Monday, March 28, 2011
Sunday, March 27, 2011
புதிய அடையாள அட்டைகள்!
மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கம்
மாறு பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில் புதிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக ஆட்கள் பதிவூத் திணைக்களம் அறிவிக்கின்றது.
அதன்படி புதிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளில் இருந்து மாறு பட்டவகையில் புதிய அடையாள அட்டைகள் உருவாக்கப்படவுள்ளன.
புதிய அடையாள அட்டை கணனி மயப்படுத்தப்பட்டதாக உருவாக்கப்படும் என்றும் இதில் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!
வட கிழக்கிலும்;;; நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் சேர்ந்தும் போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சியின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
Friday, March 25, 2011
அல் முனீர் பாடசாலை சுற்றாடல் கழகத்தினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று
சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை சுற்றாடல் கழகத்தின் ஏற்பாட்டுடன், பொது சுகாதார வைத்திய காரியலயத்தின் அனுசரனையில் மாபெரும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது சம்மாந்துறை அல்-முனீர் பாடசாலை அதிபர் ஆசியர்களின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
சம்மாந்துறையின் வீதி அபிவிருத்திப் பணிகள் 158 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுப்பு
சம்மாந்துறை மக்களின் நீண்ட கால குறைபாடாக விருந்த பௌசி மாவத்தை வீதி
அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீரின்
முயற்சியினால் 158 மில்லியன் ரூபா செலவில் நவீன காப்பற் வீதியாக
அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் அண்மையில் வீதி அபிவிருத்தி
திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியிலாளர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில்
நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம அதிதியாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கௌரவ அதிதிகளாக மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பை, மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை , கூட்டுறவு விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்,அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உட்பட திணைக்களத் தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பௌசி மாவத்தை வீதிக்கான நினைவுக் கல்முனை விளினைபட்டி சந்தியிலும், 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய பள்ளி வீதி கொங்கிரீட் வீதிக்கான நினைவுக் கல்லினை சம்மாந்துறை புதிய பள்ளி வீதிச் சந்தியிலும் அமைச்சர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
Thursday, March 24, 2011
நமது ஊர் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு களம் எமது பிரபல கவிஞர் மன்சூர் ஏ.காதர் அவர்களின் கவிதை
கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட......
நிராகரிக்கப்பட்ட நியாயங்களுக்கான நமது ஜிஹாத்
கபனிடப்பட்ட ஜனாஸாக்களாய்
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...
விருட்சங்களால் விழுங்கப்பட்டிருந்த
குறுநில மன்னர்தம் ராஜதானிகளில்
மறுபடியும் செவ்வனே எல்லைப்படுத்தப்பட்டு,
நிர்ச்சலனமான
ஜனநாயகத்தின் மரகத தலைப்பாகைகளுடன்
முடிசூட்டு விழாக்கள்...
நாம் கபுரிஸ்தானங்களுள்ளே.. ஜனாஸாக்களாய்...
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...
ராஜ கிரீடம் சுமந்த சிரசுகளை இலக்குப்படுத்த
பொறுக்கப்பட்ட நமது கவண் கற்கள்
நவீன இரட்சகர்களின்
சிம்மாசன அங்கலாய்ப்புக்கான சதுரங்கக் காய்களாய்
மொழிபெயர்க்கப்பட்டன.
தாவீதின் கவண் தொடர்ந்தும் கோலியாத் கரங்களில்
அதனால்,
நமது ஸியாரங்களை
நாம் கட்டிக் கொண்டேயிருப்போம்
நம்மை விற்றுப் பிழைக்கும் தாதாக்கள்
ஒழித்து வைக்கப்பட்ட கசிப்புக் கொள்கலங்களோடு
நமது கழிவிரக்கங்களை மூலதனமாக்கி
மேலும்
புதிய வியூகங்கள் எனும் பெயரில்
தம் நாற்காலி நப்பாசையின் எதிரியை
தோற்கடிக்கும் முனாபிக் தனங்களோடு
நன்றி எனும் சௌந்தர்ய மலர்களால்
இறைவன் சமைத்த
நமது மெத்தனமான இரண்டாம் கிரீடத்தை
ஆழ்மூச்சு முட்ட அழுத்தம் கொடுக்கும்.
மறுபடியும்... மறுபடியும்...
கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட மாடுகளாய்
நமது உடன் பிறப்புக்கள்
மடுவங்களை நோக்கி சாய்க்கப்பட்டபடியே....
கங்கத்தியப்பா
21.03.2011
நிரந்தர நீதிவான் நீதிமன்றமாக இயங்குவதற்கு அனுமதியளிப்பு
புதிய நீதிவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக கல்முனை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை புதிய நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக எம்.எச்.பக்ர்டீன் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையினை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளார்.
இக்கட்டிடத் தொகுதியை அண்மையில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, March 22, 2011
நிலவெடிப்புக்கான காரணத்தை அறிய அப்பிரதேசத்தில் ஆய்வு நடத்தப்படும்
நீர்ப் பெருக்கு ஏற்பட்டுள்ள பிரதேசத்தை புவிச்சரிதவியல் பணியகத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.ஆர்.எம்.பாரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பார்øவயிட்டனர்.
ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல இடங்களில் நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
கிணறுகளிலும் நீர் நிறமாற்றமடைந்துள்ளதனால் அருந்துவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். நீர் வெளியேறும் இடங்களை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுகின்றனர்.
நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பின் ஊடாக வெளிவந்து கொண்டிருக்கும் நீர் மட்டக்களப்பில் சம்பவம்
அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்தமையினாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
பூரண சந்திரனின் தாக்கத்தினால் அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு புவி ஆராய்ச்சியாளரொருவர் அனுப்பப்பட்டுள்ளதாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர். என்.பி.விஜேயானந்த தெரிவித்தார்.
குறித்த சம்பவம் விரும்பத்தகாத அனர்த்தம் எதனையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாரிய பூமியதிர்வுக்கு பின்னர் குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்கள் கவனமாக இருக்
“கைப்பற்றப்பட்ட சபைகளின் தலைவர்களை கட்சியின் தலைமை விரைவில் தீர்மானிக்கும்”
அம்பாறை மாவட்டத்தில் நாம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு நமது கட்சி
தீர்மானிக்கும் ஒருவரே தலைவராக நியமிக்கப்படுவார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் பொதுச் செயலாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கைப்பற்றிய நான்கு சபைகளுக்குமான தலைவர்களைச் தெரிவுசெய்யும் போது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களா? அல்லது கட்சி விரும்புகின்றவர்களா? கவனத்தில் கொள்ளப்படுவார்கள் என வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானி மூலம் அறிவித்தல் செய்யப்பட்டபின்னர் தேர்தல் ஆணையாளர் எமக்கு எழுத்து மூலம் கைப்பற்றிய பிரதேச சபைகளுக்கு தலைவர்களைத் தெரிவு செய்யுமாறும் சத்தியப் பிரமாணத்தினை அறிவிப்பார். இதன் பின்னரே எமது கட்சி கூடி ஆராயுமெனக் கூறினார்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தினை அந்தந்தப் பிரதேசசபை அலுவலகங்களிலேயே நடாத்தப்படும் என்றும் ஹஸன் அலி எம்.பி. தெரிவித்தார்

Monday, March 21, 2011
முட்டையில் முஹம்மது நபியின் பெயர்,பொத்துவிலில் அதிசயம்
Sunday, March 20, 2011
கோட்டைகளை இழந்து ஐ.தே.க. படுதோல்வி
234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.
ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து படுதோல்வியடைந்ததோடு அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி. தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நேற்று முன்தினம் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது. நேற்றுக்காலை 10 மணியாகும்போது சகல தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இத்தேர்தலில் ஐ.தே.க. தனது கட்டுப்பாட்டிலிருந்த 18 உள்ளூராட்சி சபைகளையும் கோட்டைவிட நேரிட்டதோடு முஸ்லிம் காங்கிரசும் ஓரளவு பின்னடைவையே எதிர்கொண்டது. வடக்குஇ கிழக்கு தமிழ் பிரதேசங்களை மையமாகவைத்து தேர்தலில் குதித்த தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி தேசிய அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸினால் நான்கு சபைகளை மட்டுமே வெல்லமுடிந்தபோதும் வடக்கு கிழக்குக்கு வெளியில் முதற்தடவையாக போட்டியிட்ட பல சபைகளில் உறுப்பினர்களை வென்றது.
