கடந்த 2012-07-29 ம் திகதி சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டத்தில் இப்தார் நிகழ்வு இடம் பெற்றது.
சம்மாந்துறை பிரதேசத்தை ஆய்வுக்களமாகக் கொண்டு பல்வேறு சமூகப்பணிகளைச் செய்து வரும் கலை, இலக்கிய ,சமூக ஆர்வலர்களைக் கொண்டியங்கும் சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்டம். கடந்த 2012-07-29 ஞாயிற்றுக் கிழமை இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அமைப்பின தலைவர் எம்.எம். சமீர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், மூத்த இலக்கியவாதியும் கலைஞருமான கலைவேள் மாறன் யூ செயின் அவர்களும், எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன் அவர்களும், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதன்போது அமைப்பின் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு புதிய ஆர்வலர்களும் இணைத்துக் கொள்ளப்படடனர். இந்நிகழ்வைத் தொடர்ந்
து அமைப்பின் அறிமுக உரை அமைப்பின் தலைவர் எம்.எம்.சமீர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கலைஞர் மாறன் யூ செயின் அவர்கள் இளைஞர்களின் எதிர்கால சிந்தனைகள் எவ்வாறு அமைய வேண்டுமென விளக்கினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன் அவர்கள் இன்றைய சூழலில் அமைப்பின் முயற்சிகளை எவ்வகையில கொண்டு செல்ல வேண்டும் என கூறியதோடு இதில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அவர்கள் இன்றைய இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்தின் அவசியம் பற்றியும், அவர்களிற்கான தொழில் வழிகாட்ல்கள், உளவளத்துணைகள் பற்றியும் உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் புதிய அங்கத்தவர்களுக்கான உத்தியோக பூர்வ விண்ணப்பப் படிவங்களும் தலைவர் சமீர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அங்கத்தவர்களிடையே சினேகபூர்வ சமூகநலக் கலந்துரையாடல்களும் எதிர்கால இலக்குகள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்களும் இடமபெற்றன
து அமைப்பின் அறிமுக உரை அமைப்பின் தலைவர் எம்.எம்.சமீர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கலைஞர் மாறன் யூ செயின் அவர்கள் இளைஞர்களின் எதிர்கால சிந்தனைகள் எவ்வாறு அமைய வேண்டுமென விளக்கினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன் அவர்கள் இன்றைய சூழலில் அமைப்பின் முயற்சிகளை எவ்வகையில கொண்டு செல்ல வேண்டும் என கூறியதோடு இதில் இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அவர்கள் இன்றைய இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்தின் அவசியம் பற்றியும், அவர்களிற்கான தொழில் வழிகாட்ல்கள், உளவளத்துணைகள் பற்றியும் உரையாற்றினார்.மேலும் இந்நிகழ்வில் புதிய அங்கத்தவர்களுக்கான உத்தியோக பூர்வ விண்ணப்பப் படிவங்களும் தலைவர் சமீர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அங்கத்தவர்களிடையே சினேகபூர்வ சமூகநலக் கலந்துரையாடல்களும் எதிர்கால இலக்குகள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்களும் இடமபெற்றன



.jpg)





