Wednesday, November 24, 2010

சம்மாந்துறை ஹசன் அலி பவுண்டேன் இலவச கல்விக் கருத்தரங்கு

சம்மாந்துறை ஹசன் அலி பவுண்டேன் ஏற்பாட்டில் இன்று 2010.11.24 மாவடிப்பள்ளி அல்-அஷ்ரஃப் மஹா வித்தியாலயத்தில் 2010ல் க.பொ.த. (சா/த) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான ஆங்கிலப்பாட பரீட்சை முன்னோடி கருத்தரங்கு இடம்பெற்றது.

நிகழ்வில் பவுண்டேசனின் செயலாளர் ஏ.எல். சாஹிபுத்தம்பி (ஓய்வு பெற்ற அதிபர்), உபதலைவர் ஐ.எல். உதுமாலெவ்வை, பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் விரிவுரையினை ஓய்வுபெற்ற ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் திரு.என். பரநிருபசிங்கம், ஏ.அபூபக்கர் நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.


Tuesday, November 23, 2010

தொழில்சார் மற்றும் தொழிநுட்பப் பயிற்சி திணைக்களம் மற்றும் தொழிநுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தினால் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தொழில்சார் மற்றும் தொழிநுட்பப் பயிற்சி திணைக்களம் மற்றும் தொழிநுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தினால் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 19.11.2010 வர்த்தமானி அறிவித்தலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Monday, November 22, 2010

இலங்கையின் புதிய அமைச்சரவை

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் 2ம் தவணை ஆரம்பித்ததன் பின்னர் இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது இதன்படி பிரதமருடன் இணைத்து 10 சிரேஸ்ட அமைச்சர்களும் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 31 பிரதியமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
டி எம் ஜயரத்ன - பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்

சிரேஸ்ட அமைச்சர்கள்:

ரட்னசிறி விக்கிரமநாயக்க  - நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் 
டியு குணசேகர                          - மனிதவள சிரேஷ்ட அமைச்சு
அதாவுத செனவிரட்ன          -  கிராமிய விவகார சிரேஷ்ட  அமைச்சு
பி.தயாரட்ன,                               -  உணவு மற்றும் போஷாக்குத்துறை
ஏ எச் எம் பௌஸி                -   நகர செயற்பாடுகள்
எஸ் பி நாவின்ன,                  -   நுகர்வோர் சேமநலன் 
பியசேன கமகே                       -  தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர் 
திஸ்ஸ விதாரண                   -   விஞஞான விவகாரம்
சரத் அமுனுகம                      -   சர்வதேச நிதி ஒத்துழைப்பு 

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 50  போ்

நிமல் சிறிபால டி சில்வா      -    நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன,          -   சுகாதார துறை
சுசில் பிரேம்ஜயந்த                    -   கனியவளதுறை 
ஆறுமுகன் தொண்டமான்     -   கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி 
தினேஷ் குணவர்தன                -    நீர்வழங்கல் துறை 
டக்ளஸ் தேவானந்தா               -   பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் 
ஏ.எல்.எம்.அத்தாவுல்லா,          -    உள்ளுராட்சி - மாகாணசபை 
ரிசாத் பதியுதீன்,                           -    கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
பாடலி சம்பிக ரணவக்க          -    மின்சக்தி - சக்திவலுத்துறை 
விமல் வீரசங்ச                              -    நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரவூப் ஹக்கீம்,                              -    நீதித்துறை 
பசில் ராஜபக்ச                               -    பொருளாதார அபிவிருத்தி 
வாசுதேவ நாணயக்கார             -    தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு 
எஸ்.பி.திஸாநாயக்க                  -    உயர் கல்வி 
ஜி எல் பீரிஸ்                                -    வெளிவிவகாரம் 
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன     -    அரசநிர்வாக - உள்நாட்டலுவல்கள் 
சுமேதா ஜி ஜயசேன,                 -    நாடாளுமன்ற விவகாரம் 
ஜீவன் குமாரதுங்க                      -    அஞ்சல்துறை 
பவித்ரா வன்னியாராச்சி           -    தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அநுர பிரியதர்சன யாப்பா,       -    சுற்றாடல் துறை 
திஸ்ஸ கரலியத்த                       -    சிறுவர் அபிவிருத்தி - மகளிர் விவகாரம் 
காமினி லொகுகே,                        -    தொழில் மற்றும் தொழிலுறவு 
பந்துல குணவர்த்தன,                  -    கல்வி 
மஹிந்த சமரசிங்க,                       -    பெருந்தோட்டத்துறை 
ராஜித சேனாரத்ன                           -    மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி 
ஜனக பண்டார தென்னகோன்,   -    காணி மற்றும்   காணி அபிவிருத்தி 
பீலிக்ஸ் பெரேரா,                              -    சமூக சேவைகள் 
சி.பி.ரட்னாயக்க,                                 -    தனியார் போக்குவரத்து சேவை 
மஹிந்த யாப்பா அபேவர்தன,   -    விவசாயத்துறை 
கெஹலிய ரம்புக்வெல்ல,           -    ஊடக மற்றும் செய்தித்துறை 
குமார வெல்கம,                              -    போக்குவரத்து 
டளஸ் அழகப்பெரும,                  -    இளைஞர் விவகார மற்றும் திறன் மேம்பாட்டு 
ஜோன்ஸ்டன் பர்ணான்டோ,      -    கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
சந்திரசிறி கஜதீர                              -    புனருத்தாபன மற்றும் சிறைச்சாலை சீரமைப்பு 
சாலிந்த திஸாநாயக்க                  -    தேசிய வைத்திய துறை
ரெஜினோல்ட் குரே,                        -       சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி

