Friday, October 19, 2012

சம்மாந்துறை மண்ணின் முதலாவது முப்தி


  


சம்மாந்துறை சமீட்புரத்தைச் சேர்ந்த முஹத்திஸ் ஏ.எல். முஹம்மது ஸாஜித் அலி  அவர்களே சம்மாந்துறை மண்ணின் ஆன்மீக வரலாற்றில் முதன்முதலாக முப்தியாக தடம்பதித்துள்ளார்.  இவரின்  குத்பாப் பிரசங்கமும் பாராட்டு விழாவும் இன்று (2012-10-19) சம்மாந்துறை பெரியபள்ளிவாசலில் இடம்பெற்றது

 பொதுமக்கள் பெரும்பாலானோரும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில்   கலந்துகொண்டனர்.


Thursday, October 18, 2012

வேலைவாய்ப்பு


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வு


 Green Flowers விழிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 18-10-2012ம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.00 மணிக்கு, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு  தினம்-2012. நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. பிரெய்ல் புள்ளி முறையில்  பரீட்சைகளில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அமைப்பினால் வெள்ளைப் பிரம்புகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி U.L.M.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மீன்களின் சுனாமி - சூரை மீன்கள் படையெடுப்பு

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் பெருமளவான மீன்கள் படையெடுத்து வருகின்றன.
பெருமளவிலான மக்கள் இதனைப் பார்வையிடச் செல்கின்றனர். மீனவர்களும் அதிகளவான மீன்களைப் பிடித்து விற்பனை செய்கின்றனர். மற்றும் மீன்கள் மலிவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

நிந்தவூர் மதீனா வித்தியாலயதிற்கு கௌரவம்






2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் செல்வன். ZTM .ஆஷிக் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார். மாத்தறை ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப் பதக்கத்தினையும் குண்டு போடுதலில் 11 .85 மீற்றர் தூரம் ஏறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார்.

இதன் மூலம் தான்  கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும் கிழக்கு மாகாணதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தங்க மகன் ஆஷிக் அவர்களுக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17 .10 .2012 )தனது சொந்த பாடசாலையான நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல்ஹாஜ் அஹமது தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீ, நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி SM ஜலீல், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி SLM சலீம், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்களான MI இப்ராஹீம், A  ஜாபிர் கபூர் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்


Sulaiman Raafi

கிழக்கிற்கு பெருமை தந்த தங்க மகன்








2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் செல்வன். ZTM ஆஷிக் அவர்கள் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும், குண்டு போடுதல்  நிகழ்ச்சியில் வெண்கலப்பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார் 

மாத்தறை DA ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப்பதக்கத்தினையும், குண்டு போடுதலில் 11 .85    மீற்றர் தூரம் ஏறிந்து  வெண்கலப்பதக்கத்தினையும் சுவீகரித்தார். இதனை விடுத்து 2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாடு  விழாவிலும், இளைஞர் கழக விளையாட்டு விழாவிலும்  ZTM ஆஷிக் அவர்கள் ஈட்டி எறிதல், பரிது வட்டம் வீசுதல் மற்றும் குண்டு போடுதல் நிகழ்சிகளில்  கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். இதேவேளை தான் கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும், கிழக்கு மாகானதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் தங்க மகன்  ZTM ஆஷிக் அவர்களுக்கு சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் A ஜாபிர் கபூர் மற்றும் நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் AL அனஸ் அஹமட் அவர்களும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். 

இது தவிர தங்க மகனுக்கு பாடசாலை மாணவ மாணவிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் கழகங்கள், பொது அமைப்புக்கள், ஊர் மக்கள் என பலராலும் மாபெரும் வரவேற்று அளிக்கப்பட்டதோடு ஊர்வலமாகவும் அழைத்துசெல்லப்பட்டார். 

மேலும் தங்க மகனுக்கு இன்று 17.10.2012  (புதன்கிழமை) தனது சொந்த பாடசாலையான நிந்தவூர்  அல் மதீனா மகா வித்தியாலயத்தில் மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அல் ஹாஜ் S  அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலகமும், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள்.  


