Wednesday, April 27, 2011

எமது மண்ணின் சாதனயாலர்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹாவித்தியாலய தகவல்  தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரியர் M.B. ஹசீன் (CLC in Tr.) MICROSOFT நிறுவனத்தின் PARTNERS LEARNING PROGRAM க்காக தெரிவு செய்யபட்டுள்ளார்.உலகளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500க்கும் குரைவான ஆசிரியர்களில் ஒருவராக எமது ஊரைச் சேர்ந்த ஆசிரியர் தெரிவு செய்யபட்டுள்ளார்   . இதன் மூலம் MICROSOFT  நிறுவனத்தின் ஊடாக ONLINE  மூலம் 21ம் நூற்றாண்டுக்கான மாண்வர் சமூகத்தை பயிற்றுவித்தல்  எவ்வாறு MICROSOFT கருவிகளை (TOOLS)  கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தல் போன்ற பயிற்ச்சிகள் ONLINE மூலமாக குறிப்பிட்ட ஆசிரியருக்கு வழக்கபடவுள்ளது.

Tuesday, April 26, 2011

2010/2011 மகாபோகத்தில் ஏற்பட்ட அதிக மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நெற் காணிகளுக்கு இலவச விதை நெல் வழங்கும் வைபவம்



கடந்த காலதில் ஏற்பட்ட வெள்ளதினல் பாதிக்கப்பட்ட விவசயிகலுக்கு  விவசாய அமைச்சினல் விதை நெல்கல் இலவசமாக வழங்கும் வைபவம் 25/04/2011 அன்று  அல் -ஹஜ் S.A.B.மெளலனா (சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியேகத்தர்) அவர்கலின் தலைமையில் நடை பெற்றது 

பிரதம அதிதி
கெளரவ அமைச்சர்  T.நவரெட்ணராஜ
(விவசாயம்,கால்நடை,மீன்பில்டி,சிறு கைத்தெழில் அமைச்சு )

விசேட அதிதி
திரு சுனில் கன்னங்கர
(மாவட்ட செயலாளர் அம்பாரறை)

கெளரவ அதிதிகல்

கெளரவ  M.L.A.அமீர் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

  கெளரவ அல்-ஹாஜ். A.M.M. நெளஷட்
   (தவிசாளர், பிரதேச சபை சம்மாந்துறை)


Thursday, April 21, 2011

விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கை

மே மாதம் முதல் வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள பிரதானமான வைத்தியசாலைகளில் விளையாட்டு வீரர்களுக்கானமருத்துவ சிகிச்சைப் பிரிவினை ஆரம்பிக்க விளையாட்டு அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும் ஆலோசனைகளையும் விபத்துகள் ஏற்படும்போது சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக மாவட்டத்தின் ஒரு வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு இதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூலம் விளையாட்டு வீரர்கள் தமக்குத் தேவையான உடற் தகுதியைத் தீர்மானிப்பதுடன், வைத்திய சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஊக்கமருந்து மற்றும் உற்சாகபானம் போன்றவற்றின் பாவனையையும் இந்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மூலம் கண்டறிந்து கொள்ள முடியுமென அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Monday, April 11, 2011

சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவ நடவடிக்கை!

நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட உள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் டொக்டர் ஜகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவூம்
போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு!

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

Friday, April 8, 2011

டெங்கு நுளம்பு பெருகும் மாதம் ஏப்ரல்!

dengu
ஏபரல்  மாதத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுவதாகவும்  கடந்த சில வருடங்களில் டெங்கு நோய் காரணமாக அதிகளவானோர் உயிரிழந்ததும்  ஏப்ரல் மாதத்திலேயே என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் ஆய்வு பிரிவில்  நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு பெருகும் மாதத்திலேயே அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதொழிக்காவிட்டால் வருடம் பூராகவும் டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தினால் டெங்கு நுளம்பு அதிகளவில் பெருகும் நிலை காணப்படுவதாகவும் அவ்வாறு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, April 7, 2011