டிலான் பெரேரா,                               -    வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி 
ஜகத் புஸ்பகுமார,                           -    தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
ரி.பி.ஏக்கநாயக்க                               -    கலாசார மற்றும் கலைவிவகாரம் 
மஹிந்த அமரவீர,                           -    அனர்த்த முகாமைத்துவம் 
எஸ்.எம்.சந்திரசேன                        -    விவசாய சேவை மற்றும் வனவிலங்கு 
குணரத்ன வீரக்கோன்                   -    மீள்குடியேற்றதுறை 
மேர்வின் சில்வா                             -    மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அளுத்கமகே,     -    விளையாட்டுத்துறை 
தயாஸ்ரீ த திசேரா,                           -    அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி 
ரஞ்சித் சியம்பலாபிட்டிய,          -    தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்
ஜகத் பாலசூரிய                              -    தேசிய மரபுரிமைகள் 
லக்ஷ்மன் செனவிரட்ன              -    உற்பத்தி திறன் அபிவிருத்தி
நவின் திசாநாயக்க                       -    அரச முகாமைத்து மீளமைப்பு 
பிரியங்கர ஜயரட்ன - சிவில் விமான சேவைகள்,

பிரதியமைச்சர்கள் 31 போ்

சுசந்த புஞ்சி நிலமே,                       -    மீன்பிடி, நீர்வளத்துறை 
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,  -    பொருளாதார அபிவிருத்தி 
ரோஹித்த அபேகுணவர்தன,       -    துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் 
பண்டு பண்டாரநாயக்க,                 -    தேசிய வைத்திய துறை 
ஜயரத்ன ஹேரத்,                             -    கைத்தொழில், வர்த்தகவிவகாரம்
துமிந்த திஸாநாயக்க,                   -    இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி
லசந்த அழகியவண்ண,                -    நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரோஹண திசாயக்க,                      -    போக்குவரத்து 
எச்,ஆர்.மித்ரபால,                            -    கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி 
நிர்மல கொத்தலாவல,                -    துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் 
பிரேமலால் ஜயசேகர,                  -    மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை 
கீதாஞ்சன குணவர்தன,               -    நிதி மற்றும் திட்டமிடல் 
விநாயகமூர்த்தி முரளிதரன்,     -    மீள்குடியேற்றம் 
பைசர் முஸ்தபா,                            -    தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி
இந்திக பண்டாரநாயக்க,              -    உள்ளுராடசி மற்றும் மாகாண சபைகள்
முத்துசிவலிங்கம்,                          -    பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத்,                             -    காணி மற்றும் காணி அபிவிருத்தி 
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க,               -    வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம் 
சந்திரசிறி சூரிய ஆராயச்சி,      -    சமூகசேவைகள் 
நந்திமித்ர ஏக்கநாயக்க,               -    உயர்கல்வி 
நிரூபமா ராஜபக்ஷ,                      -    நீர்வழங்கல் துறை
லலித் திசாநாயக்க,                      -    சுகாதாரம் 
சரண குணவர்தன,                       -    கனியவள தொழில்துறை 
காமினி விஜித் விஜயமுனி சொய்சா, - கல்வித்துறை 
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,      -    சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம் 
வீரகுமார திசாநாயக்க,                -    பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் 
ஏ.டி.எஸ்.குணவர்தன,                   -    புத்த சாசன மதவிவகார 
ஏர்ல் குணசேகர,                              -    பெருந்தோட்டதுறை 
பசிர் ஷேகுதாவுத்,                           -    கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
அப்துல் காதர்,                                   -    சுற்றாடல் 
டுலிப் விஜேசேகர                           -   அனர்த்த முகாமைத்துவம்