(சுலைமான் றாபி) 

Wednesday, October 17, 2012

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறி நவம்பரில்


பல்கலைக்கழக மாணவர்களுக்கு இம்முறையும்  தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 15ம் திகதி பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்களுக்கான முதல் கட்ட தலைமைத்துவப் பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதற் கட்டமாக 9000 மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும்.
கடற்படை மற்றும் பொலிஸ் முகாம்களில் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இம்முறை  வழக்கமான தொகையை விட அதிகளவான மாணவ மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதனால் மூன்று கட்டமாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Tuesday, October 16, 2012

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது


ஹிஜ்ரி 1433 புனித துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (2012-10-16)  செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை.  இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக்  கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

 புனித துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையினைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.

 இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள், கொழும்பு பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் ஷரீயா கவுன்ஸில் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என்று நாட்காட்டிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமைமை குறிப்பிடத்தக்கது.

Monday, October 15, 2012

மீண்டும் இயற்கையில் இறைநாமமா?

இன்று அதிகாலை (2012-10-16) சம்மாந்துறை அஸ்ஸாலிஹாத் பெண்கள் அறபிக் கல்லூரியில் தக்காளிப்பழமொன்றை வெட்டிய போது அதில் அரபு எழுத்துக்களில் அல்லாஹ் என்றிருப்பதாக எமக்கு கிடைத்த தகவலை அடுத்து எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து குறிப்பிட்ட தக்காளிப் பழத்தினுடைய புகைப்படத்தினை எடுத்தனர்.
இது பற்றி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , இன்று காலை கலை ஆகாரத்திற்காக உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் சமைத்துக் கொண்டிருந்த மாணவிகளே இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி இறைச்சியில் இதேபோன்று தோற்றமளித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததும். இன்று ஒக்டோபர் 16 திகதி அதாவது 30 நாட்களுக்குப்பின் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள் உண்மைகள் புலம்பும் போது தகவல்கள் வெளிவரும்.

உலக கைகழுவுதல் தினக் கொண்டாட்டம்

நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரிக்கும் போது அவனது சிந்தனைகளும் தேவைக்கேற்றாற் போல் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கும். இன்று பல்வேறு நோக்கங்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் பல நாட்களை முக்கியப்படுத்தும் நோக்கோடு அவைகளை சர்வதேச தினங்களாக மாற்றி அதன் தேவை மக்கள் மத்தியில் புரிய வைக்க கையாளும் ஒரு யுக்தி தான் இந்த சர்வதேச தினங்களாகும்.

அந்த வகையில் இன்று 15.10.2012 ஆந் திகதியன்று உலக கைகழுவுதல் தினமாகும். அதனை சிறப்பாகவும், மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் கொண்டாடுமுகமாகவும். ஐக்கிய நாடுகளின் யுனிசேப் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் பாடசாலை மட்டத்தில்  கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றது என நான் சொன்னால் அது மிகையாகாது.

இந்த வகையில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தங்களுடைய மாணவ சமூதாயத்திற்கு இந்த தினத்தை நினைவு கூறும் நிகழ்வும் வித்தியாலய முன்றலில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அப்பகுதிக்குப் பொறுப்பான சுகாதார பரீசோதகர் ஏ.எம். றம்ஸான் கலந்து கொண்டதோடு அந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

இந்த நிகழ்வை இப்பாடசாலை சுகாதாரக்கழகம் ஏற்பாடு செய்தது இதற்கு வழிகாட்டியாக இப்பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியை திருமதி வை. அமிர்தசங்கர் ஒத்துழைப்பு வழங்கியதோடு, இ்ந்நிகழ்வு சிறப்பாக நடைபெற இப்பாடசாலையின் செயற்பாடுகளில் பங்கு வகிக்கும் ஏ.எம். தாஹாநழீம் ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்கள் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்ற அறிவுறுத்தல் பிரதேச சுகாதாரப் பரிசோதகர் அவர்களால் சிறப்பாக செய்து காட்டப்பட்டதோடு மாணவர்களும் அதில் கலந்து சிறந்த பயிற்சியினைப் பெற்றுக் கொண்டார்கள் என இங்கு குறிப்பிட வேண்டும்.

