Monday, February 14, 2011

2011-2013ம் ஆண்டிற்கான புதிய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் விபரம்

பிரதம நம்பிக்கையாளர்-
ஐ.அப்துல் ஜப்பார்

உப தலைவர்-
ஏ.எல்.ஹபீபு முஹம்மது

செயலாளர்-
யூ.எல்.அப்துல் றஸீட்

உப செயலாளர்-
எஸ்.சின்னலெவ்வை

பொருளாளர்-
கே.எல்.சுலைமாலெவ்வை

அங்கத்தவர்கள்-
கே.எம்.கே.ஏ.றம்ஸின் காரியப்பர்
யூ.எல்.மஹ்றூப்
எம்.ரீ.முகம்மது நஸீர்
எம்.ரீ.முகம்மது றாஸீக்
எம்.ஐ.முஹம்மது தம்பி
எஸ்.சுலைமாலெவ்வை
கே.எம்.முஸ்தபா
எஸ்.எல்.உசனார்
ஏ.ஆப்தீன்
எம்.ஏ.எம்.ஹுஸைன்
எம்.பி.நளீம்
பீ.ரீ.முகம்மது இஸ்மாயில்
                                                       

Sunday, February 13, 2011

மிக விரைவில் கேள்வி பதில் தேர்தல் களம்

சம்மாந்துறையில் தற்பொழுது தேர்தல் காலம் என்பதால் பிரச்சாரங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான கேள்வி பதில் தேர்தல் களம் வீடியோ பதிவானது மிக விரைவில் வெளிவரவுள்ளது. காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் பல படைப்போம்.

க.பொ.த உ/த பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு



2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதியினை நீடித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலையினை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரீட்சை விண்ணப்பதாரிகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம்


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சம்மாந்துறை அஸ்ஸமா வித்தியாலயத்தில் 2011/02/13ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 4.00 மணி வரை  இடம்பெற்றது. இதில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ் வைத்திய முகாமில் பின்வரும் வைத்தியர்கள் தமது சேவையை வழங்கினர். ஆசில் அஹமட், ஏ.ஏ.கபூர், எம்.எல்.கபூர், இஸானா ஆகிய வைத்தியர்கள். இம் மருத்துவ முகாமானது சம்மாந்துறை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொறுப்பாளர் மெளலவி யூ.எல்.எம். ஸலாஹுதீன் தலைமையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 6, 2011

கிழக்கு மாகாண பாடசாலைகள் புதன் கிழமைவரை மூடப்படும் : முதலமைச்சர் சிபாரிசு

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண வெள்ள நிலைமை காரணமாக வருகின்ற புதன் கிழமை வரை பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் சிபாரிசுக்கமைய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் எமது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரைக்கும் தொடர்ந்தேர்ச்சியான வெள்ள நிலைமை நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                       

Saturday, February 5, 2011

வெள்ளம் காரணமாக குடை சாய்ந்தது பஸ் வண்டி



சம்மாந்துறை பள்ளாற்றை அண்டிய பிரதேசத்தில் இன்று காலை கொழும்பில் இருந்து ஊர் நோக்கி வந்த அதி சொகுசு பஸ் வண்டியானது இழுவை நீர் காரணமாக குடை சாய்ந்துள்ளது. இவ்வாறு இவ் வெள்ளம் காரணமாக எமது பிரதேசத்தின் பல்வேறு வீதிப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுடைய அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.                                                    

சம்மாந்துறையில் 22,352 ஏக்கர் விவசாய நிலம் முற்றாக அழிவு பிரதேச செயலர் தெரிவிப்பு

கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு 45 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 63 ஆவது தேசிய சுதந்திரதின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய ஜீவனோபாய தொழிலாகக் காணப்படும் விவசாயத்துறை முற்றாக சேதமடைந்துள்ளது. இதுவொரு நீண்டகால பொருளாதார தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று சுயதொழில் துறைகளும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
சம்மாந்துறை பிரதேசத்தில் 384 வீடுகள் முற்றாகவும் 1180 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. இதற்கான செலவு மதிப்பீடாக 35.65 மில்லியன் ரூபாவாகவும் இதுவரை கிடைத்த தகவலின்படி 22352 ஏக்கர் விவசாயக் காணிகள் முற்றாக சேதமடைந்துள்ளது. சேத விபரங்கள் 137 மில்லியன் ரூபாவாகவும் 2700 சுயதொழில் முயற்சியாளர் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. நன்னீர் மீன்பிடித் தொழில் ரீதியாக 23.5 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேசமயம் சொத்துகள் பாதிப்பு ஆர்.டி.டி.வீதிகள்,நீர்ப்பாசன பிரிவு, வீதிகள்,பாடசாலைகள்,மதரசாக்கள் ஏனைய பொதுக்கட்டிடங்கள் சேதப்பட்டதனால் 255 மில்லியன் ரூபாவும் பிரதேசசபைக்குட்பட்ட சொத்துகள் 38 மில்லியன் ரூபாவுமாக 489 மில்லியன் ரூபா சம்மாந்துறைப் பிரதேசத்தில் மாத்திரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடையுமானால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Friday, February 4, 2011

தொடர்ந்தும் மழைக் காலநிலை நீடிக்கின்றது

தமது பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இன்று வரை ஓயாத மழையானது பெய்து வருகின்றது. இதனால் எமது பிரதேசத்தில் பாரிய வெள்ளமும், பொருளாதாரப் பின்னடைவுமே ஏற்பட்டுள்ளது. இதனால் எமது பிரேதேச விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எமது ஊரின் பொருளாதாரத்தில் இம் மழையானது பாரிய பின்னடைவையும், பஞ்சம் எனும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
                                                                       

Wednesday, February 2, 2011

சம்மாந்துறையில் மீண்டும் மூன்றாவது தடவையாக வெள்ளம்




தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை நைனாகாட்டைச் சேர்ந்த 153 குடும்பங்கள் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக சுமார் நண்பகல் 12.00 மணியளவில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 303 ஆண்களும், 244 பெண்களும் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட 220 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினால் உணவுகளானது முகாம்களில் கிராம சேவகர்களினூடாக வழக்ங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு உதவ விரும்புவோர் sammanthurainews@gmail.com/ 0752912336 இனூடாக தொடர்பு கொள்ளவும்.

இங்கினியகலா வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம்






இங்கினியாகல வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஆறுகள் மற்றும் வயல் நிலங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். தற்பொழுது மல்வத்தை மற்றும் நைனாகாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தற்பொழுது நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

Tuesday, February 1, 2011

இவ்வாரத்தினுள் எமது தளத்தில் பிரதேச சபைத் தேர்தல் அறிமுக வீடியோ பதிவு காத்திருங்கள்

எமது தளத்தில் இவ்வாரத்தினுள் விசேட இணையப் பக்கத்தில் 2011ம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக வீடியோ காட்சியானது இடம்பெறவுள்ளது காத்திருங்கள். மாற்றங்கள் எம்மை அடையாளப்பதுத்துவதற்கே.

தொடர்ந்து இன்று பலத்த மழையானது பெய்து வருகின்றது.

இன்று எமது பிரதேசத்தில் பலத்த மழையானது பெய்து வருகின்றது. மீண்டும் மூன்றாவது வெள்ளம் வருமா என்ற கேள்விக் குறியுடன் காணப்பதுகின்றது. இவ்வாறு இம் மழையானது தொடருமாயின் பாரிய வெள்ளம் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக எமது வானியல் அவதான பிரிவினர் ஊகம் தெரிவித்துள்ளனர்.

