Thursday, October 4, 2012

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டம் 2012 சம்மாந்துறையில் இன்று நடமாடும் சேவை

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டம் இம்முறை அம்பாரை மாவட்டத்தையும் உள்ளடக்கியதாய் செயற்படுத்தப்பட்டு வருகின்றது அதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் அல்-மர்ஜான் பெண்கள பாடசாலையில் இன்று நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு தற்டீபாது நடைபெற்று வருகின்றது.
71 பிரிவுகளில் மக்களுக்கு சேவைகள் பல வழங்கப்பட்டு வருகின்றன. இனறு காலை முதலே பெருமளவான மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர் .அவர்களுக்காக விஷேட வசதிகள் பலவும் பாடசாலையில் செய்யப்பட்டிருக்கின்றன.




Tuesday, October 2, 2012

தம்புள்ளைப் பள்ளிவாசல் தொடர்பாக மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி


தம்புள்ளைப் பள்ளிவாசல் அரசின் வாக்குறுதிப்படி பாதுகாக்கப்படுமென்றிருந்த நிலையில் மீண்டும் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 65 கட்டிடங்களை அகற்றுமாறு நகர அதிகார சபை அனுப்பிய கடிதம் மீண்டும் முஸ்லிம் சமூகத்தில் கவலையையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடகப் பேச்சாளர் எம்.எச்.எம். ஹஸன் மீள்பார்வைக்கு அனுப்பிய ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவதுதம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம் அமைப்புக்கள்இஸ்லாமிய இயக்கங்கள்அரசியல் பிரமுகர்கள்தனிமனிதர்கள் என்று பலரும் காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் சம்பவமாக அதனை அரசாங்கமும் உணர்ந்திருப்பதாகச் செய்திகளும் வெளிவந்தன. இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரமுகர்கள் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
ஜெனீவாவில் இலங்கைக்குச் சார்பாக அறபு முஸ்லிம் நாடுகளை ஆர்வங் கொள்ளச் செய்யும் முயற்சியில் ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்கள் ஈடுபட்ட சந்தர்ப்பத்திலும் இந்த விடயம் ஊடகங்களில் பேசப்பட்டன. அந்த வகையில் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பான முழுப் பொறுப்பும் இப்போது அரசாங்கத்திடமேயுண்டு.
நபிகள் நாயகத்துக்கு எதிரான திரைப்படத்துக்கான எதிர் விளைவுகளைக் காட்டிய முஸ்லிம்களின் முன்னெடுப்புக்களின்போதும் முஸ்லிம்கள் சமய விவகாரங்களின்போது எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை கண்டு கொண்டது. பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என்று அரசாங்கம் வாக்களித்திருப்பதாகவே பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் தலைவர்களும்ஜம்இய்யத்துல் உலமாத் தலைவர்களும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு உறுதி வழங்கியுள்ளனர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் ஆயுதமாக தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முன்னெடுக்கப்பட்டபோது கூட அரசாங்கம் முஸ்லிம்களுக்குச் சாதகமான பதிலையே கூறி வந்ததது.
இந்நிலையில் தம்புள்ளை நகரில் உள்ள 65 வீடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கிடையில் அகற்ற வேண்டும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் மாத்தளைப் பிராந்திய முகாமையாளரும் ஒப்பமிடப்பட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 12 முஸ்லிம் வீடுகளும் அடங்கும். பள்ளிவாசலுக்கு இத்தகைய ஒரு கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பாதுகாப்புச் செயலாளர் பள்ளிவாசலுக்கு ஆபத்தில்லை என்று கூறியிருப்பதாக அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான சிரேஷ்ட சட்டத்தரணி கூறியிருந்தாலும் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் பாரதூரமானவை என்றே நம்பப்படுகிறது.
மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்வீதி மறியல்கள் என்றில்லாமல் முஸ்லிம் புத்திஜீவிகள்அரசியல்,சமூகத் தலைவர்கள் அரசின் உயர் பீடத்தைச் சந்தித்து உத்தியோகபூர்வமான உறுதிப்பாட்டை பெற்றுக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்.
அதன் பின்னரே அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும். இப்பணி அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

thanks.meelparvai

திவிநெகும சட்டமூலத்தை விரிவாக ஆராய்வதற்கு கால அவகாசம் கோரவுள்ளதாக மு.கா. அறிவிப்பு

