Tuesday, September 14, 2010

வைரவிழாக் கொண்டாட்டம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய  மகா வித்தியாலயமானது வெகு விரைவில் வைர விழாவினைக் கொண்டாடவுள்ளது.காத்திருங்கள் இது தொடர்பான விரிவான செய்திககளுக்காய்.


பாழடைந்துள்ள பொதுக் கட்டிடங்கள்

எமது ஊரின் வண்டு வாய்க்கால் பிரதேசத்தில் காணப்படுகின்ற பொதுச் சந்தை,தாபால் நிலையம்,கூட்டுறவுக் கடை என்பன மக்களுக்கு சேவை செய்யவே அமைக்கப்பட்டவை.இருப்பினும் அது தற்பொழுது குப்பை கொட்டும் இடமாகவும்,ஆடு,மாடு,நாய் என்பவற்றின் தங்குமிடமாக மாறியுள்ளது.எனவே இவ்வாறு வளங்கள் காணப்பட்டும் மக்களின் பாவனைக்கு ஓர் குப்பைக் கூடமாகக் காணப்படுவது வருத்தம் தரும் விடயமே.எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்குமாறு எமது செய்திப் பிரிவானது சுட்டிக்காட்டுகின்றது.



  

Monday, September 13, 2010

காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்ஹூம் M.I.M.அன்வர் இஸ்மாயில் அவர்களின் மூன்றாவது சிறார்த்த தினம் 14.09.2010 ஆகிய இன்றாகும் .

எமது ஊருக்காய் பல அபிவிருத்தித் திட்டங்களையும் எமது ஊரின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களின் பட்டியலில் இவரும் ஒரு சிறந்த பங்காளரே
இன்று இவரது வரலாறு தொடக்கம் அவரது சேவை வரை ஓர் சிறு ஆய்வுக் கட்டுரையானது அவருடைய சிறார்த்த தினத்தில் நினைவு கூர்வது எமது ஊர் மக்களின் தலையாய கடமையாக காணப்படுகிறது.அந்த வகையில் அவரது அறிமுகமானது வழங்கப்படுகிறது.அன்வர் இஸ்மாயில் கண்ணாடி மரைக்காரின் மகள் சுபைதாவுக்கும் இஸ்மாயில் மாஸ்டருக்கும் 16.07.1967 இல் பிறந்தவர்.தாறுல் உலூம் ,மகளிர் வித்தியாலயம்,சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆகியவற்றில் பயின்றவர்.ஆரம்பக் கல்வியில் துடுக்குத்தனமிக்கவர்.உயர் கல்விக்குப் பின்பு சங்கங்கள் உருவாக்குவது,பொதுச் சிந்தனைகளில் ஈடுபாடு காட்டுதல் போன்ற விடயங்களில் ஈடுபாடு காட்டினார்.மேலும் இவர் கொழும்பு சட்ட பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.


மேலும் இவரது அரசியல் பிரவேசமானது 2001 இல் இலங்கையின் 12 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக அதிரடியான அரசியல் வாழ்வின் வெற்றிக்கு வித்திட்டது.இவ்வாறு பல் தடைகல்லை வெற்றிப் படியாக மாற்றிய மாபெரும் தலைவராகத் திகழ்ந்தார் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை என்றே கூற வேண்டும்.இவருடைய அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட எமது ஊர் மக்களால் நினைவு கூறப்பட வேண்டியதே. இம் மறைந்த தலைவருடைய ஓர் ஆய்வுக் கட்டுரையானது வெகு விரைவில் காத்திருங்கள்.

பெருநாள் கழியாட்ட நிகழ்வுகள்




சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு கல்யாட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இதில் மிக்கூச் சொரியும் பாதாளக் கிணற்றுக்குள் அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டம்,பைசிக்கள் ஓட்டம்,வித்தியாசமான முச்சக்கர வண்டி ஓட்டம் என்பன  இடம்பெற்றன.இந் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய வீரர்கள் வெல்லஸ ஐச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களின் திறமையானது முழு இலங்கையர்களும் அறிந்ததே.மற்றும் ஓர் எமது கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருக்கோவிலைச் சேர்ந்த சாணக்கிய வீரன் சாண்றோ ரவியின் அற்புதத் திறமைகளும் வெளிக்காட்டப்பட்டன.இது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Saturday, September 11, 2010

