Sunday, September 9, 2012
நாளை மாகாண சபைத் தேர்தலில் வெற்றி ஈட்டிய வேட்பாளர்களின் நேரடி வெற்றிக் கொண்டாட்டம் எமது சம்மாந்துறை இணையத்தளத்தில் இணைத்திருங்கள் எம்மோடு www.sammanthuraihotnews.blogspot.com
கொண்டாட்டம் எமது சம்மாந்துறை இணையத்தளத்தில் இணைத்திருங்கள் எம்மோடு
www.sammanthuraihotnews.blogspot.com
சம்மாந்துறை இணையத்தள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வேட்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரம்
கூட்டமைப்பு வேட்பாளர் எம்.எல்.ஏ.அமீர் டீ.ஏ அவர்களையும் சம்மாந்துறை
இணையத்தள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர்களது அரசியல் நகர்வுகளை செய்திகளாக வழங்க எமது இணையத்தளம் காத்துக்
கொண்டிருக்கிறது.
ரவூப் ஹக்கீமை கலந்துரையாடலுக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு
குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக
தொலைபேசி அழைப்பு வந்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு
முன்னர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும்.
எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி
ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். TM
தீர்மானம் மேற்கொள்வதில் அவசரப்படமாட்டோம் - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
வாக்குகள் தமக்கு தோல்வியல்ல என தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் இது
முஸ்லிம்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின்
அடுத்தகட்ட நடவடிக்கை யாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன்
அலியிடன் யாழ் முஸ்லிம் வினவியது. இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட
அவர் கூறியதாவது,
இடர்பாடுகள், அச்சுறுத்தல்கள் அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கிடையேதான்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்றுள்ளது.
அம்பாறையில் நாம் தனித்து 4 நின்று ஆசனங்களைப் பெற்றுள்ளோம். உண்மையில்
இதுதான் வெற்றி. திகாமடுல்ல முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு 3
தொகுதிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். அவர்களுக்கும் முஸ்லிம்
காங்கிரஸுக்கு கிழக்கு மாகாணம் பூராகவும் வாக்களித்தமக்களுக்கு நன்றி
சொல்கிறோம்.
மக்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடாகவே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தல்
முடிவுகளை நோக்குகிறது. மக்களின் தீர்மானத்திற்கமையவே எமது முடிவுகளும்
அமையும். இருந்தபோதும் எந்தக்கட்சி ஆட்சியமைக்க உதவுவது என்ற தீர்மானத்தை
அவசப்பட்டு மேற்கொள்ளமாட்டோம். முஸ்லிம் சமூகத்தை முதன்மைப்படுத்தியே
எமது திர்மானங்கள் அமையும்.
கிழக்கு மாகாண ஆட்சி மற்றும் முஸ்லிம் முதலமைச்சர் தொடர்பில் எந்தக்
கட்சியுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு நடாத்தும். நாங்கள் ஜனநாயக
கட்சி. அந்த அடிப்படையில் நாங்கள் இதற்கான உரிமையை பெற்றுள்ளோம்.
அத்துடன் நாளை திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்
முக்கியஸ்தர்கள் ஒன்றுகூட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து
ஆராயவுள்ளதாகவும் ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
15 முஸ்லிம் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு
சபைக்கு தெரிவாகியுள்ள அம்பாறை ,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட
மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளுடன் தருகிறோம்
திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா நான்கு என்ற
அடிப்படையில் மொத்தமாக 08 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 07 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதன்
பிரகாரம் மொத்தமாக 15 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர், அதேவேளை
தமிழ் பிரதிநிதிகள் மொத்தமாக 12 பேர் தெரிவாகியுள்ளனர், சிங்கள
பிரதிநிதிகள் மொத்தமாக 07 பேர் தெரிவாகியுள்ளனர் (போனஸ் ஆசனங்கள் பற்றிய
விபரம் இடத்தில் உள்ளடக்கப் படவில்லை)
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்.
அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்- 11,726 -UPFA
ரம்ழான் அன்வர்- 10,904 -SLMC
ஹசன் மௌலவி- 10,123-SLMC
இம்ரான் மஹ்ரூப்- 10, 048-UNP
மட்டகளப்புமாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் .
அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி 21,271-UPFA
பொறியியலாளர் சிப்லி பாறூக் 20,407-UPFA
முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் – 19,303-UPFA
அஹமட் நசீர் செயினலாப்தீன் 11,401- SLMC
அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் .
