நாடு பூராகவும்
பரவிவரும் பெண்களை இரத்தம் ஓடச் செய்து பலியிடுதல் என்பது இப்போது கிழக்கு
மாகாணத்திலும் பரவி வருகிறது. சில தினங்களாக மட்டக்களப்பு எல்லைக்
கிராமங்களான ரிதிதன்ன, ஜெயந்தியாய பகுதிகளிலும் வெலிகந்தைப் பகுதியில்
கட்டுவன்வில, செவனபிட்டி பகுதியிலும் இந்தச் செய்தியால் மக்கள்
பீதியடைந்திருந்தனர். நேற்று ஓட்டமாவடிப் பகுதியில் நாவலடி, கேணிநகர்,
அமீரலி கிராமம், பாலை நகர் போன்ற எல்லைப் புற
கிராமங்களிலிருந்து மக்கள் தற்காப்பிற்காக அங்கிருந்து வெளியேறி பிற
பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஆண்கள் மாத்திரம் காவலுக்கு இரவு நேரங்களில்
தங்கியிருந்தனர்.
இன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நாவலடியில் வசிக்கும்
பெண்ணொருவரின் வீட்டுக்கு தண்ணீர் கேட்டுச் சென்ற இளைஞர் ஊசிபோன்ற கூரிய
ஆயுதத்தைக் கொண்டு தாக்கியுள்ளார். இதனால் இரத்தம் வெளியேறி இப்பெண்
மயக்கமுற்ற நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் ஊரவர்கள் கூடி அந்நபரைப் பிடித்து வாழைச்சேனைப் பொலஸில்
ஒப்படிடைத்தனர். பொலிஸ் இவரை கைது செய்யாது தப்பியோட விட்டதால் கோபமடைந்த
ஊர்மக்கள் ஓட்டமாவடி பிரதான வீதியில் திரண்டு போராட்டம் நடாத்திக்
கொண்டிருக்கி்ன்றனர். இச்சம்பவத்தின் போது போலீஸ் மக்களை நோக்கிச்
சுட்டதில் ஒருவர் தலையில் காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டார். கொழும்பு – மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துப் பாதையும்
மட்டக்களப்பு – திருகோணமலை போக்குவரத்துப் பாதையும் இதனால் முற்றாகத்
தடைப்பட்டுள்ளது.
அண்மையில் இதே போன்ற நிகழ்வுகள் பல எல்லைப்புற கிராமங்களில்
நடந்திருக்கின்றன. இரக்காமத்திலும் ஒரு பெண்ணை தாக்கிய இளைஞர் பொலிஸில்
ஒப்படைக்கப்பட்டும் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்
மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸைத் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களை இரத்தப் பலி கொடுப்பது புதையல் எடுப்பதற்காக இருக்கலாம் என்று
மக்கள் நம்புகின்றனர். நாடுபூராகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால்
அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Wednesday, August 10, 2011
கிறீஸ் யக்கா என்ற மர்ம மனிதர்கள்
நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ்
யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள்
தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது.
அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள்
உலாவருகின்றது.
இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ்
யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல
பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட
ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். தினமும் இடம்பெறும் சாதாரன் சமூக விரோத
நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது கிறீஸ் பூதங்களின் மர்ம நடவடிக்கையாக
பார்க்கபடுகின்றது. ஆனாலும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்
கிறீஸ் பூதம் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணம் ஹட்டன் பிரதேசத்தில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என
சந்தேகிக்கப்படும் ஒரு குழு தலைமறைவாக இருப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை
அடுத்து பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கல்கினை, அலவத்துகொட, அப்புத்தளை, தம்பேதன்னை பண்டாரவளை,
வெலிமடை, பதுளை, பசறை, கொட்டகலை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில்
மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிவித்து பலர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் வரிப்பத்தான்சேனை, இறக்காமம்,
ஒலுவில், அக்கரைப்பற்று மற்றும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில்
இத்தகைய மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள்
தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மர்ம மனிதன் என்று
சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்களினால்
பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னணி மற்றும் உண்மைத்தன்மை பற்றி எதுவும் தற்போது
கூறமுடியாவிட்டாலும் சமூகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்
என்று சந்தேகிக்க படுபவர்கள் பலர் பொதுமக்களினால் கண்காணிக்கப் படுவதுடன்
பலர் கைதாகியும் உள்ளனர். தற்போது இந்த கிறீஸ் பூதம் கதை அனுராதபுரம்,
புத்தளம் ஆகிய பிரதேசங்களின் பின்தங்கிய கிராமங்களிலும் பேசப்படுகின்றது .
