ஹிஜ்ரி 1433 புனித துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (2012-10-16) செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை. இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Tuesday, October 16, 2012
இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தது
ஹிஜ்ரி 1433 புனித துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (2012-10-16) செவ்வாய்க்கிழமை இரவு நாட்டின் எந்தவொரு பாகத்திலும் தென்படவில்லை. இதற்கமையவே 27ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Monday, October 15, 2012
மீண்டும் இயற்கையில் இறைநாமமா?
இது பற்றி அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் , இன்று காலை கலை ஆகாரத்திற்காக உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் சமைத்துக் கொண்டிருந்த மாணவிகளே இதனை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி இறைச்சியில் இதேபோன்று தோற்றமளித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததும். இன்று ஒக்டோபர் 16 திகதி அதாவது 30 நாட்களுக்குப்பின் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
![]() |
| |

தொடர்ந்து எம்மோடு இணைந்திருங்கள் உண்மைகள் புலம்பும் போது தகவல்கள் வெளிவரும்.உலக கைகழுவுதல் தினக் கொண்டாட்டம்
நாளுக்கு நாள்
மனித தேவைகள் அதிகரிக்கும் போது அவனது சிந்தனைகளும் தேவைக்கேற்றாற் போல் சிந்தித்துக்
கொண்டு தான் இருக்கும். இன்று பல்வேறு நோக்கங்களுக்கு சர்வதேச நிறுவனங்கள் பல நாட்களை
முக்கியப்படுத்தும் நோக்கோடு அவைகளை சர்வதேச தினங்களாக மாற்றி அதன் தேவை மக்கள் மத்தியில்
புரிய வைக்க கையாளும் ஒரு யுக்தி தான் இந்த சர்வதேச தினங்களாகும்.
இந்த வகையில் சம்மாந்துறை
முஸ்லிம் மகளிர் வித், தங்களுடைய மாணவ சமூதாயத்திற்கு இந்த தினத்தை நினைவு கூறும் நிகழ்வும்
வித்தியாலய முன்றலில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக அப்பகுதிக்குப் பொறுப்பான சுகாதார
பரீசோதகர் ஏ.எம். றம்ஸான் கலந்து கொண்டதோடு அந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம்.
தௌபீக் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இந்த நிகழ்வை இப்பாடசாலை
சுகாதாரக்கழகம் ஏற்பாடு செய்தது இதற்கு வழிகாட்டியாக இப்பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி
ஆசிரியை திருமதி வை. அமிர்தசங்கர் ஒத்துழைப்பு வழங்கியதோடு, இ்ந்நிகழ்வு சிறப்பாக நடைபெற
இப்பாடசாலையின் செயற்பாடுகளில் பங்கு வகிக்கும் ஏ.எம். தாஹாநழீம் ஆசிரியர் அவர்களின்
மேற்பார்வையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது. முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பவர்கள் யார் என்பதனை தற்போது ஊடகங்களும், மக்களும் நன்றாக புரிந்திருக்கின்றார்கள் - அமைச்சர் ALM அதாஉல்லாஹ்
--
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
Sunday, October 14, 2012
நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு கூட்டம்
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
Saturday, October 13, 2012
சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.
: சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.
சம்மாந்துறை ஆசிரியர் சமூகம் பாராட்டுகிறது திருமதி பெஸியா சரீபை.
இலங்கை அதிபர் சேவையில், இலங்கை ஆசிரியர் சேவை, கடமையாற்றும் அதிபர்,
ஆசிரியர்கள் கிட்டத்தட்ட பல இலட்சத்திற்கு மேல் உள்ளார்கள், ஆனால் அவர்களில்
எத்தனை பேர் தமது கடமையை செவ்வென உள்வாங்கி தமது ஆசிரியர் தொழிலினை செய்பவர்களை நாங்கள் கணக்கெடுத்தல் அவை சில ஆயிரங்களை மாத்திமே எட்ட முடியும் என்பது இங்கு சுட்டிக்காடடுதல் பொருத்தமாகும். ஒவ்வொரு ஆண்டும் மகிந்த சிந்தனையின் கீழ் ஆசிரியர்களை கௌரவிக்கும் பரிசித்திட்டத்திற்கு அடிப்படைத் தகைமையை நிறைவேற்றுவது எல்லாராலும் செய்யக் கூடிய காரியமல்ல அதற்காக ஐந்து வருட காலத்தில் 50 நாட்களுக்கு குறைந்த விடுமுறையைப் பெற்றால் மாத்திரமே இந்த கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். சம்மாந்துறையில் சென்னல் ஸாஹிறா வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தை பெற்றுக் கொண்ட *பௌசியா சரீப்* அவர்கள் தனது ஆசிரியர் சேவையில் கிட்டத்தட்ட 20
வருடங்களுக்கு மேல் அர்பணிப்போடு ஆற்றிய சிறந்த சேவைக்காக 2012.10.09 ஆந்திகதி ஜனதிபதியினால் "* ஆசிரியர் பிரதீபா பிரபா"* விருதினை பெற்று
சம்மாந்துறை ஆசிரியர் சமூகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்று கூறினால்
அவை மிகையாகாது.