தகவல் ஏ.எம். தாஹா நழீம்

முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை தற்போது ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள் - அமைச்சர் ALM அதாஉல்லாஹ்




முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை தற்போது ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள்
(சுலைமான் றாபி நிந்தவூர்)

அரசியல் அதிகாரம் இல்லாத ஊர்களுக்கு அதனைபெற்றுகொடுக்க வேண்டும் என்கின்ற உன்னத நோக்கிலே தற்போது தேசிய காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டும்  முஸ்லிம்களின்  உரிமைகளை பேசி, இனவாதத்தினை கக்கி, மக்களின் வாக்குகளை சூறையாடிக்கொண்டு  தற்போது வீடுகளிலும், ஹோட்டல்களிலும் முடங்கிக் கிடக்கும் அரசியல் தலைமைகளை மக்கள் கண்டுனர்த்திருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் மட்டும் தேசிய காங்கிரசும்   அதன் தலைமையையும் "முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுத்தவர்கள்" என கூறினார்கள். ஆனால்  இந்த நிலை மாறி  தற்போது முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சரும், தேசிய காங்கிரஸ்  தலைவருமான  அமைச்சர் ALM அதாஉல்லாஹ்  நேற்றைய தினம் (14 .10 .2012 ) ஞாயிறுக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்ற "உத்தமருக்கு உன்னத மரியாதை" வரவேட்புக்கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

நமது நாட்டில் முறையான சுதந்திரமான அரசியல் தலைமைகளை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு பல கட்சிகள் முண்டியடித்துக்கொண்டு திரிகின்றன. ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. இதனாலேயே அவர்கள் வெல்வது போன்றும், உண்மை தோற்பது போன்றும் தெரிகின்றது. ஆனால் கடைசியில் உண்மை தோற்றும் வெற்றி பெறுகின்றது. கடந்த மாகாண சபைதேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அதன் கூஜாத்தூக்கிகளும் மக்கள் மத்தியில் இனவாத உணர்ச்சி அலைகளை கிளப்பி இருந்தார்கள். இதனால் அறுபதாயிரம் வாக்கு வரை முடங்கியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் சுமார் எண்பதாயிரம் வாக்குகளை மக்களை ஏமாற்றி பெற்றிருந்தார்கள். அன்று பள்ளிக்கு இடுகின்ற காணிக்கையாக ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை அளித்து தங்கள் உணர்ச்சியினை காட்டியிருந்தார்கள் ஆனால் இன்று அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த சுமார் இருபதாயிரம் வாக்காளர்களும், கிழக்கு மாகாண ஒட்டு மொத்த சமூகமும் வென்றும் தோல்வியடைந்த நிலையிலே வாழ்கின்றார்கள். மேலும் இதில் இரண்டு விடயங்களை உள்வாங்கியிருந்தார்கள். 
1) முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் 
2 ) பள்ளி வாசல் உடைப்புக்களில் அரசாங்கத்தை எதிர்த்தல் என்பனவாகும். 

ஆனால் இவை இரண்டும் இன்று பொட்டிப்பாம்பாக மாறிவிட்டது. மேலும் தேர்தல் காலங்களில்  மு.கா ஊர்துவேசத்தினால் அந்தந்த ஊர்களில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் அந்தந்த ஊர்களுக்குள்ளே பழி தீர்க்க வைத்து திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள் ,  இப்படியான விடயங்களை தேசிய காங்கிரஸ் ஒரு போதும் செய்ய வில்லை. உண்மையை பேசி உண்மை சொல்கின்றவர்கள் நாங்கள் அதனால்தான் ஒவ்வொரு தேர்தலின் பின்பும் மக்கள் மத்தியில் நாங்கள் கூச்சப்படாமல் பேசுகின்றோம், ஆனால் இந்நிலை மாறி இன்று அரசின் கால்களில் மண்டியிட்டுக்கிடக்கின்றார்கள். 

