Tuesday, November 13, 2012

செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் – 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி MR. ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றிக்காக இப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியை Mrs. KA. நஸீர் அவர்களும் இப் பாடசாலையின் அதிபர் TM. தௌபீக் அவர்களும் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மேலும், இம்மாணவி இப்பாடசாலையின் மாணவத்தலைவி என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.
இவரை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், பாடசாலை சமூகமும் இவரை வாழ்த்துக்கின்றனர்.



Sunday, November 11, 2012

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு

---------- Forwarded message ----------
From: "Ila. Sundaram" <ilasundaram@gmail.com>
Date: Fri, 9 Nov 2012 10:53:20 +0530
Subject: கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
To:

அன்புடையீர், வணக்கம்.

*கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
Certificate Course in Fundamental & Usage of Tamil Computing*
*02.12.12 - 28.12.12*

எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு *டிசம்பர், மே *மாதங்களில் *SRM
பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறை*யில் நடைபெறவுள்ளது.

கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள்
உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப்
பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு
நடத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ்
ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பருவ விடுமுறை மாதங்களான மே,
அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.


வகுப்புகள்* திங்கள் முதல் வெள்ளி* வரை *20* நாட்கள் காலை *10* மணிமுதல் மாலை *
5* மணிவரை நடைபெறும்.

தகுதி: *10-ம் வகுப்பில் தேர்ச்சி*. வயது வரம்பு இல்லை.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை* www.srmuniv.ac.in/tamil_perayam.php *எனும்
இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை
நகல் எடுத்தும் பயன்படுத்தலாம்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் *1000/-* (ஆயிரம்)-த்திற்கான வரைவோலையை(DD) 'SRM
TAMIL PERAYAM' என்னும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து
விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் *26.11.2012*,
திங்கட்கிழமை.
மேலும் விவரங்களுக்கு இணைப்பைப் பாருங்கள்.

நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தவும்.

இணைப்பில்.
1. செய்திக்குறிப்பு
2. விண்ணப்பம்

நன்றி...


--
இல. சுந்தரம்
*ILA. SUNDARAM*
M.A., M.Sc.(I.T)., MCA., MBA., M.Phil., PGDCA., (Ph.D)
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.

Cell: +91-*98423 74750*

--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*

Saturday, November 10, 2012

இன்று 10-11-12

ஒவ்வொரு நுாற்றாண்டிலும் 12 முறை மட்டுமே வரக்கூடிய தொடர் திகதி எனும் அரிய தகதி இன்றாகும்
2012-நவம்பர் -10 சனிக்கிழமை
இன்றைய இந்தத் திகதி 100 வருடத்திற்கு ஒருமுறையே இவ்வொழுங்கில் 10,11,12 ஆகியன பெறுமான வரிசைக்கிரமமாக வருவது அரிய தொடரொன்றாகும். இத்தொடர் இந்நூற்றாண்டின் 11வதும் கடைசிக்கு மதலாவதான தொடருமாகும்

மேலும் எதிர்வரும் 2013ம் வருடம் டிசம்பர் மாதம் 11ம் திதியே இந்த நூற்றாண்டின் கடைசித் திகதியாகும்.

Thursday, November 8, 2012

கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு

அ.ம. தாஹா நழீம் (Publisher – Google Inc)

 கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு.

 

 

இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளில் பிள்ளை நேயம் தொடர்பான கருப்பொருள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை செயற்பாட்டாளராக செயற்படும் UNICEF மற்றும் Australian Aid போன்ற நிறுவனங்கள் நாளுக்கு நாள் பரிசிலனை செய்து வருகின்றன. இதற்காக பல கோடி ரூபாய்க்களை செலவு செய்து வருகின்றது என்றால் அதனை யாரும் மறுப்பதிற்கில்லை.

மேலும் இப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு இப்பாடசாலைகளிலுக்கிடையில் காணப்படுகின்ற விடயங்களை ஏனைய பாடசாலைகள் பின்பற்றி தங்களுடைய பாடசாலையில் அதனை பிரயோகிப்பதன் ஊடாக பிள்ளை நேயக் கோட்பாடுகளான ஆறு கோட்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கும் கல்முனை கல்வி மாவட்ட மாவட்டத்தில் 15 சிறந்த பிள்ளை நேயப்பாடசாலைகளை தெரிவு செய்து   அதில்  மிகச் சிறந்த பாடசாலை தெரிவு செய்வதற்கான போட்டி (Sharing CFS Best Practice (District Level)  2012.11.06 ஆந் திகதியன்று கமு/ கமு/ வெஸ்லி உயர் கல்விப் பாடசாலையில் நடாத்தப்பட்டது. இது ஒரு கல்வி மாவட்ட மட்டப் போட்டியாகும்.