நோன்புப் பெருநாள் விளையாட்டு நிகழ்ச்சிகள்

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அஜ்மிரா ட்ரவல்ஸ் இன் ஏற்பாட்டில் மாபெரும் மரதன் ஓட்டமானது இன்று சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இடம்பெற்றது.இதில் அதிக எண்ணிக்கையான விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர்.இது சுமார் 22 கிலோமீற்றர் கொண்ட அரை மரதன் போட்டியாகும்.இப் போட்டிக்கு பிரதம அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மன்சூர் அவர்களும் சவூதி அராபிய உயர் அதிகாரி மாஹிர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது.இதற்கு அனுசரனை அஜ்மிரா ட்ரவ்ல்ஸ் இனால் வழங்கப்பட்டது.இம் மரதன் ஓட்டப் போட்டியில் வீரர்கள் பெற்ற இடங்கள் வருமாறு-
1ம் இடம் - M.RASKAN
2ம் இடம் - A.M.MOHAMED FARIS
3ம் இடம் - S.JEEVAN KUMAR
4ம் இடம் - M.L.SAFRAN
5ம் இடம் - K.L.ARAFATH
6ம் இடம் - A.J.SAJITH 

                                            





















































சம்மாந்துறையில் மழலைக்கும் கணணி அறிவா?

FAROOK MOHAMED MISBAH
ஆம் எமது சம்மாந்துறையில் மழலைக்கு கணணி அறிவு என்பது சாத்தியமான ஒரு விடயமாகக் உருமாறியுள்ளது.இதற்கு உதாரணமாக சம்மாந்துறை 413/ ,ஸதக்கர் லேன் இல் வசிக்கும் பாறுக் முஹம்மட் மிஸ்பாஹ் எனும் மழலையை உதாரணமாகக் கொள்ளலாம் இச் சிறுவன் மூன்று வயது கொண்டவனாக இருந்த போதிலும் கணணியை தானாகவே இயக்கி கேம் விளையாடும் வல்லமை கொண்டவனாகக் காணப்படுகிறான்.இச் சிறுவனுக்கு பெசும் பேச்சுக் கூட இன்னும் திருந்தாத நிலையில் கூட கணணியில் பாண்டித்தியம் பெற்றுள்ளான். இதை தொழிநுட்பத்தின் வளர்ச்சி என்பதா?பரம்பரையலகுகளின் ஆட்சியான இயல்பு வெளிக்காட்டல் என்பதா?எவ்வாறாயினும் இது நல்ல முன்னேற்றகரமாகவே கொள்ளலாம்.இவ்வாறான இளம் பிஞ்சு ஒன்று எமது ஊரில் காணப்படுவது எமக்குப் பெருமிதமே.இம் மழலையின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான காட்சியின் இணைக்கப்பட்டுள்ளது.

கீழே காட்சிப் படத்தினுடைய லிங் இணைக்கப்பட்டுள்ளது
http://www.youtube.com/v/vqRCCzaDKRA?hl=en&fs=1

Friday, September 10, 2010

பெருநாள் கொண்டாட்டம்

எமது ஊரில் பெருநாள் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது இதற்கான விரிவான செய்தி இன்று வெளிவ்ரும்.காத்திருங்கள்.

Thursday, September 9, 2010

சம்மாந்துறையில் முதற் தடவையாக திடலில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம் முறை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் பெருநாள் தொழுகையானது வெகு சிறப்பான முறையில் திறந்த வெளியரங்கில் இடம்பெற்றது.இதில் பெருமளவான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.இது தவ்ஹீத் ஜமாஅத் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் வருகின்ற ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையானது திடலிலேயே தொழுவிக்கப் படும் என சம்மாந்துறை உலமா சபை உட்பட அனைத்து சபைகளும் முடிவெடுத்துள்ளது.மேலும் ஒரு தடவை மாத்திரமே பெருநாள் தொழுகை தொழுவிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
                                        

பசித்திருந்த இன்பப் பெருநாள்

*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

சம்மாந்துறையில் பெருநாள் கடைகள்

நாளை பெருநாள் தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரா வீதியில் தற்காலிக கடைகளின் வியாபாரமானது களை கட்டியுள்ளது.இதற்கான தற்போதைய புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.


