Thursday, March 17, 2011

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் 2011

Local Authorities Election - 2011

Department of Government Information
Ampara District
Sammanthurai Pradeshiya Sabha
Name of Party
Votes
%
Seats
United People's Freedom Alliance United People's Freedom Alliance 12,358 49.05% 5
Sri Lanka Muslim Congress Sri Lanka Muslim Congress 10,078 40.00% 3
United National Party United National Party 1,995 7.92% 1
Independent Group 3 Independent Group 3 400 1.59% 0
People's Liberation Front People's Liberation Front 187 0.74% 0
Independent Group 5 Independent Group 5 104 0.41% 0
Independent Group 2 Independent Group 2 66 0.26% 0
Independent Group 6 Independent Group 6 5 0.02% 0
Independent Group 1 Independent Group 1 4 0.02% 0
Independent Group 4 Independent Group 4 0 0.00% 0
Valid
25,197
97.08%
Rejected
758
2.92%
Polled
25,955
69.27%
Electors
37,469

சம்மாந்துறை பிரதேச சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான மேலதிக செய்திகள் இன்னும் சிறிது நேரத்தில்


தற்போதைய சம்மாந்துறைப் பிரதேசங்களின் வாக்குப் பதிவுகளின் விகிதாசாரங்கள்

தற்பொழுது சம்மாந்துறைப் பிரதேச சபைத் தேர்தலானது சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதிலும் இம் முறை மக்கள் வாக்களிக்கின்ற வாக்களிப்பு வீதமானது மிகக் குறைந்தளவிலே காணப்படுகின்றது. மேலும் தற்பொழுது இடம்பெற்றுள்ள வாக்களிப்பு வீதங்களின் ஒரு பகுதி இங்கே-
தாறுஸ்ஸலாம்- 49%
லத்தீப் 47.5%
மதீனா - 25%
அல் மர்ஜான்1- 41%
அல் மர்ஜான் - 47%
ஜமாலிய - 48%
வீரமுனை  1 - 30%
வீரமுனை  2 -32%
கோரக்கர் - 28%
சபூர் - 43%
செந்நெல் கிராமம் 1 - 42%
செந்நெல் கிராமம் 2 - 52%

Wednesday, March 16, 2011

தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் கூறுகிறார்

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் தினத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொருட்டு 50 ஆயிரம் பொலிஸாருடன் முப்படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருமாக 70 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் கடமையிலீடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய முறைகேடுகள், மோசடிகள், வன்முறைகளிலீடுபடுவோர் மீது பாரபட்சமன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
235 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனைய 36 பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் இடம்பெறுகின்றன. மொத்த 34433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் வாக்களிக்கத்தகுதி பெற்றோரின் எண்ணிக்கை 9444455 பேராகும். 7402 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்முறைகள், குழப்பங்களிலீடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்படுவர். அவர்கள் எந்தத் தரப்பைச் சார்ந்தவராயினும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.
இதுவரையில் தவறாக நடந்து கொண்ட 15 வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்தோட்ட பொலிஸ் அதிகாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அவர் உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக பொதுமக்கள், வேட்பாளர்கள், பிரதேச அரசியல் தலைவர்கள் அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
பொலிஸார் தமது கடமையை நேர்மையகவே செய்து வருகின்றனர். நாம் எந்தத் தரப்புக்கும் பக்கச்சார்பாக நடக்கவில்லை. அதனை மீறி எந்தப் பொலிஸ் அதிகாரியாவது முறைகேடாக நடக்க முற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தயங்க மாட்டோம்.
சில கட்சிகள் என் மீது பழி சுமத்த முற்படுகின்றன. எனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்யமாட்டேன். கடமையைச் சரிவரச் செய்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள், ஆலோசனைகளை மதித்து சட்டரீதியான செயற்பாடுகளை எடுப்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாகவே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

நாளைய தேர்தல் நிலவரங்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்

நாளை தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களைப் பெறுவதற்காக சம்மாந்துறை இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்து இருங்கள். நாளை 40% இற்கும் குறைவான வாக்குகளே அளிக்கப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

2010ம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பார்வையிடுவதாயின் www.doenets.lk என்ற இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Tuesday, March 15, 2011

சந்திரன் பூமியை நெருங்கிவருவதால் மார்ச் 19இல் பேரழிவுகள் ஏற்படும்? வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை

லண்டன்: ஜப்பானை மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல் கோளும் தாக்கியுள்ள நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப்பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம் பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல்
தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வு உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து. இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.
சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் . இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜோன் கெட்லி தெரிவித்துள்ளார்.