இந்தப் போட்டியானது கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, நேர்மைாயன முறையில் ஒரு திறந்த போட்டியாக நடைபெற்றது. அத்துடன் இதில் வலயக்கல்வி அதிகாரிகள் நடுவர்களாக செயற்பட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் பங்கு பற்றும் பாடசாலைகளிலிருந்து  ஐந்து ஆசிரியர்கள் வீதம் அவர்கள் முன்னிலையில் இப் போட்டி நடாத்தப்பட்டது என்பதும் இங்கு கோடிட்டு காட்ட வேண்டும்.

Photo here

 

கல்முனை உதவிக்கல்விப் பணிப்பாளர், M. நஜிம் அவர்களிடம் பெற்றிக்கான கேடயத்தினை இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக்,  ஆசிரியர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களும் இணைந்து பெற்றுக்கொள்ளும் காட்சி இது.




--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Tuesday, November 6, 2012

தேசிய வாசிப்பு மாத கண்காட்சியும் விற்பனையும்









சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச சபை நூலகங்கள் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு இன்று(2012-11-03) காலை 9.30 மணியளவில்  ஆரம்பமானது.சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை ஆசியா பவுண்டேசன் இயக்குனர் திரு.ரீ.நல்லதம்பி அவர்களும் சிறீ லங்கா டெலிகொம்மின் பிராந்திய பிரதி இயக்குனர் திரு.எம்.பத்மசூதன் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர் மற்றும் கிழக்கு மாகணசபையின் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் அவர்களும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை மையப்படுத்தியும் ஒக்டோபர் வாசிப்பு மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த இந்நிகழ்வில் சிறுவர்களிற்கான புத்தகக் காட்சிக்கூடமும் சம்மாந்துறை எழுத்தாளர்கள் படைப்பாளிகளின் ஆக்கங்களும் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் வன்னுமை சிற்றாட்சியாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதெச சபைத்தவிசாளர்கள் அனைவரினதும் அரிய பகைப்படங்கள், சம்மாந்தறையின் பழைய தேச வரைபடங்கள், தகவல்கள் என்வையும் பழைய சிலோன் நாணயங்களும், வெளிநாட்டு நாணயங்களும், சம்மாந்துறையின வெளியீடுகளுடன் கூடிய காட்சிக் கூடமும் 
Computer Society of Sammanthurai ஏற்பாட செய்யப்பட்டிருந்த வை-பை விளக்க செயலமர்வுகளும், மற்றும் கணணி வன்பொருட்களுடனான காட்சிக்கூடமும் 

சிறுவர்களுக்கான கார்ட்டூன் அனிமேசன் திரைப்படக் கூடமும், TK மீடியாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட முற்றிலம் இயற்கையாலான கலையகமும்  பண்பலை ஒலிபரப்பு கூடமும் காணப்பட்டன.

இக்கண்காட்சி சிறவர்களைப் பெரிதம் கவர்ந்ததோடு. பெரியவர்கள் இளைஞர்களின் வருகையும் அதிகரித்துக்காணப்பட்டது.

அங்கு சம்மாந்துறையின் இளம் விஞ்ஞானி மர்சூக்கின் கண்டுபிடிப்பு மாதிரியும் இடம்பெற்றிருந்தமை கறிப்பிடத்தக்கது.

மேலும் TK.மீடியாவினர் தயாரித்திருந்த பெரியபள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை எனும் ஆவணப்படமும் இங்கு காட்சிப்படத்தப்பட்டது.

இக்கண்காட்சி தொடர்ச்சியாக 4 நாட்களக்க ஏற்பாட செய்யப்பட்டள்ளது.

Sunday, November 4, 2012

மு.கா. தலைவர் றவூப் ஹகீமின் அமைச்சுப் பதவி மாற்றம்?