திவிநெகும சட்டமூலம் இன்று கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு ௭டுத்துக் கொள்ளப்படும்போது குறித்த சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்களை விரிவாக ஆராய்வதற்கான கால அவகாசத்தைக் கோரவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி (௭ம்.பி) தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இச் சட்டமூலத்தில் அடங்கியுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவு ஒன்றை ௭டுப்பதற்கோ அல்லது அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கோ ௭மக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
மூன்று தினங்களுக்கு முன்னர்தான் ௭மக்கு குறித்த சட்டமூலத்தின் பிரதி கிடைக்கப்பெற்றது. அதனால் இக் குறுகிய காலப்பகுதிக்குள் அதில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய முடியாது. அதிகாரப் பரவலாக்கல் விடயங்களைப் பொறுத்தவரை அவசரப்பட்டு முடிவுகளை ௭டுக்க முடியாது.
௭னவேதான் திவிநெகும சட்ட மூலத்திலும் ௭மது கட்சி அவசரப்பட்டு முடிவெடுக்காது ௭ன்றார்.

meelparvai

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினை தீர்வு குறித்து அமைச்சர் ஹகீம் பேச்சு

அரசியலமைப்புச் சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு உரியமுறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் அவசியமும், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்துவமும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆணையின் ஊடாக நன்கு வெளிப்படுத் தப்பட்டிருப்பதாக நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹகீம், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரி்க்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய நீதியமைச்சர் ஹகீம், நியுயோர்க்கில் அமைந்துள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியின் அலுவலகத்தில் திங்கள் கிழமை (01.10.2012) காலை திரு. பிளேக்குடன் தனியாக நடத்திய கலந்துரையாடலின்போது இதனைச்  சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் திரு. பிளேக்குடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஹகீமுக்கும், உதவி இராஜாங்க செயலாளர் பிளேக்கிற்கும் இடையிலான கலந்துரையாடல் அதிகாரப் பகிர்வின் அவசியம், கிழக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய அமெரிக்கத் திரைப்படம் என்பனவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.
மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்தவுடனேயே தாம் அரசாங்கத் தரப்பினருடனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடனும், முஸ்லிம் காங்கிரஸிற்குக் கிடைத்த பேரம் பேசும் சக்தியினூடாக நடாத்திய பேச்சுவார்த்தைகளின்போது நாட்டில் வாழும் சகல சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அரசாங்க மொன்றின் அவசியத்தை வலுயுறுத்திய போதிலும் இருதரப்பினரும் அதில் உரிய கவனம் செலுத்தவில்லை யென்றும், அந்த பின்னணியில் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை பொதுவாக நாட்டினதும், குறிப்பாக தமது சமூகத்தினதும் நலன் கருதி கிழக்கு மாகாண சபை ஆட்சியை நிறுவுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அமைச்சர் ஹகீம் கூறினார்.
இனப் பிரச்சினை தீர்வுக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உள்வாங்குவதன் ஊடாக இதுவரை காலமும் தீர்வு காணப்படாத பல்வேறு அம்சங்கள் மீது உரிய கவனத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்புவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹகீம், இனிமேல் நடைபெறும் இனப் பிரச்சினையோடு தொடர்பான எத்தகைய பேச்சு வார்த்தைகளிலும் முஸ்லிம் தரப்பும் தனியாக பங்குபற்ற வழிவகுக்கப்பட வேண்டு மென்றும், விடுதலைப் புலிகளைப் போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித் தரப்பாக பங்கு பற்றுவதற்கு இணங்காதிருப்பதாகவும், கூட்டமைப்பினர் தாம் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலா மென்றும், முஸ்லிம்கள் தம்மோடு பிரச்சினைகள் குறித்து கதைக்கலா மென்றும் கூறிவருவதாகவும் அது நன்மை பயக்கவோ, பலனளிக்கவோ மாட்டா தென்றும் சொன்னார்.
மீள்குடியேற்றம்
இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின் போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும், அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார, பாதுகாப்பு விடயங்கள் பற்றியும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹகீம் எடுத்துரைத்தார். மன்னார் கோந்தபிட்டி விவகாரம் புதாகாரமாக உருவெடுப்பதற்கு வழிகோலிய காரணிகளையும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்பட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அவர் கூறினார்.
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் நிலபுலன்கள் தொடர்பான சிக்கல்களையும், நெருக்கடிகளையும் பற்றி தெரிவித்த அமைச்சர் ஹகீம், தமது சொந்தக் காணிகளை யுத்தம் நிலவிய காலத்தில் பறிகொடுத்த மக்கள் அவற்றை மீண்டும் பெறுவதற்கு வழிவகுக்கும் சட்டத்தை அமுலாக்க விருப்பதாகவும் கூறினார்.
தடுப்புக் காவலில் உள்ள தமிழ் சிறைக்கைதிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேலும் தாமதமின்றி மேற்கொண்டு குற்றமற்றவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் நீதியமைச்சும், சட்டமா அதிபர் திணைக்களமும் ஈடுபட்டு வருவதாகவும் திரு. பிளேக் தொடுத்த கேள்வி யொன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ஹகீம் கூறினார். பிரத்தியேகமான மேல் நீதி மன்றங்களினூடாக அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படு மென்றார்.
நபிகள் நாயகம் அவமதிப்புபற்றி
அமெரிக்காவில், கலிபோர்ணியாவில் தயாரிக்கப்பட்ட நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் கீழ்தரமாக சித்திரிக்கும் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் நாடுகளில் மக்களின் மனங்களை புண்படுத்தி, அவர்களை அதற்கெதிராக கிளர்ந்தெழச் செய்துள்ளது பற்றி உதவி இராஜாங்க செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த அமைச்சர் ஹகீம், இஸ்லாத்தைப் பற்றியும், அதன் இறுதித் திருத்தூதர் பற்றியும் வேண்டு மென்றே திட்டமிட்டு இவ்வாறான அபாண்டங்களும் அவதூறுகளும் மேற்கத்தேய நாடுகளைச் சேர்ந்தவர்களால் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், இவ்வாறான இழி செயல்களை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசாங்கமும், ஏனைய மேற்கு நாடுகளும் தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை மிகவும் பாரதூரமானதாகி விடுமென்றும் கூறியதோடு, பேச்சு சுதந்திரம் என்ற காரணத்தைக் காட்டி எந்தவொரு சமயத்தையோ, சமயத் தலைவரையோ நிந்திப்பதையோ, அவமதிப்பதையோ அச் சமயங்களை பின்பற்றுவோர் ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேற்குலகிற்கும், இஸ்லாமிய உலகிற்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்கான வழிவகைளை காண வேண்டும் என அமைச்சர் ஹகீம் தெரிவித்தபோது, அதற்கான சிறந்த ஆலோசனைகளை முன்வைக்குமாறும், அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்த முடியுமென்றும் திரு. பிளேக் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் ஹகீமுடன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சர் டளஸ் அளகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன, பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜென்ரல் சவீந்திரடி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

