Saturday, August 13, 2011

உலக வங்கி பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

உலக வங்கி பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் (படங்கள்)கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலமையிலான குழுவினருக்கும் உலகவங்கி பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று காலை கிழக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் உலக வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையுடன் உலக வங்கி அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட இருக்கின்ற எதிர்கால திட்டங்கள் என்பன தொடர்பாகவும் விரிவாக ஆரயப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து உலக வங்கியானது மத்திய அரசின் அனுசரனையுடன் கிழக்கு மாகாண சபைக்கு புதிய பல செயற்த்திட்டங்களை தொடர்ந்தும் எதிர்காலத்தில் வழங்கும் எனவும் உலகவங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டயாரிடோ ஹே தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் சார்பில் சுசின் ரஸாய், சான்டியா சல்கொடா மற்றும் சீனித்தம்பி மனோகரன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை சார்பில் விவசாய அமைச்சர் கலாநிதி து.நவரெட்ணராஜா, பிரதி பிரதம செயலாளர் திட்டமிடல் எஸ்,மகேந்திரராஜா, முதலமைச்சரின் பதில் செயலாளர் கே.கருணாகரன் பிரதி பிரதம செயலாளர் நிதி எஸ். மயுரகிரிநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண்

பொத்துவிலில் மர்ம மனிதனால் தாக்கப்பட்டுள்ள பெண் (படங்கள்)பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார்.

இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்.

அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன்.

அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.

Thursday, August 11, 2011

மர்ம மனிதன் சம்மாந்துறையில்? நடந்தது என்ன?

வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவுவேளையில் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும் அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர். இவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையில் பொலிஸார் மீது கல்லெறிகள் விழுந்துள்ளன.  ஆத்திரமடைந்த பொலிஸார், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலகத்தில் ஈடுபட்டவர்களை அடக்க முற்பட்டிருக்கிறார்கள்.



பெண்ணின் கையில் ஏற்பட்ட கீறல்

இது தொடர்பாக களமுனையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கையில்; இங்கு ஒரு பெண்ணின் கையை இனந்தெரியாதவர்கள் (மர்ம மனிதர்கள்) கிளித்துவிட்டுச் சென்றனர். உடனே மக்கள் அவரை விரட்டிப்பிடிக்கச் சென்றனர். தீடீரென் அவன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளான். பொதுமக்கள் மர்ம மனிதனைத் தேடி வலை விரிந்திருக்கின்றனர். கையை வெட்டியவனும் மர்ம மனிதனாகத்தான் இருக்கவேண்டும் என்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மக்கள் ஒன்றுகூடி அவனைக் காட்டுமாறு கூச்சலிட்டுள்ளனர். மர்ம மனிதனின்மேல் ஆத்திரத்தில் இருக்கும் மக்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என பொலிஸார் பொதுமக்களைத் தடுக்கவே, பொலிஸாரை நோக்கி கல்லெறிகள் வீழ்ந்தன. மக்கள் அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோஷமிட்டனர்.  இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



பெண் குளித்துக்கொண்டிருந்த இடம்

தற்சமயம் நிலைமை சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது. விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சேத விபரம் பற்றி இதுவரை எதுவித தகவலும் வரவில்லை. இதுபற்றி பொலிஸாருடன் தொடர்புகொண்டு கேட்டபோது எதுவும் சொல்ல மறுத்துவிட்டனர். தற்போது மர்ம மனிதன் என்ற பெயரில் சந்தேக நபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவம் பொலிஸார் அவர்களைக் காப்பாற்றுவதாலும் பொதுமக்களுக்கு அரசு மீதான சந்தேகம் வலுப்பெறுவதாக பலமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன? யார் இந்த கிறீஸ் (மர்ம) மனிதன்? ஏன் பெண்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவேண்டும்? அல்லது தற்போது மர்ம மனிதன் பெயரைப் பயன்படுத்தி வெளியாட்கள் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றார்களா? இதற்கான உள்நோக்கம் என்ன? அரசு ஏன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறான பல கேள்விக் கணைகளுக்கு விடைதெரியாமல் இந்த மனிதனைப் போலவே மர்மமாக உள்ளது.