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சிறு பிள்ளை விசேட வைத்தியர் இஸ்லால் நியமனம்.
இன்று 10.08.2011 ஆகிய இன்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொன்னாளென்றே கூறலாம். ஏனெனில் இன்று சிறு பிள்ளை விசேட நிபுணர் டாக்டர் இஸ்லால் அவர்கள் எமது வைத்தியசாலையில் நியமனம் பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்தில் தமது மேற் படிப்பை மேற்கொண்டு முதல் நியமனமாக எமது வைத்தியசாலையில் கடமை ஏற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது என சமாந்துறை ஆதார வைத்திய சாலை வைத்திய அதிகாரி டாக்டர் திரு.ஏ.இஸ்ஸடீன் அவர்கள் தெரிவித்தார்.
Thursday, July 14, 2011
சம்மாந்துறை புராதன பொதுச் சந்தையை மீள் திறக்க நடவடிக்கை
சம்மாந்துறை புராதன பொதுச் சந்தை அபிவிருத்திக் குழவின் நீண்ட கால முயற்சியின் பின் அதனை மீள் திறப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.NOWSHAD அவர்களின் தலைமயின் கீழ் மற்றும் உப தவிசாளர் A.KALEELURAHMAN மற்றும் UNOPS நிறுவனத்தின் அணுசரணையுடன் அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் 14.07.2011 காலை 7.00 முதல் 12.00 மணி வரை சந்தையை சுற்றியுள்ள சுற்றாடல் சிரமதானம் செய்யப்பட்டது.
Wednesday, July 13, 2011
கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம்
தகவல்: முகம்மட் றிஸாட்
Monday, July 4, 2011
(பிந்திக் கிடைத்த தகவல்) குடிநீர் பிரச்சினையால் 70 மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்
சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 70 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.மேலும் 15 மாணவர்கள் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக நீர் சுத்தீகரிப்பு நிலையம் மேற்கொண்ட பரிசோதனையின் போது நீருடன் கிருமி நாசினி கலந்திருப்பதை அவதானித்ததாக கூறப்பட்டது.
Saturday, June 25, 2011
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட தகவல்
மேலதிகாரிDR. ISSADEEN(m.s) அவர்கல் வழங்கிய தகவல்
வைத்தியசாலையில் சில நிலப்பரப்பில் பூந்தோட்டம் உள்ளதாகவும் அந்த பூந்தோட்டத்தை பூரணமாக பராமரிப்பதற்க்கு போதிய ஆட்க்களும்
இல்லாமையை இட்டு இப்பூந்தோட்டதிற்க்கு ஏற்பாடும்(ORGNIZE) ,அன்பளிப்பும் செய்த ஒரு நலன்புரி அமைப்பினர் பூந்தோட்டத்தை பரமரிப்பதற்க்கு ஒருஉதவியாக வழங்கிவருவதாக குரினார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் வைத்தியசாலையில் புதிய கட்டிடத்திற்கு தளபாடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்,அந்தக்கட்டிடம் 2 கிழமைக்குல் முன்னர்தான் திறக்கப்பட்டதாகவும்.அத்துடன் அவசர சிகிச்சை(OPERATION THEATER) பிரிவு நிலையமும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதே போல் மயக்க மருந்து கொடுக்கும்வைத்தியர்களை பொது வைத்தியசாலைக்கு பயிற்ச்சி எடுக்க அனுப்பியுள்ளதாகவும்.அத்தோடு வைத்தியசாலைக்கு களும் வர இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
Thursday, June 23, 2011
Sunday, June 19, 2011
இஜ்திமா
இன்று (19.06.2011) மாவடிப்பள்ளி 'மர்கஸ்' இல் ஒர் இஜ்திமா நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரபல வைத்தியர்கள்,முப்திகல், விரிவுரையாளர்கள்,மற்றும் ஏனைய உயர் உத்தியோகத்தர் பலரும் மார்க்க சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினர்.
