Sunday, November 18, 2012
இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு-யூசுப் அல் கர்ளாவி
இன்று ஜனாதிபதியின் பிறந்தநாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 1945ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி ஹம்பாந்தோட்டையில் பிறந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது வருட பூர்த்தியும் அவரின் பிறந்த நாளும் அதாவது ஒரே நாளில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
இஸ்ரேலுக்கு அதனைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதாம்: ஒபாமா
நன்றி (மீள்பார்வை)
இஸ்ரேலுக்கு அர்தூகானின் பலமான செய்தி
இஸ்ரேலின்
பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுக்கு, துருக்கிய பிரதமர் ரஜப் தய்யிப்
அர்தூகான் பலமான செய்தி ஒன்றை விடுத்துள்ளார். 2012 இன் நிலமைகள் 2008
இலிருந்து பல வகையில் மாறுபட்டிருக்கிறது என்பதே அந்த செய்தியாகும்.
போர் முழக்கத்திற்கு மத்தியிலும் காஸா மக்கள் திடமாகவே உள்ளனர் – எகிப்திய பிரதமர்
தான்
காஸாவுக்கு விஜயம் செய்தபோது, போர் முழக்கத்திற்கு மத்தியிலும் மக்கள்
திடமாக உள்ளதைக் கண்டதாக எகிப்திய பிரதமர் ஹிஸாம் கந்தில், துருக்கி-
எகிப்திய வர்த்தக மன்றத்தின் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்ட சிறு குழந்தை ஒன்றைக் கண்டபோது, தனது உள்ளம் ஆழமாக வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்காக துருக்கியும் எகிப்தும் இணைந்து பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் வீடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. மரணத்தை கூட்டாக எதிர்கொள்வது ஒரு அருள் என ஒருவர் தெரிவித்துள்ளார்
நன்றி மீள்பார்வை
நபிகளாரின் வரலாறு(ஸீறா) விஷேட சொற்பொழிவு
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஸீறா பற்றிய இச் சொற்பொழிவை மௌலவி அலி ஏ.ஏ.அஹமட் றஸாதி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்கள்.
குறித்த 23,24,25ம் திகதிகளில் மஃரிப் தொழுகையிலிருந்து இரவு 9.00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்
Saturday, November 17, 2012
செம்மழை மர்மம் துலக்கம்
இலங்கையின்
பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'சிவப்பு நிற' மழை பெய்து வருகிறது. இலங்கையின்
செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல
ஆகிய கிராமங்களிலும் சிவப்பு மழை பெய்திருக்கிறது.இவ்வாறான நிகழ்வு இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவெ வெளிநாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2005ல் கேரளாவில் இத பொன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால் சிவப்பு மழை தோன்றியிருக்கலாம் என்று முன்னர் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.
எனினும், அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும், ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாகவும், கடலில் இருந்து ஆகாயத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில சமயங்களில் கடலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறிஞ்சப்படலாம்.
இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Friday, November 16, 2012
இஸ்லாமிய புதுவருட வாழ்த்துக்கள்
இந்த வருடத்தை நல்லமுறைலஷயில் பயன்படுத்துவதோடு எமது கடந்த கால தவறுகளை சிந்தித்து இனிவருங்காலங்களில் அவற்றிலிந்து நீங்கி எல்லாம் வல்ல இறைவனின் நல்லருள் பெற பிரார்த்திப்போமாக.
Wednesday, November 14, 2012
சம்மாந்துறை வரலாற்று ஆவணப்படுத்தல்களில் இன்னுமொரு சுவடு
மட்டக்களப்பு முஸ்லிம்களின் தனித்துவ அம்சங்களில் அவர்களில் காணப்படும் குடி வழிமுறை முக்கியமான மரபாக பேணப்பட்டு வருகின்றது. இதன் வரலாறு மற்றும் சம்மாந்துறைப் பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் தற்போது வழக்கிலுள்ள குடி வழிமுறை சம்மந்தமாக சம்மாந்தறை குடி மரைக்கார் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கலாபூஷணம் எஸ்.அப்துல் றாஸிக் அவர்களால் தொகுக்கப்பட்ட முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை எனும் நூல் வெளியீடு எதிர்வரும் 2012-11-17ம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 மணியளவில் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
குடி மரைக்காயர் சம்மேளனத் தலைவர் எஸ்.எல்.ஆதம்பாவா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பல பிரமுகர்களும் கலந்த சிறப்பிக்கவள்ளனர். பொது மக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ள முடியும் என்பதும்
பிரத்தியேகமாக நூல் விற்பனைப்பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சம்மாந்துறை சம்மந்தமான வெளியிடப்படும் தனி வரலாற்று நூல்கள் வரிசையில் இந்த வருடத்தின் மூன்றாவது நூலும். குடி வரலாறுகள் சம்பந்தமான முதலாவது தொகுப்பு நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tuesday, November 13, 2012
செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
கடமையாற்றும் ஆசிரியை Mrs. KA. நஸீர்
அவர்களும் இப் பாடசாலையின் அதிபர் TM. தௌபீக் அவர்களும் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள்
என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை
மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார். Sunday, November 11, 2012
கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
From: "Ila. Sundaram" <ilasundaram@gmail.com>
Date: Fri, 9 Nov 2012 10:53:20 +0530
Subject: கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
To:
அன்புடையீர், வணக்கம்.
*கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
Certificate Course in Fundamental & Usage of Tamil Computing*
*02.12.12 - 28.12.12*
எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு *டிசம்பர், மே *மாதங்களில் *SRM
பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறை*யில் நடைபெறவுள்ளது.
கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள்
உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப்
பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு
நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ்
ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பருவ விடுமுறை மாதங்களான மே,
அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
வகுப்புகள்* திங்கள் முதல் வெள்ளி* வரை *20* நாட்கள் காலை *10* மணிமுதல் மாலை *
5* மணிவரை நடைபெறும்.
தகுதி: *10-ம் வகுப்பில் தேர்ச்சி*. வயது வரம்பு இல்லை.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை* www.srmuniv.ac.in/tamil_perayam.php *எனும்
இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை
நகல் எடுத்தும் பயன்படுத்தலாம்.
பயிற்சிக் கட்டணம் ரூபாய் *1000/-* (ஆயிரம்)-த்திற்கான வரைவோலையை(DD) 'SRM
TAMIL PERAYAM' என்னும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து
விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் *26.11.2012*,
திங்கட்கிழமை.
மேலும் விவரங்களுக்கு இணைப்பைப் பாருங்கள்.
நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தவும்.
இணைப்பில்.
1. செய்திக்குறிப்பு
2. விண்ணப்பம்
நன்றி...
--
இல. சுந்தரம்
*ILA. SUNDARAM*
M.A., M.Sc.(I.T)., MCA., MBA., M.Phil., PGDCA., (Ph.D)
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.
Cell: +91-*98423 74750*
--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*
Saturday, November 10, 2012
இன்று 10-11-12
ஒவ்வொரு நுாற்றாண்டிலும் 12 முறை மட்டுமே வரக்கூடிய தொடர் திகதி எனும் அரிய தகதி இன்றாகும் 2012-நவம்பர் -10 சனிக்கிழமை
இன்றைய இந்தத் திகதி 100 வருடத்திற்கு ஒருமுறையே இவ்வொழுங்கில் 10,11,12 ஆகியன பெறுமான வரிசைக்கிரமமாக வருவது அரிய தொடரொன்றாகும். இத்தொடர் இந்நூற்றாண்டின் 11வதும் கடைசிக்கு மதலாவதான தொடருமாகும்
மேலும் எதிர்வரும் 2013ம் வருடம் டிசம்பர் மாதம் 11ம் திதியே இந்த நூற்றாண்டின் கடைசித் திகதியாகும்.
Thursday, November 8, 2012
கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு
கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு.
இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளில் பிள்ளை நேயம் தொடர்பான கருப்பொருள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை செயற்பாட்டாளராக செயற்படும் UNICEF மற்றும் Australian Aid போன்ற நிறுவனங்கள் நாளுக்கு நாள் பரிசிலனை செய்து வருகின்றன. இதற்காக பல கோடி ரூபாய்க்களை செலவு செய்து வருகின்றது என்றால் அதனை யாரும் மறுப்பதிற்கில்லை.