கல்விப்பணிப்பாளர்கள் இடமாற்றம்

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.மன்சூர் அக்கரைப்பற்று
கல்வி வலயத்திற்கும்>அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்
யூ.எல்.எம்.ஹாசீம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கும் உடனடியாக
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய> கிழக்கு மாகாண கல்வி
அமைச்சின் செயலாளரால்இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம்
சுமார் 10 வருடங்களுக்கு மேலாகவலயக் கல்விப் பணிப்பாளராக
கடமையாற்றி வரும் அதேவேளை> வலயக் கல்விப் பணிப்பாளர்
எம்.கே.மன்சூர் கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக
கடமையாற்றிஇவ்வருடம் பெப்ரவரி மாதம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

Saturday, November 20, 2010

AUMSA இன் ஏற்பாட்டில் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு



அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் அனுசரனையில் இம்முறை க.பொ.த.சாதரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விஞ்ஞானம்,கணிதப் பாடங்களுக்கான கருத்தரங்கானது 21.11.2010 ஆகிய இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்தது. இதில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்வகளால் விரிவுரைகளானது நடாத்தப்பட்டது. அதிகளவான மாணவர்கள் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். மேலும் இக் கருத்தரங்குகான ஏற்பாடு HIGHER NATIONAL DIPLOMA IN ENGINEERING மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதலாவது ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது.


இன்று காலை சுமார் 10.57 மணியளவில் முதலாவது ஹஜ் யாத்திரைக் குழுவானது இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனது ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது. இதில் எமது ஊரைச் சேர்ந்த ஹஜ் யாத்திரைக் குழுவொன்றும் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் ஒரு ஹஜ் யாத்திரைக் குழுவானது தற்பொழுது சுமார் மாலை 6.00 மணியளவில் அடுத்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஹஜ் யாத்திரைக் குழுவானது வந்து இறங்கியுள்ளது.

சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்டமானது மரக்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்ட முன்றலானது பூ மரக் கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சம்மாந்துறை பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எமது சம்மாந்துறை நகர முன்றலை அழகுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அழகுபடுத்தும் முயற்சியை மேற்கொண்ட சம்மாந்துறைப் பொலிஸாருக்கு எமது செய்திப் பிரிவு சார்பாக மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.       

Wednesday, November 17, 2010

சம்மாந்துறை நகர மண்டபத்தில் பல அரிய சாதனைகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு



சம்மாந்துறை நகர மண்டபத்தில் சாதனை நாயகன் 8 கிண்ணஸ் சாதனை படைத்து உலகையே அதிர வைத்த பரீத் நசீரின் புதல்வன் றுஜான் பர்சான் அவர்கள் தற்பொழுது சம்மாந்துறை மண்ணில் உலகையே அதிர வைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை சம்மாந்துறை நகர மண்டப அரங்கிலே அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றார்.2010.11.17 ஆகிய இன்று முதல் 2010.11.20ம் திகதி வரை எமது மண்ணிலே கொடூர நாகப் பாம்புகளை தன்னுடன் கொஞ்சிக் குழாவி நடனமாடுவதும், நெருப்பினை தன் மேனியில்   தடவுவது மற்றும் டியுப்லைட்டினை கடித்து சாப்பிடுவதும் எம்மை ஒரு கணம் அதிர வைக்கின்றது. இவ்வாறான அரிய செயல்களை புரியும் வீரர்களை ஆதரிக்க வேண்டியது எமது கடமையே. நீங்களும் கண்டு கழிக்க முந்திக் கொள்ளலாம் சம்மாந்துறை நகர மண்டபத்திற்கு. 







                                                                  

Tuesday, November 16, 2010

சம்மாந்துறை இணையத்தளத்தின் பெயர்ப் பலகையானது ஹிஜ்ரா சந்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.