சுமார் காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இடம்பெற்றது இந்தநிகழ்வில் பகற்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது
இந்த நிகழ்வில் பிரபல வைத்தியர்கள்,முப்திகல், விரிவுரையாளர்கள்,மற்றும் ஏனைய உயர் உத்தியோகத்தர் பலரும் மார்க்க சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினர்.
சுமார் காலை 8.30 மணி முதல் பி.ப 2.00 மணி வரை இடம்பெற்றது இந்தநிகழ்வில் பகற்போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது
சம்மாந்துரையில் ஹஸீன் ஆசிரியருக்கு பாராட்டு
உலகளாவிய ரீதியில்MICROSOFT நிறுவனம் நடாத்திய ஒர் போட்டியில் வெற்றி பெற்று,எதிர்வரும் june 26,27,28 ம் திகதிகளில் சம்மாந்துரை தேசிய பாடசாலையில் கற்பிக்கும் M.B.M.HASEEN ஆசிரியர் செல்ல இருக்கின்றரர்.
அதாவது இந்த நிறுவனம் உலகலாவிய ரீதியில் போட்டிவைத்து 500 பேரை தெரிவு செய்தது. இதில் 50 பேர்,ஒரு மாநாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டன்ர் அந்த 50 பேரில் ஒருவரும். இலங்கையின் ஒரே ஒரு பிரதிநிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார்.
மேலும் இந்த நிகழ்வு AMERICA விலுள்ள MICROSOFT நிறுவனத்தின் தலைமையலுவலகத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது இந்த நிறுவனம் உலகலாவிய ரீதியில் போட்டிவைத்து 500 பேரை தெரிவு செய்தது. இதில் 50 பேர்,ஒரு மாநாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டன்ர் அந்த 50 பேரில் ஒருவரும். இலங்கையின் ஒரே ஒரு பிரதிநிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார்.
மேலும் இந்த நிகழ்வு AMERICA விலுள்ள MICROSOFT நிறுவனத்தின் தலைமையலுவலகத்தில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, June 18, 2011
திடீர் வீதி விபத்து ஒருவர் காயம்.
இன்று பி.ப. 5.43 மணியளவில் சம்மாந்துறை இலங்கை வங்கி அருகாமையில் 2 மோட்டார் வாகனங்கள் எதிரெதிரே ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு மோட்டார் வாகன சாரதி காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளாகிய 2 சாரதிகளும் முரண்பாடின்றி சமாதானத்திற்கு உள்ளாகியூள்ளனர்.
Friday, June 17, 2011
ஆசிரியர் இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிப்பு
அதன் பின்பு ஆசிரியர்களால் மஹஜர் ஆனது கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சரான VIMALA VEERA THISANAYAKA விடம் கிழக்கு மாகாண சபை வீதி அமைச்சர் M.UTHUMALEBBE உறுப்பினர்களான M.L.A.AMEER, THULSAAN, PUSPARAJAH ஆகியோர் முன்னிலையில் கைய்ளிக்கப்பட்டது. .
