Wednesday, December 21, 2011

தென் கிழக்கு பல்கலைக்கு குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள குவைத் நிதிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர். குறித்த நிதியுதவி குவைத் அரசாங்கத்தின் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என அந்நிதியத்தின் பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் குறிப்பிட்டார். இந்நிதியுதவியின் ஊடாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தரமான கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அத்துடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் தரமான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் என குவைத் நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குவைத் நிதியம் ஊடாக வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபாவை குவைத் நிதியம் முன்னர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு பல்கலைக்கழக நிதியுதவி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தர மற்றும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் ஆகியோர் இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அலாதீக் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர். இதேவேளை, நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 பாலங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் தெரிவித்தார். 1975ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்காக சுமார் 170 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை குவைத் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tuesday, December 20, 2011

தென்கிழக்கு பல்கலையும் BCAS நிறுவனமும் இணைந்து உயர்கல்வி பயிற்சிப் பட்டறை



இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை காலாச்சார பீட மாணவர்களுக்கான பிரதித்தானிய பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறை கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஏ. பாறுக் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறைக்கு  வீகாஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் ஏ.எம். நியாஸ் அதே பல்கலைக்கழகத்தின் மாணவ ஆலோசகர் அஸாம் ஏ. காதர் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்தினர்.

இந்நிகழ்வானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்க கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டிலும் வீகாஸ் பல்கலைக்கழகத்தின் அனுசரனையிலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் செயலாளர் திரு. என்.ஏ.ஏ. புஸ்பகுமார

தற்போது கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து ஆசிரியர் சமன்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்டு வருகின்ற ஆசிரியர்களது இடமாற்றம் முறையற்ற விதத்தில் நடைபெற்றுள்ளது என்று பரவலாக ஆர்ப்பாட்டங்களும், கோசங்களும் எழுப்பட்டுவரும் நிலையில் உரிய ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மேன்முறையீடு செய்திருப்பார்களாயின் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


குறிப்பாக தூரப்பிரதேசங்களுக்கு பெண் ஆசிரியைகள் இடமாற்றம் பெற்றுள்ளனர். இவர்களது இடமாற்றம் சம்பந்தமாக உரிய பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், இவ்வாறு அதிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பெண் ஆசிரியைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் அதேவேளை திருமணமாகாத ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த இடமாற்றதிற்கு உட்படுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சகல ஆசிரியர் தொழில் சங்கங்களையும் எதிர்வரும் 22ஆந்திகதி சந்திக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.

Monday, December 19, 2011

Community Policing வேலைத்திட்டம் அங்குரார்ப்பனம்.


GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில்Asia Foundation  இன் அனுசரனையில் 2011.12.16ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் முதன்முறையாக Community Policing வேலைத்திட்டம் ஆரம்பமானது.

இந் நிகழ்வின் ஆரம்ப கட்டமாக சம்மாந்துறை மலையடிக்கிரமம் - 01 இல் உள்ள பொது மக்களையும் மற்றும் கிராம நிலாதாரி, சமுரத்தி உத்தியோகத்தர் போன்றேரின் உதவியுடன் சமூக பொலிஸ் சேவை எனும் இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்பக் கூட்டம் இடம் பெற்றது.

மேலும் இந்நிகழ்வு ,
GAFSO நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் A.J.Kamil Imthath அவர்களின் தலைமையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அதிதிகளாக,
GAFSO நிறுவன பணிப்பாளர் :  Al- Haj  I.Abdul Jabbar
சம்மாந்துறை பிரதேச செயலாளர் : A. Mansoor
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி : Mr.Jayantha Thahanaka

GAFSO நிறுவன திட்டப் பணிப்பாளர் : A.J.Kamil Imthath
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.















மேலும் இவ்வேலைத்திட்டம் நிந்தவூர், காரைதீவு போன்ற பிரதேசங்களிலும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.



இவ் வேலைத்திட்டத்தில் இனைந்து செயற்படும் சம்மாந்துறை மக்கள் குழுவும், திட்டப் பணிப்பாளரையும்படத்தில் காணலாம்.