சம்மாந்துறை இணையத்தளத்தினுடைய பெயர்ப்பலகையானது இன்று வெகு விமர்சையாக கெளரவ பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இவ் விழாவில் கெளரவ அதிதிகள் வரிசையில் ஜனாதிபதி இணைப்பாளர்கள் ஜனாப் ஏ.எல்.எம்.றசீன், ஜனாப் எம்.எம்.ஏ. காதர்(BSC) ,ஜனாப் எம்.டீ.ஏ.கரீம், ஜனாப் எம்.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் விசேட அதிதிளாக சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆசிரியர் ஏ.எல்.ஏ.றஹீம் அவர்களும் சட்டத்தரனி யூ.கே.சலீம் மற்றும் ஊடகவியளாலர் ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.எல்.எம்.இர்சாத், இணையத்தள ஆலோசகர் எம்.எப்.எம்.பர்ஹான் மற்றும் எம்.எம்.சபியுல்லா  அவர்களும் சிடா அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை இன்று திடலில் நிறைவேற்றப்பட்டது.


அண்ணல் நபிகளார் சொல்லிவிட்டு சென்ற சுன்னத்துக்களை பின்பற்றுகின்ற எம் சகோதரர்களை வாழ்த்துகிறோம். அண்ணல் நபி சொல்லியவாறு பெருநாள் தொழுகைகைகளை பொது திடலில் தொழ வேண்டும் அதனடிப்படையில் இன்றுசம்மாந்துறையில் இரு இடங்களில் பொதுத்திடலில் பெருநாள் தொழுகையானது இடம்பெற்றது. அதாவது அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. இவ்வாறான நபி வழி தொழுகைகள் இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமே.

Sunday, November 14, 2010

பிறை எப்.எம் ஏற்பாட்டில் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா



சம்மாந்துறை வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 110 மாணவரளுக்கு பிறை எப்.எம் வானொலியானது பரிசில் வழங்கி கெளரவித்தது. இவ்விழாவில் பிரதம அதிதியாக மாண்புமிகு அமைச்சர் கெளரவ ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களும், கெளரவ அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹத்சன் சமரசிங்க மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இவ்விழாவனது அக்கரைப்பற்று மண்ணில் உள்ள அதாவுல்லா அரங்கத்தில் விழாக் கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
                                                                     

Saturday, November 13, 2010

ஹிஜ்றா சந்தியில் பெருநாள் கொள்வனவுகள் களைகட்டியுள்ளது.

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஹிஜ்றா சந்தியில் பெருநாள் கொள்வனவானது மக்களினால் மும்முறமாக மேற்கொள்ளப்படுகிறது.மேலும் வீதியோரக் கடைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமே.

சம்மாந்துறை ஸ்டார் கொமியுனிகேசன் முன்பாக எயார்டலின் வர்த்தக விரிவாக்கம்



13.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை ஸ்டார் கொமியுனிகேசனுக்கு முன்னாக இன்று ஏயார்டலின் சந்தைப்படுத்தல் விரிவாக்கப் பிரிவினர் சக்தி எப்.எம் இன் டீ.ஜே பாயிஸ் உடன்  அவர்கள் தமது விரிவாக்க சேவையினை மேற்கொண்டனர்.  

Thursday, November 11, 2010

மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா



மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 504 மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அஸ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பீ.பீ.சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக எம்.கே.எம்.மன்சூர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்மினைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் சம்மாந்துறை வலய  உதவி கல்விப் பணிப்பாளர் வீ.டி.சகாதேவராஜா,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

Wednesday, November 10, 2010

இளைஞர் பாராளுமன்றத்துக்கான வேட்புமனுத் தாக்கல்



சம்மாந்துறை பிரதேச சபையில் இளைஞர் பாராளுமன்றத்துக்கான வேட்புமனுத் தாக்கலானது 08.11.2010 நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இதில் சம்மாந்துறை வலயத்திற்குள் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ் இளைஞர் பாரளுமன்றத் தேர்தலானது வருகின்ற 27ம் திகதி இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                      

Tuesday, November 9, 2010

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 23ம் வருட மாணவர்கள் மெளலவி பட்டம் பெற்றனர்


சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 23ம் வருட மாணவர்கள் மெளலவி பட்டம் பெற்று (2010.11.07) வெளியாகினர். இதில் அம் மாணவர்களினால் பகற்போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