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹகீம் தற்போது வகிக்கும் நீதி அமைச்சுக்குப் பதிலாக வேறு ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு விரைவில் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம்கிழக்கு மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக வழங்கிய உறுதி மொழிகளுள் இந்த விடயமும் அடங்கி இருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தவிசாளர் பஷீர் சேகு தாவூதுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் மேலும் மூன்று எம்.பி.க்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
அந்த உடன்பாட்டின் பேரிலேயே கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது என்றும் அந்த முக்கியஸ்தர் சுட்டிக் காட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தை நேற்று ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு ஜனாதிபதி பச்சைக் கொடி காட்டி இருப்பதாகவும் அறிய முடிகிறது.

meelparvai

Wednesday, October 31, 2012

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு

உயர்தர கலைப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இனி தாதியர் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமென உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சுமார் 200,000 தாதியருக்கு வெற்றிடம் நிலவுவதாகவும் இதனால் வெளிவாரி பட்டப்படிப்பிற்கான அனுமதியினை மட்டுப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாளியை கொலை செய்து மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கையர்!

சவுதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது என்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும்.

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.

இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கையில் உள்ள வானொலிகளின் அலைவரிசைகள் மாற்றம்......

இன்று நள்ளிரவு தொடக்கம் இலங்கையில் உள்ள வானொலிகளின் அலைவரிசைகள் மாற்றப்படுகிறது. இது வரையும் சில வானொலிகள் 5 வரையான அலைவரிசைகளையும் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக புதிய வானொலிகளுக்கு அலைவரிசைகளை ஒதுக்கமுடியவில்லை.

அத்துடன் பல வானொலிகளின் நிகழச்சிகளுக்கு தடைகளையும் ஏற்படுத்தின. இதன் காரணமாக நாளை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவால் ஒரு வானொலிக்கு இரு அலைவரிசை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கேட்கும் சில தமிழ் வானொலிகளும் புதிய அலைவரிசைகளும்

சூரியன் எப்.எம்-- 103.4 MHz மற்றும் 103.6 MHz

சக்தி எப்.எம்-- 103.9 MHz மற்றும் 104.1 MHz

வெற்றி எப்.எம்-- 90.4MHz மற்றும் 90.6 MHz

வசந்தம் எப்.எம்-- 102.6 மற்றும் 102.8 MHz

அலை எப்.எம்-- 91.4

Tuesday, October 30, 2012

இலங்கையில் மீன் மழை

கந்தளாய் பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கந்தளாய் விளையாட்டு மைதானத்தில் இந்த சிறிய மீன்களை காணக் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆறு மாத நீண்ட வரட்சியின் பின்னர் நேற்று கந்தளாய் பிரதேசத்தில் கன மழை பெய்தது.

இதன் போது மழை நீருடன் தரையில் சிறிய மின்களும் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் லீலரட்ன விளையாட்டரங்கில் சுமார் 3-4 அங்குல அளவுடைய மீன்கள் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மழையுடன் தரையில் விழுந்த மீன்கள் குளத்து மீன் வகையினைச் சார்ந்தவை எனக் குறிப்பிடப்படுகிறது.

Sunday, October 28, 2012

The Best Annual Report and Accounts Competition of National Schools 2012



சம்மாந்துறை தேசிய பாடசாலை அகில இலங்கை ரீதியாக தெரிவூ செய்யப்பட்ட சிறந்த பாடசாலை அபிவிருத்தி கணக்கரிக்கையில் 2012 இல்  அம்பாறை மாவட்ட முதலாம் இடத்தை  பெற்றுள்ளது கடந்த 27.10.2012 கொழும்பு BMICH இல் நடைபெற்ற இவ் விருது வழங்கும் வழாவில் கௌரவ கல்வி அமைச்சர் சகல மாவட்டத்தில் இருந்தும் செய்யப்பட்ட வெற்றியாளருக்கு கௌரவித்து சான்றுதலும் வழங்ஙூகப்பட்டன சம்மாந்றை தேசிய பாடசாலை சார்பில் கல்லுரி முதல்வர் எஸ். அபூபக்கர் அவர்களும் கணக்கியல் ஆசிரியர் நசீர் அவர்களும் பங்குபற்றினர் aat  பணிப்பாளர்களும் கல்வி அமைச்சின் சயலாளர் எஸ். எம் கோட்டபாய ஜெயரத்ன அவர்களும் கல்ந்து சிறப்பித்த படங்களாகும் 

Thursday, October 25, 2012

பிள்ளை நேயம் உள்ளதா?

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் பிள்ளை நேயம் உள்ளதா?