meelparvai

கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு!

கிழக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு  01/10/2012 காலை திருகோணமலையிலுள்ள மாகாண சபை மகாநாட்டு மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.

சபையின் செயலாளரினால் சபையில் ஆளுநரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சபையில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தெரிவு கோரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதியின் பெயரை முன்மொழிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் சபைக் குழுத் தலைவருமான எம்.எம். ஜெமீல் வழிமொழிய சபை ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து பிரதித் தவிசாளர் தெரிவு செயலாளரினால் அறிவிக்கப்பட்ட போது மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரான எம்.எஸ்.சுபைரின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழிமொழிய சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது.

இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதையொட்டி 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியது. 

news.lk

முதியவர்களின் மலம்-சிறுநீர் சுத்தப்படுத்தும் புதிய கருவி!

படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத வயதானவர்கள் சிறுநீர்- மலம் கழித்தால் உடனே கழுவி துடைத்து சுத்தம் செய்துவிடும் தானியங்கி கருவியொன்றை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயன்படும் கருவிகளை பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து தயாரித்து வருகின்றன.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள்- தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச கண்காட்சி நடந்தது.

இதில்இ ‘மசில்கார்ப்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘ரோபோ ஹெல்ப்பர் லவ்’ என்ற கருவி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள்- முதியோரின் இரு கால்களுக்கும் நடுவே சிறுநீர்- மல துவாரங்களை மூடும் வகையில் கவை போல இந்த கருவியை பொருத்த வேண்டும்.