ஆதம்பாவா தவம், 32,330-SLMC
ஏ.எம்.ஜெமீல் 22,357-SLMC
ஐ.எம்.எம். மன்சூர் 21759-SLMC
ஏ.எல்.எம். நசீர் 18,327-SLMC
எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033-UPFA
ஆரிப் சம்சுதீன் 19,680-UPFA
ஏ.எம்.அமீர் 19,671-UPFA
திருகோணமலை மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்
இலங்கை தமிழரசுக் கட்சி
எஸ். தண்டாயுதபாணி- 20,850
குமார்சுவாமி நாகேஸ்வரன்- 10,910
ஜெஹதீஸன் ஜனார்த்தனன்- 8,560
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆரியவதி கலபதி- 14,224
பிரியந்த பத்திரன- 12,393
அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்- 11,726
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ரம்ழான் அன்வர்- 10,904
ஹசன் மௌலவி- 10,123
ஐக்கிய தேசிய கட்சி
இம்ரான் மஹ்ரூப்- 10, 048
தேசிய சுதந்திர முன்னணி
ஜயந்த விஜயசேகர- 7,303
மட்டக்களப்பு மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்
இலங்கை தமிழரசுக் கட்சி
இரா. துரைரெத்தினம்- 29,148
கே. துரைராஜசிங்கம்- 27,719
ஞா.கிருஷ்ணபிள்ளை- 20,200
இந்திரகுமார் பிரசன்னா- 17,304
மா.நடராசா- 16,681
கோ.கருணாகரம்-16,536
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
சிவனேசத்துரை சந்திரகாந்தன்- 22,338
அமைச்சர் எம்.எஸ்.அமீரலி- 21,271
சிப்லி பாரூக்- 20,407
எம்.எஸ்.சுபையிர்- 19,303
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஹாபீஸ் நஷீட் அஹமட்- 11,401
அம்பாறை மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
விமலவீர திசாநாயக்க 31815
எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033
டி.வீரசிங்க 20,922
ஆரிப் சம்சுதீன் 19,680
ஏ.எம்.அமீர் 19,671
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆதம்பாவா தவம், 32,330
ஏ.எம்.ஜெமீல் 22,357
ஐ.எம்.எம். மன்சூர் 21759
ஏ.எல்.எம். நசீர் 18,327
ஐக்கிய தேசிய கட்சி
யா கமகே 41,064
சந்திரதாஸ கலபதி 20,459
இலங்கை தமிழரசுக் கட்சி
தவராஜா கலையரசன் 12,122
ஐ. முருகேசு 10,812
Saturday, September 8, 2012
provincial council election 2012 eastern province
Freedom Alliance 200,044 31.58 % 14* members Ilankai Tamil Arasu
Kadchi 193,827 30.59 % 11 members Sri Lanka Muslim Congress 132,917
20.98 % 7 members United National Party 74,901 11.82 % 4 members
National Freedom Front 9,522 1.5 % 1 member
--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*
இன்றைய தேர்தல் வாக்களிப்பின்போது பத்து வன்முறைச் சம்பவங்கள், இருவர் கைது - பெப்ரல் அமைப்பு
இருப்பினும், பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இல்லை எனவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுரம் வெளியிடல், விருப்பு இலக்கத்தை பார்வைக்கு வைத்தல் உள்ளிட்டவை குறித்தே முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து சிலரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் எனினும் பொதுவாக நோக்குமிடத்து தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியோர் என்ற வகையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் போலியாக வாக்களிக்க முனைந்தார் என கிண்ணியாவிலும் மற்றையவர் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என ஹொரவப்பொத்தானையிலும் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கில் சுமூகமான தேர்தல்: தற்போது 48 வீதமான மக்கள் வாக்களிப்பு
3 மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது
வாக்களிக்க தகுதி – 33,36,417
வாக்குச்சாவடிகள் – 3247
வாக்கு எண்ணும் நிலையம் – 236
* தொகுதி வாரியாகத் தேர்தல் முடிவு
* 3 மாகாணங்களில் 37 தொகுதிகள்
* 21,000 பொலிஸ் கடமையில்
* 4,000 கண்காணிப்பாளர்கள் களத்தில்
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை 3073 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 2011ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் இன்று இடம்பெறும் தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் (33,36,417) வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 (3,247) வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகியது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்துவரப்பட்டுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரசாங்க ஊழியர்களும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பிப்பர்.
மூன்று மாகாண சபைக்குமுரிய தேர்தலை கண்காணிப்பதற்கென இம்முறை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக கண்காணிப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும். தேர்தல்கள் திணைக்களத்தினால் 400 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் கண்காணிப்பு நிறுவனங்கள் நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை 06 ஆம் திகதி முதல் 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண குறிப்பிட்டுள்ளார்.வாக்குச் சாவடியொன்றுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் மூவர் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவரெனவும், மூன்று மாகாண சபைகளுக்குமுரிய தேர்தலுக்குமென 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 1400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர்.