தமிழ் மக்களை ஏமாற்றும் சதி எமக்கில்லை இந்த மாகாண சபைத்தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகளும்  தமிழ் மக்களும்  ஏமாற்றபட்டிருக்கிறார்கள். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்தால்  நிச்சயம் முஸ்லிம் காங்கிரசிற்கு   முதலமைச்சர் பதவி கிடைத்து விடும் அப்படி கிடைத்தால் தனது தலைமைத்துவத்திற்கு ஆப்பு விழுந்து விடும் என்றஞ்சி சுதந்திர கட்சியை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனவே இந்த கபட நாடகத்திற்கு மக்கள் எதிர்காலத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். குர்ஆன் ஹதீஸை வைத்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு அல்லாஹ்வின் ஹுக்கூம் கிடைத்தே தீரும், இன்ஷா அல்லாஹ் தேசிய காங்கிரசையும்  அதன் தலைமைத்துவத்தையும் மக்கள் ஏற்கும் காலம் வரும் அப்போது நாம் அனைவரும் நமது சமூகத்தை  விடிவுப்பயணதிற்கு இட்டுச்செல்வோம் எனக்குறிப்பிட்டார். 

இந்தக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் MS உதுமாலெப்பை,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப்  சம்சுதீன், MLA அமீர் ஆகியோர் உட்பட பலரும்  கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். 


சுலைமான் றாபி நிந்தவூர் 
skype : raafislm



--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Sunday, October 14, 2012

நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு கூட்டம்

நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு கூட்டம்
சுலைமான் றாபி  - நிந்தவூர் 

கடந்த மாகான சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டி இட்டு வெற்றி பெற்ற கிழக்கு மாகாண அமைச்சர்  MS .உதுமாலெப்பே  , சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், MLA அமீர்  ஆகியோரை  கௌரவித்து "உத்தமருக்கு உன்னத மரியாதை" எனும் தொனிப்பொருளில்  இன்று நிந்தவூர் பிரதான வீதி அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு முன்னால் பிற்பகல்  4.30 மணியளவில் இடம்பெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமான  ALM அதாஉல்லாஹ்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 

சுலைமான் றாபி - நிந்தவூர் 



--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Saturday, October 13, 2012

சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.


: சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.


சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.
இலங்கை அதிபர் சேவையில், இலங்கை ஆசிரியர் சேவை, கடமையாற்றும் அதிபர்,
ஆசிரியர்கள் கிட்டத்தட்ட பல இலட்சத்திற்கு மேல் உள்ளார்கள், ஆனால் அவர்களில்
எத்தனை பேர் தமது கடமையை செவ்வென உள்வாங்கி தமது ஆசிரியர் தொழிலினை செய்பவர்களை நாங்கள் கணக்கெடுத்தல் அவை சில ஆயிரங்களை மாத்திமே எட்ட முடியும் என்பது இங்கு சுட்டிக்காடடுதல் பொருத்தமாகும்.  ஒவ்வொரு ஆண்டும் மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிரியர்களை கௌரவிக்கும் பரிசித்திட்டத்திற்கு அடிப்படைத் தகைமையை நிறைவேற்றுவது எல்லாராலும் செய்யக் கூடிய காரியமல்ல அதற்காக ஐந்து வருட காலத்தில் 50 நாட்களுக்கு குறைந்த விடுமுறையைப் பெற்றால் மாத்திரமே இந்த கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். சம்மாந்துறையில் சென்னல் ஸாஹிறா வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தை பெற்றுக் கொண்ட *பௌசியா சரீப்* அவர்கள் தனது ஆசிரியர் சேவையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் அர்பணிப்போடு ஆற்றிய சிறந்த சேவைக்காக 2012.10.09 ஆந்
திகதி ஜனதிபதியினால் "* ஆசிரியர் பிரதீபா பிரபா"* விருதினை பெற்று
சம்மாந்துறை ஆசிரியர் சமூகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்று கூறினால்
அவை மிகையாகாது.