                                                                      

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு

ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு இன்று வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறுகிறது.
நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானி க்கும் வகையில் இன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம் களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்க ளுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழு ம்பு பெரியபள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.

Wednesday, September 8, 2010

நபி வழியில் நம் பெருநாள் தொழுகை

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!அஸ்ஸலாமு அலைக்கும்.அபுஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.அவர்களது காரியங்களில் முதற் காரியமாக தொழுகையை துவக்குவார்கள்.(புஹாரி 956,முஸ்லிம் 1612)

இரு பெருநாட்களிலும் மாதவிடாய் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும்(தொழும் திடலுக்கு)அனுப்புமாறும் அப் பெண்கள் வீட்டில் இருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்கு சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும் தொழுமிடத்தை விட்டும் மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கி இருக்குமாறும் நாங்கள் கட்டளையிட்டோம் என நபி (ஸல்) கூறியதாக உம்மு அத்தியா(ரழி)அறிவிக்கின்றார்கள்.(புஹாரி351,முஸ்லிம்1612).

இந்த நபி வழிக்கு மாற்றமாக காலாகாலமாக பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுவதாலும்,பெண்கள் பெருநாள் தொழுகைகளில் புறக்கணிக்கப்படுவதாலும்,இம் முறை நோன்புப் பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்,அல்ஹம்துலில்லாஹ்.

இடம் :- அல்மர்ஜான் மகளிர் கல்லூரி மைதானம்
காலம்:-பெருநாள் தினம்(அகில இலங்கை உலமா சபை பிறைக்குழுவால் அறிவிக்கப்படும் தினம்)
நேரம்:-காலை 06.20
ஏற்பாடு:- சம்மாந்துறை தவ்ஹீத் ஜமாஅத்
இம் முயற்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்-
0773520876,0775527326








இலங்கை நாடாளுமன்றத்தில், 18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம் ஆரம்பமாகியது

சிறிலங்கா நாடாளுமன்றத்தில்,  18 வது அரசியலமைப்பு திருத்த விவாதம் இன்று ஆரம்பமாகியுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்புத் தெரிவித்து வரும் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.கட்சியி உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

இந்தத் திருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மக்கள் அபிப்பிராயம் கோரி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டு வரும் நிலையில், சிறிலங்கா உச்ச நீதிமன்றம், மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என்றிருக்கிறது.
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலம் பெற்று, புதிய அரசு அமைந்த போதும், ஆளும் கட்சிக்கு 144 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற, 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.
இந்நிலையில் அன்மையில் அரசுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ள,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர்கள் 8 பேருடன், ஐதேகட்சி  உறுப்பினர்கள் 6 பேர், அரசுடன் இணைந்துள்ள  ஜனநாயகக் கட்சியின் பிரபா கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் திகாம்பரம்,   அம்பாறை மாவட்ட ததேகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பியசேன ஆகியோர்,  அரசியலமைப்புத் திருத்ததிற்கு ஆதரவாக  வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, September 7, 2010

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே

சிறு பிழை கூட எம்மில் பெரிய இழப்பை ஏற்படுத்தக் கூடும்.எனினும் தற்பொழுது இணைக்கப்படும் விடயம் ஓர் கவனையீனமான எழுத்துப் பிழையின் விபரீதமே ஆகும்.சம்மாந்துறை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள மில்கோ பால் குளிரூட்டல் நிலையம் பெயர்ப் பலகையில் எமது ஊரின் பெயர் சம்மாந்துறை என்பதற்குப் பதிலாக சம்மான்துறை என அச்சிடப்பட்டுள்ளது.இப் பிழையானது இது வரை யாரினாலும் சுட்டிக் காட்டப்படவில்லை .அப் பாதை வழியாக எத்தனையோ மக்கள் ஒரு நாளைக்குக் செல்கின்றனர் எனினும் அது இனங்காட்டப்படாத பிரச்சைனையாகவே இருக்கின்றது.இது  எமது ஊரின் கல்வித் தரத்தை  குறைத்து மதிப்பிடும் செயலாக காணப்படுகிறது.எனவே இப் பெயர்ப் பலகையில் உள்ள பிழையை உடனடியாக மாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எமது செய்திப்பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வறான சிறு  சிறு பிழைகளை எமது செய்திப் பிரிவு தொடர்ந்து சுட்டிக் காட்டும்.
                                                                 