சிறுநீர்- மலம் வெளியேறுவதாக சென்சார் மூலம் தெரியவந்தால்- உடனே பிரத்யேக குழாய் மூலம் அவை உறிஞ்சப்பட்டு- வெளியேற்றப்படும். கிருமிநாசினி கலந்த தண்ணீர் உடனே அப்பகுதியில் ஸ்பிரே செய்யப்படும். சூடான காற்று செலுத்தி அப்பகுதிகள் காயவைக்கப்படும்.

Monday, October 1, 2012

சிறுவர்தின விழா நிகழ்வு - 2012 சம்மாந்துறை தேசியபாடசாலையில்இடம்பெற்றவை




சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இன்று காலை 8.30 மணியளவில்  கல்லூரியின் முதல்வர் ஜனாப் எஸ். அபூபக்கர் அவா;களின் தலைமையில் மிகக்கோலாகலமாக சிறுவர்தின விழாக்கள் நடைபெற்றன இவ்விழாவில் பிரதம அதிதியாக மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர் (அம்பாரை மாவட்டம்) சட்டத்தரணி சறூக் அவா;களும்இ தொழில்திணைக்கள பணிப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். அன்சார்இ சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி என். தஹநக அவா;களும் மற்றும் தென்கிக்குப்பல்கலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி சரீனா அப்துல்கபூர்இ சிரேஸ்ட விரிவூரையாளர்  சல்பியா ஜலீல்இ கணக்காய்வூத்திணைக்கள பிரதம கணக்காய்வாளர் அமீர் அலி அவர்களும்   கலந்து சிறப்பித்தார்கள் இந்நிகழ்வின்பின் சிறுவர்களுக்கான மகிழ்ச்சியூ+ட்டும் விளையாட்டு விழாக்களும் அலங்கரிக்கப்பட்டன இதற்கு யூனிசெப்  திட்டப்பணிப்பாளர் நிபால் அலாவூதீன் அவா;களும் கலந்து சிறப்பித்தனர் பெற்றார்இ பாதுகாவலர்கள்இ ஆசிரிய சமூகங்கள் ஒன்று சேர்ந்து பிள்ளைகள் அனைவருக்கும் புத்தாடையை பல வா;ணங்களில் உடுத்து மகிழ்வித்ததோடு மாணவா;களின் உடற்பயிற்சி கண்காட்சிவிழாவூம் நடைபெற்றது மேலும் கிழக்குமாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் சுகாதார விளையாட்டுத்துறைஇ சிறுவர் நன்னடத்தை மற்றும் கூட்டுறவூத்துறை அமைச்சர் அவா;களின் செய்தியூம் வாசிக்கப்பட்டதுடன் அவரால் வழங்கப்பட்ட இனிப்புக்களும் மேலும்; பொதுத்தாபனங்களால் வழங்கப்பட்ட இனிப்புக்களும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டதுடன் மேலும் பாடசாலை மாணவத்தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வை நேரடி ஒலிபரப்புச்செய்த பிறை எப்.எம். அறிவிப்பாளர் அவா;களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறி பிற்பகல் 3.00 மணியளவில் இந்நிகழ்வூ நிறைவூபெற்றது.



--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk

சிறுவர்தின நிகழ்வு


இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும், மனித அபிவிருத்திச் சங்கமும்  இணைந்து சர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்றினை சம்மாந்தறை அல்- மர்ஜான் முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் இன்று  (2012-10-01) நடாத்தினர் 


உலகளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர்தினமாக  ஒக்டோபர் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஓர் அம்சமாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும், மனித அபிவிருத்திச் சங்கமும்  இணைந்து சர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்றினை சம்மாந்துறையில் இன்று ஏற்பாடு  செய்திருந்தனர். சம்மாந்துறை அல்-மர்ஜான்முஸ்லிம் பெண்கள் பாடசாலையின் எம்.எஸ்.காபரியப்பர் மண்டபத்தில்   இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியேட்சகர் எம்.எஸ்.ஜாபிர் அவர்களும், சட்ட ஆலோசகர் ஆரிக்கா காரியப்பர் அவர்களும்  மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




Sunday, September 30, 2012

வாழும் கலை இலக்கிய வட்டத்தின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி


சம்மாந்துறை- வாழும் கலை இலக்கிய வட்டம் முதியோர் தின மற்றும் சிறுவர் தின வாழ்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
மேலும்  “ நற்பண்புகளுடனான விவேகமுள்ள சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதோடு எம் முதியவர்களையும் கண்ணியப்படுத்துவோம்“ என அவர்களது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டனர்.