Monday, January 31, 2011

மறைந்த மாகாண சபை உறுப்பினர் எம்.வை.எம்.மன்சூர் அவர்களின் 21வது சிறார்த்த தினமும் கத்தமுல் குர் ஆனும்




முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களின் தேசிய கட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரும், மறைந்த மாகாண சபை உறுப்பினருமான எம்.வை.எம்.மன்சூர் அவர்களின் 21வது சிரார்த்த தினமும் கத்தமுல் குர் ஆன் நிகழ்வும் 30.01.2011 ஆகிய நேற்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தவிசாளரும், கெளரவ நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதில் கட்சி அங்கத்தவர்களும் பெருந்திரலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Friday, January 28, 2011

அம்பாறையில் எட்டு கட்சிகளும் 156 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் 48 சுயேச்சைகளின் மனு நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கு எட்டு அரசியல் கட்சிகளும் 156 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. இங்கு மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் 48 சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
அம்பாறை நகர சபை, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் 17 பிரதேச சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெறவுள்ளது.
காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசசபைகளில் ஈரோஸ் கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுவும் ஜனதாக் கட்சி பெரமுனயின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பன இங்கு போட்டியிடுகின்றன.

Thursday, January 27, 2011

நேற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்

நேற்று பிரதேச சபைக்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றது. இப் பிரதேச சபைக்கான தேர்தல் மார்ச் 17ம் திகதி இடம்பெற்றவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இம் முறை அதிகமான சுயேட்சைக் குழுக்களும், பிரதான கட்சிகளும் கூட நிராகரிக்கப்பட்டுள்ளது.

Saturday, January 22, 2011

சம்மாந்துறையில் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் திருத்தவேலை


சம்மாந்துறையில் அடைமழையினால்  பாதிக்கப்பட்ட  வீதிகளை  சம்மாந்துறை பிரதேச சபையினரும், சம்மாந்துறை பொலிஸாரும் இணைந்து வீதி திருத்த வேலைகளில் ஈடுபட்டனர்.


இதில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்சாட் அவர்களும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களும், ஜனாப். நசார்(ஸாஜன்), திரு. ஆர்யரத்னம் (ஸாஜன்), மற்றும் உழவு இயந்திர உரிமையாளர்களும், பொதுமக்களும் இணைந்து சம்மாந்துறையிலுள்ள பல வீதி திருத்தவேலைப்பணியில் ஈடுபட்டனர்.












































சம்மாந்துறை இணையக் குழுவினர் இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்குவதற்காக தயாராகி வருகின்றனர்.

சம்மாந்துறை இணையத்தளக் குழுவினர் தற்பொழுது மும்முறமாக நிவாரணம் வழங்குவத்ற்காக தற்பொழுது மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உதவ விரும்புவோர் உதவலாம் இதற்காக எமது இணையத்தளக் குழுவினர் 24 மணி நேரமும் விழித்திருக்கின்றோம்.

Sunday, January 16, 2011

கிழக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்களை நீர்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் இன்று நேரடியாகப் பார்வையிட்டார்



பெறுமளவான நெல் உற்பத்தி செய்யும் மாவட்டமான அம்பாரை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட வளத்தாப்பிட்டி குளம், வீரக்கொட அணைக்கட்டு மற்றும் அத்தியடி அணைக்கட்டு என்பவற்றை அமைச்சர் நிமால் சிறிப்பாலடி சில்வா பர்வையிட்டார். மேலும் கல்லோயா குளம் , கொண்டவட்டுவான் போன்ற குளங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். இதன் போது பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக புண்ருத்தாபனம் செய்யுமாறு உயர் அதிகாரிகளை பணித்தார். மேலும் இவ் விஜயத்தில் உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, கிழக்கு மாகான சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் அவர்களும் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியளாலர்கள் மற்றும் சம்மன்துறை ஜானாதிபதி இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இலவச வைத்தியமுகாம்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர். ஏம்.எஸ். இப்றாலெவ்வை அனுசரனையில் - சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏ. இஸ்ஸடீன் தலைமையிலான குழுவினர் 2011.01.16 மஜீட்புரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச வைத்திய முகாமை நடாத்தினர்.

