Saturday, January 12, 2013

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு கட்டனம் அறவிடுவது ஏன் ?


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றது. மக்களின் தேவைக்கேற்ப சமயம் சார்ந்த மற்றும் பொது நலன் கொண்ட விடயங்களில் ஜம்இய்யா பாரிய பணி ஆற்றிவருகின்றது. அது ஒரு போதும் முதலீட்டும் நோக்கம் கொண்டு செயற்படுவதில்லை. தனது பன்முகப்படுத்தப்பட்ட பணிகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையும் ஒன்றாகும். இச்சேவையும் ஜம்இய்யாவின் ஏனைய சேவைகளைப் போன்று சேவைநலன் கொண்டதே அன்றி முதலீட்டும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும் தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கின்றோம்.


சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்  சில நிறுவனங்களின் வேண்டுகோள்களைக் கவனத்திற்கொண்டே 2000ஆம் ஆண்டு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில்  அறுக்கப்பட்ட கோழிகளை சந்தைப்படுத்தும் இரண்டு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் அவசியப்பட்டபோது அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை அணுகினர். அவர்களின் வேண்டுகோளை நன்நோக்கம் கொண்டு பார்த்த ஜம்இய்யா  ஹலால் சான்றிதழ் கொடுத்ததோடு  அறுவை மேற்பார்வை செய்பவர்களை இரண்டு நிறுவனத்திலும் நியமித்தது. ஏனெனில் கோழிகளை அறுத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அவர்களால் அறுக்கப்படும் ஒவ்வொரு கோழியினதும் ஹலால் தன்மையை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டவருக்கு குறித்த நிறுவனங்கள் தந்துவந்த பணத்தையே ஊதியமாக கொடுத்து வந்தது.


ஹலால் சான்றிதழ் இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரம் ஆரம்பத்தில்  இருந்து வந்தது. உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களால்  ஹலால் சான்றிதழின் நுகர்வுச் சந்தையில் ஏற்பட்ட அதிகரிப்பும்  வெளிநாட்டு ஏற்றுமதியின்போது ஏற்பட்ட ஹலால் சான்றிதழின் அவசியமும் பல்வேறு உற்பத்தியாளர்களையும் ஹலால் சான்றிதழ் பெற தூண்டியது. அவ்வாறு படிப்படியாக சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் இதுவரை 204 ஆகும்.


ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து நிறுவனங்களும்  எவருடைய வற்புறுத்தலுமின்றி அவர்களது சுய விருப்பின் பேரில் தாமாகவே விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றவையாகும். நாட்டில் அதிகரித்துவரும் ஹலால் சான்றிதழின் அவசியத்தைக் கவனித்தே ஜம்இய்யா ஹலால் பிரிவு என்ற தனியானதொரு பிரிவை  உண்டாக்கியது.  அதற்கென தனியாதொரு இடத்தை வாடகைக்குப் பெற்று காரியாலய வசதிகளைச் செய்துகாரியாலயப் பணியாளர்கள்ஆய்வாளர்கள்,  உணவுப் பகுப்பாய்வாளர்கள்,கண்காணிப்பாளர்கள்மேற்பார்வையாளர்கள் என ஹலால் சான்றிதழ் வழங்குவதோடு சம்பந்தப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முழு நேரப்பணியாளர்களை வேலைக்கமர்த்தி   இச்சேவையை மிகச் சிறப்பாக நாட்டுக்கு வழங்கி வருகின்றது.


ஹலால் சான்றிதழ்  வழங்கும் சேவையை மேற்கொள்வது சாதாரண விடயமல்ல. பல்வேறு பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டியிருப்பதால் பல்வேறு செலவினங்கள் உள்ளன. உணவுப் பகுப்பாய்வு  நிபுணர்கள்ஹலால் கண்காணிப்பாளர்கள்ஹலால் மேற்பார்வையாளர்கள்கணக்காளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான ஊதியங்கள்,கொடுப்பனவுகள்மற்றும் போக்குவரத்துநிர்வாகம்தொடர்பாடல்நீர்மின்சாரம்காரியலயம் இயங்கும் கட்டிட வாடகைசான்றிதழ் பெற்றுள்ள தொழிற்சாலைகளைக் கண்காணித்தல் மற்றும்  ஆய்வு கூடச் செலவுகள்போன்றவற்றுக்கு மாதமொன்றுக்கு ரூபாய் பதின் மூன்று இலட்சம் தேவைப்படுகின்றது.