இலங்கை கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளை சிலவற்றை பிள்ளை நேயப் பாடசாலைகளாக பிரகடனப்படுத்தி பிள்ளை நேயத்தை இப்பாடசாலைகளில் மேற்கொள்ளும் திட்டத்திற்குகமைவாக,
இந் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்களாக யுனிசெப் மற்றும் அவுஸ்ரெலின் எயிட் என்ற இரு நிறுவனங்களும் இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை வழங்கி வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

பிள்ளை நேயப்பாடசாலையின் அடிப்படையிலான ஆறு பரிமாணங்களாக.
  1. 01. பிள்ளைகளின் உரிமைகள்
  2. 02. பால் நிலை சமத்துவம்
  3. 03. கற்றல் பேறுகளின் விருத்தி
  4. 04. பிள்ளையின் ஆரோக்கியமும், பாதுகாப்பும்
  5. 05. மாணவர்களின் குடும்பப் பிண்ணனி
  6. 06. சிறுவர் நேயக் கொள்கைகள்

என்பவையே இவைகளாகும். மேற்கூறிய செயற்பாடுகளின் செறிவு பற்றி நேரடியான ஆய்வினை செய்வதற்காக யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள் இப்பாடசாலையில் ஆய்வினை  2012.10.25 மேற்கொண்டனர்.

அத்துடன் இப்பாடசாலையை   மென்மேலும் விருத்தி செய்தி எதிர்காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த ஆய்வுகள் ஒரு துடுப்பாக அமைக்கூடுமென இப்பிரநிதிகளும் இப்பாடசாலை சமூகமும் ஆருடம் தெரிவித்துள்ளன. 

thaha naleem

களை கட்டியுள்ள சம்மாந்துறை பெருநாள் விற்பனை


சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள பெருநாள் விற்பனை கூடங்கள் களைகட்டியுள்ளன.

எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில்  பெருநாள் வர்ததக நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பெருமளவான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். 
வீதிப் போக்குவரத்துகளிற்கு இடையூறில்லா வண்ணம் பாதையோர வர்த்தகர்களிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மேலும் சம்மாந்துறையிலுள்ள ஆடை விற்பனை நிலையங்கள்  பாதணி  வர்த்தக நிலையங்கள், பலசரக்குக்கடைகள் என்பவற்றிலும் மக்கள் பெருமளவில் பெருநாட் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.





திவிநெகும வேலைத்திட்டம் - பயிர்விதைகள் வினியோகம்

திவிநெகும வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பயிர்விதைகள் வழங்கிவைக்கும் நிகழ்வவொன்று இன்று (2012-10-25) சம்மாந்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்ததோடு  திவிநெகும திட்டத்தைப்பற்றி மக்களுக்கு விளக்கமளித்தார். மற்றும் பயிர்விதைகளின் வினியோகத்தினையும் தொடக்கி வைத்தார். பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மரநடுகையும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.








Tuesday, October 23, 2012

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் பல்லூடக நிலையத்திற்கான அடிக்கல் நடப்பட்டது

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று மஹிந்தோதயா தகவல்தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
கல்லூரி அதிபர் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதியமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் அதிபர் அவர்களும் அடிக்கல் நட்டனர். மேலும் மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறியதுடன் அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.

Monday, October 22, 2012

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் மாதம் 11ஆம் திகதி!


இவ்வாண்டின் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்



நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்

இந்த பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னோடி கருத்தரங்குகளை நடத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கருத்தரங்குகள் நாளை மறுதினம் 19ஆம் திகதி முதல்  25ஆம்திகதி வரை சகல பாடசாலைகளிலும் நடத்தப்படும் எனவும் அதற்கான செயல்முறை விளக்கம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார் .


இதேவேளை,இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 5,37,393 பேர் தோற்றுவதாகவும் இதில் 1லட்சத்து 50,968 பேர் பாடசாலை மட்டத்தில் தோற்றுபவர்கள் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஏ புஷ்பகுமார தெரிவித்தார்.


மூன்று லட்சத்து 20ஆயிரம் பேர் இப்பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

26ஆம் திகதிய அரச விடுமுறை ரத்து!


எதிர்வரும் அக்டோபர் 26ஆம் திகதி அரசாங்க வர்த்தக, வங்கி, பொது விடுமுறை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.