சம்மந்துரை பிறதேச சபையின் புதிய உருப்பினர்களின் அறிமுக விழா







இன்று சம்மந்துரை பிறதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உருப்பினர்களை அறிமுகப் படுத்தும் முகமாக அப்துல் மஜீட் மண்டபத்தில்.A.L.IRSHAT (உள்ளுரட்ச்சி உதவி ஆனையாளர்) அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட A.M.M.NOWSHAT  (தவிசாளர்) மற்றும் பிற உருப்பினர்களான A.L.RIYAL, A.ACHUMOHAMED,  M.THIYAKARAN (UNP)  மற்றும் முன்னாள் பாரளுமன்ற உருப்பினர் M.A.MAJEED மற்றும்   பொது மக்களும் இவ் விழவில் கலந்து சிறப்பித்தனர்

Wednesday, April 6, 2011

செவ்வய் 5 முதல் சூரியன் உச்சத்தில்!

இலங்கைக்கு நேரே சூரியன் நேற்று 5ஆம் திகதி முதல் உச்சம் கொடுக்கும் என்றும் இம்மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த நிலை நீடிக்கும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 12.14 மணியளவில் திக்வெல்ல- ககணதுர- வெலிகம- மிதிகம ஆகிய நகர்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை இன்று 6ஆம் திகதி இதேநேரத்திற்கு அஹுங்கல்ல- சூரியவெவ- கினிதும நகர்களுக்கு நேரே சூரியன் சஞ்சரிக்கும் என்றும் இதன் காரணமாக இலங்கையில் அதிகளவு உஷ்ணம் உணரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வரும் பூமி இலங்கைக்கு நேரே சூரியன் வருடத்திற்கு இரு தடவைகள் சஞ்சரிக்கின்றது. அவற்றில் ஒரு தடவையே 05 ஆம் திகதிஆரம்பமாகியது. 05முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு நேரே நண்பகலில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Monday, April 4, 2011

விவசாயிகலுக்கான கலை நாசினி பற்றிய விளிப்புனர்வு

புதிய வகையை கலை நாசினியான கொன்சோலோ எனும் கலை நாசினி அவற்றின் பயன் பற்றியும் மக்களுக்கு விளிப்புனர்வு செய்யப்பட்டது. இதன் போது விதை நெல் கெள்வனவு ப்ற்றிய தகவல்களும். வளன்கபட்டது.இந்த நிகல்வானது சம்மந்துரை அல் மர்ஜான் மக்ளீர் பாடசலையில் இடம் பெற்றது.

இந்த நிகல்வில் பிரதம அதிதிகலாக

AL-HAJ Y.B. IKBAL (விவசாய ஆரய்ச்சி உத்தியொகத்தர்)

K.SIVALINGAM  (விதைகல் அத்தட்ச்சி படுத்தல் அதிகாரி)

A.L.M. FAREED

MAJEED

JAINULABDEEN

AL-HAJ S.M.M. MUSTHAFA



Sunday, April 3, 2011

வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலகக் கிண்ணப்போட்டிகளில் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தான் இனிமேல் உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருக்கின்றார்.

இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அத்தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில்

எனது அணிக்கு என்னாலான சேவைகளை வழங்குவேன். அடுத்த உலகக் கிண்ண போட்டி இடம்பெறும் ஆண்டான 2015 ஆம் ஆண்டு தான் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

தான் கடந்த பல வாரங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஓய்வு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Saturday, April 2, 2011

உலகக் கிண்ணத்தை கைப் பற்றிய இந்தியா

இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.

மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால்
தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இணி 50 ஒவர்களில் 6 விக்கெட இழப்பிக்கு 274
ஒட்டங்களைப் பொற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஒவர்களில 4 விக்கெட்டுக்களை மாதிதிரம்
இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
10அவது தடவையாக நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் பேட்டியில் இந்திய அணி இரண்டாவது
தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

Friday, April 1, 2011

பெற்றோல்,டீசல் விலை அதிகரிப்பு

பெற்றோல் மற்றும் டீசலின் விலை(01/04/2011) இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கபட்வுல்லதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோலின் விலை 10 ரூபாவினாலும் டீச்லின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 125 ரூபாவாகவும் டீசலின் விலை 76 ரூபாவாகவும் இருக்கும்.
                                                       

Thursday, March 31, 2011

வாரத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் 2.10 மணிவரை பாடசாலை வகுப்புகள் கிழக்கு கல்வி அமைச்சு பணிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்க அனைத்துப் பாடசாலைகளும் தரம் 6 இலிருந்து உயர்தரம் வரையிலான வகுப்புகள் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையில் மாத்திரம் பிற்பகல் 2.10 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிசாம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய விசேட சுற்றறிக்கையை சகல மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.10 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் ஏனைய நாட்களில் வழமைபோல் காலை 7.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் காலையில் இடம்பெறும் மத வழிபாடுகள் மற்றும் கூட்டங்களினால் வாரமொன்றில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவு குறைவடைகின்றமையால், அதனை மீள் நிரப்பும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிசாம் தெரிவித்துள்ளார்.

Tuesday, March 29, 2011

சொந்த மண்ணில் விடை பெற்றார் முரளி!

அரை  இறுதியில் நிகழ்வு

நேற்றைய அரையிறுதிப் போட்டியின் போது தமது கடைசி பந்தில் விக்கெட் ஒன்றையூம் வீழ்த்தி சொந்த மண்ணில் விடை பெற்றுக்கொண்டார். இலங்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன்.
இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்ரைரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது.
முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்துள்ளார்.
இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் 29 ஆம் திகதி வரை கிழக்கில் தொடரும்

டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் செயற்குழுவின் டெங்கு ஒழிப்புத் திட்ட வாரம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களங்கள், கல்வியலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களது நிர்வாகத்தின் கீழுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், வேறு கல்வி அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுளம்பு பரவும் இடங்களை 29 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கென மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்களை நியமித்து, அவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களிடமிருந்துஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் இச்செயற்பாட்டினைத் திறம்பட நடத்த நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்து அமுல்படுத்துவதுடன் இச் செயற்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார கேட்டுள்ளார்.

NATIONAL ICT EXCELANT AWARD 2009



பாடசாலை கணணி வல  நிலயங்கலுக்கிடைலான போட்டி நிகழ்ச்சியில்  சம்மாந்துரை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தினை பெற்றுள்ளது. இப் போட்டி நிகழ்ச்சி கல்வி அமைச்சின் செயற்த்திட்ட பிரிவில் நடத்தப்பட்டது.  இதற்க்கு 1500 000 ரூபா பெறுமதியான கணணி மற்றும் கணணி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. 
 
தகவல்.

கணணி வள நிலைய ஆசிரியர்
M.B.M.HASEEN

Monday, March 28, 2011

சம்மாந்துரை பொலிஸாரினால் தேசிய பாடசாலையில் டெங்கு ஒழிப்புப் பணிகள் இன்று

சம்மாந்துரை  தேசிய பாடசாலையில்  இன்று பொலிஸாரின் ஏற்பாட்டுடன்  சூழல் பாதுகாப்பு பிரிவு, சுகாதார பரிசோதகர்  ஆகியோரின் அனுசரனையுடன் டெங்கு ஒழிப்பு பணிகலானது. பாடசலை அதிபர் ஆசிரியர்  மாணவர்கள் இனணந்து பணியில் ஈடுப்ட்டனர்

Sunday, March 27, 2011

புதிய அடையாள அட்டைகள்!

r.p.d


மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கம்
மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில் புதிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக ஆட்கள் பதிவூத் திணைக்களம் அறிவிக்கின்றது.
அதன்படி புதிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளில் இருந்து மாறு பட்டவகையில் புதிய அடையாள அட்டைகள் உருவாக்கப்படவுள்ளன.
புதிய அடையாள அட்டை கணனி மயப்படுத்தப்பட்டதாக உருவாக்கப்படும் என்றும் இதில்    கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள்  பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும்  திணைக்களம் மேலும் தெரிவக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

ttt உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்றது.
வட கிழக்கிலும்;;; நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் சேர்ந்தும் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Friday, March 25, 2011