மேற்குறித்த செலவுகள் தவிர்ந்த வேறு செலவுகளும் உள்ளன. சர்வதேச ஹலால் மாநாடுகளில் கலந்துகொள்ளல்உலமாக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளையும் பொதுமக்களுக்கான விழிப்புக் கருத்தரங்குகளையும் நடாத்துதல்ஹலால் சான்றிதழ் வழங்குவதில் சர்வதே ரீதியில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களோடு புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடல்  போன்றவிடயங்களுக்காக அவ்வப்போது தேவைப்படும் செலவுகள் நலன்விரிம்பிகளிடமிருந்தே பெறப்பட்டுவருகின்றன.


மேலே விவரிக்கப்பட்டது போன்ற ஏராளமான செலவுகள் ஹலால் பிரிவுக்கு இருந்த போதிலும் முற்றிலும் இலாப நோக்கமின்றி இயங்கும் ஒரு அமைப்பாகிய எமது அமைப்பு நுகர்வோருக்கோ,  உற்பத்தியாளர்களுக்கோ ஒரு சுமையாக ஆகாத விதத்தில் பின்வருமாறு தமது கட்டணக் கட்டமைப்பை வடிவமைத்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை
ஒரு உற்பத்திப் பொருளுக்கான மாதாந்தக் கட்டணம்

சிறு நிறுவனம்
நடுத்தர நிறுவனம்
பெரிய,பன்னாட்டு நிறுவனம்
1 to 5
500-700
1000-1250
1500-2000
6 to 10
400-600
800-1000
1250-1500
11 to 20
250-400
600-800
800-1000
21 to 30
-
400-600
600-800
31 to 50
-
200-300
350-500
51 to 100
-
100-200
200-300
>100
-
-
20,000-25,000**


**ஹலால் சான்றிதழ் பெறும் உற்பத்திப் பொருட்கள் நுறாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருந்தால் ரூபா இருபதாயிரம் முதல் இருபத்தையாயிரம் வரை மாத்திரமே அறவிடப்படும்.







சிறு நிறுவனம்
பொருட்களின் எண்ணிக்கை
ஒரு பொருளுக்கான மாதாந்தக் கட்டணம்
மாதாந்த  முழுக் கட்டணம்
வருடத்திற்கான கட்டணம்
1
ABC நிறுவனம்
1
500
500.00
6,000.00
2
ABC தயிர் தயாரிப்பு நிறுவனம்;
4
500
2,000.00
24,000.00
3
ABC கேக் தயாரிப்பு நிறுவனம்
12
250
3,000.00
36,000.00




நடுத்தர நிறுவனம்


4
ABC ஜஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம்
5
1000
5,000.00
60,000.00
5
ABC பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம்
25
400
10,000.00
120,000.00




பெரிய நிறுவனம்   


6
ABC சொகலட் தயாரிப்பு நிறுவனம்
75
200
15,000.00
180,000.00
7
ABC பன்னாட்டு நிறுவனம்
101
-
25,000.00
300,000.00


ஒரு கோழிப்பண்ணை மூலம் இருபதாயிரம் முதல் நாற்பதாயிரத்துக்குட்பட்ட தொகை மாதாந்தம் பெறப்படுகின்றது. உற்பத்தியாளர் தினமும் பதினைந்தாயிரம் முதல் இருபத்தையாயிரம் வரையிலான கோழிகளை  அறுத்து சந்தைப்படுத்துகின்றனர்.


அவ்வாறே மேற்கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கவனிக்கும்போது உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து எழுநூறு ரூபாய் முதல் இருபத்தையாயிரம் ரூபாய் வரையிலான கட்டணங்கள் மாத்திரமே மாதாந்தக் கட்டணமாக பெறப்படுகின்றன. ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழுக்காக கோழிப் பண்ணைகளிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் தொகையையும் அப்பண்ணைகளால் மாதாந்தம் சந்தைப்படுத்தப்படும் கோழிகளின் எண்ணிக்கையையும் கவனிக்கும்போது ஒரு கோழியின் ஹலால் சான்றிதழுக்காக ஆறு சதம் மாத்திரமே பெறப்படுகின்றது.