இன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும்
இந்த ஆசிரியரை இப்பாடசாலை அதிபர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
பெற்றார்கள் இவர்களை பாராட்டுகிறார்கள் என்பதை இங்கு கோடிட்டுக் காட்ட
வேண்டும்.
நானும் இந்த ஆசிரியரை வாழ்த்துவதோடு அவரது சிறந்த சேவை எமது சமூகத்திற்கும்
குறிப்பாக சம்மாந்துறை மக்களுக்கும் பெருமைகளை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.














Wednesday, October 10, 2012

திவிநெகும சட்ட மூலம்: சகல நிதியையும் தாமே கையாள்வதற்கான இன்னொரு முயற்சி - ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன்

ஏற்கெனவே நிதி அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நகர அபிவிருத்தி என்பவற்றின் ஊடாக பெரும்பாலான நிதியைக் கையாளும் அரசாங்கம் இத்திட்டத்தினூடாக மீதி நிதியையும் கையாளும் அதிகாரத்தைக் குடும்பத்துக்கு வழங்கியுள்ளனர் என ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன் தெரிவித்தார்.
திவிநெகும சட்டமூலம் குறித்து நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலிலேயே ப்ரபோதய சஞ்சிகையின் ஆசிரியர்l எம்.எச்.எம். ஹஸன் அவர்கள் தெரிவித்தார்.
நாடு நகர சட்டமூலத்தைப் பொறுத்தவரை முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரின் தலைமையிலும் முன்னாள் வடமத்திய மாகாண சபை முதலமைச்சரின் தலைமையிலும் ஏற்கனவே இரு மாகாணங்களிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட இரு கிழமைகளில் தேர்தலுக்குரிய காலம் முடிவடைய முன்னரே மாகாணங்கள் கலைக்கப்பட்டு மீளத் தேர்தல் நடத்தப்பட்டது.
மத்திய அரசின் கருத்தையும் மீறி இச்சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டமையினாலேயே முன்னாள் முதலமைச்சர்கள் மீண்டும் முதலமைச்சராகுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாக  பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் வடமத்திய மாகாணத்தில் தோற்கடிக்கப்பட்டவுடன் முதலமைச்சரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்த ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்ததுடன், 15 மாதங்களுக்கு முன்னரே மாகாண சபையைக் கலைத்து மௌனமாகத் தேர்தலை நடத்தி முதலமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதை நோக்கும் போது மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகின்றது என்பதைக் காண முடியும்.
மறுபுறம் இந்நாட்டில் 55 அமைச்சுகள் உட்பட தினைக்களங்கள், தலைமைத்துவம் இருந்தாலும் கூட அவற்றில் ஒரு ராஜபக்ஷ இல்லாவிட்டால் அவை சீராக நடைபெறாது என்ற சிந்தனை வளர்க்கப்பட்டு வருகிறது.