இந்த மாத கம்ப்யூட்டர் மலர் இங்கே பதிவிறக்கம் செய்யலாம்

download here

வீதிகளின் அபிவிருத்தியும் விபத்துகளின் அதிகரிப்பும்

தற்பொழுது வீதிகளானது எமது ஊரில் மிகவும் அழகான முறையில் புணர்நிர்மானிக்கப்பட்டுள்ளன எனினும் ஏற்பட்டுள்ள விபரீதம் விபத்துக்களின் அளவு அதிகரித்தமையாகும்.இன்று கூட வாகன விபத்துகளினால் சம்மாந்துறை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்கு என வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே வாகனங்களில் பிரயாணம் செய்பவர்கள் அவதானத்துடன் செலுத்துமாறு எமது செய்திப் பிரிவு விணயமாக கேட்டுக் கொள்கிறது.

Monday, September 6, 2010

சம்மாந்துறை தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்தில் 2011ம் ஆண்டிற்கான புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

சம்மாந்துறை தொழிற்ப்பயிற்ச்சி நிலையத்தில் 2011ம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதற்கான விண்ணப்பப் படிவங்களை காரியாலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தொழிற்ப் பயிற்ச்சிப் பொறுப்பதிகாரி திரு.வசீம் தெரிவித்தார்.அத்துடன் தொழிற்ப் பயிற்ச்சி நிலையம் திறப்பு விழாவின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களும் எமது ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு  இணங்க இணைக்கப்பட்டுள்ளன.




                                                                       

