30.11.2010 ஆகிய நேற்று இறக்காமம் அல்-அஸ்ரப் மஹா வித்தியாலத்திற்குச் சென்ற சம்மாந்துறையைச் சேர்ந்த மாணிக்கமேடு அரசினர் கலவன் பாடசாலை ஆசிரியர் டீ.எல்.ஏ.றஸாக் அவர்கள் தனது முன்னைய பாடசாலையான இறக்காமம் அல்-அஸ்ரப் மஹா வித்தியாலத்திற்கு சம்பள உயர்ச்சிப் படிவத்தில் கையொப்பம் வாங்குவதற்காகச் சென்ற போது ஆசிரியர் இறக்காமம் அல் அஸ்ரப் மஹா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களினால் தனிப்பட்ட குரோதம் காரணமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் காயமுற்ற ஆசிரியர் தற்பொழுது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதை எதிர்க்கும் வகையில்01.12.2010 ஆகிய இன்று இறக்காமம் கோட்டக் கல்வி வலயத்தில் கற்பிக்கும் வெளியூர் ஆசிரியர்கள் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரி மஹஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
Tuesday, November 30, 2010
அதிபரினால் ஆசிரியர் தாக்குதல் இதை எதிர்க்கும் வகையில் மஹஜர் கையளிப்பு
30.11.2010 ஆகிய நேற்று இறக்காமம் அல்-அஸ்ரப் மஹா வித்தியாலத்திற்குச் சென்ற சம்மாந்துறையைச் சேர்ந்த மாணிக்கமேடு அரசினர் கலவன் பாடசாலை ஆசிரியர் டீ.எல்.ஏ.றஸாக் அவர்கள் தனது முன்னைய பாடசாலையான இறக்காமம் அல்-அஸ்ரப் மஹா வித்தியாலத்திற்கு சம்பள உயர்ச்சிப் படிவத்தில் கையொப்பம் வாங்குவதற்காகச் சென்ற போது ஆசிரியர் இறக்காமம் அல் அஸ்ரப் மஹா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களினால் தனிப்பட்ட குரோதம் காரணமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் காயமுற்ற ஆசிரியர் தற்பொழுது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதை எதிர்க்கும் வகையில்01.12.2010 ஆகிய இன்று இறக்காமம் கோட்டக் கல்வி வலயத்தில் கற்பிக்கும் வெளியூர் ஆசிரியர்கள் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரி மஹஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
Monday, November 29, 2010
சம்மாந்துறை இணையத்தளம் தற்பொழுது கிழக்கு.info உடன் கைகோர்த்துள்ளது.
எமது சம்மாந்துறை இணையத்தளமானது தற்பொழுது கிழக்கு.info எனும் கிழக்கு மாகாண செய்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இணையத்தளத்துடன் தமது சேவையை பகிர்ந்து கொள்ளவுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்த தானம் வழங்கும் திட்டத்தினூடாக, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இந் நிகழ்வானது இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக 2010.11.28 ஆகிய நேற்று காலை 9.00 மணி தொடக்கம் பி.ப.5.00 மணி வரை சம்மாந்துறை மக்கள் வங்கிக் கிளை நிறைவேற்று அதிகாரி தலைமையிலும், இத்திட்டப் பொறுப்பதிகாரியும் சம்மாந்துறை இணைப்பாளர் பாத்திமா றஸ்மியா தலைமையிலும் அபா அஹமட் அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. 50 இற்கு மேற்பட்டோர் இவ் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதை எமது செய்திப் பிரிவானது வரவேற்கின்றது.
Sunday, November 28, 2010
EDC இன் O/L தினக் கொண்டாட்டம்
சம்மாந்துறையில் பிரத்தியோக வகுப்புக்களுக்கு என ஓர் நாமம் பதித்த EDC கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை நகர மண்டபத்திலே 28.11.2010 பி.ப.4.00 மணியளவில் இம் முறை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான O/L தினமானது வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கே.எம்.முத்தலிப் அவர்களும் கெளரவ அதிதியாக ஏ.எல். சாஹிபுத்தம்பி அவர்களும் மற்றும் விசேட அதிதியாக இக் கல்வி நிலயத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.இர்ஸாட்,உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் ஐ.எஸ்.இம்ரான் மற்றும் ஆசிரியர்களான இஸட்.எம்.ஸவாஹிர்,ஏ.ஆர்.எம்.றஸ்லீன்,ஏ.பி.ஏ.றஹ்மான்,எம்.ஐ.எம்.மர்சூக்,ஏ.அல்.எம்.றினோஸ் கான் மற்றும் எம்.ஐ.எம்.இர்பான் ஆகியோர் உடன் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Saturday, November 27, 2010
புதிய சந்தைத்தொகுதி திறப்பு விழா
சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்ற விபரம் (தகவல்-zeo.org)
Inter zone teachers transfer list
http://www.strzeo.org/htdoc/TeacherTrList.html
Out zone teachers tansfer list
http://www.strzeo.org/htdoc/TeacherTrListout.html
எமதூரின் கலையுணர்வுக்கான ஒத்துழைப்பு இதுவா?
