Saturday, December 22, 2012
உருளைக்கிழங்கில் அரபு எழுத்துக்கள்
இன்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் இல 152ஏ, அல் அக்ஸா வீதி, மட்டக்களப்பு தரவை-1, சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆதம் லெப்பை முஹம்மது ஜாபிர் என்பவரது வீட்டில் வழமைக்கு மாறான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
காலை வேளையில் சமையலுக்காக வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு துண்டங்களில் அல்லாஹ் என்ற இறை நாமம் மற்றும் திருக்கலிமா என்பவை அரபு மொழியில் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மற்றும் இவ்விடயம் தொடர்பாக அஷ்ஷெய்ஹ் சாஜித் அலி முப்தி அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. உருளைக் கிழங்கு துண்டங்களை நேரடியாக அவதானித்து, பரிசீலித்த முப்தி அவர்கள் இது தொடர்பாக தெரிவித்த செய்தியும் இணைக்கப்பட்டுள்ளது.
Sunday, December 9, 2012
சம்மாந்துறைப் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய த்தில் 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விா

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய 2009,2010,2011,2012 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் பாராட்டு விழாவும் அப்துல் மஜீத் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக அம்பாவரை மாவட்ட சிறீ-லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபைத் தவிசாளருமான அல்-ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் கல்லூரி அதிபர் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இவ் விழாவில் கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.
Saturday, December 8, 2012
ஐந்தில் மூன்று நிரூபிப்பு!
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட 14
குற்றச்சாட்டுக்களில் 5 குற்றச்சாட்டுக்கள் முழுமையாக
விசாரிக்கப்பட்டதாகவும் அதில் மூன்று குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்
விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
தெரிவித்துள்ளார்.
1ம் 4ம் 5ம் குற்றங்களில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார் எனவும்
2ம் 3ம் குற்றங்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய
குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
adaderana
Thursday, December 6, 2012
புலமைப்பரிசில் மாணவர்களை பாராட்டும் விழா-2012

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 26 மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் 2012.12.05 அந் திகதி அதன் அதிபர் ரீ.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
இந்த பாரட்டு விழாவில் சித்தி பெற்ற மாணவர்களையும் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியைகளான ஜனாபா RUM. மன்சூர், AB. பரீதா RU. றிம்லான் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வைபவத்தில் புலமைப்பரிசில் நிகழ்வில் வலயத்தில் 179 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை தட்டிக்கொண்ட MBM. தஸ்னீம் என்னும் மாணவனுக்கு விசேட பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது என்பதை சுட்டிகாட்டுதல் பொருத்தமாகும்.
அ.ம. தாஹா நழீம்
அம்பாறை நாளை முதல் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடை
நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை மின் தடை அமுலில் இருக்கும் என்று கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லாறு பிரதேசத்திலுமே மின் தடை இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாரிய திருத்த வேலைகளுக்காகவே இம்மின்சாரத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், இந்நாட்களில் ஏதாவது ஒரு சில நேரங்களில் பொது மக்களின் நலன் கருதி குறித்த சில நிமிடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதனால் மின் தடை அமுலில் உள்ளபோது எவரும் தமது வீடுகளில் தனிப்பட்ட முறையில் மின்சார திருத்த வேலைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தாம் கண்டிப்பாக கேட்டுக் கொள்வதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கை மின்சார சபை பொறுப்பாக இருக்காது எனவும் கூறினார்.
thanks adaderana
Wednesday, December 5, 2012
Friday, November 30, 2012
துருக்கியின் மறுமலர்ச்சி
துருக்கி மார்க்கம் போதிக்கும் பாடசாலைகளில் ஹிஜாப் தடையை நீக்கியுள்ளது. இந்த முன்னெடுப்பானது அங்குள்ள மதச்சாரபற்ற சக்திகளின் விமர்சனங்களைத் துண்டியுள்ளதுடன், துருக்கி அரசாங்கம் ஒர் இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலை நோக்கி நகர்வதற்கான சிறந்த சாட்சி இதுவேனவும் கூறியுள்ளன.