ஜம்இய்யாவின் ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையைத் தொடர அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் ஜம்இய்யா மாதாந்தம் அறிவிடும் முழுத் தொகை
பதினைந்து இலட்சம் ரூபாய் மாத்திரமேயாகும்.

நிறுவனங்கள் ஹலால் சான்றிதழின் பயனாக உள்ளுர்வெளியூர் சந்தையிலும் சுற்றுலா மூலமும் ஆதாயம் பெறுகின்றன. இந்நிலையில் சான்றிதழுக்கு ஒரு பொருளின் மூலம் பெறப்படுவது சதங்களை விட குறைவானதே மேலும் ஹலால் சான்றிதழுக்காக நிறுவனங்கள் வழங்கும் சிறு தொகை அவர்களின் வியாபாரத்தை விரித்தியடைய வைத்துள்ளதே அன்றி பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவானதொரு விடயமாகும். எனவே முஸ்லிம்களோ முஸ்லிமல்லாதவர்களோ ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட பொருட்களுக்கு ஏனைய பொருட்களைவிட அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்ற கூற்று மக்களை பிழையாக வழிநடாத்தும் முயற்சியாகும்.


இதுவரை ஜம்இய்யாவின் ஹலால் அத்தாட்சிப்படுத்தற் பிரிவினால் 204 நிறுவனங்களினூடாக சுமார்4500 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நிர்வனங்களிடமிருந்தும் மாதாந்தம் மொத்தமாக பெறப்படும் தொகை சராசரியாக பதினைந்து இலட்சம் ரூபாயாகும். இதனுடைய அனைத்து கணக்கு முறைகளும் வருடாந்த கணக்காய்வின் மூலம் உறுதிசெய்யப்படடிருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை இவ்வாறிருக்க ஜம்இய்யாவின் ஹலால் சான்றிதழ் வழங்கும் பிரிவு மாதமொன்றுக்கு ஒரு நிறுவனத்திடமிருந்து 175000 ரூபாய் அறவிடுவதாகவும் இதனடிப்படையில் வருடத்துக்கு 700கோடி ரூபாய் வருமானமீட்டி அல் காயிதாஹமாஸ் போன்ற அமைப்புக்களுக்கு அனுப்புவதாகவும் ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தின் பின்னர் நிம்மதிப் பெருமூச்சு கண்டுள்ள நம் நாட்டில் இதன் மூலம் இனமோதல்கள் தூண்டப்படுவதை சிந்திப்போர்
உணர்வர். இதுபற்றி பொறுப்பு வாய்ந்தோர் அவதானமாக இருப்பதே நாட்டின் அமைதிக்கு வழிகோலும்.

ஹலால் சான்றிதழ் நிதிப் பாவனை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக எமது அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து உண்மை நிலையை  கண்டறியுமாறு தேசியப் புலனாய்வுப் பிரிவுகுற்றப் புலனாய்வுப் பிரிவுபாதுகாப்புத் தரப்பு ஆகியவற்றுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவு அழைப்புவிடுக்கின்றது.
மேலும் ஹலால் சான்றிதழ் நிதிப் பாவனை தொடர்பிலான உண்மைகைளைக் கட்டறிந்து  நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் தப்பெண்ணெங்கள் களையப்படல் வேண்டும். இதற்கு அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஆவண செய்தல் வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  ஹலால் பிரிவு வேண்டிக்கொள்கின்றது.

    
எனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பின்வரும் விடயங்களை பொதுமக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றது.


·         ஹலால் சான்றிதழ் வழங்குவதன் மூலம் வருடமொன்றுக்கு 700 கோடி ரூபாய் அறவிடுவதாகவும் அப்பணம் பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவதாகவும் சொல்லப்படும் குற்றச்  சாட்டுக்களை நிரூபிக்குமாறு வேண்டுகிறோம்.