இவ் வைத்திய முகாமில் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் றுக்மண் ஜயபால மற்றும் வைத்தியர்களான ஏ.ஆர்.எம். நியாஸ், எம். மர்சூக், ஏ. சபீர், ஏ. இஸ்ஸானா மற்றும் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோகர் ஐ.எல். றாஸீக் தலைமையிலான சுகாதார பரிசோகர்கள் குழுவும், தாதியர் மேற்பார்வையாளர் ரீ.எல்.ஏ. றசூல் தலைமையிலான குழுவினரும், மஜீட்புர வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அமீர்அலி பிரதி அதிபர் எம்.ஐ. முஸம்மில் மற்றும் ஆசிரியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் இவ் இலவச வைத்திய முகாமில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்கினர்.

Saturday, January 15, 2011

www.saynotodowry.tk இணையத்தளத்தின் அனுசரனையில் சம்மாந்துறை இணையத்தளக் குழுவினர் வெள்ள நிவாரணம் வழங்கினர்.





சீதனம் வாங்காதோர் விழுமிய அமைப்பின் அனுசரனையில் சம்மாந்துறை இணையத்தளத்தினூடாக 14.01.2010 ஆகிய நேற்று வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சுமார் 170 பேருக்கு உலர் உணவும் 80 பேருக்கு பணம் மற்றும் அப்பியாசப் புத்தகங்களும் வழங்கினர். எமது இணையத்தளக் குழுவினர் இவ்வாறான மேலும் பல உதவிகளை வழஙுவதற்காக தயாராக உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புவோர் எமது இணையத்தளக் குழுவை தொடர்பு கொள்ளுமாறு மிகவும் விணயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

Friday, January 14, 2011

சம்மாந்துறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் உடமைகள் விபரம்

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் - 15779
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை - 62607
குடிபெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை - 5675
குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை - 22525
பாதிக்கப்பட்ட வீட்டுத்தோட்டங்கள் - 225
பாதிக்கப்பட்ட சுயதொழில் பெறும் குடும்பங்கள்-495
பாதிக்கப்பட்ட நெற்பயிற்ச்செய்கை நிலங்கள் - 25000 ஏக்கர்

Wednesday, January 12, 2011

சம்மாந்துறையில் துஆப் பிரார்த்தனை செய்யுமாறு பள்ளிவாசல்களில் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகின்றது. இதில் எமது சம்மாந்துறை மண்ணும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. மழையும் விடுவதாக இல்லை வெள்ளம் அதிகரித்துவருகின்றது
பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்திருக்கின்றது
இதனால் மக்கள் சொல்லொனாத் துயரில் மூழ்கியுள்ளனர்.
இதன் காரணமாக மழை மற்றும் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி விசேட துஆ மற்றும் தொழுகைகளில் ஈடுபடுமாறு அனைத்துப் பள்ளிவாயில்களின் ஒலிபெருக்கிகளிளும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எமது மக்களின் துயர்போக்க நாமும் பிரார்த்திப்போமாக

Tuesday, January 11, 2011

சம்மாந்துறையில் தொடர்ந்து வெள்ளம் உதவ விரும்புவோர் உதவலாம்


சம்மாந்துறையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக எமதூரின் பல்வேறு பிரதேசங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது. இவ்வெள்ளத்தினால் பெருமளவான மக்கள் தமது உடைமைகள் இருப்பிடங்களை இழந்தவர்களாக தற்பொழுது பாடசாலைகளில் தஞ்சமடைந்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கான எதுவித உதவியும் கிடைக்கவில்லை எனவும் தாம் இரவு உண்ட உணவுடன் காணப்படுவதாக சம்மாந்துறை கையர் பள்ளியில் காணப்படும் ஒரு தமிழ் சகோதரர் குறிப்பிட்டார். இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0752912336

Sunday, January 9, 2011

சனி இரவு சம்மாந்துறையில் பெய்த அடைமழையினால் 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

சம்மாந்துறைப் பிரதேசத்தில் 08.01.2011ம் திகதி சனிக்கிழமை பி.ப. 6.00 மணியளவில் பெய்யத்தொடங்கிய அடை மழை 2011.01.09 அதிகாலை 6.00 மணி வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.