கிரீஸ் மனிதனின் கைவரிசை இன்று சம்மாந்துறை மண்ணில் மேலோங்கியுள்ளது











தற்பொழுது சுமார் 07.30 மணியளவில் சம்மாந்துறை கோரக்கர் கோயிலை அண்மித்த பகுதியில் இளம் யுவதி குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது மர்ம மனிதனின் கைவரிசையைக் காட்டுவதற்காக இருளில் இருந்தவாறு கையை எட்டிப் பிடித்த வேளையில் அக் குறித்த யுவதி கையை தட்டி விட்டு ஓடிச் சென்றுள்ளார் இதன் போது யுவதியின் கையில் சிறு கீற்ல் ஏற்பட்டுள்ளது இதை கண்டு ஆவ்சம் அடைந்த மக்காள் தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பொலிஸ் நிலையம் முன்னால் டயரினை எரித்து கூச்சலிட்டனர் இதைக் கலைக்கப் பொலிசார் கணீர்ப் புகைக் குன்டுப் பிரயோகம் மேற்கொண்டனர். இதில் பொது மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப் பட்ட நபர் வழங்கிய செவ்வியின் வீடியோ பதிவானது இன்னும் சில வினாடிகளில்...

Wednesday, August 10, 2011

கிரீஸ் மனிதர்கள் பற்றிய ஆய்வு வீடியோப் பதிவு

பெண்ணிடம் தண்ணீர் கேட்டு ஊசி போன்ற ஆயுதத்தால் தாக்கியவர் மக்களிடம் பிடிபட்டார்

நாடு பூராகவும் பரவிவரும் பெண்களை இரத்தம் ஓடச் செய்து பலியிடுதல் என்பது இப்போது கிழக்கு மாகாணத்திலும் பரவி வருகிறது. சில தினங்களாக மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களான ரிதிதன்ன, ஜெயந்தியாய பகுதிகளிலும் வெலிகந்தைப் பகுதியில் கட்டுவன்வில, செவனபிட்டி பகுதியிலும் இந்தச் செய்தியால் மக்கள் பீதியடைந்திருந்தனர். நேற்று ஓட்டமாவடிப் பகுதியில் நாவலடி, கேணிநகர், அமீரலி கிராமம், பாலை நகர் போன்ற எல்லைப் புற கிராமங்களிலிருந்து மக்கள் தற்காப்பிற்காக அங்கிருந்து வெளியேறி பிற பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஆண்கள் மாத்திரம் காவலுக்கு இரவு நேரங்களில் தங்கியிருந்தனர். இன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நாவலடியில் வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு தண்ணீர் கேட்டுச் சென்ற இளைஞர் ஊசிபோன்ற கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்கியுள்ளார். இதனால் இரத்தம் வெளியேறி இப்பெண் மயக்கமுற்ற நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.



  



பின்னர் ஊரவர்கள் கூடி அந்நபரைப் பிடித்து வாழைச்சேனைப் பொலஸில் ஒப்படிடைத்தனர். பொலிஸ் இவரை கைது செய்யாது தப்பியோட விட்டதால் கோபமடைந்த ஊர்மக்கள் ஓட்டமாவடி பிரதான வீதியில் திரண்டு போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கி்ன்றனர். இச்சம்பவத்தின் போது போலீஸ் மக்களை நோக்கிச் சுட்டதில் ஒருவர் தலையில் காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கொழும்பு – மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துப் பாதையும் மட்டக்களப்பு – திருகோணமலை போக்குவரத்துப் பாதையும் இதனால் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. அண்மையில் இதே போன்ற நிகழ்வுகள் பல எல்லைப்புற கிராமங்களில் நடந்திருக்கின்றன. இரக்காமத்திலும் ஒரு பெண்ணை தாக்கிய இளைஞர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டும் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸைத் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களை இரத்தப் பலி கொடுப்பது புதையல் எடுப்பதற்காக இருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். நாடுபூராகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

கிறீஸ் யக்கா என்ற மர்ம மனிதர்கள்

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது. அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள் உலாவருகின்றது. இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். தினமும் இடம்பெறும் சாதாரன் சமூக விரோத நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கிறீஸ் பூதங்களின் மர்ம நடவடிக்கையாக பார்க்கபடுகின்றது. ஆனாலும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய மாகாணம் ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று கல்கினை, அலவத்துகொட, அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை, வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம், ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் இத்தகைய மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மர்ம மனிதன் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி மற்றும் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தற்போது கூறமுடியாவிட்டாலும் சமூகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்க படுபவர்கள் பலர் பொதுமக்களினால் கண்காணிக்கப் படுவதுடன் பலர் கைதாகியும் உள்ளனர். தற்போது இந்த கிறீஸ் பூதம் கதை அனுராதபுரம், புத்தளம் ஆகிய பிரதேசங்களின் பின்தங்கிய கிராமங்களிலும் பேசப்படுகின்றது .