Monday, November 8, 2010

தந்தையிழந்த வறிய சிறார்களுக்கான பாராமரிப்பு நிதியுதவி



ஜமியதுல் அன்ஸார் சுன்னதுல் அன்சாரி அமைப்பினால் குவைத் நாட்டின் பைதுஸ் ஸகாத் நிதியுதவியின் கீழ் இலங்கையில் 1250 தந்தையை இழந்த சிறார்களுக்கான வறுமையான சிறார்களுக்கான நிதியுதவியை வழங்குகின்றது. இத்திட்டத்தின் அடிப்படையில் 08.11.2010 ஆகிய இன்று சம்மாந்துறை மர்கஸ் தாறுல் ஈமான் கலாபீடத்தில் இடம்பெற்றது.இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த 345 பேர் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டனர். இதில் நிதியுதவியை பொறுப்பதிகாரி கலாபூஷணம் செய்னுதீன் எஸ்.பரீட் அவர்கள் கையழித்தார். இந் நிகழ்வை சாம-சிறீ தேசிய கீர்த்தி மெளலவி ஐ.எல்.எம்.முஸ்தபா அவர்கள் ஏற்பாடு செய்தார்.

Sunday, November 7, 2010

கட்டாக்கலி மாட்டு உரிமையாளர்களுக்கு

தற்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.இக் கட்டாக் காலி மாடுகள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் எமது நகரத்தையும் சாணம் இட்டு அசுத்தமாக்குகின்றது.இது குறித்து கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவு எச்சரிக்கை விடுக்கின்றது.


Saturday, November 6, 2010

EDC இன் இலவசக் கல்விக் கருத்தரங்கு


06.11.2010 ஆகிய இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அப்துல் மஜீட் மண்டபத்தில் இம்முறை கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கணிதப் பாடக் கருத்தரங்கானது இடம்பெற்றது. இதில் இஸட்.எம்.ஸவாஹிர், ஏ.ஆர்.எம்.றஸ்லான் ஆகிய ஆசிரியர்கள் வழிகாட்டல்களை மேற்கொண்டனர்.
                                                                       

Friday, November 5, 2010

தெளஹீத் பிரச்சாரம்

சம்மாந்துறை அம்பாரை வீதியில் 05.11.2010 ஆகிய இன்று இரவு சுமார் 07.00 மணியளவில் தேசிய சேமிப்பு வங்கிக்கு எதிரே தெளஹீத் ஜமாஅத் இனுடைய இஸ்லாமிய பிரச்சார மார்க்கச் சொற்பொழிவானது இடம்பெற்றது.
                                                                      

Thursday, November 4, 2010

சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் விபத்துச் சம்பவம்


சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும்  விபத்துக்குள்ளாகியது.இதில் பாரியளவு சேதங்கள் ஏற்படவில்லை.எனினும் வாகனங்களின் விபத்து எமது ஊரில் தற்பொழுது அதிகரித்துள்ளது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமே.

வாசகர் பார்வை வட்டம் உருவாக்க ஆரம்ப நிகழ்வு




சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நல்லாட்சிக்கான இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் வாசகர் பார்வை வட்டம் உருவாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வானது 04.10.2010 ஆகிய இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில்,கெளரவ அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மற்றும் விசேட அதிதிகளாக எம்.எம்.றிபாய்டீன்,எம்.எம்.முனப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இவ் விழாவை கல்லூரி முதல்வர் எச்.எம்.பாறூக் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைத்தார். இச் செயற்திட்டத்தின் மூலம் நூலகர் வட்டம் ஒன்றை உறுவாக்குதல்.                                                       

Wednesday, November 3, 2010

நுளம்பு பரவும் இடங்களை அழிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்

தற்பொழுது எமது ஊரில் நுளம்பு பரவும் இடங்கள் அதிகமாக காணப்படுகிறது. இது டெங்குக் காய்ச்சலை பரப்பக் கூடிய ஓர் உற்பத்திக் கூடமாக நாம் உருவாக்குவது கவலைக்குரிய விடயமே. எனவே நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருந்து இவ்வாறான நோய் விளைவாக்கிகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

Tuesday, November 2, 2010

வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ எம்.எல்.ஏ.அமீர் அவர்கள் விஜயம்



சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலை கட்டிட நிர்மாணப் பணிகளையும், அங்கு உள்ள நோயாளிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ அமீர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும் எம்து வைத்தியசாலைக்கு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை எடுத்து வந்தவர் கெளரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.