 2011.01.08 நள்ளிரவு 12.30 அளவில் எமது இணையத்தள குழுவினரும், ஊடகவியலாளர் தேசமான்ய ஜலீல் ஜீயும், உஸ்வா நிறுவன பணிப்பாளர் சாமஸ்ரீ தேசகீர்த்தி ஐ.எல்.எம். முஸ்தபா அவர்களும் வெள்ளப் பாதிப்பு நிலமைகளை அவதானிக்க களம் இறங்கினர்.

முதலில் மலையடிக்கிராமம் 2, 3களில் வளவுகளுக்குள் மழைநீர் தேங்கி கிடந்தது. இதன்காரணமாக வீடுகளுக்குள் அண்ணளவாக 1 அடி உயரத்திற்கு மழைநீர் புகுந்தது. இதனால் இரவு வேளைகளில் 25 குடும்பங்கள் முற்றாகப்பாதிக்கப்பட்டு அல்-உஸ்வா மத்திரஸா கட்டிடத்தில் தஞ்சம் புகுந்தனர்.

சம்மாந்துறையின் தாழ்வான பிரதேசங்களில் வெள்ளம் நிறைந்திருத்தது, மேலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிவருகையில் ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் அதிகமாக காணப்பட்டது.

இரவு 2.35 மணியளவில் சுற்றிப்பார்க்கையில் சம்மாந்துறையின் தென்னம்பிள்ளைக் கிராமத்திலுள்ள 50 குடும்பங்களின் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்திருந்ததும் நள்ளிரவில் பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடங்களை நாடிச் சென்ற அவலநிலை அரங்கேறியது.

மேலும் செட்டிட வட்டை பிரதேசத்தை 3.05 சென்றடைந்தனர் அங்கும் 9 குடும்பங்கள் வீட்டுக்குள்ளிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.

3.30க்கு கோரக்கர் கோயில் பிரதேசத்தினை அடைந்தபோது கோயிலுக்கு அருகாமையிலிருந்த 15 வீடுகளின் முற்றங்கள், வளவுகள் நீர் நிலையாக காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

4.15 அலவக்கரை பிரதேசத்தின் தாழ்வான பகுதியினூடாக செல்கையில் அனைத்து வீடுகளின் வளவுகளிலும் மழைவெள்ளம் நிறைந்திருந்தது.

4.30 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வீதியால் வீரமுனைக் கிராமத்தை அடைந்தோம் மிகப் பரிதாபகரமான நிகழ்வாக அதிகாலையில் சம்மாந்துறையிலுள்ள அனைத்து தண்ணீர்களும் கரைசேரும் வழியாக வீரமுனையின் தாழ்வான பகுதி காணப்பட்டது. அதிகமான மழைநீர் ஒன்று சேர்ந்து வந்ததால் எதுவும் சமாளிக்க முடியாமல் வீடுகளுக்குள் திடீரென வெள்ளம் புகுந்தது.

உயிரைக்காப்பாற்ற பிள்ளைகளை கையில எடுத்தனர் உடமைகளை மழைவெள்ளம் வீட்டுக்குள் புதுந்து அள்ளிச் சென்றது. என்ன பரிதாபம் 50க்கு மேற்பட்ட சகோதர இனக்குடும்பங்களும் 30க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்களும் நேரடியாகப் பாதிக்கப்ட்டதை உணரமுடிந்தது.

காலை 5.30க்கு வீரமுனை உடங்கா - 02ம் பிரிவின் வயல் ஓரத்தில் உள்ள 35க்கு மேற்பட்ட குடும்பங்கள் நேரடி பாதிப்புக்குள்ளாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

காலை 5.50க்கு மையவாடிப்பிரதேசத்தின் மலையடிக்கிராமம் - 02 கிராம சேவகர் பிரிவில் இடுப்பு நிறைந்த மழை வெள்ளத்தில் நீந்திக் கொண்டு 36 குடும்பங்கள் தமது பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடத்தை நோக்கி தஞ்சம் புகச் சென்றனர்.