திவிநெகும திட்டம்கூட கிராமிய மட்டத்திலான அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான சமூர்த்தி நிதிகள் யாவற்றையும் கையாளும் விடயம் மட்டுமல்ல சகல கிராமிய அபிவிருத்திகளையும் முன்னெடுக்கும் விடயம் என்ற வகையில் ராஜபக்ஷவிடமே கையளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் திணைக்களம் ஏற்படுத்தப்படுவது புதிய விடயமல்ல. ஆனால் ஏற்படுத்தப்பட்ட தினைக்களத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதனை பின்னரே தீர்மானிப்பார்கள். திவிநெகும எனும் இத்திட்டத்தில் சகலதும் முன்னரே இன்னாருக்கு என்று தீர்மானிக்கப்பட்டிருப்பது நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இச்சட்டம் வெறுமனே முஸ்லிம்களுக்கோ, சிறுபான்மைக்கு எதிரானது மட்டுமல்ல இந்நாட்டின் அனைவருக்கும் எதிரானது என்ற வகையில் யாவரும் எதிர்த்து நிற்க வேண்டிய இத்தருணத்தில் சமூகம் அமைதியாக இருப்பதனை பார்க்கும் போது இது குறித்த விளக்கம் பொதுமக்களை சென்றடையவில்லை என்பது தெளிவாகின்றது.
எந்த அமைச்சுக்கும் வழங்கப்படாத  பாராளுமன்றத்தையும் மீறிய அதிகாரம் அமைச்சினருக்கு வழங்கப்படுவது இச்சட்ட மூலத்திலுள்ள இன்னுமொரு விடயமாகும்.
அரசாங்க வருமானங்கள் யாவும் ஒன்றிணைந்த நிதிக்கு வர வேண்டும் இங்கு நிதி அமைச்சும், சமூர்த்தி அமைச்சும் தீர்மானிக்கும் இடத்திலேயே இதற்கான பணம் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்க அதிபரோ, பிரதேச சபை செயலாளரோ பிரதேச சபைத் தவிசாளரோ கேள்வி கேட்க முடியாது அவர்கள் யாவரும் இச்சட்ட மூலத்தினூடாக அதிகாரமற்ற கீழ் மட்ட உத்தியோகத்தர் போலவே நோக்கப்படுகின்றனர்.
அடுத்து இவர்களால் லொத்தர் சீட்டெழுப்பு நடத்த முடியும் அதனூடாக வரும் வருமானங்களும் அமைச்சினாலேயே நிர்வகிக்கப்படும்.
பொதுவாக சிறிய நிதி நிறுவனங்கள் கூட மத்திய வங்கிக்குக் கீழ் வர வேண்டும் என்பதே நாட்டுச் சட்டம். இங்கு மத்திய வங்கிக்குக் கீழ் வராத வகையில் இதன் கீழுள்ள வங்கி அமைகிறது.
சிறுபான்மைக்கான அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்தவரை அபிவிருத்திப் பிரதேசங்கனைளத் தெரிவு செய்தல், இணைத்தல், எல்லை நிர்ணயித்தல், என்பனவற்றைத் தெரிவு செய்யும் அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்படும் அதேவேளை இன விகிதாசார அடிப்படையில் யாரை இணைத்துக்கொள்வது? எப்பிரதேசத்தை தெரிவு செய்வது? என்பன குறித்து தீரமானிப்பதும் இவர்கள்தான் என்பதனால் சிறுபான்மைப் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் தனது அரசியல் இலாபம் கருதி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதோடு யாராலும் இது குறித்து கேள்வி எழுப்பவும் முடியாது.
மொத்தத்தில் நிதியை சேகரிப்பது, செலவழிப்பது, பராமரிப்பது, அதற்கு ஆலோசனை வழங்குவது, அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் மட்டுமன்றி அதனை மேற்பார்வை செய்யும் அதிகாரம் ஒருவரிடம் தங்கியிருப்பது ஜனநாயக நாட்டில் அல்லது நல்லாட்சி என்ற கருத்திட்டத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் அம்சமாகும்.
மாகாண சபையின் அதிகாரங்களை திவிநெகும சட்ட மூலம் மீறுவது குறித்து உச்ச நீதி மன்றத்தினால் 34 பக்கங்களைக் கொண்ட ஆவணம் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். இன்னொருபுறம் உச்ச நீதிமன்றம் எதிர்ப்பை எழுப்பி மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தமை, இரகசியமாக செய்து முடிக்க நினைத்த அரசாங்கத்திற்கு பலத்த அடியாகும்.

