Monday, February 27, 2012

கிழக்கின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்; தமிழ் மக்களும் பங்கேற்பு!

ஐ.நாவின் மனித உரிமை 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் சிங்கள, தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில பரவலாக நடைபெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று நிந்தவூர் சம்மாந்துறை போன்ற இடங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு நகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.

ஏறாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் நகர முதல்வர் அலி சாகிர் மௌலானா உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதே வேளை திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன தலைமையில் ஆலையடிவேம்பில் இடம்பெற்ற ஆர்ப்பாடத்தில் அதிகளவு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கும் வகையிலும் அமெரிக்கா பிரித்தானியா உட்பட பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு வாசக அட்டைகளை ஏந்நியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.

சில பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் கலந்து கொண்டதையும் காணக் கூடியதாகவிருந்தது.

ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வழமைநிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது சில இடங்களில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒமாமாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.