மேலும் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் இவர்களில் உள்ளடக்கப்படுவரெனவும், பொலிஸார் வாக்குச் சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுப்பர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனவும் அவர் சுட்டிக்காடடி உள்ளார்.
இதுவரை அமைதியான சூழலே காணப்படுவதாக கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் நடைபெறும் இடங்களில் அமைதியினை குழப்ப முயற்சித்தால் நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை மறுநாள் நாளை காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி ஆணையாளர் மொஹமட் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் 236 நிலையங்களில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுககு பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பாளர்களுக்கு பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 26 நிலையங்களிலும் திகாமடுல்லையில் 29 நிலையங்களிலும் திருகோணமலையில் 19 நிலையங்களுமாக கிழக்கு மாகாணத்தில் 74 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில் 42 நிலையங்களிலும் பொலன்னறுவையில் 23 நிலையங்களிலுமாக வடமத்திய மாகாணத்தில் 65 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும். கேகாலையில் 47 நிலையங்களிலும் இரத்தினபுரியில் 50 நிலையங்களிலுமாக சப்ரகமுவ மாகாணத்தில் 97 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1162 வாக்குச்சாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 414 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 14 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர் (3,47,099) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 14 பேரை தெரிவு செய்வதற்காக 17 பேர் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 (4,41,287) பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 463 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும். இங்கு 285 வாக்களிக்கும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் 10 பேரை தெரிவு செய்வதற்காக 13 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்க ளிலும் 1189 வாக்குச் சாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படும். இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலிய கொட, இரத்தினபுரி, பெல்மதுள்ள, பலாங்கொடை, இறக்குவானை, நிவித்தி கலை, கலவானை, கொலன்ன ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 623 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 24 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் தெதிகம, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை, மாவனல்லை, அரநாயக்க, எட்டியாந் தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகலை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 566 வாக்களிப்பு நிலையங்களில் நாளை தேர்தல் நடத்தப்படும். இங்கு 18 பேரை தெரிவு செய்வதற்கென 21 பேர் போட்டியிடுகின்றனர். 6 இலட்சத்து 31 ஆயிரத்து 981 பேர் இம்மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 895 வாக்குச் வாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படும். அநுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி, ஹொரவப்பொத்தானை, அனுராதபுரம் கிழக்கு, அநுராதபுரம் மேற்கு, கலாவெவ, மிஹிந்தலை ஆகிய ஆறு தேர்தல் தொகுதிகளிலும் 608 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 21 பேரை தெரிவு செய்வதற்கென 24 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 6 இலட்சத்து 6 ஆயிரத்து 508 பேர்வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் மின்னேரியா, மெதிரிகிரிய, பொலன்னறுவை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 287 வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும். இங்கு 10 பேரை தெரிவு செய்வதற்கென 13 பேர் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 365 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உத்தியோகப்பூர்வ தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 27, 28 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்டதுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மாகாண சபைகளும் ஜூன் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டன. ஜுலை 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜுலை 12 முதல் 18 வரையான காலப் பகுதிக்குள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. ஏழு மாவட்டத்திலுமிருந்து 91 கட்சிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இதில் இரண்டு கட்சிகள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 88 சுயேட்சைகளிலும் இரண்டு சுயேட்சைகள் நிராகரிக்கப்பட்டன. வாக்காளர் அட்டைகள் ஒகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Friday, September 7, 2012
அனுமதிப் பத்திரமின்றி கொண்டு வரப்பட்ட மாடுகள் பிடிப்பு
Wednesday, September 5, 2012
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கவனத்திற்க்கு.
அம்பாறையில் சுதந்திரமாக தேர்தலை நடாத்த முடியாது?
கிழக்கு மாகாணமே தேர்தல் விதிமீறல்கள் அதிகரிக்கும் மாகாணமாக உள்ளதாகவும் கஃபே அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நீலநிற ஆடைகளுடன் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்திவருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான, நீதியான தேர்தலை உறுதி செய்வதற்காக காவல்துறையினருடன் இணைந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.