Saturday, December 17, 2011

இரத்த தான நிகழ்வு




இன்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் ஏற்பாட்டின் கீழ் இரத்த தான நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீPட் மண்டபத்தில் இடம் பெற்றது.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை நிலையத்தை ஆரம்பிக்கும் பொருட்டு அதற்கு தேவையான இரத்தங்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நிகழ்வாக இது இடம் பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்நிகழ்வில்
Dr. KKS.  பெரேரா (இரத்த வங்கி பொறுப்பதிபாரி) 
Dr. இப்றாலெப்பை (மாகாண சுகாதார பணிப்பாளர்)
Dr இஸ்ஸடீன் (MS)   

AMM. நௌஷாத் (பிரதேச சபை தவிசாளர்ää சம்மாந்துறை.)

ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.  

Friday, December 16, 2011

300 கோடி ரூபா செலவில் மலர்ந்தது தாமரைத் தடாகம்!





சீன அரசின் உதவியுடன் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நெலும் பொகுன எனும் தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கு நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. சீனாவின் பிரதிப் பிரதமர் தலைமையிலான சீனத் தூதுக் குழுவொன்றும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டது.

இலங்கையில் இவ்வாறானதொரு கலையரங்கம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். 3.08பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலையரங்கு சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிர்மாணப்பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2430 மில்லியன் ரூபாவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் 650 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் அண்டு இக்கட்டிடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதே வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஜுலை மாதம் இதன் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி இலங்கை மக்களின் கண்ணீர் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிபிட்டார்.

GCE (A/L) பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் இழுபறி!

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் இழுபறிநிலை காணப்படுகிறது. இது தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க ஆகியோர் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர்


நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் அறிவித்தார்.

எனினும் அப்பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிட முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அவற்றை வெளியிடுவதற்கு மேலும் ஒரு வாரம் காலம் எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க இன்று காலை பாராளுமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்தே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க மாற்று கருத்தை வெளியிட்டுள்ளார்.

Thursday, December 15, 2011

சட்டத்தரணியாக சத்தியபிரமாணம்...



சம்மாந்துறை மண் ஈன்றெடுத்த இன்னுமொரு சட்டத்தரணி எம். பீ. முஹம்மது பௌசான் இன்று (14. 12. 2001)  நண்பகல் 12.15 மணியளவில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of Sri Lanka) நீதியரசர் காமினி அமரதுங்க தலைமையிலான மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாத்தின் முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்து இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் தனது ஆரம்ப கல்வி, இடைநிலை கல்வி, உயர்தர கல்வி ஆகியவற்றை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்திலே  கற்று 2004 ல் யாழ். பல்கலைகழகத்தின் சட்ட பீடத்திற்கு  தெரிவானார். பின்னர் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடத்திற்கு மாற்றம் பெற்று 2010 ல் சட்டமாணி (LL.B) பட்டத்தினை பெற்றுக்கொண்டார். மேலும் அதே வருடம் சட்ட கல்லூரியின் இறுதி பரீட்சையில் சித்தி பெற்றார். 

இவர் 2004 ல் நடைபெற்ற வடக்கு கிழக்கில் ஆயிரம் ஆசிரியர்கள் நியமனதிட்கான போட்டி பரீட்சையில் சித்தியெய்து சம்மாந்துறை சென்னல் சாஹிரா வித்தியாலயத்தில் நிரந்தர ஆசிரியராக மூன்று மாதங்கள் பணிபுரிந்த வேளையில் சட்ட பீடத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Wednesday, December 7, 2011

ஆசிரியர் இடமாற்றம் ரத்துச் செய்யக் கோரி ஆர்பாட்டம்




ஏற்கனவே சம்மாந்துறை வலையத்தில் ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த சம்பவம் இடைநிறுத்தப்பட்டு தற்போது அது மீண்டும் உருவெடுத்துள்ளது.

 43 ஆசிரியர்களும் இதில் அதிகமான ஆசிரியர்கள் பெண்கள் என்பதால், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்க்கு முன்னால் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Friday, December 2, 2011

சம்மாந்துறை மண்ணின் தகவல் தொழிநுட்ப அறிவானது தற்பொழுது பண்டாரணாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில்

 தற்பொழுது பண்டாரணாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் எமது சம்மாந்துறை CSS குழுவினர் தமது தகவல் தொழிநுட்ப வல்லமையினை உலக அரங்கில் அரங்கேற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமே
                                                                       

Tuesday, November 29, 2011

மண்ணின் மைந்தன் பிரிந்தார்

சம்மாந்துறையில் நீண்ட நாட்கள் அரசியல் வாதியாக இருந்து தற்போது அரசியல் ஒய்வு பெற்றிருக்கும்.