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சிறு பிள்ளை விசேட வைத்தியர் இஸ்லால் நியமனம்.

இன்று 10.08.2011 ஆகிய இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொன்னாளென்றே கூறலாம். ஏனெனில் இன்று சிறு பிள்ளை விசேட நிபுணர் டாக்டர் இஸ்லால் அவர்கள் எமது வைத்தியசாலையில் நியமனம் பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்தில் தமது மேற் படிப்பை மேற்கொண்டு முதல் நியமனமாக எமது வைத்தியசாலையில் கடமை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது என சமாந்துறை ஆதார வைத்திய சாலை வைத்திய அதிகாரி டாக்டர் திரு.ஏ.இஸ்ஸடீன் அவர்கள் தெரிவித்தார்.                    

Thursday, July 14, 2011

சம்மாந்துறை புராதன பொதுச் சந்தையை மீள் திறக்க நடவடிக்கை






சம்மாந்துறை புராதன பொதுச் சந்தை அபிவிருத்திக் குழவின் நீண்ட கால முயற்சியின் பின் அதனை மீள் திறப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.NOWSHAD அவர்களின் தலைமயின் கீழ் மற்றும் உப தவிசாளர் A.KALEELURAHMAN மற்றும் UNOPS நிறுவனத்தின் அணுசரணையுடன் அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் 14.07.2011 காலை 7.00 முதல் 12.00 மணி வரை சந்தையை சுற்றியுள்ள சுற்றாடல் சிரமதானம் செய்யப்பட்டது.

Wednesday, July 13, 2011

கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம்

2011 ஆம் அண்டுக்கான கிழக்கு மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை சென்னல் சாஹிறா வித்தியாலயத்தை சேர்ந்த ஏ.ஆர்.எம். சப்றி 17 வயது ஆண்களுக்கான தடைதாண்டும் போட்டியில் முதலாம் இடத்தையும், கோல் ஊண்றி பாய்தலில் இரண்டாம் இட்த்தையும் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ள  ஏ.ஆர்.எம். சப்றிக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர் எம்.எஸ்.எம் கதாபி என்பது குறிப்பிட்த்தக்கது.
தகவல்: முகம்மட் றிஸாட்

Monday, July 4, 2011

(பிந்திக் கிடைத்த தகவல்) குடிநீர் பிரச்சினையால் 70 மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்




சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 70 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.மேலும் 15 மாணவர்கள் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக நீர் சுத்தீகரிப்பு நிலையம் மேற்கொண்ட பரிசோதனையின் போது நீருடன் கிருமி நாசினி கலந்திருப்பதை அவதானித்ததாக கூறப்பட்டது.  
                  

குடிநீர் பிரச்சினையால் 20 மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்



சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 20 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் இதற்கான காரணம் இன்னும் இனங்கானப் படவில்லை என நம்ப த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
                  

Saturday, June 25, 2011

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட தகவல்








மேலதிகாரிDR. ISSADEEN(m.s) அவர்கல் வழங்கிய தகவல்

வைத்தியசாலையில் சில நிலப்பரப்பில் பூந்தோட்டம் உள்ளதாகவும் அந்த பூந்தோட்டத்தை பூரணமாக பராமரிப்பதற்க்கு போதிய ஆட்க்களும்
இல்லாமையை இட்டு இப்பூந்தோட்டதிற்க்கு ஏற்பாடும்(ORGNIZE) ,அன்பளிப்பும் செய்த ஒரு நலன்புரி அமைப்பினர் பூந்தோட்டத்தை பரமரிப்பதற்க்கு ஒருஉதவியாக வழங்கிவருவதாக குரினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் வைத்தியசாலையில் புதிய கட்டிடத்திற்கு தளபாடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்,அந்தக்கட்டிடம் 2 கிழமைக்குல் முன்னர்தான் திறக்கப்பட்டதாகவும்.அத்துடன் அவசர சிகிச்சை(OPERATION THEATER) பிரிவு நிலையமும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதே போல்  மயக்க மருந்து கொடுக்கும்வைத்தியர்களை  பொது வைத்தியசாலைக்கு பயிற்ச்சி எடுக்க அனுப்பியுள்ளதாகவும்.அத்தோடு வைத்தியசாலைக்கு களும் வர இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.                                                                       