பதவிநிலை அதிகாரிகள் தரத்தில் இருப்பவர்களைத் தவிர ஏனைய அரச ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் இருப்பதாகக் கூறிய பிரதி ஆணையாளர், ஆனால் அவர்களை பிரசாரங்களில் ஈடுபடுமாறு அமைச்சோ அரச திணைக்களங்களோ பணிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
Sunday, September 2, 2012
எமது இணையத்தளத்தினை பதிவு செய்தால் மாத்திரமே செய்திகளை இட முடியும் என்ற நிலைக்கு எமது இணையத்தளம் தள்ளப்பட்டுள்ளது மேற்படி நிலையானது அரசாங்கதினுடைய அண்மைய சுற்றுநிருபத்தின் பிரகாரம் 25000 ரூபா இனை செலுத்தி ஊடக அமைச்சில் பதிவு செய்ய வேண்டியுள்ளது இதன் காரணமாகவே எமது செய்தி இடும் நிலை தடைப்பட்டுள்ளது. எமது அர்ப்பணிப்புடனும் பல சவால்களுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இணையத்தளத்தினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உதவிக் கரம் நீட்டுகின்றோம் எமது இணையத்தளத்திற்கு உத்வி செய்து எம்து தொடர்ந்தேர்ச்சியான சேவைக்கு உதவுங்கள். உதவ விரும்புவோர் கீழ்க் காணும் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்-sammanthurainews@gmail.com contact no- 0752066666,0752912336 account no- 00642010029418 peoples bank sammanthurai.
Saturday, August 25, 2012
சம்மாந்துறை பெயர் வரலாறு நூல் வெளியீடு
நூல் எழுத்தாளரிட்ம இருந்து உத்தியோக பூர்வமாக அமைப்பின் தலைவருக்கு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நூலின் முதல்ப் பிரதியை நூல் ஆசிரியர் மற்றும் அமைப்பின் தலைவரிடமிருந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பெற்றுக்கொண்டார்.நிகழ்வில் மூத்த இலக்கியவாதி கலாபூஷணம் மாறன். யூ.ஸெயின் அவர்களின் சிறப்புரையும் எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன் அவர்களின் நூல் அறிமுக உரையும் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் சிறப்பு உரையும் இடம்பெற்றது..
சம்மாந்துறை வாழும் இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.எம்.சமீர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் போராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத்தலைவர் ஐ.ஏ.ஜப்பார் மற்றும் முன்னாள் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சுர் ஆகியோரும் இன்னும் பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
Monday, July 30, 2012
வாழும் கலை இலக்கிய வட்டத்தில் இப்தார் நிகழ்வு
மேலும் இந்நிகழ்வில் புதிய அங்கத்தவர்களுக்கான உத்தியோக பூர்வ விண்ணப்பப் படிவங்களும் தலைவர் சமீர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், அங்கத்தவர்களிடையே சினேகபூர்வ சமூகநலக் கலந்துரையாடல்களும் எதிர்கால இலக்குகள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்களும் இடமபெற்றன
Friday, July 27, 2012
சம்மாந்துறை VTCயி ல்PROFILE BACKER COURSE ஆரம்பிக்கப் பட்டுள்ளது
சம்மாந்துறை VTCயி ல் ஆரம்பிக்கப்பட்டுள்ள PROFILE BACKER இலங்கையில் முதன் முறையாக தமிழ் மொழி மூலம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஹோட்டல் தொழிற்துயின் உணவு தயாரிப்புகாக பாட நெரியானது L3 2ND BATCH க்காண மாணவர்களுக்கான பதிவுகளில் இன்னும் 4 மாணவர்களுக்கான இடம் இருப்பதனால் தங்களின் பதிவுகளுக்கு 0752384484 என்னும் இலகத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
இப்பயிற்ச்சில் கிடைக்கும் நன்மைகள்
1. உள்நாட்டிலேயே பயிற்சியின்பின் (06 மாத கால பயிற்ச்சி பிரபல ஹோட்டல்களில் சம்பலத்தோடு (வோளை )(OGT)
2.அறபு நாடுகளில் (3500 றியால்களுக்கு ) மேல் சம்பலம்
Wednesday, July 11, 2012
சம்மாந்துறையில் கராட்டி வகுப்பு மீண்டும் ஆரம்பம்.