மேலும் இப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு இப்பாடசாலைகளிலுக்கிடையில் காணப்படுகின்ற விடயங்களை ஏனைய பாடசாலைகள் பின்பற்றி தங்களுடைய பாடசாலையில் அதனை பிரயோகிப்பதன் ஊடாக பிள்ளை நேயக் கோட்பாடுகளான ஆறு கோட்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கும் கல்முனை கல்வி மாவட்ட மாவட்டத்தில் 15 சிறந்த பிள்ளை நேயப்பாடசாலைகளை தெரிவு செய்து அதில் மிகச் சிறந்த பாடசாலை தெரிவு செய்வதற்கான போட்டி (Sharing CFS Best Practice (District Level) 2012.11.06 ஆந் திகதியன்று கமு/ கமு/ வெஸ்லி உயர் கல்விப் பாடசாலையில் நடாத்தப்பட்டது. இது ஒரு கல்வி மாவட்ட மட்டப் போட்டியாகும்.
இந்தப் போட்டியானது கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, நேர்மைாயன முறையில் ஒரு திறந்த போட்டியாக நடைபெற்றது. அத்துடன் இதில் வலயக்கல்வி அதிகாரிகள் நடுவர்களாக செயற்பட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் பங்கு பற்றும் பாடசாலைகளிலிருந்து ஐந்து ஆசிரியர்கள் வீதம் அவர்கள் முன்னிலையில் இப் போட்டி நடாத்தப்பட்டது என்பதும் இங்கு கோடிட்டு காட்ட வேண்டும்.
Photo here
கல்முனை உதவிக்கல்விப் பணிப்பாளர், M. நஜிம் அவர்களிடம் பெற்றிக்கான கேடயத்தினை இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக், ஆசிரியர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களும் இணைந்து பெற்றுக்கொள்ளும் காட்சி இது.
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
Tuesday, November 6, 2012
தேசிய வாசிப்பு மாத கண்காட்சியும் விற்பனையும்
சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச சபை நூலகங்கள் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான கார்ட்டூன் அனிமேசன் திரைப்படக் கூடமும், TK மீடியாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட முற்றிலம் இயற்கையாலான கலையகமும் பண்பலை ஒலிபரப்பு கூடமும் காணப்பட்டன.
இக்கண்காட்சி சிறவர்களைப் பெரிதம் கவர்ந்ததோடு. பெரியவர்கள் இளைஞர்களின் வருகையும் அதிகரித்துக்காணப்பட்டது.
அங்கு சம்மாந்துறையின் இளம் விஞ்ஞானி மர்சூக்கின் கண்டுபிடிப்பு மாதிரியும் இடம்பெற்றிருந்தமை கறிப்பிடத்தக்கது.
மேலும் TK.மீடியாவினர் தயாரித்திருந்த பெரியபள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை எனும் ஆவணப்படமும் இங்கு காட்சிப்படத்தப்பட்டது.
இக்கண்காட்சி தொடர்ச்சியாக 4 நாட்களக்க ஏற்பாட செய்யப்பட்டள்ளது.
Sunday, November 4, 2012
மு.கா. தலைவர் றவூப் ஹகீமின் அமைச்சுப் பதவி மாற்றம்?
Wednesday, October 31, 2012
உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு
முதலாளியை கொலை செய்து மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கையர்!
டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி
Step1
ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
Step2
கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.
Step3
அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)
Step4
வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.
Step5
இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.
Step6
இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.
இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.
நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.
இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கையில் உள்ள வானொலிகளின் அலைவரிசைகள் மாற்றம்......
அத்துடன் பல வானொலிகளின் நிகழச்சிகளுக்கு தடைகளையும் ஏற்படுத்தின. இதன் காரணமாக நாளை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவால் ஒரு வானொலிக்கு இரு அலைவரிசை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கேட்கும் சில தமிழ் வானொலிகளும் புதிய அலைவரிசைகளும்
சூரியன் எப்.எம்-- 103.4 MHz மற்றும் 103.6 MHz
சக்தி எப்.எம்-- 103.9 MHz மற்றும் 104.1 MHz
வெற்றி எப்.எம்-- 90.4MHz மற்றும் 90.6 MHz
வசந்தம் எப்.எம்-- 102.6 மற்றும் 102.8 MHz
அலை எப்.எம்-- 91.4
Tuesday, October 30, 2012
இலங்கையில் மீன் மழை
இதன் போது மழை நீருடன் தரையில் சிறிய மின்களும் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் லீலரட்ன விளையாட்டரங்கில் சுமார் 3-4 அங்குல அளவுடைய மீன்கள் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மழையுடன் தரையில் விழுந்த மீன்கள் குளத்து மீன் வகையினைச் சார்ந்தவை எனக் குறிப்பிடப்படுகிறது.