தேசிய காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த இரு சபைகளையும் தக்கவைத்துக் கொண்டதோடு மலையக மக்கள் முன்னணி நுவரெலியா பிரதேச சபையையும் சுயேட்சைக் குழு-1 பல்லேபொல பிரதேச சபையையும் கைப்பற்றியது விசேட அம்சங்களாகும்.
ஆட்சி மாற்றத்திற்கு முதற்படியாக இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதாக வீரவசனம் பேசிய ஐ.தே.க.வினால் பண்டாரவளை மாநகரசபை குளியாப்பிட்டிய நகரசபை கம்பொள நகரசபை கடுகண்ணாவ நகரசபை களுத்துறை நகரசபை அடங்கலான ஒன்பது உள்ளூராட்சி சபைகளை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.
ஐ.ம.சு.மு.ஐ விட 725 வாக்கு வித்தியாசத்தில் ஐ. தே. க. கம்பொளை நகர சபையைக் கைநழுவியது. பண்டாரவளை மாநகரசபையும் 154 வாக்குகளினாலே ஐ.ம.சு.மு.க்கு கைமாறியது. 20 வருடங்களின் பின்னர் கதிர்காமம் பிரதேச சபையை ஐ.ம.சு.மு.யிடம் ஐ.தே.க. பறிகொடுத்தது முக்கிய விடயமாகும்.
வத்தளை மாபோல நகரசபை வத்தளை பிரதேச சபை பேலியாகொட நகர சபை பாணந்துரை நகரசபை ஹொரண பிரதேசசபை அடங்கலான 18 உள்ளூராட்சி சபைகளை ஐ.தே.க. பரிதாபமாக இழந்தது.
முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டிலிருந்த காத்தான்குடி நகரசபையும்இ ஏறாவூர் நகரசபையும் இம்முறை ஐ.ம.சு.மு. வின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையையும் ஐ.ம.சு.மு.யே வென்றது. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடந்த 3 உள்ளூராட்சி சபைகளையும் ஐ.ம.சு.மு. கைப்பற்றியது. 7 ஆயிரம் மேலதிக வாக்குகளால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையை ஐ.ம.சு.மு. வென்றது.(vk;.up.977)
Friday, March 18, 2011
Thursday, March 17, 2011
சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் 2011
Local Authorities Election - 2011
Department of Government Information |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Ampara District
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Sammanthurai Pradeshiya Sabha
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய சம்மாந்துறைப் பிரதேசங்களின் வாக்குப் பதிவுகளின் விகிதாசாரங்கள்
தற்பொழுது சம்மாந்துறைப் பிரதேச சபைத் தேர்தலானது சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதிலும் இம் முறை மக்கள் வாக்களிக்கின்ற வாக்களிப்பு வீதமானது மிகக் குறைந்தளவிலே காணப்படுகின்றது. மேலும் தற்பொழுது இடம்பெற்றுள்ள வாக்களிப்பு வீதங்களின் ஒரு பகுதி இங்கே-
தாறுஸ்ஸலாம்- 49%
லத்தீப் 47.5%
மதீனா - 25%
அல் மர்ஜான்1- 41%
அல் மர்ஜான் - 47%
ஜமாலிய - 48%
வீரமுனை 1 - 30%
வீரமுனை 2 -32%
கோரக்கர் - 28%
சபூர் - 43%
செந்நெல் கிராமம் 1 - 42%
செந்நெல் கிராமம் 2 - 52%
தாறுஸ்ஸலாம்- 49%
லத்தீப் 47.5%
மதீனா - 25%
அல் மர்ஜான்1- 41%
அல் மர்ஜான் - 47%
ஜமாலிய - 48%
வீரமுனை 1 - 30%
வீரமுனை 2 -32%
கோரக்கர் - 28%
சபூர் - 43%
செந்நெல் கிராமம் 1 - 42%
செந்நெல் கிராமம் 2 - 52%
Wednesday, March 16, 2011
தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் கூறுகிறார்
உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் தினத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும்
பேணும் பொருட்டு 50 ஆயிரம் பொலிஸாருடன் முப்படையைச் சேர்ந்த 20 ஆயிரம்
பேருமாக 70 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையிலீடுபடுத்தப்பட்டிருப்பதாக
தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய முறைகேடுகள், மோசடிகள்,
வன்முறைகளிலீடுபடுவோர் மீது பாரபட்சமன்றி கடும் நடவடிக்கை
எடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
235 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனைய 36 பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் இடம்பெறுகின்றன. மொத்த 34433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் வாக்களிக்கத்தகுதி பெற்றோரின் எண்ணிக்கை 9444455 பேராகும். 7402 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்முறைகள், குழப்பங்களிலீடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவர். அவர்கள் எந்தத் தரப்பைச் சார்ந்தவராயினும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.