·         ஹலால் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயங்களைப்பற்றி தெளிவுகளைப்பெற எம்மைத் தொடர்ப்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

·         இது இரகசியமானதொன்றல்ல எனக் கூறிக்கொள்வதோடு எவரும் முறையாக எமது காரியாலயத்திற்கு வந்து இது சம்பந்தமான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

·         இத்தகைய பொய்ப்பிரச்சாரங்களின் மூலம் மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை விளைவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, January 7, 2013

சம்மாந்துறை பிரதேசசபை ஊழியர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

சம்மாந்துறைப் பிரதேச சபையின் கீழ் பணியாற்றம் ஊழியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டரங்கில் சம்மாந்தறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பணியாளர்களின் பிள்ளைகளிடையேயான போட்டி நிகழ்சச்சிகளும் , ஊழியர்களிடையேயான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் போட்டிகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.










Tuesday, January 1, 2013

சம்மாந்துறை பிரதேச சபையின் புதுவருட நிகழ்வுகள்





சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல் ஹாஜ் A.M.M.NOWSHAD அவர்களின் வேண்டுதலின் பேரில் 2013 ஆம் வருடத்தை வரவேர்கும் முகமாக சம்மந்துறை பிரதேச சபை ஒழுங்கு செய்த நிகழ்வு 2013.01.01 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் தேசிய கொடி ஏற்றுதலுடன் பிரதேச  சபையின் செயலாளர் ஜனாப் A.A.SALEEM அவர்களின் தலைமையில்  பிரதேச  சபை முன்றலிடம் இடம் பெற்றது. இந்னிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச  சபையின் உப தவிசாளர் ஜனாப் A.KALILUL RAHMAN அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதேச  சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜனாப் A.L.M.MUSTHAFA உட்பட ஏனைய ஊழியர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் ஊழியர்கள் அனைவரும் 2013 ஆம் வருடத்திற்கான அரச சேவையின் உறுதி மொழியும் சத்திய பிரமாணமும்  செய்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Wednesday, December 26, 2012

சுனாமி சுழன்று எட்டு- பின்னால் சில எட்டுக்கள்




கடந்த 2004-டிசம்பர் -26 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். அமைதியான அதிகாலை அமைதியான பொழுது உலகையே ஒருமுறை உசுப்பி விட்டது.  இந்தோனேஸியாவின் சுமாத்திரா தீவுகளிற்கருகில் கடலடியில் புவிததகடுகளிற்கிடையே ஏற்பட்ட உரசல்கள் காரணமாக ஏற்பட்ட நிலநடுக்கம்  பாரிய சுனாமிப் பேரலைகளை உருவாக்கின. இது ரிச்டர் அளவுப்படி 9.0 ரிச்டர்களைக் காட்டியது இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா,மலேசியா, மாலைதீவு, பர்மா, கென்யா,தன்ஸானியா,மடகஸ்கார், சீஸெல் தீவுகள், அந்தமான் நிகோபார்  என இந்து சமுத்திரத்தை சூழ்ந்த பல நாடுகள், தீவுகள் பாதிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர், சொத்துக்களின் இழப்போ மிகப்பல. உலகெங்கும் 2 லட்சம்  முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர், பல்லாயிரம் பேர் அகதிகளாயினர், மனநலம் பாதிக்கப்பட்டனர், காணாமல் போயினர், உறவுகளை இழந்தனர்.
உலகிலே இடம்பெற்ற கொடூரமான இயற்கையளிவுகளில் இது 6வது இடத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு சோக சாதனையை எட்டிக் கொண்டது
1960ற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி இதுவாகும்


இவ் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள்
 பூர்த்தியாகின்றது.


சுனாமி வர காரணம் என்ன ?

தரையில் பூமியதிர்சி  ஏற்படும் போது, நிலம் பிளவுபட்டு கட்டடங்கள் சேதமாகின்றன. மலைப்பகுதியில் உண்டாகும் போது எரிமலை உருவாகிறது. இதுவே கடற்பரப்பில் பூகம்பம் உண்டாகும் போது, சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாகின்றன. இவற்றின் வேகம் ஆரம்பமான இடத்திலிருந்து, கரையை நெருங்க, நெருங்க அதிகரிக்கும். 