இன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும்
இந்த ஆசிரியரை இப்பாடசாலை அதிபர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
பெற்றார்கள் இவர்களை பாராட்டுகிறார்கள் என்பதை இங்கு கோடிட்டுக் காட்ட
வேண்டும்.
நானும் இந்த ஆசிரியரை வாழ்த்துவதோடு அவரது சிறந்த சேவை எமது சமூகத்திற்கும்
குறிப்பாக சம்மாந்துறை மக்களுக்கும் பெருமைகளை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை.
Wednesday, October 10, 2012
திவிநெகும சட்ட மூலம்: சகல நிதியையும் தாமே கையாள்வதற்கான இன்னொரு முயற்சி - ஆசிரியர் எம்.எச்.எம். ஹஸன்
Tuesday, October 9, 2012
நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கல்முனை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையிலும் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அதன் அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் கோரினர்.
thanks tamilmirror
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் இராணுவ பயிற்சி!
தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இதற்கு முன்னர் ஊட்டிக்கு அருகில் உள்ள வெலிங்டனில் இருக்கும் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களுக்கான கல்லூரியில் இரண்டு இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தற்போது அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதில் உடனடியாக இந்தியாவில் பயிற்சி பெறும் இரண்டு இலங்கையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கேட்டிருந்தார். தன்னுடைய மாநில அரசாங்கத்திற்கு தெரியாமல் வேண்டுமென்றே இவ்விதம் பயிற்சியளிக்கும் தகவல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் ஜெயலலிதா இந்த கடிதத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் தமிழ்நாடு அரசாங்கத்தை பொருட்படுத்தாத வகையில் இந்திய மத்திய அரசாங்கம் இவ்விரு இலங்கை இராணுவ பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளித்திருப்பதுகண்டனத்திற்குரிய செயல் என்றும் ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னைக்கு அருகில் உள்ள தாம்புரம் விமான தளத்தில் 9 இலங்கைவிமானப் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கும் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
thanks news.lk
Sunday, October 7, 2012
நபிகளாரை அவமதித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படத்தைக் கண்டித்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்
சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையத்திற்கு முன்னால் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஜெனீவா இலங்கை மற்றும் ஏனைய பிரதேசங்கள் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks meelparvai
இலங்கையை வீழ்த்தி T-20 உலகக் கிண்ணத்தை வென்றது மேற்கிந்திய தீவுகள்
இலங்கை அணியை 36 ஓட்டங்களால் வெற்றிகொண்டு மேற்கிந்திய தீவுகள் இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி மாலன் சமுவல்ஸின் அதிரடியில் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் இன்று ஏமாற்றமளித்து 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் இருப்பை உறுதி செய்த மாலன் சமுவல்ஸ் 6 சிக்சர்கள் அடங்களாக 78 ஓட்டங்களைப் பெற்றார்.
வேறு எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. பிராவோ 19 ஓட்டங்களைப் பெற்றார். டெரன் சமி 26 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டனர். அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு 138 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 33 ஓட்டங்களையும் குலசேகர 26 ஓட்டங்களையும் சங்கக்கார 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் டெரன் சமி விக்கெட்களை வீழ்த்தினார். இதன்படி சுமார் 33 வருடங்களின் பின் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணம் ஒன்றை வென்றுள்ளது.
ஒரு பில்லியன் பாவனையாளர்கள் மாதமொருமுறை பேஸ்புக்கை பார்வையிடுகின்றனர் - மார்க் சகர்பேக்
பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் பாரிய அதிகரிப்பை காட்டுவதாக மார்க் சகர்பேர்க் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு அமைய, பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுகின்றன.
ஒரு பில்லியன் பாவனையாளர்களில், சுமார் 600 மில்லியன் பேர் கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் இணையத்தளத்தை பார்வையிடுகின்றனர்.
இதுவரையில் 220 பில்லியன் புகைப்படங்கள் இந்த இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மார்க் சகர்பேர்க் சுட்டிக்காட்டினார்.
வட அமெரிக்காவில் 44 வீதமானவர்களும், அவுஸ்திரேலியாவில் 42 வீதமானவர்களும், தென் அமெரிக்காவில் 34 வீதமானவர்களும் பேஸ்புக் இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனைத் தவிர ஐரோப்பாவில் 30 வீதமானவர்களும், ஆசியாவில் 7 வீதமானவர்களும், ஆபிரிக்காவில் 5 வீதமானவர்களும் பேஸ்புக்
இணையத்தை பயன்படுத்துவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
news.lk
Saturday, October 6, 2012
சர்வதேச ஆசிரியர் தின விழா – 2012 சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், (படங்கள் இணைப்பு)
சர்வதேச ஆசிரியர் தின விழா – 2012 சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், (படங்கள் இணைப்பு)
மாதா, பிதா, குரு தெய்வம் என்பது தமிழ்மொழி எமக்குச் சொன்னது. அதில் வரும் குருவானவர் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தில் எந்தளவு முக்கியத்துவமானவர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
அவ்வாறு எங்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் ஆசான்களை நாங்கள் கண்ணியப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் தலையாகிய கடமையாகும்.