Tuesday, October 9, 2012

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கல்முனை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையிலும் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அதன் அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கான  நடவடிக்கையை எடுக்குமாறும் கோரினர்.

thanks  tamilmirror

இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி!

ஜெயலலிதாவின் ஆட்சேப மனு நிராகரிப்பு!
இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செய்த ஆட்சேப மனுவை இந்திய உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இதற்கு முன்னர் ஊட்டிக்கு அருகில் உள்ள
வெலிங்டனில் இருக்கும் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களுக்கான கல்லூரியில் இரண்டு இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தற்போது அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதில் உடனடியாக இந்தியாவில் பயிற்சி பெறும் இரண்டு
இலங்கையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கேட்டிருந்தார். தன்னுடைய மாநில அரசாங்கத்திற்கு தெரியால் வேண்டுமென்றே இவ்விதம் பயிற்சியளிக்கும் தகவல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் ஜெயலலிதா இந்த கடிதத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புரிந்து
கொள்ளாமல் தமிழ்நாடு அரசாங்கத்தை பொருட்படுத்தாத வகையில் இந்திய மத்திய அரசாங்கம் இவ்விரு இலங்கை இராணுவ பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளித்திருப்பதுகண்டனத்திற்குரிய செயல் என்றும் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னைக்கு அருகில் உள்ள தாம்புரம் விமான தளத்தில்
9 இலங்கைவிமானப் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 


thanks news.lk

Sunday, October 7, 2012

நபிகளாரை அவமதித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படத்தைக் கண்டித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்


அகிலங்களின் இறுதித் தூதரையும் இஸ்லாத்தையும் அவமானப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படத்தைக் கண்டித்து சுவிட்சர்லாந்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையத்திற்கு முன்னால் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஜெனீவா இலங்கை மற்றும் ஏனைய பிரதேசங்கள் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

thanks meelparvai

இலங்கையை வீழ்த்தி T-20 உலகக் கிண்ணத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்

இலங்கையில் இடம்பெற்ற 2012 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியை 36 ஓட்டங்களால் வெற்றிகொண்டு மேற்கிந்திய தீவுகள் இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி மாலன் சமுவல்ஸின் அதிரடியில் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் இன்று ஏமாற்றமளித்து 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் இருப்பை உறுதி செய்த மாலன் சமுவல்ஸ் 6 சிக்சர்கள் அடங்களாக 78 ஓட்டங்களைப் பெற்றார்.

வேறு எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. பிராவோ 19 ஓட்டங்களைப் பெற்றார். டெரன் சமி 26 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டனர். அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 138 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 33 ஓட்டங்களையும் குலசேகர 26 ஓட்டங்களையும் சங்கக்கார 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் டெரன் சமி விக்கெட்களை வீழ்த்தினார். இதன்படி சுமார் 33 வருடங்களின் பின் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணம் ஒன்றை வென்றுள்ளது.

ஒரு பில்லியன் பாவனையாளர்கள் மாதமொருமுறை பேஸ்புக்கை பார்வையிடுகின்றனர் - மார்க் சகர்பேக்

மாதமொருமுறை தமது பேஸ்புக் கணக்கை பார்வையிடும் ஒரு பில்லியன் பாவனையாளர்கள் இருப்பதாக அதன் ஸ்தாபகர் மார்க் சகர்பேக் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் பாரிய அதிகரிப்பை காட்டுவதாக மார்க் சகர்பேர்க் தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு அமைய, பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுகின்றன.

ஒரு பில்லியன் பாவனையாளர்களில், சுமார் 600 மில்லியன் பேர் கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் இணையத்தளத்தை பார்வையிடுகின்றனர்.

இதுவரையில் 220 பில்லியன் புகைப்படங்கள் இந்த இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மார்க் சகர்பேர்க் சுட்டிக்காட்டினார்.

வட அமெரிக்காவில் 44 வீதமானவர்களும், அவுஸ்திரேலியாவில் 42 வீதமானவர்களும், தென் அமெரிக்காவில் 34 வீதமானவர்களும் பேஸ்புக் இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர்.

இதனைத் தவிர ஐரோப்பாவில் 30 வீதமானவர்களும், ஆசியாவில் 7 வீதமானவர்களும், ஆபிரிக்காவில் 5 வீதமானவர்களும் பேஸ்புக்
இணையத்தை பயன்படுத்துவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

news.lk

Saturday, October 6, 2012

சர்வதேச ஆசிரியர் தின விழா – 2012 சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், (படங்கள் இணைப்பு)










சர்வதேச ஆசிரியர் தின விழா – 2012  சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித்,  (படங்கள் இணைப்பு)

மாதா, பிதா, குரு தெய்வம் என்பது தமிழ்மொழி எமக்குச் சொன்னது. அதில் வரும் குருவானவர் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தில் எந்தளவு முக்கியத்துவமானவர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

 

அவ்வாறு எங்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் ஆசான்களை நாங்கள் கண்ணியப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் தலையாகிய கடமையாகும். 

