Wednesday, November 16, 2011

தேசிய ரீதியில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையை சோ்ந்த இரு மாணவா்கள் தெரிவு.


எமது பாடசாலை மாணவிகளான  தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி கற்கும் எஸ். நஜா சிமாறாஹ், எம்.பாதிமா ஸஸ்னா ஆகிய மாணவிகள் (ஆங்கில மொழி மூலம் தேசியரீதியல் இடம்பெற்ற) சமூக விஞ்ஞஞான போட்டியில் பங்கு பற்றி 3ம், 4ம் இடம்களை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனா் இவா்களை எமது பாடசாலை சமூகம் பாராட்டி கொளரவிக்கின்றது.

Sunday, November 13, 2011

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் ஓர் பாரிய ஊரவலம்





 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறையில் ஓர் பாரிய நிகழ்ச்சியும் ஊரவலமும் இடம் பெற்றது.
இந் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபம் வரையில் ஊரவலமாக வைத்திய அதிகாரிகள்ää தாதிமார்கள் மற்றும் ஏனைய அதிதகள் ஆகியோரும்ää பொது மக்களும் கலந்து கெண்ட வண்ணம் இடம் பெற்றது.
மேலும் நிகழ்வில் வைத்திய பரிசோதனைகள் உடனுககுடன் இடம் பெற்ற அதே வேளைää நீரிழிவு நோய்க்கான காரணிகள் மற்றும் அதனைத்தடுக்கும் வழிகளும் காணிபிக்கப்பட்டன.
அத்துடன் நீரிழிவு நோய் சம்பந்தமான நூல் ஒன்றும் Dr.M.M.Nowsath அவர்களினால் வெளியிடப்பட்டது. மேலும் இந் நிகழ்வுக்கு

Dr.A.Issadeen
Dr.P.K.Sivakumar  (பொது வைத்திய நிபுணர்)  
A.A.Bawa (மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்) 
I.A.ஜப்பார் (பிரதம நம்பிக்கையாளர் - நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)
Dr.M.M.நௌஷாத்
D.M.J.K.தகநாயக்கா (சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி)
அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Saturday, November 12, 2011

சா்வதேச ஆசிரியா் தின விழா -2011 சம்மாந்துறை வலையத்தில் இன்று மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது




சா்வதேச ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு இன்று சம்மாந்துறை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பல சிறந்த ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் வைபவம் சம்மாந்துறை அல்-அா்சத் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி கலை கலாசார காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து கிழக்கு மாகாண அமைச்சா் விமல வீர திசானயக்க அவா்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம் எல்.ஏ. அமீா் , எஸ் புஸ்பராஜா அவா்களும் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளா் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நொளசாட், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளா் ரீ. காலியரசன் , இறக்காமம் பிரதேச சபை தவிசாளா் எம்.ஐ. நைசா் அவா்களும் வலயக்கல்விப் பணிப்பாளா் எம். கே.எம். மன்சூா் அவா்களும்  கலந்து சிறப்பித்தனா். இவ்வைபவமானது சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளா் ஐ. ஏ. றஸூல் அவா்களின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Tuesday, November 8, 2011

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான பயிற்ச்சிப் பட்டறை

சம்மாந்துறை நகர மண்டபத்தில் தற்பொழுது சிறுவர் பாதுகாப்பு சம்மந்தமான பயிற்ச்சிப் பட்டறை ஒன்று தற்பொழுது முன் பள்ளி ஆசிரியர்களுக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.இந் நிகழ்வினை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் பி.ப.1.00 மணி தொடக்கம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Monday, November 7, 2011

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலைக்கு முதல்தடவையாக பெண் நோயியல் வைத்தியர் நியமணம்


சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலைக்கு முதல்தடவையாக பெண் நோயியல் வைத்திய நிபுணரான (வீ.ஓ.ஜீ) வைத்திய கலாநிதி யுரேக்கா விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு, களுபோவில வைத்திய சாலைகளில் கடமையாற்றி இறுதியாக அக்கறைப்பற்று ஆதார வைத்திய சாலையில் கடமையாற்றிய பின்பே சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாரத்த ஆதார வைத்திய சாலைக்கு முதலாவது பெண் நோயியல் வைத்திய நிபுணராக (வீ.ஓ.ஜீ) வைத்திய கலாநிதி யுரேக்கா விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
இவருடைய வருகையினால் சம்மாந்துறை மக்களுடைய நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாகவும் அத்தியட்சகர்  இஸ்ஸதீன் தெரிவித்தார்.