“சிறுவர்களிடம் அன்பாய் இருப்போம்“


Saturday, September 29, 2012

பு திதாக அதிபர், ஆசிரியர்கள் 6000 பேருக்கு அக்டோபர் 2ல் நியமனம்!

நாட்டிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றவென மேலும் 6000 அதிபர், ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவிக்கிறது.


இலங்கை அதிபர் சேவை தரம் 2, தரம் 3 ஆகிய இரு தரப்பிர்களுக்கும் 3000 அதிபர்களும், இலங்கை ஆசிரியர் சேவை 3க்கு 3000 பட்டதாரி ஆசிரியர்களும் புதிதாக நியமனம் பெறவுள்ளனர்.

இலங்கை கல்வி நிருவாக சேவையின் 3ஆம் தரத்திற்கு திறமை சேவை மூப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவான அதிபர் சேவை தரம்1ஐச் சேர்ந்தவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இந்த மூன்று பகுதியினருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கோட்டபாய யரட்ன அறிவித்துள்ளார்.

இஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது

உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் “இன்னஸன் ஒஃப் முஸ்லிம்ஸ்” என்னும் படத்தினை தயாரித்த நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகர சட்ட நிறுவனம் அதிகாரி டொம் முரோஸக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

“முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் படத்தினை தயாரித்து நெறிமுறைகளை மீறி அதனை இணையத்தில் வெளியீடு செய்த நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா (வயது 55) என்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டார். இவரை சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி நபருக்கு பிணைவழங்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் கலகங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவே பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார். சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தினை சந்தேகநபர் செய்துள்ளதாகவும் நீதிபதி சுஸானி எச்.சீகல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, September 27, 2012

கல்வி அமைச்சின் நூலக அபிவிருத்திப் பிரிவூக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளH சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தனH.




கல்வி அமைச்சின் நூலக அபிவிருத்திப் பிரிTக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளH திருவாளH நந்தசிறி அவHகளும்> உதவிப் பொறுப்பாளH விதானகே அவHகளும் 2012-09-27 ஆம் திகதி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தனH. அவா;;களுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகப் பொறுப்பாளH எம்.எம். றிபாயூதீன் அவHகளும் வருகைதந்து நூலகத்தைப் பாHவையிட்டு> நூலக அபிவிருத்தி விடயமாக தேவையான ஆலோசனைகளைAம் வழிகாட்டல்களைAம் பாடசாலை நூலகருக்கும்> அவரது குOவினருக்கும் வழங்கினH. அவHகளுடன் அதிபH எஸ். அபூபக்கH அவHகளும் பிரசன்னமாயிருந்தாH.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடக பயிற்சிப்பட்டறை


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
ஏற்பாட்டில் சமூக ஊடக பயிற்சிப்பட்டறை
இணையதளங்கள்இ வலைப்பூக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆர்வமுடைய இளைஞர் யூவதிகளை இனங்கண்டு அவர்களை முறையாக பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் திட்டமிட்டுள்ளது.
நவீன உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் சமூக ஊடகத்துறையில் வினைத்திறனுடன் செயற்பட கூடிய வகையில் இளைஞர் யூவதிகளை பயிற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளையூம் சேர்ந்த இளைஞர் யூவதிகள் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்ற போதிலும் ஊடக தாற்;பரியங்கள் குறித்த உரிய பயிற்சிகளும் வழிகாட்டல்களும் இல்லாததன் காரணமாக சமூக ஊடகங்கள் வாயிலாக ஆக்கபூர்வமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டே ஆர்வமுடையவர்களை முறையாக பயிற்றுவிப்பதன் மூலம் சிறந்ததொரு ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்பி ஆளுமை மிக்க சமூக ஊடக செயற்பாட்டாளர்களை உருவாக்க முடியூம் என மீடியா போரம் கருதுகிறது.
மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படவூள்ள இப்பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர் யூவதிகள் தமது பெயர் விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் றிப்தி அலிக்கு 0773630668 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது சகைவால.யடi@பஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ எதிர்வரும் ஒக்டோபார் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியூம்.
இந்த பயிற்சிப்பட்டறைகளில் அனுபவம் வாய்ந்த விரிவூரையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கவூள்ளதுடன் பங்குபற்றுவோருக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்படவூள்ளன.


