Monday, February 13, 2012

ஐந்து பிரி வினருக்கு எரிபொருள் மானியம் !

மக்கள் மீதான சுமையை குறைக்க விசேட நடவடிக்கை  -
எரிபொருள் விலையேற்றத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்டாமல் இருக்க ஐந்து பிரிவினருக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தனியார் பஸ் உரிமையாளர்கள்  பாடசாலை  வேன் உரிமையாளர்கள்  முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்  கடற்றொழிலாளர்கள்  மின்சார வசதி இல்லாத கிராமங்களில் மண்ணெண்ணையை பாவிக்கின்ற சமுர்த்தி உதவி பெறுபவர்கள் ஆகிய ஐந்து பிரி வினருக்கும் இந்த முறை மூலம் மானியம் வழங்கப்படவிருப்பதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இன்று (13ம் திகதி) முதல் முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப்படும் எனவும் அவர் கூறினார்.

எரிபொருள் விலை மறுசீரமைப்பு காரணமாகப் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் விசேட எரிபொருள் மானியமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நீண்ட மற்றும் குறுகிய தூரபயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் வண்டிகளின் விபரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நாம் கேட்டுள்ளோம். அவர்கள் அவ்விபரங்களை இன்று 13ம் திகதி எமக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அந்த விபரம் கிடைக்கப்பெற்றதும் பயணிகள் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் காணப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு ஏற்ப பஸ் உரிமை யாளர்களின் வங்கிக் கணக்கு முற்கொடுப்பனவு பணம் வைப்பிலிடப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  NWES.LK

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.