26ஆம் திகதி அரசாங்க ,வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாக ஏற்கனவே பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போதிலும் முஸ்லீம்களின் 'ஈதுல் அல்ஹா" ஹஜ்ஜுப்பெருநாள் 27ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரியபள்ளிவாசலில் நடைபெற்ற பிறைக்கமிட்டி கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டிருப்பதால் 26ஆம் திகதிய அரச விடுமுறைரத்துச்செய்யப்பட்டுள்ளது.


எனினும்  ஹஜ்ஜுப்பெருநாள் தினமாகிய  27ஆம் திகதி சனிக்கிழமை  அரசாங்க வர்த்தக, வங்கி, பொது விடுமுறையாகபிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது.

அவசியம் ஏற்பட்டாடல் கருத்துக்கணிப்பு நடத்துவோம்!


-அமைச்சர் பசில் ராஜபக்ஷ தகவல்-
திவிநெகும சட்டமூலத்துக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்தால் அது தொடர்பில் பொதுமக்கள் உரிய தீர்வை வழங்குவார்கள். அவசயம் ஏற்பட்டால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்;தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது-

திவிநெகும சட்டமூலத்துக்கு இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே இன்று முக்கிய தடையாக இருக்கின்றனர். தமது அரச விரோ நடவடிக்கைகளை முன்னெடுக்க வடபகுதி பொது மக்களையே இவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
சமுர்தி மற்றும் திவிநெகும தி;ட்டங்கள் மூலம் வட பகுதி வரிய மக்கள் அடையப்போகும் நன்மைகளை இவர்கள் தடுக்கின்றனர்.

2001 முதல் 2004 ஆண்டு காலப் பகுதியில் இவர்கள் புலிகளின் பிரதிநிதிகளாகவே பாராளுமன்றம் நுழைந்தனர். எனவே பொது மக்களுக்கு புலிகள் நன்மை செய்தாலும் தீமைகள் செய்தாலும் அவற்றின் முழுப்பொறுப்பையூம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே ஏற்கவேண்டும்.

வட பகுதி மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய அடிப்படை வசதிகளை புலிகள் அழித்தனர். மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் ரயில் பாதைகளை இவர்கள் நிர்மூலமாக்கினர். தொழிற்சாலைகளை தகர்த்தனர். இறுதியாக மக்களின் உயிர்களையூம் பறித்தனர்.

சமுர்தித் திட்டம் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் இந்த வருடம் வரையில் வடக்கில் அது செயற்படவில்லை. கிளிநொச்சி- மன்னார் - முல்லைத் தீவூ ஆகிய பிரதேசங்களில் சமுர்த்தித் திட்டம் செயல்படவில்லை. அன்று புலிகள் என்ன செய்தார்களோ அதனையே இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்கின்றனர்.

வட பகுதி மக்களின் முக்கிய பிரச்சினை தீர்க்க அரசாங்கம் "பிம் சவிய' திட்டத்தை முன்வைத்தது. எனினும் அத்திட்டத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் அத்திட்டம் முடக்கப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து சுமார் 60 வருடங்களில் கிடைக்காத அடிப்டை வசதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைiயிலான அரசாங்கம் வட பகுதி மக்களுக்கு வழங்கியது. புலிகள் இல்லாதொழித்த வசதிகளையூம் அதற்கு மேலான வசதிகளையூம் இன்றை அரசு செய்துள்ளதுஇ

ஆனால் அடிக்கடி வெளிநாடு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அங்கு பொய்களைக் கூறி அரசின் நல்ல திட்டங்களைத் தாமதப்டுத்துகின்றனர்.

வெளிநாடுகள் இலங்கைக்கு வழங்கும் கடன் உதவிகள் மறறும் உதவிகளைத் தடுக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இலங்கைக்கு உதவி வழங்குங்கள் என்று அவர்கள் ஒருபோதும் வெளிநாடுகளிடம் இதுவரைக் கோரிக்கை விடவில்லை.

வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே நாம் திவி நெகும் திட்டத்தை முன்னெடுக்கிறௌம். மாகாணசபை அதிகாரங்களில் நடவடிக்கைகளில் நாம் தலையிட மாட்டோம். தமிழ் மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட நிருவாக முறையொன்றை அவர்களுக்கு நாம் வழங்குவோம் என்றும் அமைச்சர் கூறினார். 

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பம்!


ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நவம்பர் முதலாம் திகதி முதல் இலங்கை தொடர்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இந்த கூட்டத் தொடர் அரசாங்கத்திற்கு எந்தவொரு வகையிலும் பாதகமாக அமையாது என  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.