Sunday, November 6, 2011

இன்று காலை அனைத்து மக்களும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர் அது தொடர்பான புகைப் படங்கள்







சம்மாந்துறை இணையத்தளத்தின் மற்றுமோர் பரிணாமம் இளைஞர்களின் புதிவித முயற்ச்சி

சம்மாந்துறை இணையத்தளமானது இன்று இரவு 9.00 மணிக்கு உறங்காத விழிகள் நிகழ்ச்சியுடன் தமது பரிச்சாத ஒலிபரப்பை தொடர்கிறது கேட்கத் தவறாதீர்கள் எமது இளைஞர்களின் புதிவித முயற்ச்சி

Saturday, November 5, 2011

அனைவருக்கும் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்

கட்டுப்பட்ட இறைக்குக்
காட்டத் துணிந்தத் தியாகம்;
மறக்காதுமனிதக்குலம்;
இருக்கும்வரை உலகம்!
வெற்றிப் பெற்றச்
சோதனைக்குப் பகரமாய்
பெருநாள்;
களிப்புடன் பலியிட்டுக்
கண்டுக்கொள்ள இத்திருநாள்!

அறுக்கும்கறிஏதும்
அடைவதில்லை
இறைவனை;
புதுப்பித்துக்கொண்டு
பூப்பூக்கும் ஈமானை!
புத்தாடைப்
போர்த்திக்கொண்டு
முழக்கமிடுவோம்
தக்பீரை;
மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்து
அள்ளித் தெளிப்போம்
வாழ்த்துகளை!
கசந்துப்போன நினைவுகளை
கசக்கிவிடு;
முட்டிநின்றச் சகோதரனை
முத்தமிடு;
எரியும் வெறுப்புகளை
அணைத்துவிட; அணைத்துவிடு!
தந்தை இப்றாகிம்
வழிவந்த திருநாள்
உயிர் தியாகத்தை
உணர்த்தும் நன்நாள்.
ஈதுல் அல்ஹா…ஹஜ்ஜூப் பெருநாள்!

Thursday, November 3, 2011

இலங்கையிலுள்ள தேசிய கல்லூரிகளில் 2012 ஆம் வருடத்துக்குப் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கேற்ப அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 16ஆம் திகதியும் 17ஆம் திகதியும், மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 26ஆம் திகதியும் 27ஆம் திகதியும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 19ஆம் திகதியும் 20ஆம் திகதியும்,  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 21ஆம் திகதியும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.  


இத்திகதிகளில் முதலாம் மொழி தமிழ், விசேட கல்வி, இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை தமிழ் மொழியில் இடம்பெறவுள்ளது. 


இந்தப் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை இதுவரை நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி நிருவாகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தகவல்:
எம். ஐ. எம். நவாஸ்
உப-பீடாதிபதி
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி
0714286891

Tuesday, November 1, 2011

கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம்



கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று (25.10.2011) கிழக்கு மாகாண சபைஅமர்வு சபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலமையில் இடம்பெற்றது. இச்சபையமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் சபைத் தீர்மானத்திற்காக 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் முன்வைக்கப்பட்ட போது சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.
பதினேழாயிரத்து இருநூற்று அறுபத்தெட்டு மில்லியன் (17,268) நிதி ஒதுக்கீட்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சபையில் சமர்ப்பிப்பதற்கான பிரகடனத்தினை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள்.
மாகாணசபை முறைமையினூடாக கடந்த 3 வருடங்களாக புதிதாக உதையமான கிழக்கு மாகாணசபை மூலம் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் வலுப்பெறுவதும் வீதி, பாலம், பாடசாலைகளென பல அபிவிருத்திப்பணிகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் 2011ம் வருடத்தில் ஏனைய துறைகளை விட கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது போல் 2012ம் வருடமும் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பாக்கப்படுகின்றது.