Monday, September 24, 2012

இஸ்லாததிற்கு எதிரான திரைப்படத்திற்கு இலங்கையிலும் தடை


இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலானதாக தெரிவிக்கப்படும் திரைப்படத்திற்கு இலங்கை அரசாங்கமும்  எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அந்தவகையில்

எந்தவொரு மதத்தை இழிவுபடுத்தும் நோக்கிலான செயற்பாடுகளை தாம் கண்டிப்பதாக புத்தசாசன மற்றும் மத விவகார பதில் அமைச்சர் என்.கே.டி.எஸ்.குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த கண்டனத்திற்குள்ளான திரைப்படம் இலங்கையில் ஒளிபரப்பப்படுவதனை தவிர்க்கும் வகையிலான  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன

இன்று(2012-09-25) வெளியாகிய 5ம்தர புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன அதன்படி
கொழும்பு 149
யாழ்ப்பாணம் 148
அமபாரை,மட்டு, திருகோணமலை -147
கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,பதுளை-146
நுவரெலியா,முல்லைத்தீவு 145
என அறிவிக்கப்பட்டுள்ளன


5ம் தர புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகள வெளியாகியுள்ளன

2012ம் ஆனடுக்கான நடைபெற்று முடிநத 5ம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரிடசைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன

பெறுபேறுகளை அறிந்து கொள்ள www.doenets.lk என்ற இணைய தளத்தை அணுகியோ அல்லது கைத்தொலைபேசிகளிலோ பெற்றுக் கொள்ளலாம்
கைத்தொலைபேசிகளில் பெற்றுக் கொள்ள
EXAMS இடைவெளி பரிட்சைச்சுட்டெண் என்பவற்றை எஸ்.எம.எஸ் அனுப்புங்கள்
Mobitel ஆயின் 8884
Dialog ஆயின் 7777
 Airtel ஆயின் 7545
Hutch ஆயின் 8888
Etisalath ஆயின் 3926 ற்கும்  எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்

அனைத்து மாணவரகளுக்கும் sammanthurai.tkசார்பாக வாழத்துக்கள்

கிழக்கு மாகாணசபை அமைச்சராக சம்மாந்துறை மன்சூர் பதவியேற்பு

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலை அடுத்து,  தெரிவு செய்யபபட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு இன்று (2012-09-24) இடம்பெற்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சம்மாந்துறை எம்.ஐ.எம்.மன்சூர்  சுகாதார, விளையாட்டு, தொழில் நுட்பக் கல்வி,  அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.


மேலும் கிழக்கு மாகாண சபைக்கான 3 அமைச்சர்களும் பதவியேற்றனர்.  எம்.எஸ்.உதுமாலெப்பை  வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல்   அமைசசராகவும், விமலவீர திஸாநாயக்க கல்வி மற்றும் காணி அமைச்சராகவும்  ஹாபிஸ் நசீர்   விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள்   அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். எம். எஸ். உதுமாலெவ்வை விமலவீர திசாநாயக்க ஆகியோர் தாம் முன்னர் வகித்த அமைச்சுப பதவிகளுக்கே மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Friday, September 21, 2012

சம்மாந்துறை மக்கள் உளமுருகி பிரார்த்தனை!

இன்று(2012-09-21) சம்மாந்துறையில் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து  இஸ்லாத்திற்கெதிரான சதி முயற்சிகள் தோல்வியடையவும். மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படவும், உலக முஸ்லிம்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு வேண்டியும் அனைத்து ஜும்மாப் பள்ளிகளிலும் ஜும்ஆவைத் தொடர்ந்து முற்ற வெளிப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு  மனமுருக பிரார்த்தித்தனர். இன்றைய குத்பாப் பிரசங்கங்களும் சமகால சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியே அமைந்திருந்தன


Thursday, September 20, 2012

நாளை சம்மாந்துறையின் அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனை.