பலஸ்தீனுக்கு அங்கீகாரம்
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இலக்காகிவரும் பலஸ்தீனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
கிரக ஒழுங்கு- அரிய நிகழ்வு
சில இணையத்தளங்களின் தகவல்களின் படி 2737 வருடங்களுக்கொருமுறை நிகழும் இவ்வரிய நிகழ்வு எகிப்தின் மர்மப் பெட்டகமான கீஸா பிரமிடுகளின் மேல் வானிலே 3 கிரகங்களும் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சனி, வெள்ளி, புதன் கிரகங்களே இவ்வாறு அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Wednesday, November 28, 2012
பெரியபள்ளிவாசலில் கிரகணத் தொழுகை
மறைந்த அமைச்சருக்கான கதமுல் குர்ஆன் நிகழ்வு
இந்த நிகழ்ச்சியில் பெருமளவானோர் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்தித்ததோடு அன்னாரின் நற்பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.
இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படும் இவ்வரிய நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே அதே போல் நிகழும்.
இவ்வாறான கிரகணமொன்று இன்று இடம்பெற்றது. அதனை இலங்கையில் சிறிதளலு காணக்கூடிய வாய்யு இருந்தது எனினும் காலநிலை மாற்றம் காரணமாக முகில்கள் சூழ்ந்த நிலையில் வானம் காணப்பட்டது. இதனால் கிரகணத்தை தெளிவாக பார்க்க கூடிய வாய்ப்பு பல இலங்கையர்களுக்கு தவறவிடப்பட்டது.
மர்ஹும் எம்.ஏ.அா்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு
1926-10-15ம் திகதி அஹமது லெப்பை உடையார் முகம்மதலி , அப்துல் மஜீட் வன்னிமை கதீஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சம்மாந்துறை அரசினர் தமிழ்ப்பாடசதலையிலே ஆரம்பக் கல்விகற்ற இவர் . மட்டக்ளப்பு சிவானந்தா வித்தியாலயத்திலே தனது இடைநிலை கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பல்கலைக்கழகம் பிரவேசித்த அன்னார் கிழக்கிலங்கையிலேயே முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக 1949ம் வருடம் வெளியானார்.
சம்மாந்துறை மக்களின் வாழ்வாதார, கல்வி, விவசாய, பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பட்டின சபைத் தவிசாளராகவும், தவிசாளராகவும், மாவட்ட அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவம், அமைச்சராகவும் பல்துறைகளிலும் இருந்து சமூகப்பணி செய்தார்.
சேவையின் சிகரமென புகழப்பட்ட இவர் கடந்த 2011ம் வருடம் நவம்பர் 29ம் திகதி சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் இறையடி எய்தினார்.
சம்மாந்துறையின் முதலாவது வரலாற்று ஆவணப்படம் வெளியீடு
குறிப்பாக சம்மாந்தறையின் வரலாற்றில் அதிகளிவான வரலாற்று தொகுப்புகள் வெளியாகியுள்ள வருடமாக 2012ம் வருடத்தைக் கொள்ளலாம்
வெண்முத்து, அறுவடை, ஈழத்தின் இன்னுமொரு மூலைக்குப் பின்னர் மீலாத் மலர், திறப்பு விழாமலர்கள் , பட்டறை வரை ஆங்காங்கே சேகரிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் 2012ம் வருடத்தில் சம்மாந்துறையின் முதலாவது வரலாற்றுத் தொகுப்பு தனி நூலாக “சம்மாந்துறை பெயர் வரலாறு“ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் “சம்மாந்துறை அரசியல் வரலாறு” எனும் நுர்ல் வெளியானது. அதன்பின்னர் பிரதேச செயலகத்தின் தகவல் களஞ்சியமான பட்டறை வெளியானது, பின்னர் சம்மாந்துறையிலுள்ள குடிகள் பற்றிய “முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை“ எனும் நூல் அண்மையில் வெளியானது.
இந்த வரிசையில் டீகே இணைய குழுமமும் இணைந்து கொள்கின்றது சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை என்ற முதலாவது ஆவணப்படத்தை கடந்த 2012-11-26ம் திகதி இமய விழாவில் வெளியிட்டு வைத்தது.