எமது செய்திப் பிரிவினர் செய்தி சேகரிக்கச் சென்ற போது கண்ட சம்பவமே இது.27.11.2010 அன்று சம்மாந்துறை நகர மண்டபத்திலே மாத்தளைக் கமால் அவர்களின் கான மழை இறுவெட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது. இதற்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையோ பத்திலும் குறைவு. ஏன் எமது மக்கள் கலைஞர்களை ஊக்குவிக்களிப்பவர்களாய் இல்லை.
இவர் முஸ்லிம்களுக்காய் உதித்த முதல் கட்சியான முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவரது கட்சிப் பாடலைப் பாடியவரும் கூட. இவ்வாறு எமது சமூகத்திற்காய் அர்பணித்த ஒருவருக்கு நாம் எமது மரியாதையை செலுத்த வேண்டாமா? ஏன் எமது சம்மாந்துறை மண் இவ்வாறு கலைஞர்களை அவமதிக்கும் சமூகமாக காணப்படுகிறது?
வீரமுனையிலே இசையுடன் ஹராத்தை சம்பாதிக்கும் வகையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு அணி அணியாய் திரண்ட நாம் ஏன் இதற்கு செல்ல முடியாது? இது எம் மக்களுக்கு விளங்குகிறதா? உண்மையில் அக் கலைஞர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவருக்கு உதவி செய்யக் கூட எமது சம்மாந்துறை மக்கள் தவறிவிட்டார்கள். இவ்வாறான விடயங்களில் எமது அக்கறை செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவானது விழிப்புணர்வூட்டுகின்றது.
இவர் முஸ்லிம்களுக்காய் உதித்த முதல் கட்சியான முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவரது கட்சிப் பாடலைப் பாடியவரும் கூட. இவ்வாறு எமது சமூகத்திற்காய் அர்பணித்த ஒருவருக்கு நாம் எமது மரியாதையை செலுத்த வேண்டாமா? ஏன் எமது சம்மாந்துறை மண் இவ்வாறு கலைஞர்களை அவமதிக்கும் சமூகமாக காணப்படுகிறது?
வீரமுனையிலே இசையுடன் ஹராத்தை சம்பாதிக்கும் வகையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு அணி அணியாய் திரண்ட நாம் ஏன் இதற்கு செல்ல முடியாது? இது எம் மக்களுக்கு விளங்குகிறதா? உண்மையில் அக் கலைஞர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவருக்கு உதவி செய்யக் கூட எமது சம்மாந்துறை மக்கள் தவறிவிட்டார்கள். இவ்வாறான விடயங்களில் எமது அக்கறை செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவானது விழிப்புணர்வூட்டுகின்றது.
Thursday, November 25, 2010
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும், இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் பொதுமக்களுக்கு ரன்பிம அளிப்பு வழங்கும் வைபவம்.
சம்மாந்துறை பிரதேச சபைக்குற்பட்ட 75 பொதுமக்களுக்கு ரன்பிம காணி உறுதி வழங்கும் வைபவம் 25.11.2010 அன்று காலை 10.00 மணியளவில் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.பீ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும் பிரதேச செயலக கணக்காளர் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்களும் காணி உறுதி பெறும் மக்களும் கலந்து கொண்டனர். மற்றும் இவ்விழாவில் பிரதேச செயலாளர் அவர்கள் புதிய காணிச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Wednesday, November 24, 2010
சம்மாந்துறை ஹசன் அலி பவுண்டேன் இலவச கல்விக் கருத்தரங்கு
சம்மாந்துறை ஹசன் அலி பவுண்டேன் ஏற்பாட்டில் இன்று 2010.11.24 மாவடிப்பள்ளி அல்-அஷ்ரஃப் மஹா வித்தியாலயத்தில் 2010ல் க.பொ.த. (சா/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான ஆங்கிலப்பாட பரீட்சை முன்னோடி கருத்தரங்கு இடம்பெற்றது.