ஒரு நல்ல கல்வி நற்பிரஜையை உருவாக்கும் என்ற கோட்பாட்டுக்குகமைவாக அந்த மாணவனை இந்த ஆசான் வழிநடத்திச் சென்று அவனை நல்லவனாக உருவாக்குகிறான் என்பதில் ஐயமில்லை.
அவ்வாறு நற்பிஜைகளை உருவாக்கும் சிறந்த சேவைகளை செய்யும் ஆசிரியர்களை நாங்கள் கௌரவப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இந்த வகையில் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் நிகழ்வுகள் அதன் பாடசாலை முன்றலில் 05.10.2012ல் மிக விமர்சியாக நடைபெற்றது. அதன் போது அப் பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு மற்றும் அங்கு சிறப்பாக கடமையாற்றிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் இந் நிகழ்வு தரம் – 9 ம் வகுப்பு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது இங்கு விசேட அம்சமாகும்.
தகவல்கள் – ஏ.எம்.தாஹாநழீம் – (Publisher – Google Inc)
--
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்ட சாதனை(படங்கள் இணைப்பு)
சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், புலமைப்பரிசில் பரீட்சையில் வலய மட்ட சாதனை(படங்கள் இணைப்பு)
சம்மாந்துறை வலயத்தில் பலராலும் பெருமையாகப் பேசப்படும் பாடசாலையான கமு/ சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், இந்த முறையும் வலயத்தில் சாதனை படைத்துள்ளது. நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 26 மாணவர்கள் சித்தி பெற்றதுடன், வலயத்தின் கூடுதலான புள்ளியான 179 புள்ளிகளைப் பெற்ற MBM.தஸ்னீம் வலய மட்ட சாதனையாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொரு வருடம் சராரியாக 20- 40ற்கும் இடைப்பட்ட மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறவைக்கும் ஒரு சிறந்த பாடசாலையாக எல்லோராலும் பேசப்படுவதுடன் இது ஒரு பிள்ளை நேயப் பாடசாலையாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இந்தப்பாடசாலையை தரிசிப்பதற்காக நாளாந்தம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு பிள்ளை நேயப்பாடசலைகள் இங்கு வந்து பாடசாலையின் சிறப்பான கற்றல், கற்பித்தல் மற்றும் அதன் சூழலின் சிறப்புத்தன்மையை சுவைத்துச் செல்வதுடன் அவர்கள் தங்களுடைய பாடசாலைகளிலும். இங்குள்ள சிறப்புக்களை உதாரணமாகக் கொண்டு அமுல்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்றாலும் அது மிகையாகாது.
இவ்வாறான பல்வேறுபட்ட சிறப்புக்களை அடைவதற்கு அதனை முகாமைப்படுத்தி நிர்வகிக்கின்ற அதிபரான TM. தௌபீக் அவர்களின் சேவையும் மற்றும் அங்கு கடமையாற்றும் ஆசிரியர்களின் சேவையும் அளப்பெரியது என்பதை இங்கு சுட்டிக்காடடுதல் பொருத்தமாகும்.
மேலும், இந்த ஆண்டு இவர்கள் சித்தி பெற உறுதிணையாக நின்று உழைத்த ஆசிரியைகளான ஜனாபா - RUM. மன்சூர், AB. பரீதா , AU. றிம்லான் நன்றிகைகளை தெரிவிப்பதோடு, ஒவ்வொரு வருடமும் இந்தப்பாடசாலையில் மாணவர்களைச் சேர்ந்துக் கொள்ளுவதில் ஏனைய பாடசாலையை விட போட்டித்தன்மையும் காணப்படுகின்றது என்பதையும் இங்கு கோடிட்டு காட்டுதல் வேண்டும்.
தகவல்கள் – ஏ.எம்.தாஹாநழீம் – (Publisher – Google Inc)
--
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
Friday, October 5, 2012
சம்மாந்துறை தேசிய பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு
மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களால் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டனர். மற்றும் இதன்போது பெண் சாரணிய மாணவிகளினால் மரியாதை அணிவகுப்பும் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பிரதம அதிதி அவர்கள இலங்கையில் ஆசிரியர் தினம் அறிமுகமான 1991ம் ஆண்டு சம்மாந்துறையில் நடைபெற்ற முதலாவது ஆசிரியர் தின நிகழ்விற்கு தலைமை தாங்கியவராவார். முதலாவது ஆசிரியர் தினத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை கல்லூரி அதிபர் அவர்களிடம் கையளித்தார்.
மற்றும் இந்நிகழ்வில் புதிதாக அதிபர் சேவைக்கு தெரிவான ஆசிரியர்கள் நால்வர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