Monday, November 26, 2012
இமயவிழா 2012-400000 பார்வைகள்
மேற்படி இமயம் நோக்கிய இந்த நிகழ்வைக் கொண்டாடும் முகமாக இன்று டீகே மீடியா குழுமத்தினால் இமய விழா நிகழ்வொன்று சம்மாந்தறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
கடந்த 2008 ம்வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய ஊடகம் கடந்த நான்கு வருடங்களில் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் சேவைகள் என்பன பற்றிய கண்ணோட்டமும். சம்மாந்துறை 2012 எனும் தொகுப்புப் பார்வையும். இணைய தளத்தின் 400000 பார்வையாளர்களை தாண்டிய நிலைகள் பற்றிய 400000 பார்வைகள் எனும் நிகழ்வும் இடம்பெற்றது மற்றும் விஷேடமாக டீகே இணைய குழுமத்தின் கூட்டு முயற்சியில் உருவான ” சம்மாந்தறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை“ எனும் ஆவணப்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சம்மாந்தறை வரலாற்றில் முதன்முதலாவது ஒளிப்பதிவு வரலாற்று ஆவணப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுக்கு அதிதிகளாக சம்மாந்தறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் , மற்றும் மத்தியஸ்த சபை தலைவர் எஸ் அப்துல் றாஸிக், முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாஹீம், மற்றும் கவிஞரும் ஆய்வாளருமான பௌஸ்தீன் அவர்களும் கெப்ஸோ நிறுவனத்தை சேர்ந்த சகோதரர் இம்டாட் மற்றும் பல பிரமுகர்களம் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்
Saturday, November 24, 2012
KINDS 21 அமைப்பின் இலவச செயலமர்வு
எதிர்வரும் 27ம் திகதி அமைப்பினரால் அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் கணித பாடத்திற்கும் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
முர்சி முக்கிய தீர்மானம்
வியாழன் இரவு ஜனாதிபதி முர்ஸியின் பேச்சாளரின் அறிவிப்புக்களை அடுத்து எகிப்து அரசியல் களம் அதிர்ந்து போயுள்ளது. காஸா தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட சூடு தணிவதற்கு முன்னாலே முர்ஸியின் இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முபாரக் கால அதிகாரிகளை களை எடுக்கும் ஒர் நகர்வாகவே நேற்றைய தீர்மானங்கள் நோக்கப்படுகின்றது.
Thursday, November 22, 2012
மாபெரும் கண்டணிப் பேரணி
Wednesday, November 21, 2012
இஸ்லாமிய புதுவருடத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொண்டாட்டம்
வாகன விபத்தில் ஒருவர் பலி
அக்கரைப்பற்று, கோமாரி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் அக்கரைப்பற்று- மட்டக்களப்பு தனியார் பஸ்ஸின் நடத்துனருமாவர்.
பயணிகளுடன் மட்டக்களப்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முற்பட்ட போது மிதிபலகையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், இவரின் தலையில் பஸ் ஏறியமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொட்ர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் விஜயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
21-11-12 பாலின்ரோம் திகதி
பாலின்ரோம் palindrome என்பது ஒரு வார்த்தை அல்லது ஒரு எண்தொடர் அல்லது ஏதோ ஒரு வரிசை, முன்னால் இருந்தோ அல்லது பின்னால் இருந்தோ வாசிக்கும் போது ஒரே மாதிரியாக அமைந்திருத்தல் ஆகும்.உதாரணமாக “விகடகவி“ என்ற சொல்
“மாடு பாடுமா“ என்ற வசனம் பொன்றவை
இது போலவே திகதிகளிலும் பாலின்ரோம் திகதிகள் உண்டு
அவ்வாறான ஒரு திகதியே 21-நவம்பர்-2012 ஆகும் அதாவது இதனை எழுதும் போது திகதி-மாதம்-வருடம் என்ற ஒழுங்கில் எழுதும் போது 21-11-12 என வரும் . இவ்வாறான திகதிகள் அரிதாகவே காணப்படகின்றன.