ஒரு நல்ல கல்வி நற்பிரஜையை உருவாக்கும் என்ற கோட்பாட்டுக்குகமைவாக அந்த மாணவனை இந்த ஆசான் வழிநடத்திச் சென்று அவனை நல்லவனாக உருவாக்குகிறான் என்பதில் ஐயமில்லை.

அவ்வாறு நற்பிஜைகளை உருவாக்கும் சிறந்த சேவைகளை செய்யும் ஆசிரியர்களை நாங்கள் கௌரவப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இந்த வகையில் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் நிகழ்வுகள் அதன் பாடசாலை முன்றலில் 05.10.2012ல்  மிக விமர்சியாக  நடைபெற்றது. அதன் போது அப் பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு மற்றும் அங்கு சிறப்பாக கடமையாற்றிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் இந் நிகழ்வு   தரம் – 9 ம் வகுப்பு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது இங்கு விசேட அம்சமாகும்.  

 தகவல்கள் – ஏ.எம்.தாஹாநழீம் – (Publisher – Google Inc)











--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்ட சாதனை(படங்கள் இணைப்பு)





சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித்,  புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்ட சாதனை(படங்கள் இணைப்பு)

 

சம்மாந்துறை வலயத்தில் பலராலும் பெருமையாகப் பேசப்படும் பாடசாலையான கமு/ சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், இந்த முறையும் வலயத்தில் சாதனை படைத்துள்ளது. நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 26 மாணவர்கள் சித்தி பெற்றதுடன், வலயத்தின் கூடுதலான புள்ளியான 179 புள்ளிகளைப் பெற்ற MBM.தஸ்னீம் வலய மட்ட சாதனையாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

குறிப்பாக ஒவ்வொரு வருடம் சராரியாக 20- 40ற்கும் இடைப்பட்ட மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறவைக்கும் ஒரு சிறந்த பாடசாலையாக எல்லோராலும் பேசப்படுவதுடன் இது ஒரு பிள்ளை நேயப் பாடசாலையாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இந்தப்பாடசாலையை தரிசிப்பதற்காக நாளாந்தம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு பிள்ளை நேயப்பாடசலைகள் இங்கு வந்து பாடசாலையின் சிறப்பான கற்றல், கற்பித்தல் மற்றும் அதன் சூழலின் சிறப்புத்தன்மையை சுவைத்துச் செல்வதுடன் அவர்கள் தங்களுடைய பாடசாலைகளிலும். இங்குள்ள சிறப்புக்களை உதாரணமாகக் கொண்டு அமுல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்றாலும் அது மிகையாகாது.

இவ்வாறான பல்வேறுபட்ட சிறப்புக்களை அடைவதற்கு அதனை முகாமைப்படுத்தி நிர்வகிக்கின்ற அதிபரான TM. தௌபீக் அவர்களின் சேவையும் மற்றும் அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களின் சேவையும் அளப்பெரியது என்பதை இங்கு சுட்டிக்காடடுதல் பொருத்தமாகும்.

மேலும், இந்த ஆண்டு இவர்கள் சித்தி பெற உறுதிணையாக நின்று உழைத்த ஆசிரியைகளான ஜனாபா - RUM. மன்சூர்,  AB. பரீதா , AU. றிம்லான் நன்றிகைகளை தெரிவிப்பதோடு,   ஒவ்வொரு வருடமும் இந்தப்பாடசாலையில் மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளுவதில் ஏனைய பாடசாலையை விட போட்டித்தன்மையும் காணப்படுகின்றது என்பதையும் இங்கு கோடிட்டு காட்டுதல் வேண்டும்.

 

தகவல்கள் – ஏ.எம்.தாஹாநழீம் – (Publisher – Google Inc)

 




--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Friday, October 5, 2012

அல்முனீர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம்

 சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலயத்திலும் ஆசிரியர தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்படடிருந்தது. இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன







Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.