Wednesday, June 15, 2011
நேற்று இரத்தான இடமாற்ற கானொளிப் பதிவு
நேற்று தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக PDE எம்.டீ.எம்நிஸாம் மற்றும் ZDE எம்.ஐ.எம்.மன்ஸூர் ஆகியோர்களால் கூறப்பட்ட வீடியோ உங்களுக்காக இங்கே
Tuesday, June 14, 2011
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆசிரிய இடமாற்றம் தொடர்பான கலந்துரையாடல்
நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக சம்மந்துறை வலய பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல் இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாகண கல்விப்பணிப்பாளர் எம்.டீ.எம்.நிசாம்,சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.மன்ஸூர்,கிழக்கு மாகண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் (டி.ஏ) மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.நௌஸாத் ஆகிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.வருட நடுப்பகுதியில் இடமாற்றம் செய்யப்படதனால் பாடசாலை மணவர்கள் பெரிதும் பாதிக்கபடுள்ளதாக அதிபர்கள் முறையிட்டனர் மேலும் 2008 ம் ஆண்டு சம்மாந்துறை வலயதில் நிலவிய ஆசிரியர் பற்ராக்குறையை தீர்பதற்க்காக கல்முனை வலய அசிரியர்கள் இங்கு குறுப்பிடத்தக்கது.இஙு அப்படி வந்தவர்களை மீள அவர்களின் சொந்த வலயங்களுக்கு எடுத்து சம்மாந்துறைக்குள் சம்மாந்துறை வலய ஆசிரியர்களை இடமாற்றம் மேற்கொள்ளுமாறும் இங்கு கோரிக்கை அதிபர்களாலும்,அரசியர் பிரமுகர்களாலும் முன்வைகப்பட்டது.
இது தொடர்பக மாகண கல்விப்பணிப்பாளர் கூறுகையில் அடுத்த வருடம் சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் வெளிவலய ஆசிரியர்களை சொந்த வலயங்களுகு மீளெடுப்பதாக வாக்குற்தியளித்தார்.
இறுதியாக பல மணிநே கலந்துரையாடலின் பின்பு ஆசிரிய இடமாற்றமானது தற்காலிகமக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியில் கூடி நின்ற அசிரியர்களிடம் தெரிவித்தார்.
Monday, June 13, 2011
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணவர்கள் செல்லாத நிலை
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணாவர்கள் பாடசலையை புறக்கணிதுள்ளனர்.இதற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிபாளரினல் மேற்க்கொள்ளபட்ட நியாயம் இல்லத ஆசிரிய இடமாற்ரமே காரணமகும்.மேலும் வகுப்புக்கள் அனைத்தும் மணவர்கள் இண்றி வெறிச்சோடிக்கிடந்தன.இது டொடர்பான ஆர்பாட்டம் மானவர்களினால் நேற்று திங்கட் கிளமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமணையின் முன்னால் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
Sunday, June 12, 2011
சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றாத்திற்கு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
13.06.2011 ஆகிய இன்று சம்மாந்துறை வலய மாணவர்கள் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வலயக் கல்வி வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். மேலும் இதில் வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு எதிரான பதாதைகளுடன் மாணவர்கள் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் 14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் 14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Thursday, June 9, 2011
சம்மந்துறை வலயத்திற்குள் ஆசிரியர் இடமாற்றம்
தற்போது சம்மாந்துறை பிரதேச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் இடமாற்றம் காரணமாக ஆசிரியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர். இது மட்டுமல்லாது ஆசிரியர்களை மிகவும் தூர பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் இவ்வறான இடமாற்றம் காரணமாக தற்போது கல்வி பயின்றுவறும் கல்வி பொதுத்தராதர சதரணதர(O/L), உயர்தர(A/L), புலைமைப்பரிசில்(SCHORLARSHIP) மாணவகளுக்கான பாடப்பரப்பும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்,மற்றும் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Wednesday, June 8, 2011
மாவட்ட மட்டத்திலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 2011 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்திலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம் மாதம் 07,08,09 ஆகிய தின்ங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, இந் நிகழ்வில்,
சம்மாந்துறை
கல்முனை
அக்கரைப்பற்று
திருக்கோவில்
ஆகிய வலய பாடசாலைகளில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாவட்ட ரீதியிலான போட்டி இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் இறுதி நாள் நிகழ்வுகள் 09ம் திகதி இடம் பெறவுள்ளது. இதில் பரிசில்கல்,சான்றிதல்களும் வழங்கப்படவுள்ளது
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.
