சாதாரண மாக கடல் அலையின் உயரம் 7 அடிக்கு எழும்பும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் 10 அடியளவில் இருக்கும். ஆனால் அன்றைய தினம் இந்த அலைகள், 100 அடி உயரத்துக்கு எழும்பின. சுனாமி, சில வினாடிகளில் அதிக கொள்ளளவு தண்ணீரை கரைப்பகுதியில் தள்ளுகிறது.

சுனாமியை தடுக்க முடியா விட்டாலும், அது வரும் முன் கண்டறிந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வைக்கலாம். கடலில் பூகம்பம் ஏற்பட்டவுடன் ஆழிப் பேரலைகள் உருவாகின்றனவா என்பதை கண்டறிய, சுனாமி எச்சரிக்கைக்கருவிகள் பெருங்கடல்களில் அமைக்கப் பட்டுள்ளன. இது கடலில் நீர் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும். 

இதன் அடிப்படையில் அலைகளின் மாற்றத்தை விஞ்ஞானிகள் அறிந்து, பாதிப்பை ஏற்படுத்துவதாக உணர்ந்தால் எச்சரிக்கை தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படப் போகும் அழிவின் அளவை வெகுவாக குறைக்கலாம். 

Saturday, December 22, 2012

உருளைக்கிழங்கில் அரபு எழுத்துக்கள்


இன்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் இல 152ஏ, அல் அக்ஸா வீதி, மட்டக்களப்பு தரவை-1, சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆதம் லெப்பை முஹம்மது ஜாபிர் என்பவரது வீட்டில் வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

காலை வேளையில் சமையலுக்காக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு துண்டங்களில் அல்லாஹ் என்ற இறை நாமம் மற்றும் திருக்கலிமா என்பவை அரபு மொழியில் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மற்றும் இவ்விடயம் தொடர்பாக அஷ்ஷெய்ஹ் சாஜித் அலி முப்தி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. உருளைக் கிழங்கு துண்டங்களை நேரடியாக அவதானித்து, பரிசீலித்த முப்தி அவர்கள் இது தொடர்பாக தெரிவித்த செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.

Sunday, December 9, 2012

சம்மாந்துறைப் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய த்தில் 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விா



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் பாராட்டு விழாவும் அப்துல் மஜீத் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக அம்பாவரை மாவட்ட சிறீ-லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபைத் தவிசாளருமான அல்-ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் கல்லூரி அதிபர் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இவ் விழாவில் கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.

Saturday, December 8, 2012

ஐந்தில் மூன்று நிரூபிப்பு!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுக்களில் 5 குற்றச்சாட்டுக்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டதாகவும் அதில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

1ம் 4ம் 5ம் குற்றங்களில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார் எனவும் 2ம் 3ம் குற்றங்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

adaderana

Thursday, December 6, 2012

புலமைப்பரிசில் மாணவர்களை பாராட்டும் விழா-2012


 சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 26 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் 2012.12.05 அந் திகதி அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த  பாரட்டு விழாவில் சித்தி பெற்ற மாணவர்களையும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியைகளான ஜனாபா RUM. மன்சூர், AB. பரீதா RU. றிம்லான் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வைபவத்தில் புலமைப்பரிசில் நிகழ்வில் வலயத்தில் 179 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை தட்டிக்கொண்ட MBM. தஸ்னீம் என்னும்  மாணவனுக்கு விசேட பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது என்பதை சுட்டிகாட்டுதல் பொருத்தமாகும். 

அ.ம. தாஹா நழீம்

அம்பாறை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடை

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்படுகிறது.

  நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை மின் தடை அமுலில் இருக்கும் என்று கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பிரதேசத்திலுமே மின் தடை இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாரிய திருத்த வேலைகளுக்காகவே இம்மின்சாரத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், இந்நாட்களில் ஏதாவது ஒரு சில நேரங்களில் பொது மக்களின் நலன் கருதி குறித்த சில நிமிடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதனால் மின் தடை அமுலில் உள்ளபோது எவரும் தமது வீடுகளில் தனிப்பட்ட முறையில் மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தாம் கண்டிப்பாக கேட்டுக் கொள்வதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கை மின்சார சபை பொறுப்பாக இருக்காது எனவும் கூறினார்.


thanks  adaderana

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.