அல் முனீர் பாடசாலை சுற்றாடல் கழகத்தினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று




சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டுடன், பொது சுகாதார வைத்திய  காரியலயத்தின் அனுசரனையில் மாபெரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது சம்மாந்துறை அல்-முனீர் பாடசாலை அதிபர் ஆசியர்களின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
                                                                       

சம்மாந்துறையின் வீதி அபிவிருத்திப் பணிகள் 158 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுப்பு


சம்மாந்துறை மக்களின் நீண்ட கால குறைபாடாக விருந்த பௌசி மாவத்தை வீதி அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீரின் முயற்சியினால் 158 மில்லியன் ரூபா செலவில் நவீன காப்பற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் அண்மையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியிலாளர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் பிரதம அதிதியாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கௌரவ அதிதிகளாக மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பை, மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை , கூட்டுறவு விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்,அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உட்பட திணைக்களத் தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பௌசி மாவத்தை வீதிக்கான நினைவுக் கல்முனை விளினைபட்டி சந்தியிலும், 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய பள்ளி வீதி கொங்கிரீட் வீதிக்கான நினைவுக் கல்லினை சம்மாந்துறை புதிய பள்ளி வீதிச் சந்தியிலும் அமைச்சர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

Thursday, March 24, 2011

நமது ஊர் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு களம் எமது பிரபல கவிஞர் மன்சூர் ஏ.காதர் அவர்களின் கவிதை

கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட......


நிராகரிக்கப்பட்ட நியாயங்களுக்கான நமது ஜிஹாத்
கபனிடப்பட்ட ஜனாஸாக்களாய்
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...

விருட்சங்களால் விழுங்கப்பட்டிருந்த
குறுநில மன்னர்தம் ராஜதானிகளில்
மறுபடியும் செவ்வனே எல்லைப்படுத்தப்பட்டு,
நிர்ச்சலனமான
ஜனநாயகத்தின் மரகத தலைப்பாகைகளுடன்
முடிசூட்டு விழாக்கள்...

நாம் கபுரிஸ்தானங்களுள்ளே..  ஜனாஸாக்களாய்...
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...

ராஜ கிரீடம் சுமந்த சிரசுகளை இலக்குப்படுத்த
பொறுக்கப்பட்ட நமது கவண் கற்கள்
நவீன இரட்சகர்களின்
சிம்மாசன அங்கலாய்ப்புக்கான சதுரங்கக் காய்களாய்
மொழிபெயர்க்கப்பட்டன.
தாவீதின் கவண் தொடர்ந்தும் கோலியாத் கரங்களில்
அதனால்,
நமது ஸியாரங்களை
நாம் கட்டிக் கொண்டேயிருப்போம்

நம்மை விற்றுப் பிழைக்கும் தாதாக்கள்
ஒழித்து வைக்கப்பட்ட கசிப்புக் கொள்கலங்களோடு
நமது கழிவிரக்கங்களை மூலதனமாக்கி
மேலும்
புதிய வியூகங்கள் எனும் பெயரில்
தம் நாற்காலி நப்பாசையின் எதிரியை
தோற்கடிக்கும் முனாபிக் தனங்களோடு
நன்றி எனும் சௌந்தர்ய மலர்களால்
இறைவன் சமைத்த
நமது மெத்தனமான இரண்டாம் கிரீடத்தை
ஆழ்மூச்சு முட்ட அழுத்தம் கொடுக்கும்.

மறுபடியும்... மறுபடியும்...
கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட மாடுகளாய்
நமது உடன் பிறப்புக்கள்
மடுவங்களை நோக்கி சாய்க்கப்பட்டபடியே....