அகில இலங்கை சோட்டாகன் கராட்டி டு கென்சின்காய் அசோசியேசனின் போதனாசிரியர் முஹம்மட் இக்பால் அவர்களால் நடாத்தப்படுகிறது.Monday, July 9, 2012
தென் கிழக்கு பல்கலைக்கழக SUGAS அமைப்பினரினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு விழா
தென் கிழக்கு பல்கலைக்கழக இளநிலைப்பட்டதாரிகள் சம்மாந்துறை ஒன்றியத்தினால் கடந்த 2012.07.06ம் திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நாடாத்தப்பட்ட தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர். எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களுக்கு கௌரவிப்பு விழா நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் உபவேந்தர் உட்பட,
கலாநிதி: கலீல், கலாநிதி: றமீஸ் அப்துல்லாஹ், Mrs: Sareena UMA. Gafoor, திருமதி: ஐனுல் ஜாரியா, சல்பியா யூ.ஏ. ஜலீல், எம்.எம்.றிபாயூடீன், ஏ.தையூப், ஏ.ஆர்.எம்.மாஹிர் ஆகியோருக்கும்
கௌரவிப்பு வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் பல்வேறு அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
Monday, June 11, 2012
சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் ஜனாப் P.M.M. இப்றாகீம் ஆசிரியர் 39 வருட சேவையின் பின் ஒய்வு


தனது ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை தாறுல் உலும்வித்தியாலயத்தில் பயின்று அதன் பின் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலையத்தில் உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் கற்றுக்கொண்டிருக்கையில் 1973ம் ஆண்டு கணித/விஞ்ஞான ஆசிரியராக சம்மாந்துறை அல்-மர்ஜான் மக்ளிர் கல்லூரியில் ஆசிரியர் நியமனம் கிடைத்தது 1974ம் ஆண்டு 12 மாணவர்களை 5ம் தர புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைச்செய்து நன்மதிப்பை பெற்றிருந்தவர் 1976/1977 பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் உடற்கல்விப்பயிற்ச்சி ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு 2வருட பயிற்சியினை முடித்தபின்னர் 1978ம் ஆண்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலைய தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராகநியமனம் பெற்று அக்காலத்தில் அதிகமான மாணவர்களை ஒட்டம்,பாய்தல் பெருவிளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் அகில இலங்கை மட்டத்துக்கென பயிற்றுவித்து வெற்றிகளை ஈட்டித்தந்தவர் பாடசாலைக்கும் பெருமைதேடித்தந்தவர்.
2000 ஆண்டு பிரதி அதிபராக பொறுப்பேற்று 9,10,11 ம் தர ஆண்கள்பிரிவிற்கு பொறுப்பு அதிபராக செயல்பட்டு அந்த மாணவர்களை நன்றாகவழிநடாத்தி அவர்களின் O/L பெறுபேற்றை உயர்த்தி பல சாதனைகளும் புரிந்தார் இக்காலத்தில் ஆசிரியர்பற்றாக்குறை காணப்பட்டது. பல இடங்களில் இருந்து ஆசிரியர்களை இப்பாடசாளைக்கு கொண்டுவருவதில் கடும் அக்கறைகாட்டி அவர்களை இப்பாடசாலைக்கு கொண்டும் வந்தார்.
இவர் இப்பாடசாலையில் கட்டுப்பாட்டுக்குழு, விளையாட்டுக்கழகத்தின் தலைவராகவும், பாடசாலை பெளதீக் வளங்கள், தளபாடம், இலவசப்புத்தகம், இலவச சீருடை விநியோகம், பாடசாலையின் சிரமதானக்குழுக்களின் பொருப்பாளராகவும் செயற்பட்டர் இன்னும் O/L மாணவர்களின் மேலதிகவகுப்புக்களை ஆரம்பித்தார் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொடுத்த இவர் பாடசாலையின் முதலுதவிப்படைக்கு தலைமைதாங்கிச்சென்று அம்பாரை மாவட்ட முதலுதவிப்படைக்கு ஆணையாளராகவும் பதவியேற்றார்.
இவ்வாறு தமது பத்விக்காலத்தில் தம்மிடம் ஒபடைக்கப்பட்ட வேலையை செவ்வனே நிறைவேற்றி நன்மதிப்பையும் புகழயும் ஈட்டிக்கொண்டார்.