Saturday, October 29, 2011

பெற்றோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

ஒரு லீற்றர்  பெற்றோல் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 ரூபவினாலும் அதேவேளை டீசலின் விலையை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணையின் விலை 8 ருபாவினாலும்  இலங்கை பெற்றோல் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. 
இதே வேளை LANKA IOC நிறுவனம் பெற்றோல் விலை 12 ரூபாவினாலும் டீசலின் விலை 2 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
                                                                        


                                                                       

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி 27.10.2011 திகதி தென்பட இருந்த துல் ஹஜ் தலைப்பிறை 28.10.2011 திகதி தென்பட்டதனால் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினமாக 07.11.2011(திங்கட்கிழமை) யாக அறிவிக்கப்பட்டுள்ளது. என‌‌வே எமது இணையதள வாசகா்களுக்கு முன் கூட்டியே புணித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். (Computer Society of Sammanthurai) CSS

Thursday, October 27, 2011

சம்மாந்துறை வலயப் பாடசாலைகளுக்கு கணனி மற்றும் பாடசாலை மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு


இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலயத்தில் சம்மாந்துறை வலையக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டின் கீழ் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு கணனிகள்,பாடசாலை மாணவா்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சா் விமலவீர திசானயக்க அவா்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை அவா்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம்.எல்.ஏ. அமீா் அவா்களும், எஸ் புஷ்பராஜா அவா்களும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளா் எம்.கே.எம். மன்சூா் அவா்களும் கலந்துகொண்டனா்.இக் கணனிகள் கிழக்கு மாகாண முதலமைச்சா் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவா்களின் வேண்டுகோலுக்கிணங்க இந்திய அரசின் உயரிஸ்தானிகத்தினால் வழங்கப்பட்டது. மேலும் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சம்மாந்துறை வலயத்திற்குகுட்பட்ட பாடசாலை மாணவா்கள் 180 பேருக்கு  துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்து.

Tuesday, October 25, 2011

வெகு விரைவில் சம்மாந்துறைக்கு என்று ஒரு இணையத்தள் வானொலி காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் ஏராளம்.

வெகு விரைவில் சம்மாந்துறைக்கு என்று ஒரு இணையத்தள் வானொலி காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் ஏராளம்.

அமீர் அலி பொது நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகம் அன்பளிப்பு


கண்காட்சியை பார்வையிட வருகை தந்த Colombo Asia Foundation     நிறுவனத்தின் பணிப்பாளர் நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

இந் நிகழ்வில் அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர் A.L.M.Musthak, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் A.M.M.Nowshad மற்றும் Colombo Asia Foundation பணிப்பாளர் திரு அன்டன் னு. நல்லதம்பி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Saturday, October 22, 2011

புத்தகக் கண்காட்சியும், விற்பனையும்

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையும், சம்மாந்துறை பிரதேச சபை பொது நூலகத்தின் அபிவிருத்திக் குழுவும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும், விற்பனையும்
இன்று சற்று நேரத்திற்கு முன்னர் அங்குராப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் கௌரவ எம். உதயகுமார் அவர்கள் வருகை தந்து இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
அவர்களுடன் உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஜனாப். ஏ.ஜெ.எம். இர்ஸாட் அவர்களும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் ஏனைய அதிதிகளும் கலந்து கொண்டனர்.

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

எதிர் வரும்2011/10/23,24,25 ம் திகதி சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும், நூல் விற்பனையும் மிகவும் கோலகலமாக இடம்பெற உள்ளது.


இந் நிகழ்வு காலை10.00 முதல் இரவு10.00 மணி வரையும் இடம் பெற ஏற்பாடாகியுள்ளது.


இந்த நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாகSAMMANTHURAI.TK மூலம் இணையத்தள வானொளியில்  உள்ளக கலைப்பரங்கில் இருந்து நேர்முக வர்ணனை செய்யப்படவுள்ளது.

உலகில் தெரிவு செய்யப்பட்ட 50 சிறந்த ஆசிரியா்களில் ஜனாப் எம்.பி. ஹசீன்

உலகில் தெரிவு செய்யப்பட்ட 50 சிறந்த ஆசிரியா்களில் சம்மாந்துறை மண்ணை சோ்ந்த தேசிய பாடசாலையின் ஆசிரியா் ஜனாப் எம்.பி. ஹசீன். ஐக்கிய அமைரிக்காவில் Microsoft நிறுவனத்தில் அன்மையில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில்  இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்திய ஒரே ஒரு ஆசிரியராக கலந்து கொண்டார். இவருடய அப் பயணத்தின் அனுபவத்தை SAMMANTHURAI.TK இன் கானொளி ஊடக நீங்கள் கண்டு கழிக்க

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.