கங்கத்தியப்பா
21.03.2011

நிரந்தர நீதிவான் நீதிமன்றமாக இயங்குவதற்கு அனுமதியளிப்பு

சம்மாந்துறை புதிய நீதிவான் நீதிமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து நிரந்தர நீதிவான் நீதிமன்றமாக இயங்குவதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா வழங்கியுள்ளார்.
புதிய நீதிவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக கல்முனை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை புதிய நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக எம்.எச்.பக்ர்டீன் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையினை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளார்.
இக்கட்டிடத் தொகுதியை அண்மையில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 22, 2011

நிலவெடிப்புக்கான காரணத்தை அறிய அப்பிரதேசத்தில் ஆய்வு நடத்தப்படும்

ஏறாவூர் பகுதியில் பல இடங்களிலும் தரையிலிருந்து நீர் வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு மேலும் சில நாட்கள் அந்தப் பிரதேசத்தை அவதானிக்க வேண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஹஸீர் தெரிவித்தார்.
நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசத்தை புவிச்சரிதவியல் பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பார்øவயிட்டனர்.
ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல இடங்களில் நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
கிணறுகளிலும் நீர் நிறமாற்றமடைந்துள்ளதனால் அருந்துவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். நீர் வெளியேறும் இடங்களை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுகின்றனர்.

நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பின் ஊடாக வெளிவந்து கொண்டிருக்கும் நீர் மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சனிக்கிழமை நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் ஊடாக நீர் வந்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்தமையினாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
பூரண சந்திரனின் தாக்கத்தினால் அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு புவி ஆராய்ச்சியாளரொருவர் அனுப்பப்பட்டுள்ளதாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர். என்.பி.விஜேயானந்த தெரிவித்தார்.
குறித்த சம்பவம் விரும்பத்தகாத அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாரிய பூமியதிர்வுக்கு பின்னர் குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்கள் கவனமாக இருக்

“கைப்பற்றப்பட்ட சபைகளின் தலைவர்களை கட்சியின் தலைமை விரைவில் தீர்மானிக்கும்”

அம்பாறை மாவட்டத்தில் நாம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு நமது கட்சி தீர்மானிக்கும் ஒருவரே தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கைப்பற்றிய நான்கு சபைகளுக்குமான தலைவர்களைச் தெரிவுசெய்யும் போது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களா? அல்லது கட்சி விரும்புகின்றவர்களா? கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி மூலம் அறிவித்தல் செய்யப்பட்டபின்னர் தேர்தல் ஆணையாளர் எமக்கு எழுத்து மூலம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்யுமாறும் சத்தியப் பிரமாணத்தினை அறிவிப்பார். இதன் பின்னரே எமது கட்சி கூடி ஆராயுமெனக் கூறினார்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தினை அந்தந்தப் பிரதேசசபை அலுவலகங்களிலேயே நடாத்தப்படும் என்றும் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்தார்

Monday, March 21, 2011

முட்டையில் முஹம்மது நபியின் பெயர்,பொத்துவிலில் அதிசயம்


முட்டையில் முஹம்மது நபியின் பெயர் தோன்றிய அதிசய சம்பவம்  பொத்துவிலில் பிரபலமான விஞ்ஞான ஆசிரியரும் அல்-கலாம் வித்தியாலயத்தின் அதிபருமான சமீம் ஆசிரியரின் வீட்டில் இடம் பெற்றுள்ளது. இவ்வதிசய சம்பவத்தை காண பெருந்திரளான மக்கள் சமீம் ஆசிரியரின் வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.


Sunday, March 20, 2011

கோட்டைகளை இழந்து ஐ.தே.க. படுதோல்வி

image002

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.
ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து படுதோல்வியடைந்ததோடு அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி. தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நேற்று முன்தினம் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது. நேற்றுக்காலை 10 மணியாகும்போது சகல தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இத்தேர்தலில் ஐ.தே.க. தனது கட்டுப்பாட்டிலிருந்த 18 உள்ளூராட்சி சபைகளையும் கோட்டைவிட நேரிட்டதோடு முஸ்லிம் காங்கிரசும் ஓரளவு பின்னடைவையே எதிர்கொண்டது. வடக்குஇ கிழக்கு தமிழ் பிரதேசங்களை மையமாகவைத்து தேர்தலில் குதித்த தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி தேசிய அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸினால் நான்கு சபைகளை மட்டுமே வெல்லமுடிந்தபோதும் வடக்கு கிழக்குக்கு வெளியில் முதற்தடவையாக போட்டியிட்ட பல சபைகளில் உறுப்பினர்களை வென்றது.
தேசிய காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த இரு சபைகளையும் தக்கவைத்துக் கொண்டதோடு மலையக மக்கள் முன்னணி நுவரெலியா பிரதேச சபையையும் சுயேட்சைக் குழு-1 பல்லேபொல பிரதேச சபையையும் கைப்பற்றியது விசேட அம்சங்களாகும்.