யு.பி.ஆர். எனப்படும் சர்வதேச தவணைமுறை மீளாய்வுக் கூட்டத் தொடரில் நவம்பர் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பிலான கலந்தாலோசிப்புகள் இடம்பெறும்.


இக்கூட்டத் தொடரில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்து கொள்வதுடன் இவருக்கு மேலதிகமாக விசேட குழுவொன்று ஜெனீவா செல்ல தயாராகவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.


ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகள் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்படி யு.பி.ஆர். கூட்டத் தொடருக்கு சமுகம் அளிப்பது வழக்கம். அந்த வகையிலேயே எமது இலங்கை அரசாங்கம் சார்பிலான பிரதிநிதிகளும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் வகையில் ஜெனீவா நோக்கி பயணம் செய்யவுள்ளனர்.

இக்கூட்டத் தொடர் குறித்த சரியான விளக்கம் கொண்டிராத பல்வேறு ஊடகங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கப் பிரதிநிதிகளை வரவழைத்திருப்பதாகவும் இதனால் இலங்கை அரசாங்கம் நெருக்கடிக்கு முகம் கொடுக்கவிருப்பதாகவும் தவறான செய்திகளை பிரசுரித்து வருகின்றன. இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் செயலாளர் அமுனுகம மறுப்புத் தெரிவித்தார்.


யு.பி.ஆர். கூட்டத் தொடர் என்பது ஐ.நா. உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகளுக்கு ஒரு பரீட்சை போன்றதென்றே கூறலாம். இலங்கை இரண்டாவது தடவையாகவே எதிர்வரும் முதலாம் திகதி இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்கிறது.


நீதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மீள்குடியமர்வு புனர்வாழ்வு பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இக்கூட்டத் தொடரில் தங்களது துறை சார்பில் விளக்கமளிப்பர்.

அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் நோக்கிய எமது பாதையில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் இது எமக்கு சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமெனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறினார்.


மேலும் இக்கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதகமாக அமையாதென சுட்டிக்காட்டிய அவர் ,தற்போது இலங்கையினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள விதம் ஆகியன தெளிவுபடுத்தப் பட்டுள்ளமையினால் இக்கூட்டத் தொடரில் பாரிய சிக்கல்கள் எதுவும் எழுவதற்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே, இலங்கை இதில் கலந்து கொள்வது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் கூறினார். 

உலக சக்தி மாநாட்டில் ஜனாதிபதி உரை!



உலக சக்தி மாநாடு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார். இந்த மாநாடு 24ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறுகின்றது.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ- வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி ஆகியோர் . ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர்.

நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை


நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகளை முறைப்படுத்த வேண்டும் என, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாகக் கிடைக்கும் அதிகளவு முறைப்பாடுகளே இதற்குக் காரணமாகும். அங்குள்ள நிர்வாகத்தினர் இதனை பெருமளவு அலட்சியப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சில சம்பவங்களில் வார்த்தையளவிலும் உணர்ச்சிகரமாகவும் பௌதீக ரீதியாகவும் ஆசிரியர்கள் மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவதாக அதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை உருவாக்குவதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு போதுமான தராதரங்களோ, விதிகளோ இல்லாமை இந்நிலையை மேலும் தூண்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேசப் பாடசாலைகளை நிர்வகிப்பதற்கான பலமான சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. யாரிடம் பொருளாதார ரீதியாக அதற்கான இயலுமை இருக்கிறதோ அவர்களே இதனைத் தொடங்குகின்றனர். இப்பாடசாலைகளில் சிறுவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகளும் காணப்படுவதில்லை. அத்துடன் ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படுவதுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விதிகளையும் பிரமாணங்களையும் தயாரிப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட அதிகார சபை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


(நன்றி மீள்பார்வை)

Sunday, October 21, 2012

அல்-வஸத் மாணவர்களின் கண்காட்சி







சம்மாந்துறை அல்வஸத் பாலர் பாடசாலையில் நேற்று (2012-10-20) சனிக்கிழமை கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

பாடசாலை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் கைப்பணிகளும், அவர்களின் ஆக்கத்திறனைத் தூண்டக்கூடிய வித்தியாசமான பல்வகை ஆக்கப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள் பெற்றோர் மற்றும் சிறுவர்கள் பலரும் பாலர் மாணவர்களின் இக்கண்காட்சியைக் காணவந்திருந்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.