Thursday, June 23, 2011

டெங்கு ஒளிப்பு சிறமதானம்


சம்மந்துறையில் இன்றைய தினம் பிரதேசசெயலகம் மற்றும் சம்மாந்துரை தேசிய பாடசாலை உட்பட பல்வேறு அரச நிறுவனங்களில் டெங்கு ஒளிப்பு சிறமதானம் இடம் பெற்றது. இதன் நோக்கம் சுற்றுப்புறச்சூழளிள் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதாகும்

Sunday, June 19, 2011

இஜ்திமா

இன்று (19.06.2011) மாவடிப்பள்ளி 'மர்கஸ்' இல் ஒர் இஜ்திமா நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரபல வைத்தியர்கள்,முப்திகல், விரிவுரையாளர்கள்,மற்றும் ஏனைய உயர் உத்தியோகத்தர் பலரும் மார்க்க சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினர்.

சுமார் காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இடம்பெற்றது இந்தநிகழ்வில் பகற்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது

சம்மாந்துரையில் ஹஸீன் ஆசிரியருக்கு பாராட்டு

உலகளாவிய ரீதியில்MICROSOFT  நிறுவனம் நடாத்திய ஒர் போட்டியில் வெற்றி பெற்று,எதிர்வரும் june 26,27,28 ம் திகதிகளில் சம்மாந்துரை தேசிய பாடசாலையில் கற்பிக்கும் M.B.M.HASEEN ஆசிரியர் செல்ல இருக்கின்றரர்.

அதாவது இந்த நிறுவனம் உலகலாவிய ரீதியில் போட்டிவைத்து 500 பேரை தெரிவு செய்தது.  இதில் 50 பேர்,ஒரு மாநாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டன்ர் அந்த 50 பேரில் ஒருவரும். இலங்கையின் ஒரே ஒரு பிரதிநிதியாகவும் கலந்து  சிறப்பிக்கிறார்.

மேலும் இந்த நிகழ்வு AMERICA விலுள்ள MICROSOFT நிறுவனத்தின் தலைமையலுவலகத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.                                                          

Saturday, June 18, 2011

ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக ஆசிரியர் ஒருவருடனான நேர்காணல்

திடீர் வீதி விபத்து ஒருவர் காயம்.



இன்று பி.ப. 5.43 மணியளவில் சம்மாந்துறை இலங்கை வங்கி அருகாமையில் 2 மோட்டார் வாகனங்கள் எதிரெதிரே ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு மோட்டார் வாகன சாரதி காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளாகிய 2 சாரதிகளும் முரண்பாடின்றி சமாதானத்திற்கு உள்ளாகியூள்ளனர்.

Friday, June 17, 2011

ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு


சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றாத்தை நிறுத்துமாறு கோரி ஜும்மா தொழுகையின் பின் ஆர்பாட்டம் அசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்பு ஆசிரியர்களால் மஹஜர் ஆனது கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சரான VIMALA VEERA THISANAYAKA விடம் கிழக்கு மாகாண சபை வீதி அமைச்சர் M.UTHUMALEBBE  உறுப்பினர்களான M.L.A.AMEER, THULSAAN, PUSPARAJAH ஆகியோர் முன்னிலையில் கைய்ளிக்கப்பட்டது. .  

Wednesday, June 15, 2011

கிரகணத் தொழுகை ஹிஜ்றா ஜும்மாப்பள்ளிவாயலில் இன்று

இன்று கிரகணத் தொழுகை இரவு 10:55 மணியளவில் சம்மாந்துறை ஹிஜ்றா ஜும்மாப்பள்ளிவாயலில் நடைபெற்றது.இத் தொழுகையை நிறைவேற்றுவ்தற்காக பெருமளவிலான மக்கள் கூடியதும் குறுப்பிடத்தக்கதாகும்.
 


Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.