Tuesday, November 20, 2012
ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டுசம்மாந்துறையில் மர நடுகை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் பதவியேற்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் 2வது வருடப் நிறைவையிட்டும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் சம்மாந்துறை தொகுதியின் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமைமையில் மரம் நடுகை நிகழ்வும், பிராத்தனையும் இன்று சனிக்கிழமை (2012-11-20) காலை சம்மாந்துறை சென்னல் கிராம நிலையத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில், பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.எம்.சிப்லி, எம்.ஐ.றனூஸ், எம்.பி.முகைதீன், தியாகரன் ஆகியோரும் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் உட்பட பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதியின் தேக ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் சம்மாந்துறை மத்தயஸ்த சபையின் தவிசாளரும் உலமா சபையின் செயலாளருமான மௌலவி எம்.ஐ.அச்சு முகம்மது அவர்களின் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.
Monday, November 19, 2012
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், ஜனதிபதியின் 67 அகவையை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம்
எமது ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது என்பதை நாங்கள் அறிந்த விடயமே. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் மர நடுகை, மதசார்பான நடவடிக்கைகள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கல்வி அமைச்சின் சுற்று நிருபதிற்குகமைவான முறையில் சம்மாந்துறையில் உள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான பிள்ளைகளை சித்தியடைவைக்கும் பாடசாலையான கமு/ சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது அரசியல் சார்பான ஒரு பிரமுகரின் பிரசன்னத்துடன் நடாத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றுநிருபத்தில் கோரப்பட்டிருந்தததும் இங்கு ஒரு முக்கிய விடயமாகும்.
இந்த கோரிக்கைக்கமைவாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் சமாதான கல்விக்கான இணைப்பாளராகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஏ. முகம்மட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தார்.
அத்துடன் இப்பாடசாலை அதிபர் TM. தௌபீக் மற்றும் இப்பாடசாலையின் செயற்பாட்டாளர் .AM. தாஹா நழீம் தரம் -5 கற்பிக்கும் ஆசிரியைகளான RUM.மன்சூர், AU. றிம்லான், AB. பரீதா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஜனாதிபதி அவர்களின் 67 பிறந்த தின நிகழ்வை மிக விமர்சியாக கொண்டாடினார்கள்.
Sunday, November 18, 2012
இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு-யூசுப் அல் கர்ளாவி
இன்று ஜனாதிபதியின் பிறந்தநாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 1945ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி ஹம்பாந்தோட்டையில் பிறந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது வருட பூர்த்தியும் அவரின் பிறந்த நாளும் அதாவது ஒரே நாளில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
இஸ்ரேலுக்கு அதனைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதாம்: ஒபாமா
நன்றி (மீள்பார்வை)
இஸ்ரேலுக்கு அர்தூகானின் பலமான செய்தி
இஸ்ரேலின்
பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுக்கு, துருக்கிய பிரதமர் ரஜப் தய்யிப்
அர்தூகான் பலமான செய்தி ஒன்றை விடுத்துள்ளார். 2012 இன் நிலமைகள் 2008
இலிருந்து பல வகையில் மாறுபட்டிருக்கிறது என்பதே அந்த செய்தியாகும்.
போர் முழக்கத்திற்கு மத்தியிலும் காஸா மக்கள் திடமாகவே உள்ளனர் – எகிப்திய பிரதமர்
தான்
காஸாவுக்கு விஜயம் செய்தபோது, போர் முழக்கத்திற்கு மத்தியிலும் மக்கள்
திடமாக உள்ளதைக் கண்டதாக எகிப்திய பிரதமர் ஹிஸாம் கந்தில், துருக்கி-
எகிப்திய வர்த்தக மன்றத்தின் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்ட சிறு குழந்தை ஒன்றைக் கண்டபோது, தனது உள்ளம் ஆழமாக வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்காக துருக்கியும் எகிப்தும் இணைந்து பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் வீடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. மரணத்தை கூட்டாக எதிர்கொள்வது ஒரு அருள் என ஒருவர் தெரிவித்துள்ளார்
நன்றி மீள்பார்வை
நபிகளாரின் வரலாறு(ஸீறா) விஷேட சொற்பொழிவு
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஸீறா பற்றிய இச் சொற்பொழிவை மௌலவி அலி ஏ.ஏ.அஹமட் றஸாதி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்கள்.
குறித்த 23,24,25ம் திகதிகளில் மஃரிப் தொழுகையிலிருந்து இரவு 9.00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்