Saturday, June 2, 2012
தமிழ் மொழித்தினப்போட்டி – 2012
கல்விகற்கும் மாணவி செல்வி யு.று.கு. சாஹிறா பானு அவர்கள் மாகாண மட்ட தமிழ்தின போட்டியில் 5ம்
பிரிவில் கவிதை ஆக்கம் நிகழ்ச்சியில் 2ம் இடத்தை பெற்றுள்ளார்மேற்படி மாணவியை பயிற்றுவித்த
ஆசிரியர் ஜனாப் ஆ.ஐ. அஹமட் லெப்பை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Saturday, May 12, 2012
சம்மாந்துறை முபோ இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் பரிசளிப்பு விழாவும் சாதணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்
பரிசளிப்பு விழா ஒன்றினை நடாத்தவுள்ளது. இவ் விழாவில் முபோ இளைஞர் விளையாட்டுக் கழகத்தின்
வெற்றி வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்ää தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில்
வெற்றி பெற்று சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு பெருமை ஈட்டித்தந்த பளம் பெரும் விளையாட்டு
வீரர்களையும்ää இளம் விளையாட்டு வீரர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. மேலும் இவ்
விழாவில் பரிசளிப்பு விழா தொடர்பான நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இவ் விழாவுக்கு
பிரதம அதிதியாக தென்கிழக்குப் பழ்கலைக் கழக உபவேந்தர் டொக்டர் அல் ஹாஜ் ளு.ஆ.ஆ. இஸ்மாயில்
அவர்களும்ää கௌரவ அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் யு.ஆ.ஆ. நௌசாட்
அவர்களும்ää விஷேட அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச செயலக செயலாளர் யு.ஆ. மன்சூர் அவர்களும்
கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ் விழாவானது எதிர்வரும் 18.05.2012 ம் திகதி வெள்ளிக் கிழமை
பி.ப. 6.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் (நகர மண்டபம்) மிகவும் கோலாகலமாக
நடைபெறவுல்லதாக முபோ இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஆ.ளு.ஆ. பர்ஹான் தெரிவித்தார்.
Thursday, May 3, 2012
அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவி முதலிடம்
தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கல்விப் பிரிவினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய மாணவி செல்வி எம். என். பாத்திமா சுமையா முதலிடம் பெற்றுக்கொண்டார்.
கொழும்பு அல் இக்பால் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இன் நிகழ்வில் தேசிய மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர். எம். எம். ரத்னாயகவினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தரம் 8 ஆம் பிரிவு மாணவர்களுக்கிடையே இப்போட்டி நிகழ்ச்சி தேசிய ரீதியில் நடைபெற்றது. சம்மாந்துறையை சேர்ந்த இம்மாணவி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நிதியாளர் கே. எல். எம். நசீர், சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய ஆசிரியை சரிபா முகம்மது நசீர் ஆகியோரின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, April 25, 2012
பிரதேச சாஹித்திய கலாச்சார விழா போட்டிகள்- 2012
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் சுற்று நிருபத்திற்கமைய சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் பிரதேச சாஹித்திய கலாச்சார விழாவிற்கான போட்டி நிகழச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் தகுதியுடைய ஆர்வமும்,ஆற்றலும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்களது ஆக்கங்களை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 30 ம் (2012-04-30)திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும். பாடசாலை மாணவர்களுக்கான கனிஸ்ட பிரிவில் கட்டுரை, கவிதை, பாடல்,கையெழுத்து போட்டிகளும். சிரேஸ்ட பிரிவில் கட்டுரை, கவிதை போட்டிகளும்
தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம்
தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து நாடு தழுவிய ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.
கோரிக்கைகள்
தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல் இடம் மாற்றம் செய்யப்படக் கூடாது.
காலம்:
27.04.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் (2.00 மணி முதல் 4.00மணி வரை)
இடம்:
மாலிகாவத்தையில் அமைந்துள்ள SLTJ தலைமையகத்திற்கு முன்னிருந்து கொழும்பு கோட்டை வரை பேரணி தொடரும்.
அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க (ஆண்கள் பெண்கள் உட்பட)அனைத்து முஸ்லிம்களையும் அணிதிரளுமாறு அழைக்கிறது
குறிப்பு:
இப்போராட்டம் அத்து மீறி செயல்பட்ட
கடும்போக்கு சிங்களவர்களுக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. அனைத்து
சிங்களவர்களுக்கும் எதிராக அல்ல. மற்றும் இப்போராட்டம் மிகவும் அமைதியான
முறையயில் நடத்தப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)
குறிப்பு:
இப்போராட்டம் அத்து மீறி செயல்பட்ட கடும்போக்கு சிங்களவர்களுக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. அனைத்து சிங்களவர்களுக்கும் எதிராக அல்ல. மற்றும் இப்போராட்டம் மிகவும் அமைதியான முறையயில் நடத்தப்படவுள்ளது.
தொடர்புக்கு: 0112677974, 0774781471, 0774781473,
Monday, April 9, 2012
100மில்லயன் ஒதுக்கீட்டில் காத்தான் குடி கொங்றீட் வீதிகள்அங்குராட்பணம்
காத்தான்குடி நகர பிதா எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மிணசாரம் மற்று்ம் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,அவர்களும் கௌரவ அதிதியாக சிறுவர் அபிவிருத்தி , மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ,மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வீதி நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.
