதுடன் பங்குபற்றுவோருக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்படவூள்ளன.


No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.