லைலதுல் கத்ர்' ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது





லைலதுல் கத்ர் என்பது விசுவாசிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடையாகும் ‘மகத்தான இரவு’, ‘ஏற்பாட்டின் இரவு’ என்பது இதன் பொருள். மனிதன் இவ்வுலகில் குறிப்பிட்ட ஒரு காலம் வரை மட்டும் வாழ்கின்றான். மனிதனின் நிலையான பெருவாழ்வு அவனது மரணத்தின் பிறகே ஆரம்பமாகிறது. நிலையான இன்ப வாழ்வுக்கு ஆயத்தம் செய்யும் ஒரு சாதனமாக லைலதுல் கத்ர் வழங்கப்பட்டுள்ளது. இதனையே அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. ‘லைலதுல் கத்ர் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது’ (அல்குர்ஆன்)
இஸ்ரேலியர்களில் ஒரு மனிதன் ஆயிரம் மாதங்கள் போர் கருவி தாங்கி அல்லாஹுதஆலாவுக்காகப் புனித யுத்தத்தில் ஈடுபட்டான் என்னும் செய்தி அண்ணலாருக்கு அறிவிக்கப்பட்டது.
காருண்ய நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத ஆலாவிடம் தமது சமுதாயத்தவர்களின் வாழ்நாள் குறைவானதென்றும் நீண்ட காலம் வாழ வாய்ப்பளிக்கப்பட்டால் அதில் அமல் செய்து அபரிமிதமான நன்மைகளைச் சம்பாதிப்பார்களே என்றும் இரந்து கொண்டார்கள்.
எனவே அல்லாஹ்வுத்த ஆலா ஆயிரம் மாதங்களை விடவும் மேலான ஒரு இரவை ஒவ்வொரு வருட றமழான் மாதத்திலும் அருளி பெருமானாரின் அவாவை நிறைவேற்றியுள்ளான்.
றமழான் மாதத்தில் இவ்விரவு எத்தினத்தில் வருகின்றது என்பது நிச்சயமில்லை. அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் இவ்விரவு இதுதான் என்று வரையறுத்துக் கூறப்படவில்லை.
இவ்விரவு றமழான் மாதத்தில் வருகின்றதென்பது மட்டும் கூறப்படுகிறது. எனவே றமழான் ஆரபத்திலிருந்து கடைசிவரை இவ்விரவுக்கான முயற்சிகளும் அமல்களும் பிராத்தனைகளும் இடம்பெற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹதீஸிலும் “றமழானின் கடைசிப் பத்தில் உள்ள ஒற்றைப்பட்ட நாட்களில் லைலதுல் கத்ர் இரவை தேடிக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். லைலதுல் கத்ர் தொடர்பாக உபாதாவின் ஸாமித் (ரலி) இவ்வாறு கூறுகிறார். “ஒருமுறை முஹம்மத் (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தார்கள்.
அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ர் பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தேன். இவ்வேளையில் இன்னாரும், இன்னாரும் சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். அதனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆகவே லைலதுல் கத்ர் இரவை ரமழான் மாதத்தில் 29ம், 27ம், 25ம் இரவிலும் தேடுங்கள் என்றார்கள். (புஹாரி 2023)
இது தவிர ஆயிஷா (ரலி) அவர்கள் றமழான் மாதத்தில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப் படையான இரவுகளில் லைலதுல் கத்ரை தேடுங்கள். (புஹாரி 2017)
மேலும் ஒரு ஹதீஸில் ஆயிஷா (ரலி) கூறுகையில் ரமழானின் கடைசிப் பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லற தொடர்பை நிறுததிக்கொள்வார்கள்.
இரவை (அல்லாஹ்வை தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (அல்லாஹ்வை வணங்குவதற்காக) குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். (புஹாரி 2024)
இவ்வாறு அதிக நேரம் இரவு வணக்கங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தனது கால்கள் வீங்கும் அளவு நின்று இரவு வணக்கங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தராவீஹ், வித்ர் போன்ற தொழுகைகளை அதிக நேரம் தொழுதுள்ளார்கள். இது தவிர குர்ஆன் திலாவத், திக்ர் போன்ற விடயங்களிலும் அதிக நேரம் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒருவர் தான் மேற்கொள்ளும் வணக்கங்கள் அனைத்தும் இறை அச்சத்தோடும், உளத்தூய்மையோடும் மேற்கொள்ளல் வேண்டும். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. “செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே. ஒருவன் தான் எந்த நோக்கத்தோடு ஒரு விடயத்தைச் செய்கிறானோ அதற்கான கூலியையே அவன் பெற்றுக்கொள்வான்.” (முஸ்லிம்)
சங்கைமிக்க லைலதுல் கத்ர் இரவிலே மலக்குகள் பூமிக்கு இறங்குகிறார்கள். இத்தினத்திலேயே தான் அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இக்குர்ஆனில் ஒன்பது இடங்களில் மட்டுமே லைலதுல் கத்ர் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
இத்தினத்தில் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருந்து இந்த இரவின் பலன்களை பெற்றுக்கொள்கின்றனர். அதிக நேரம் வணக்கங்களில் ஈடுபட்டு பலகோடி நன்மைகளை பெற்றுக்கொள்கின்றனர்.
இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. “றமழான் காலங்களில் ஒன்றுக்கு எழுபது மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. (ஹதீஸ்) றமழானின் கடைசிப் பத்து நாட்களும் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள் என இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள். (புஹாரி 2025)
மேலும் அளவற்ற நன்மைகளையும் பல மடங்கு கூலியையும் இம்மாதத்தில் தன் அடியார்களுக்கு அள்ளி வழங்குகின்றான். இது பற்றி ஹதீஸ் குத்ஸியில் பின்வருமாறு கூறப்படுகிறது. நோன்பு எனக்காக நோற்கப்படுவதாகும். அதற்குரிய கூலியை நானே வழங்குகிறேன்.
றமழானின் இறுதிப் பத்தில் உள்ள நாட்கள் நரக விடுதலைக்குரிய நாட்களாகும். இந்நாட்களில் தாம் செய்த பாவங்களுக்கு மனம் இரங்கி மன்னிப்பு கோர வேண்டும்.
இதனை பின்வரும் ஹதீஸ் விளக்குகிறது.
“இந்த மாதத்தின் முதல் பகுதி அருள் நிறைந்தது. நடுப்பகுதி பாவமன்னிப்பு மிக்கது. இறுதிப் பகுதி நரக விடுதலைக்கு உரியது.” (பைஹகீ) மற்றுமொரு இடத்தில் யார் றமழானில் நன்மையை எதிர்பார்த்து ஈமானுடன் இரவுத் தொழுகையில் ஈடுபடுகிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். (நபி (ஸல்)
இவ்வாறு ரமழான் மாதத்தில் நரக விடுதலை கிடைப்பதோடு அதிக நன்மைகளும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.
ரமழானில் அதிக தான தர்மங்கள் செய்து நன்மைகள் அதிகம் பெற வாய்ப்பு உள்ளது. விசேடமாக ‘பித்ரா’ என்ற தர்மம் உள்ளது. இது தவிர ஹதியா, ஸதகா போன்றனவும் நடைமுறையில் உள்ளன.
இதனையே நபி (ஸல்) அவர்கள் வலக்கை கொடுக்கும் தர்மத்தை இடக்கை அறியாத வண்ணம் தர்மம் செய்யுமாறு கூறி உள்ளார்கள்.
எனவே நாமும் இந்த ரமழான் நமது வாழ்நாளில் உள்ள இறுதி றமழான் என நினைத்து அதன் பலனை உரிய முறையில் அடைவோமாக!