Sunday, April 8, 2012
SUGAS அமைப்பின் பட்டதாரி மாணவர்களின் வரவேற்பும், பிரியாவிடை விழாவும்-2012
இலங்கை தென் கிழக்கு பல்கழைக்கழக இள நிலைப்பட்டதாரிகள் சம்மாந்துறை ஒன்றியத்தினால் 2010-2011 கல்வியாண்டில் புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களையூம் அதே ஆண்டில் பட்டப்படிப்பை ப+ர்த்தி செய்த பட்டதாரி மாணவர்களையூம் வரவேற்பும்>பிரியாவிடை விழாவூம் நேற்று அமைப்பின் தலைவர் எம்.எச.எம்.அம்ஜத் கான் அவர்களின் தலைமையில் அல் மார்ஜன் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வூகளும்,நினைவூச்சின்னம் வழங்கும் நிகழ்வூம் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு அதிதிகளாக.
Al-haj: Dr. SM. Ahamed Lebbe. (Senior Lecture, SEUSL) Chief Guest.
ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.Tuesday, March 27, 2012
வாசகர்கள் அனைவருக்கும்!
.எதிர் வரும் 3ஆம் திகதி முதல் எமது இணையத்தளமான WWW.SAMMANTHURAI.TK ஆனது WWW.SAMMANTHURAITK.COM எனும் புதிய நாமத்தோடு எமது ஊர் செய்தியை மட்டுமல்லாது இணையச் சஞ்சிகையாக புதுப் பொலிவுடன் வரக் காத்திருக்கின்றது.எனவே வாசர்கள் அனைவரும் 3ஆம் திகதி முதல் புதிய இணய முகவரியோடு எமது தளத்தினை அனுகுமாறு வினயமாய் கேட்டுக் கொள்கின்றோம்.
Saturday, March 24, 2012
பிரதேச சாஹித்திய கலாசார விழா
நாடுபூராகவும் ‘ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம்’ ஆரம்பம்
Thursday, March 22, 2012
ஒன்பது மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்!
இதன்படி அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன
8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை
ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.
வாக்களித்த நாடுகளின் முழு விபரம் வருமாறு:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
பங்களாதேஷ்- சீனா- கொங்கோ- கியூபா- ஈக்குவாடோர்- இந்தோனேசியா- குவைத் மாலைத்தீவு- மைவுரிடானியா- பிலிபைன்ஸ்இ-கட்டார்- ரஸ்யா- சவுதி அரேபியா- தாய்லாந்து- உகாண்டா.
இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள்:-
அவுஸ்திரேலியா- பெல்ஜியம்- பெனின்- கெமரூன-இ சிலி- கொஸ்டரீக்கா- செக் குடியரசு- கோத்தமாலா- ஹங்கேரி- இந்தியா- இத்தாலி- லிபியா- மொரிடஸ்- மெக்சிகோ- நைஜீரியா- நோர்வே- பெரு- போலந்து- மோல்டோவா- ரோமானியா- ஸ்பெயின்- சுவிட்ஸர்லாந்து- ஐக்கிய அமெரிக்கா- உருகுவே.
வாக்களிக்காத நாடுகள்:
அங்கோலா- போர்சுவானா- பேர்கினா பசோ- ஜிபூடி- ஜோர்தான்- கிர்கிஸ்தான்- மலேசியா- செனகல்.(எம்.ரி.-977)
தனியார் வைத்தியக் கல்லூரி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி அமைப்பது தொடர்பான ஆய்வூகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் வைத்து சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிக்கையை கையளித்தார். இது தொடர்பான நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர- சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)
அல் மதீனாப் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும்
சம்மாந்துறை அல் மதீனாப் பாடசாலையில் இன்று கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(டி.ஏ) அவர்களின் தலைமையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்இ தடம் புத்தக வெளியீடும் இடம் பெற்றதோடு ஓய்வு பெற்ற அதிபருக்கான கௌரவிப்பு நிகழவும் இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதிகள் வரிசையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பிரதிப் பணிப்பாளர்களான திரு.அஸீஸ் முகைதீன் அவர்களும் எச்.எம்.பாறூக் அவர்களும் ஜானாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்
Wednesday, March 21, 2012
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி - 2012
இந் நிகழ்விற்கு அதிதிகளாக,
எஸ்.எம்.எம்.ஹரிஸ் (பாராளுமன்ற உறுப்பினர்)
கலாநிதி: சீறாஸ் மீராசாஹிப் (மாநகர சபை முதல்வர்)
அல்ஹாஜ்: எம்.ரீ.எம்.தௌபீக் (வலயக் கல்வி அதிகாரி. கல்முனை)
ஏ.எல்.எம். சலீம் (பிரதேச செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு, போட்டி நிகழ்ச்சிப் பணிப்பாளராக கல்லூரியின் பிரதி அதிபர் A.A.Gafoor அவர்கள் பணிபுரிந்தமையூம் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
Sunday, March 18, 2012
VTC இல் தற்போது BAKER எனும் புதிய பாடநெறி
சம்மாந்துறை VTC இல் தற்போது BAKER எனும் புதிய பாடநெறி ஆரம்பித்துள்ளது. பாடநெறி முடீவில் NVQ தரச் சான்றிதழ் வழங்கப்படும். (பயிற்சி நெறி 03மாத காலம் மாத்திரமே.)