Sunday, October 28, 2012
The Best Annual Report and Accounts Competition of National Schools 2012
சம்மாந்துறை தேசிய பாடசாலை அகில இலங்கை ரீதியாக தெரிவூ செய்யப்பட்ட சிறந்த பாடசாலை அபிவிருத்தி கணக்கரிக்கையில் 2012 இல் அம்பாறை மாவட்ட முதலாம் இடத்தை பெற்றுள்ளது கடந்த 27.10.2012 கொழும்பு BMICH இல் நடைபெற்ற இவ் விருது வழங்கும் வழாவில் கௌரவ கல்வி அமைச்சர் சகல மாவட்டத்தில் இருந்தும் செய்யப்பட்ட வெற்றியாளருக்கு கௌரவித்து சான்றுதலும் வழங்ஙூகப்பட்டன சம்மாந்றை தேசிய பாடசாலை சார்பில் கல்லுரி முதல்வர் எஸ். அபூபக்கர் அவர்களும் கணக்கியல் ஆசிரியர் நசீர் அவர்களும் பங்குபற்றினர் aat பணிப்பாளர்களும் கல்வி அமைச்சின் சயலாளர் எஸ். எம் கோட்டபாய ஜெயரத்ன அவர்களும் கல்ந்து சிறப்பித்த படங்களாகும்
Thursday, October 25, 2012
பிள்ளை நேயம் உள்ளதா?
இலங்கை கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளை சிலவற்றை பிள்ளை நேயப் பாடசாலைகளாக பிரகடனப்படுத்தி பிள்ளை நேயத்தை இப்பாடசாலைகளில் மேற்கொள்ளும் திட்டத்திற்குகமைவாக,
- 01. பிள்ளைகளின் உரிமைகள்
- 02. பால் நிலை சமத்துவம்
- 03. கற்றல் பேறுகளின் விருத்தி
- 04. பிள்ளையின் ஆரோக்கியமும், பாதுகாப்பும்
- 05. மாணவர்களின் குடும்பப் பிண்ணனி
- 06. சிறுவர் நேயக் கொள்கைகள்
என்பவையே இவைகளாகும். மேற்கூறிய செயற்பாடுகளின் செறிவு பற்றி நேரடியான ஆய்வினை செய்வதற்காக யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள் இப்பாடசாலையில் ஆய்வினை 2012.10.25 மேற்கொண்டனர்.
அத்துடன் இப்பாடசாலையை மென்மேலும் விருத்தி செய்தி எதிர்காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த ஆய்வுகள் ஒரு துடுப்பாக அமைக்கூடுமென இப்பிரநிதிகளும் இப்பாடசாலை சமூகமும் ஆருடம் தெரிவித்துள்ளன.
thaha naleem
களை கட்டியுள்ள சம்மாந்துறை பெருநாள் விற்பனை
திவிநெகும வேலைத்திட்டம் - பயிர்விதைகள் வினியோகம்
Tuesday, October 23, 2012
சம்மாந்துறை தேசிய பாடசாலையில் பல்லூடக நிலையத்திற்கான அடிக்கல் நடப்பட்டது
Monday, October 22, 2012
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் மாதம் 11ஆம் திகதி!
நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்
இந்த பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னோடி கருத்தரங்குகளை நடத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கருத்தரங்குகள் நாளை மறுதினம் 19ஆம் திகதி முதல் 25ஆம்திகதி வரை சகல பாடசாலைகளிலும் நடத்தப்படும் எனவும் அதற்கான செயல்முறை விளக்கம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார் .
இதேவேளை,இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 5,37,393 பேர் தோற்றுவதாகவும் இதில் 1லட்சத்து 50,968 பேர் பாடசாலை மட்டத்தில் தோற்றுபவர்கள் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஏ புஷ்பகுமார தெரிவித்தார்.
மூன்று லட்சத்து 20ஆயிரம் பேர் இப்பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
26ஆம் திகதிய அரச விடுமுறை ரத்து!
26ஆம் திகதி அரசாங்க ,வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும் முஸ்லீம்களின் 'ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜுப்பெருநாள் 27ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற பிறைக்கமிட்டி கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டிருப்பதால் 26ஆம் திகதிய அரச விடுமுறைரத்துச்செய்யப்பட்டுள்ளது.
எனினும் ஹஜ்ஜுப்பெருநாள் தினமாகிய 27ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்க வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாகபிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது.


