அண்மையில் யூ- ரியூப்  இணையதளத்தில் முஹம்மது நபியவர்களை இழிவுபடுததும் வகையில் வெளியிடப்பட்ட  சர்ச்சைக்குரிய திரைப்பட முன்னோட்டமானது  உலகளவில்  பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இஸ்லாத்திற்கெதிரான யஹீதி, நஸராக்களின் இம்முயற்சிகள் கண்டனத்திற்குரியதாகும் என்றும் இவற்றிறகு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் , இஸ்லாத்திறகெதிரான சதிமுயற்சிகள் பற்றி விழிப்பணர்வூட்டும் வகையிலும் நாளை சம்மாந்துறையின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் மேற்படி தலைப்பிலான பிரசங்கமே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழுகையைத் தொடர்ந்து முற்றவெளிப் பிரார்தனையும் ஏறபாடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, September 18, 2012

சம்மாந்துறையில் தேசிய வாசிப்பு மாதப் போட்டிகள்

எதிர்வரும் 2012  ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி சம்மாந்துறை பிரதேச சபை நூலகங்களினால் போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டி விபரங்கள்

கனிஸ்ட பிரிவு
கவிதை - தலைப்பு - அறிவுப் பசியின் உணவகம் நூலகம்
கட்டுரை- தலைப்பு - வாழும் காலமெல்லாம் வாசிப்பு ஒரு மனிதனுக்கு அவசியம்.


சிரேஸ்ட பிரிவு
கவிதை - தலைப்பு - “வாசகனாக இருந்து உன் உள்ளத்தில் நூலகம் ஒன்றைத் திறந்துவை“
கட்டுரை- தலைப்பு -“ பாமரனையும் பண்டிதனாக்கும் வாசிப்புக் கலை“

விதிமுறைகள்-
1. இப்போட்டிகளில் சம்மாந்துறை பிரதேச அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் கனிஸ்ட மற்றும் சிரேஸட பிரிவு மாணவர்்கள் பங்கு பற்ற முடியும்.

2. கனிஸ்ட பிரிவில் தரம் 6-9 வரையான மாணவர்களும்
 சிரேஸ்ட பிரிவில் தரம் 10-13 வரையான மாணவர்களும் பங்கு பற்ற முடியும்.

3. கவிதைகள் அனைத்தும் 30 வரிகளைக் கொண்டவையாக அமைதல் வேண்டும்.

4. கனிஸ்ட பிரவிற்கான கட்டுரைகள் 250-300 சொற்களைக் கொண்டதாகவும் சிரேஸ்ட பிரிவிற்கான கட்டுரைகள் 750-800 சொற்களைக் கொண்டவையாக அருக்க வேண்டும்.

5. ஒரு மாணவர இரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற முடியும்

6. போட்டியில் பங்கு பற்றி முதல் மூன்று நிலைகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கே பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

7. எழுத்துக்கள் தெளிவில்லாத விடத்து புள்ளிகள் குறைக்கப்படும்.

8. தொகுக்கப்படட உங்களது கவிதை, கட்டுரைகளுககு தனியான முன்பக்கம் ஒன்றை அமைத்து அம் முன்பக்கத்தில் உங்களது முழுப்பெயர், பாடசாலைச் சுட்டெண், கற்கும் தரம்,பாடசாலை பெயர் என்பன சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

 9 எதிர்வரும் 30.09.2012 ம் திகதிக்கு முன்னர் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டு தபாலிலோ அல்லது நேரடியாகவோ
விடயப் பொறுப்பாளர்,
கவிதை, கட்டுரைப் போட்டி,
அமீரலி பொது நூலகம்,
சம்மாந்துறை எனும் முகரிக்கு அனுப்பப்ட வேண்டும்.

10. குறித்த முடிவுத்திகதிக்கு பிந்தும் ஆவணங்களும், ஆக்கங்களும் நிராகரிக்கப்படும்.


தொடர்புகளுக்கு
யுஏ.ஆர்.எம்.இல்யாஸ்
விடயப் பொறுப்பாளர்,
கவிதை, கட்டுரைப் போட்டி,
அமீரலி பொது நூலகம்,
சம்மாந்துறை
077-2382174
067-2260853




Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.