இப் பாடநெறிக்கு மேலும் 03 மாணவர்கள் தேவைப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலதிக தகவல்களுக்கு
Mrs: Jumaana Wazeem 075 23 84 484
இப் புகைப்படம் மேற்குறித்த பாடநெறி மாணவர்களால் செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
--
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
Friday, March 16, 2012
காருக்குள் கஞ்சா- சம்மாந்துறை பொலீஸார் மடக்கிப் பிடிப்பு
நேற்று அதிகாலை சம்மாந்துறையில் 19கிலோ கிராம் கஞ்சா பொதிகளுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் வைத்து நேற்று அதிகாலை 4.30 மணியளவில் 19கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகளுடன் வெள்ளை
நிற 6-5307இலக்க, 404-கார் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் பொருட்களை கொண்டு
வந்த கார் சாரதியும் சம்மாந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.சம்மாந்துறை பொலிசாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினை அடுத்து பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினை அடுத்து இவ்வாகனம் மல்வத்தையில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா பொதிகளை காரின் முன் பொனட்டில் பெருத்தப்பட்டுள்ள லைட் கோப்பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கஞ்சா பொதிகள் தனமல்வில பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகளை பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், பெருங்குற்றவியல் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம், பொலிஸ் பரிசோதகர் குமாரகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பார்வையிடுவதையும் இங்கு காணலாம். metromirro
Wednesday, March 14, 2012
உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..
உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள்.
ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும்.
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன.
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது என்று தெரிவித்து உள்ளார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா.இவர் அரச தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.இவர் இங்கு முக்கியமாக தெரிவித்தவை வருமாறு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை அமுல்படுத்த மேற்குலக நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தால் முடியவே முடியாது. ஏனெனில் இலங்கைக்கு தேவையான அன்னியச் செலவாணி வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்பட்டு வருகின்றன.இலங்கைக்கு அதிக அன்னியச் செலவாணியை பெற்றுக் கொடுப்பவர்கள் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்கள் ஆவர். எனவே இவர்களும் ஹீரோக்கள்தான். 2009 ஆம் ஆண்ட 813.91 மில்லியன் ரூபாய் வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் இருந்து கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 47.03 விகிதம். 2011 ஆம் ஆண்டில் 465.37 மில்லியன் ரூபாய் கிடைத்தது. இது மொத்த அன்னியச் செலவாணியில் 49.63 வீதம்.இலங்கை இன்று பொருளாதார ரீதியாக பலமாக உள்ளது. இதற்கு வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களின் பங்களிப்பே மிக முக்கிய காரணம் ஆகும்.ஸ்!
Thursday, March 8, 2012
தேசிய பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி
இறுதி நாள் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ்.அப10பக்கர் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக
கிழக்கு மகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்
பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் மற்றும் பாடசாலையின் முன்னால் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர்.
மேலும் இதில் வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இளந் நிகழ்வில் நேரடி ஒளி பரப்பு சேவையையும் எமது தள வரிசையினூடாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, March 7, 2012
பங்களாதேசத்தில் சவுதி அரேபியா தூதுவர் சுட்டுக் கொலை!
காயமடைந்த தூதர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் முன்பே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவி்த்தனர். பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் சவுதியில் 8 வங்கதேசத்தினர் கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் பொலிசார் கூறுகின்றனர்.
சவுதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன. வங்கதேச நாட்டிற்கு சவுதி அரேபியா பல வழிகளில் பெருமளவு நிதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Tuesday, March 6, 2012
2012 ஆம் ஆண்டு G.C.E A/L பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
புதிய பாடவிதானம் மற்றும் பழைய பாடவிதானங்களுக்கான விண்ணப்பங்கள் இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
தனியார் விண்ணப்பதாரிகள் உரிய காலத்திற்குள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.



.jpg)



