நிகழ்வில் பவுண்டேசனின் செயலாளர்
ஏ.எல். சாஹிபுத்தம்பி (ஓய்வு பெற்ற அதிபர்), உபதலைவர் ஐ.எல். உதுமாலெவ்வை, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் விரிவுரையினை ஓய்வுபெற்ற ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் திரு.என். பரநிருபசிங்கம், ஏ.அபூபக்கர் நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.
நிகழ்வில் பவுண்டேசனின் செயலாளர்
Tuesday, November 23, 2010
தொழில்சார் மற்றும் தொழிநுட்பப் பயிற்சி திணைக்களம் மற்றும் தொழிநுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தினால் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
தொழில்சார் மற்றும் தொழிநுட்பப் பயிற்சி திணைக்களம் மற்றும் தொழிநுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தினால் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 19.11.2010 வர்த்தமானி அறிவித்தலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Monday, November 22, 2010
இலங்கையின் புதிய அமைச்சரவை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் 2ம் தவணை ஆரம்பித்ததன்
பின்னர் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது இதன்படி பிரதமருடன் இணைத்து
10 சிரேஸ்ட அமைச்சர்களும் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 31
பிரதியமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
டி எம் ஜயரத்ன - பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்
சிரேஸ்ட அமைச்சர்கள்:
ரட்னசிறி விக்கிரமநாயக்க - நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
டியு குணசேகர - மனிதவள சிரேஷ்ட அமைச்சு
அதாவுத செனவிரட்ன - கிராமிய விவகார சிரேஷ்ட அமைச்சு
பி.தயாரட்ன, - உணவு மற்றும் போஷாக்குத்துறை
ஏ எச் எம் பௌஸி - நகர செயற்பாடுகள்
எஸ் பி நாவின்ன, - நுகர்வோர் சேமநலன்
பியசேன கமகே - தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர்
திஸ்ஸ விதாரண - விஞஞான விவகாரம்
சரத் அமுனுகம - சர்வதேச நிதி ஒத்துழைப்பு
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 50 போ்
நிமல் சிறிபால டி சில்வா - நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன, - சுகாதார துறை
சுசில் பிரேம்ஜயந்த - கனியவளதுறை
ஆறுமுகன் தொண்டமான் - கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன - நீர்வழங்கல் துறை
டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, - உள்ளுராட்சி - மாகாணசபை
ரிசாத் பதியுதீன், - கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
பாடலி சம்பிக ரணவக்க - மின்சக்தி - சக்திவலுத்துறை
விமல் வீரசங்ச - நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரவூப் ஹக்கீம், - நீதித்துறை
பசில் ராஜபக்ச - பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார - தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க - உயர் கல்வி
ஜி எல் பீரிஸ் - வெளிவிவகாரம்
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன - அரசநிர்வாக - உள்நாட்டலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன, - நாடாளுமன்ற விவகாரம்
ஜீவன் குமாரதுங்க - அஞ்சல்துறை
பவித்ரா வன்னியாராச்சி - தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அநுர பிரியதர்சன யாப்பா, - சுற்றாடல் துறை
திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி - மகளிர் விவகாரம்
காமினி லொகுகே, - தொழில் மற்றும் தொழிலுறவு
பந்துல குணவர்த்தன, - கல்வி
மஹிந்த சமரசிங்க, - பெருந்தோட்டத்துறை
ராஜித சேனாரத்ன - மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி
ஜனக பண்டார தென்னகோன், - காணி மற்றும் காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா, - சமூக சேவைகள்
சி.பி.ரட்னாயக்க, - தனியார் போக்குவரத்து சேவை
மஹிந்த யாப்பா அபேவர்தன, - விவசாயத்துறை
கெஹலிய ரம்புக்வெல்ல, - ஊடக மற்றும் செய்தித்துறை
குமார வெல்கம, - போக்குவரத்து
டளஸ் அழகப்பெரும, - இளைஞர் விவகார மற்றும் திறன் மேம்பாட்டு
ஜோன்ஸ்டன் பர்ணான்டோ, - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
சந்திரசிறி கஜதீர - புனருத்தாபன மற்றும் சிறைச்சாலை சீரமைப்பு
சாலிந்த திஸாநாயக்க - தேசிய வைத்திய துறை
ரெஜினோல்ட் குரே, - சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி
டிலான் பெரேரா, - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி
டிலான் பெரேரா, - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி
ஜகத் புஸ்பகுமார, - தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
ரி.பி.ஏக்கநாயக்க - கலாசார மற்றும் கலைவிவகாரம்
மஹிந்த அமரவீர, - அனர்த்த முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன - விவசாய சேவை மற்றும் வனவிலங்கு
குணரத்ன வீரக்கோன் - மீள்குடியேற்றதுறை
மேர்வின் சில்வா - மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அளுத்கமகே, - விளையாட்டுத்துறை
தயாஸ்ரீ த திசேரா, - அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
ரஞ்சித் சியம்பலாபிட்டிய, - தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்
ஜகத் பாலசூரிய - தேசிய மரபுரிமைகள்
லக்ஷ்மன் செனவிரட்ன - உற்பத்தி திறன் அபிவிருத்தி
நவின் திசாநாயக்க - அரச முகாமைத்து மீளமைப்பு
பிரியங்கர ஜயரட்ன - சிவில் விமான சேவைகள்,
பிரதியமைச்சர்கள் 31 போ்
சுசந்த புஞ்சி நிலமே, - மீன்பிடி, நீர்வளத்துறை
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, - பொருளாதார அபிவிருத்தி
ரோஹித்த அபேகுணவர்தன, - துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பண்டு பண்டாரநாயக்க, - தேசிய வைத்திய துறை
ஜயரத்ன ஹேரத், - கைத்தொழில், வர்த்தகவிவகாரம்
துமிந்த திஸாநாயக்க, - இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி
லசந்த அழகியவண்ண, - நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரோஹண திசாயக்க, - போக்குவரத்து
எச்,ஆர்.மித்ரபால, - கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
நிர்மல கொத்தலாவல, - துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பிரேமலால் ஜயசேகர, - மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை
கீதாஞ்சன குணவர்தன, - நிதி மற்றும் திட்டமிடல்
விநாயகமூர்த்தி முரளிதரன், - மீள்குடியேற்றம்
பைசர் முஸ்தபா, - தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி
இந்திக பண்டாரநாயக்க, - உள்ளுராடசி மற்றும் மாகாண சபைகள்
முத்துசிவலிங்கம், - பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத், - காணி மற்றும் காணி அபிவிருத்தி
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க, - வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம்
சந்திரசிறி சூரிய ஆராயச்சி, - சமூகசேவைகள்
நந்திமித்ர ஏக்கநாயக்க, - உயர்கல்வி
நிரூபமா ராஜபக்ஷ, - நீர்வழங்கல் துறை
லலித் திசாநாயக்க, - சுகாதாரம்
சரண குணவர்தன, - கனியவள தொழில்துறை
காமினி விஜித் விஜயமுனி சொய்சா, - கல்வித்துறை
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
வீரகுமார திசாநாயக்க, - பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்
ஏ.டி.எஸ்.குணவர்தன, - புத்த சாசன மதவிவகார
ஏர்ல் குணசேகர, - பெருந்தோட்டதுறை
பசிர் ஷேகுதாவுத், - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
அப்துல் காதர், - சுற்றாடல்
டுலிப் விஜேசேகர - அனர்த்த முகாமைத்துவம்
கல்விப்பணிப்பாளர்கள் இடமாற்றம்
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.மன்சூர் அக்கரைப்பற்று
கல்வி வலயத்திற்கும்>அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்
யூ.எல்.எம்.ஹாசீம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கும் உடனடியாக
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய> கிழக்கு மாகாண கல்வி
அமைச்சின் செயலாளரால்இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம்
சுமார் 10 வருடங்களுக்கு மேலாகவலயக் கல்விப் பணிப்பாளராக
கடமையாற்றி வரும் அதேவேளை> வலயக் கல்விப் பணிப்பாளர்
எம்.கே.மன்சூர் கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக
கடமையாற்றிஇவ்வருடம் பெப்ரவரி மாதம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.
Saturday, November 20, 2010
AUMSA இன் ஏற்பாட்டில் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் அனுசரனையில் இம்முறை க.பொ.த.சாதரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விஞ்ஞானம்,கணிதப் பாடங்களுக்கான கருத்தரங்கானது 21.11.2010 ஆகிய இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்தது. இதில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்வகளால் விரிவுரைகளானது நடாத்தப்பட்டது. அதிகளவான மாணவர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். மேலும் இக் கருத்தரங்குகான ஏற்பாடு HIGHER NATIONAL DIPLOMA IN ENGINEERING மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதலாவது ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது.