Sunday, September 5, 2010

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து


எமது ஊரில் நிறையவே பயிர்ச் செய்கை நிலங்கள் காணப்படுகின எனினும் அதை தரிசு நிலமாக மாற்றும் கூட்டமே அதிகம் காணப்படுகின்றன.இவ்வாறான ஓர் நிலைப்பாட்டில் தனது மூன்றாவது மொட்டை மாடியில் பயிர் செய்து புதிய பயிர்ப் பேதம் உருவாக்கிய வரலாறு உண்டு.இது உங்களுக்கு தெரியுமா?அதுவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம்.சம்மாந்துறை விளினியடிச் சந்தியில் ஓய்வு பெற்ற முன்னால் பல-நோக்குக் கூட்டுறவுச் சங்க சபைச் செயலாளர் திரு.றசீத் அவர்களின் பொழுது போக்கு முயற்ச்சியே ஆகும்.இவர் குடியிருப்பது பிரதான வீதியில் ஆகும்.எனவே இவர் பயிர் செய்வதற்கு ஓர் அங்குல இடம் காணப்படவில்லை.இருந்தும் மன்முன்டால் இடமுண்டு எனும் பழமொழிக்கு உயிப்பூட்டியுள்ளார்.இவர் தனது கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஓர் அரையடிக்கு மண்ணிட்டு தனது பயிர்ச் செய்கையை மேற்க் கொண்டார்.தற்பொழுது அது ஓர் பல் நாட்டு மரக்கறிகளின் இராச்சியமாக மாறியுள்ளது.அவர் கூறுகையில்-
தான் சென்ற வருடம் இத் தோட்டத்தைச் செய்ய ஆரம்பித்ததாகவும் தற்பொழுது தனது பயிர்ச் செய்கையில் பூரண வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.மேலும் இவர் கூறுகையில் தான் ஓர் புதிய இன வெண்டி ஒன்றைக் கலப்புச் செய்து உருவாக்கியுள்ளதாகவும்,அது சிறிய பருவத்திலேயே காய்க்கக் கூடியது எனவும் அத்துடன் சிறந்த நோய் எதிர்ப்புள்ள வீரியமான இனம் இது எனக் குறிப்பிட்டார்.இவ்வாறான திறமையுள்ள எத்தனையோ திறமைசாலிகள் எமது ஊரிலே காணப்பட்ட பொழுதும் அவர்களுடைய திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.எனவே இவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வர எமது செய்திப் பிரிவு தொடர்ச்சியாக உழைக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான திறமைகளை நீங்களும் இனங்காட்டலாம்.



















நோன்பின் கொண்டாட்டம் பள்ளிவாசல்களின் அழகில்

சம்மாந்துறை புதுப் பள்ளிவாசல்
சம்மாந்துறை புதுப் பள்ளிவாசல்
நோன்பின் தரிசனம் பள்ளிகளின் ஆனந்த அழகை ஆர்ப்பரிக்க வைக்கின்றன.இவ்வாறான நோன்பின் தரிசன அழகைச் சுட்டும் அழகான வர்ண ஜாலங்கள் நாளை வெளி வரும்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் துரித வளர்ச்சி

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியானது தற்பொழுது  மிக வளர்ச்சி கண்டுள்ளது.இது DR.A.இஸ்ஸதீன் அவர்களின் வருகையை தொடர்ந்தே இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.இவ் அபிவிருத்தி தொடர்பான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.






Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.