பிஞ்சுக் குழந்தைகளுடன் எதுவித உணவு,  ஏனைய வசதிகளையும் எடுத்துக் கொள்ளாமல் அவசரம அவசரமாக பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்தனர்.

காலை 8.00 மணியளவில் உஸ்வா மத்ரஸா ஓர் அகதிமுகாம் 75 பேருடனும் வீரமுனை ஆர்கேஎம். வித்தியாலயத்தில் 90 பேருடன் ஓர் அகதிமுகாம். கயறுப்பள்ளி (ஸபூர் வித்தியாலயத்தில்) 85 குடும்பங்களுடன் ஓர் அகதிமுகாம் இயங்கி வருகிறது.

காலை 9.00 மணியுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது முறியாண்டி, மாவடிப்பள்ளி பிரதான பாதைகள் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளானது.

ஒவ்வொரு அகதிமுகாமையும், பாதிக்கப்ட்ட இடங்களையும் பொதுமக்களையும் காத்துக் களத்துக்குச் சென்று உதவி பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத்அலி கண்ணாளர் ஏ.எல். மஃறூப், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம். இத்ரீஸ் ஆகியோர் அடங்கிய குழு பாதிப்புகளை பார்வையிட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரிவின் கிராம சேகவர்களை உரிய துரித நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிப்புரை வழங்கியதுடன், சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கினார்கள்.

15000க்க மேற்பட்ட குடும்பங்கள் பெய்து வரும் தொடர்மழையால் பாதிப்புக்குற்பட்டுள்ளதாக பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர் ஏ.எம். இத்ரீஸ் தகவல் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டிய விடயமாகும்.



Saturday, January 8, 2011

சம்மாந்துறையில் பெருவெள்ளம் மக்கள் குடிபெயர்வு

எமது ஊரில் சில நாட்களாகப்  பெய்துவரும் கடும் மழை காரணமாக இன்று சுமார் அதிகாலை 1.30 மணியளவில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலையடிக் கிராமம் முற்றாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்மாந்துறை வீரமுனையின் சில பகுதிகளும் நீரில் மூழ்கிக் காணப்படுகிறது. சம்மாந்துறை மலையடிக்கிராம மக்கள் தமது பெயர்வை அல்-உஸ்வா அனாதைகள் இல்லத்தை நோக்கி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான படங்கள் மற்றும் மேலதிக செய்திகள் இன்னும் சில கணத்தில் வெளிவரும் காத்திருங்கள்.

Friday, January 7, 2011

எஸ்டபா சங்கத்தினர் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மீன்தொட்டி அன்பளிப்பு



சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எஸ்டபா சங்கத்தினர்  அழகிய மீன்தொட்டி ஒன்றை 07.01.2011 அன்று அன்பளிப்பு செய்துள்ளார்கள். இவ்வாறு அனைத்து தனவந்தர்களும் எமது வைத்தியசாலையை முன்னேற்றும் வழியில் தம்மால் ஏன்ற உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                     

Thursday, January 6, 2011

சம்மாந்துறை இணையத்தளக் குழுவினர் எமது பிரதேச சபைத் தவிசாளருடைய சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவிப்பு

இன்று நண்பகல் 12.00 மணியுடன் பிரதேச சபைகள் கலைக்கப்பட்டுள்ளது எனவே சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எமது சம்மாந்துறை மண்ணுக்காய் செய்த பெரும் அபிவிருத்திக்கும், சேவைக்குமாக எமது இணையக்குழு பிரதிநிதி பிரோஸ் அவர்கள் எமது சம்மாந்துரை பிரதேச சபைத் தவிசாளர் அவர்களுக்கு எமது இணையக் குழு சார்பாக நன்றிகளைத் தெரிவித்தார்.

Tuesday, January 4, 2011

சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் லொறி ஒன்று குடை சாய்ந்துள்ளது.



சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் லொறி ஒன்று வேகம் கூடியதன் காரணமாக ஊசிமுனை வளைவில் குடை சாய்ந்துள்ளது. தற்பொழுது மழை காரணம் என்பதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.