இன்று காலை சுமார் 10.57 மணியளவில் முதலாவது ஹஜ் யாத்திரைக் குழுவானது இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனது ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது. இதில் எமது ஊரைச் சேர்ந்த ஹஜ் யாத்திரைக் குழுவொன்றும் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் ஒரு ஹஜ் யாத்திரைக் குழுவானது தற்பொழுது சுமார் மாலை 6.00 மணியளவில் அடுத்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது.
சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்டமானது மரக்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்ட முன்றலானது பூ மரக் கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சம்மாந்துறை பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எமது சம்மாந்துறை நகர முன்றலை அழகுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அழகுபடுத்தும் முயற்சியை மேற்கொண்ட சம்மாந்துறைப் பொலிஸாருக்கு எமது செய்திப் பிரிவு சார்பாக மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
Wednesday, November 17, 2010
சம்மாந்துறை நகர மண்டபத்தில் பல அரிய சாதனைகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு
Tuesday, November 16, 2010
சம்மாந்துறை இணையத்தளத்தின் பெயர்ப் பலகையானது ஹிஜ்ரா சந்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை இணையத்தளத்தினுடைய பெயர்ப்பலகையானது இன்று வெகு விமர்சையாக கெளரவ பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இவ் விழாவில் கெளரவ அதிதிகள் வரிசையில் ஜனாதிபதி இணைப்பாளர்கள் ஜனாப் ஏ.எல்.எம்.றசீன், ஜனாப் எம்.எம்.ஏ. காதர்(BSC) ,ஜனாப் எம்.டீ.ஏ.கரீம், ஜனாப் எம்.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் விசேட அதிதிளாக சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆசிரியர் ஏ.எல்.ஏ.றஹீம் அவர்களும் சட்டத்தரனி யூ.கே.சலீம் மற்றும் ஊடகவியளாலர் ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.எல்.எம்.இர்சாத், இணையத்தள ஆலோசகர் எம்.எப்.எம்.பர்ஹான் மற்றும் எம்.எம்.சபியுல்லா அவர்களும் சிடா அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை இன்று திடலில் நிறைவேற்றப்பட்டது.
அண்ணல் நபிகளார் சொல்லிவிட்டு சென்ற சுன்னத்துக்களை பின்பற்றுகின்ற எம் சகோதரர்களை வாழ்த்துகிறோம். அண்ணல் நபி சொல்லியவாறு பெருநாள் தொழுகைகைகளை பொது திடலில் தொழ வேண்டும் அதனடிப்படையில் இன்றுசம்மாந்துறையில் இரு இடங்களில் பொதுத்திடலில் பெருநாள் தொழுகையானது இடம்பெற்றது. அதாவது அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. இவ்வாறான நபி வழி தொழுகைகள் இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமே.
Sunday, November 14, 2010
பிறை எப்.எம் ஏற்பாட்டில் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

சம்மாந்துறை வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 110 மாணவரளுக்கு பிறை எப்.எம் வானொலியானது பரிசில் வழங்கி கெளரவித்தது. இவ்விழாவில் பிரதம அதிதியாக மாண்புமிகு அமைச்சர் கெளரவ ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களும், கெளரவ அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹத்சன் சமரசிங்க மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இவ்விழாவனது அக்கரைப்பற்று மண்ணில் உள்ள அதாவுல்லா அரங்கத்தில் விழாக் கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, November 13, 2010
ஹிஜ்றா சந்தியில் பெருநாள் கொள்வனவுகள் களைகட்டியுள்ளது.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஹிஜ்றா சந்தியில் பெருநாள் கொள்வனவானது மக்களினால் மும்முறமாக மேற்கொள்ளப்படுகிறது.மேலும் வீதியோரக் கடைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமே.
சம்மாந்துறை ஸ்டார் கொமியுனிகேசன் முன்பாக எயார்டலின் வர்த்தக விரிவாக்கம்
Thursday, November 11, 2010
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 504 மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அஸ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பீ.பீ.சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக எம்.கே.எம்.மன்சூர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்மினைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் சம்மாந்துறை வலய உதவி கல்விப் பணிப்பாளர் வீ.டி.சகாதேவராஜா,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
Wednesday, November 10, 2010
இளைஞர் பாராளுமன்றத்துக்கான வேட்புமனுத் தாக்கல்
Tuesday, November 9, 2010
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 23ம் வருட மாணவர்கள் மெளலவி பட்டம் பெற்றனர்
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474565
feature content slider
Content right
.
.
.