முன்னால் அமைச்சர் பாரளுமன்ற உறுப்பினருமான

 M.A.அப்துல் மஜீட் அவர்கள்

இன்று காலமானார்.

இன்னாலில்லாகி வைஇன்னா இலைகி ராஜிஊன்.                                           

Monday, November 28, 2011

BMICH இல் இடம் பெறும் ICT கண்காட்சியின் நேரடி ஓளி,ஒலி பரப்பு சேவை

கொழும்பு BMICH  இல் நாடளாவிய ரீதியில்DECEMBER  2,3,4,5 ம் திகதிகளில் இடம் பெற இருக்கும் ICT கண்காட்ச்சியின் பல தரப்பட்ட பாடசாலைகள்,பல்கலை கழகங்கள் மற்றும் பல்வேறு பட்ட கல்வி நிறுவனங்களும் பங்கு பற்றும் அதே வேளையில் கிழக்கு மாகாணத்தில் சம்மந்துறையை பிரதி நிதித்துவப் படுத்தி சம்மந்துறை முஸ்லிம்மத்திய மகா வித்தியலையம்(தேசிய பாடசாலை) பங்கு பற்றுகின்றது.

இந்த கண்காட்ச்சியின் நேரடி ஓளி,ஒலி பரப்பு சேவைகள் உடனுக்குடன்  சம்மந்துறை முஸ்லிம்மத்திய மகா வித்தியலையம்(தேசிய பாடசாலை) அங்கத்தவர்கள் வழங்க இருக்கின்றனர்.

இதனை    www.smmmmvns.sch.lk
                     www.sammanthurai.tk 

ஆகிய இரண்டு இனணய தளங்களில் கானலாம்.                   

Sunday, November 27, 2011

EDC யின் O/L தின விழா




இன்ரு சம்மாந்துறை  EDC கல்வி நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டு O/L தின விழா நிகழ்ச்சி சது/அல்மர்ஜான் மக்ளிர் கல்லுரியில் இடம் பெற்றது.இதில் பிரதம அதிதியாக சட்டத்தரனி M.B.FOWZAN கலந்து கொண்டார்.மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறையில் நடமாடும் சேவை





சம்மாந்துறை பொலிஸ் நிலையதினால் 2011/11/26 ம் திகதி சனிக்கிழமை சது/ அல் மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் நடமாடும் சேவை இடம் பெற்றது.
                                                                       
இந்தநிகழ்வில் அத்திகளாக

பொலிஸ் உயர் அதிகாரிகள்.


பொலிஸ் சம்மாந்துறை பொறுப்ப்திகாரி.

பிரதேச சபை தவிசாளர்  A.M.M.NOESHAD

உதவி தவிசாளர்                A.KALILUL RAHMAN

பிரதம ந்ம்பிக்கையாளர்  AL-HAJ  I.ABDHUL JABBAR

பாடசாலை அதிபர்கள்

மதகுருமார்கள்     போன்றோரும் கலந்து கொன்டனர்.

இதன் போது

மேடை நிகழ்ச்சி

சம்மாந்துறை வைத்திய சாலையினால் வைத்திய பரிசோதனை இடம் பெற்றது.

அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் சம்மாந்துறை பிரதேச சபையினால் இடம் பெற்றது

சம்மந்துறை மத்தியஸ்தர் குழாவின் செயற்பாடுகள்.

இளைஞர்களுக்கான கரப்பந்தாட போட்டி



போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வு காலை 8.00 முதல் பி.ப 3.00 மணிவரையும் இடம் பெற்றது.

Sunday, November 20, 2011

கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் ஒருவர் பலி




கல்முனைஅக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

டிப்பர் வாகனத்தில் பயணித்தவரான சம்மாந்துறையைச் சேர்ந்த அர்ஸாத் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
சம்மாந்துறையிலிருந்து கல்முனை நோக்கி கல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்ட டயர் ரொட் உடைந்ததன் காரணமாக வழுக்கிச் சென்ற வாகனம் எதிரே வந்த லொறியுடன் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.