இதுவரையில் தவறாக நடந்து கொண்ட 15 வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்தோட்ட பொலிஸ் அதிகாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக பொதுமக்கள், வேட்பாளர்கள், பிரதேச அரசியல் தலைவர்கள் அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பொலிஸார் தமது கடமையை நேர்மையகவே செய்து வருகின்றனர். நாம் எந்தத் தரப்புக்கும் பக்கச்சார்பாக நடக்கவில்லை. அதனை மீறி எந்தப் பொலிஸ் அதிகாரியாவது முறைகேடாக நடக்க முற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம்.
சில கட்சிகள் என் மீது பழி சுமத்த முற்படுகின்றன. எனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யமாட்டேன். கடமையைச் சரிவரச் செய்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள், ஆலோசனைகளை மதித்து சட்டரீதியான செயற்பாடுகளை எடுப்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாகவே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நாளைய தேர்தல் நிலவரங்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்
நாளை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களைப் பெறுவதற்காக சம்மாந்துறை இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்து இருங்கள். நாளை 40% இற்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Tuesday, March 15, 2011
சந்திரன் பூமியை நெருங்கிவருவதால் மார்ச் 19இல் பேரழிவுகள் ஏற்படும்? வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை
லண்டன்: ஜப்பானை மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல் கோளும்
தாக்கியுள்ள நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகே சந்திரன்
நெருங்கி வருவதால், மிகப்பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல்
நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம் பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல்
தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வு உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து. இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.
சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் . இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜோன் கெட்லி தெரிவித்துள்ளார்.

Monday, March 14, 2011
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடம், இரத்தவங்கி,குளிருட்டப்பட்ட பிரேத அறை ஆகியன 12/03/2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் 12/03/2011 அன்று கொளரவ மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் (TA) அவர்களும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் களரவ.A.L.M.அதாவுள்ளா,M.S.M.சுபைர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் விழாவை அலங்கரிக்க சத்திரசிகிச்சை கூடம், இரத்தவங்கி,குளிருட்டப்பட்ட பிரேத அறை ஆகிய புது வசதிகள் நமது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எட்டியுள்ளது. இது எமது ஊரின் சுகாதார அபிவிருத்தியின் எடுத்துக் காட்டு என்று கூறுவதில் எதுவித ஐயமும் இல்லை என்பது திண்ணம்
Sunday, March 13, 2011
குழந்தையின் உடலில் அல்லாஹ் எனும் பதம் : மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செம்மனோடை கிராமத்தை சேர்ந்த முகம்மது ஆதிபீன்
எனும் பெயருடைய இரண்டுமாத குழந்தையின் உடம்பிலும் உள்ளங்கையிலுமே இப்பதம் தென்படுகிறது.
மேற்படி குழந்தையின் பெற்றோர்களான முகமட் லாபிர்கான், சித்திநிஸா ஆகி ஆகியோரிடம் இது குறித்து பேசியபோது மொத்தமாக 18 இடங்களில் இப்பதம் இருக்கிறது எனவும் அதிகமான மக்கள் இதனை பார்வையிட வருகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான புகைப்படம் விரைவில் பிரசுரிக்கப்படும்

Thursday, March 10, 2011
சம்மாந்துறை கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பம்
சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையாக முதல் நாள் கோட்ட மட்டப் போட்டிகள் 10.03.2011 ஆகிய இன்று ஆரம்பானது. இந் நிகழ்வில் பெறுமளவான போட்டியாளர்கள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தெரிவு செய்யப்படும் வீர,வீராங்கனைகள் 15.03.2011ம் திகதி இடம்பெறவுள்ள வலய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியினைப் பெறுவர்.
Wednesday, March 9, 2011
Tuesday, March 8, 2011
Friday, March 4, 2011
Thursday, March 3, 2011
தபால்மூல வாக்களிப்புக்கான பொருட்கள் பூர்த்தி
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தபால்மூல வாக்களிப்புக்கான சகல
ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 12,608 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக 17,639 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 5031 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.கே.எஸ்.பண்டார மபா தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.