ஆட்சி மாற்றத்திற்கு முதற்படியாக இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதாக வீரவசனம் பேசிய ஐ.தே.க.வினால் பண்டாரவளை மாநகரசபை குளியாப்பிட்டிய நகரசபை கம்பொள நகரசபை கடுகண்ணாவ நகரசபை களுத்துறை நகரசபை அடங்கலான ஒன்பது உள்ளூராட்சி சபைகளை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.
ஐ.ம.சு.மு.ஐ விட 725 வாக்கு வித்தியாசத்தில் ஐ. தே. க. கம்பொளை நகர சபையைக் கைநழுவியது. பண்டாரவளை மாநகரசபையும் 154 வாக்குகளினாலே ஐ.ம.சு.மு.க்கு கைமாறியது. 20 வருடங்களின் பின்னர் கதிர்காமம் பிரதேச சபையை ஐ.ம.சு.மு.யிடம் ஐ.தே.க. பறிகொடுத்தது முக்கிய விடயமாகும்.
வத்தளை மாபோல நகரசபை வத்தளை பிரதேச சபை பேலியாகொட நகர சபை பாணந்துரை நகரசபை ஹொரண பிரதேசசபை அடங்கலான 18 உள்ளூராட்சி சபைகளை ஐ.தே.க. பரிதாபமாக இழந்தது.
முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டிலிருந்த காத்தான்குடி நகரசபையும்இ ஏறாவூர் நகரசபையும் இம்முறை ஐ.ம.சு.மு. வின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையையும் ஐ.ம.சு.மு.யே வென்றது. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடந்த 3 உள்ளூராட்சி சபைகளையும் ஐ.ம.சு.மு. கைப்பற்றியது. 7 ஆயிரம் மேலதிக வாக்குகளால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையை ஐ.ம.சு.மு. வென்றது.(vk;.up.977)

Friday, March 18, 2011

சம்மாந்துறைப் பிரதேச சபையைக் கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு: பட்டாசுகளின் சத்தமும் ஆதரவாளர்களின் சத்தமும் வானத்தை எட்டுகிறது


சம்மாந்துறை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது இம்முறை கைப்பற்றியுள்ளது. இதனை கொண்டாடும் முகாமாக ஆதரவாளர்களும், வெற்றி பெற்ற வேட்பாளர்களும் ஊர்வலமாகச் சென்று தமது ஆதரவாளர்களுக்கு தமது நன்றிக் கடனை தெறிவித்து செல்கின்றனர்.                                               

Thursday, March 17, 2011

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் 2011

Local Authorities Election - 2011

Department of Government Information
Ampara District
Sammanthurai Pradeshiya Sabha
Name of Party
Votes
%
Seats
United People's Freedom Alliance United People's Freedom Alliance 12,358 49.05% 5
Sri Lanka Muslim Congress Sri Lanka Muslim Congress 10,078 40.00% 3
United National Party United National Party 1,995 7.92% 1
Independent Group 3 Independent Group 3 400 1.59% 0
People's Liberation Front People's Liberation Front 187 0.74% 0
Independent Group 5 Independent Group 5 104 0.41% 0
Independent Group 2 Independent Group 2 66 0.26% 0
Independent Group 6 Independent Group 6 5 0.02% 0
Independent Group 1 Independent Group 1 4 0.02% 0
Independent Group 4 Independent Group 4 0 0.00% 0
Valid
25,197
97.08%
Rejected
758
2.92%
Polled
25,955
69.27%
Electors
37,469

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.