Monday, March 14, 2011

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை கூடம், இரத்தவங்கி,குளிருட்டப்பட்ட பிரேத அறை ஆகியன 12/03/2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.




சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில்  12/03/2011 அன்று கொளரவ மாகாண சபை உறுப்பினர் M.L.A. அமீர் (TA) அவர்களும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் களரவ.A.L.M.அதாவுள்ளா,M.S.M.சுபைர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் விழாவை அலங்கரிக்க  சத்திரசிகிச்சை கூடம், இரத்தவங்கி,குளிருட்டப்பட்ட பிரேத அறை ஆகிய புது வசதிகள் நமது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எட்டியுள்ளது. இது எமது ஊரின் சுகாதார அபிவிருத்தியின் எடுத்துக் காட்டு என்று கூறுவதில் எதுவித ஐயமும் இல்லை என்பது திண்ணம்   

பிரதேச சபைத் தேர்தலின் இறுதிப் பிரச்சாரக் கூட்டமானது தற்பொழுது முக்கோணச் சுற்றுவட்டத்தில்



இன்றுடன் உள்ளூராட்ச்சி சபைகளின் முடிகின்ற தருவாயில் எமது பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களானது தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது இது தொடர்பான புகைப்படங்களானது இங்கே காணலாம். மேலும் இம்முறை மும்முனை அரசியல் கட்சிகளினதும் பிரச்சாரங்களும்  சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 13, 2011

குழந்தையின் உடலில் அல்லாஹ் எனும் பதம் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செம்மனோடை கிராமத்தை சேர்ந்த முகம்மது ஆதிபீன் எனும் பெயருடைய இரண்டுமாத குழந்தையின் உடம்பிலும் உள்ளங்கையிலுமே இப்பதம் தென்படுகிறது.

மேற்படி குழந்தையின் பெற்றோர்களான முகமட் லாபிர்கான், சித்திநிஸா ஆகி ஆகியோரிடம் இது குறித்து பேசியபோது மொத்தமாக 18 இடங்களில் இப்பதம் இருக்கிறது எனவும் அதிகமான மக்கள் இதனை பார்வையிட வருகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகைப்படம் விரைவில் பிரசுரிக்கப்படும்

Thursday, March 10, 2011

சம்மாந்துறை கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பம்



சம்மாந்துறை செந்நெல்  ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையாக முதல் நாள் கோட்ட மட்டப் போட்டிகள் 10.03.2011 ஆகிய இன்று ஆரம்பானது. இந் நிகழ்வில் பெறுமளவான போட்டியாளர்கள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தெரிவு செய்யப்படும் வீர,வீராங்கனைகள் 15.03.2011ம் திகதி இடம்பெறவுள்ள வலய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியினைப் பெறுவர்.
                                                                       

Wednesday, March 9, 2011

பிராந்திய ஊடகவியலாளர்கள் தேவை

எமது இணையத்தளத்திற்கு பிராந்திய ஊடகவியலாளர்கல் தேவை. இத் துறையில் ஆர்வமுடையவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்-0752912336

Tuesday, March 8, 2011

சம்மாந்துறை ஆண்டியடிச் சந்தியில் லொறி ஒன்று குடை சாய்ந்துள்ளது.

இன்று காலை சம்மாந்துறை ஆண்டியடிச் சந்தியில் லொறி ஒன்றினது டயர் வெடித்ததன் காரண்மாக வீதியை விட்டு விலகி வீதியோடானமாக குடை சாய்ந்துள்ளது.

Friday, March 4, 2011

IOM அனுசரனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 550 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இன்று சம்மாந்துறைப் பிரதேசச் செயலகத்தில் வழங்கப்பட்டடது.




எமது ஊரில் வெள்ளத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 550 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களானது IOM இன் அனுசரனையில்  இன்று சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் பிரதேச செயலககிக் கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப் தலைமையிலான குழுவினரால் இந் நிவாரணப் பொருட்களானது வழங்கப்பட்டது.
                   
           

Thursday, March 3, 2011

தபால்மூல வாக்களிப்புக்கான பொருட்கள் பூர்த்தி

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 8,9 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தபால்மூல வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 12,608 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக 17,639 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் 5031 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.கே.எஸ்.பண்டார மபா தெரிவித்துள்ளார்.

Wednesday, March 2, 2011

எமது இணையத்தளக் காரியாலமான்து தற்பொழுது மத்திய வீதியில் இயங்கி வருகின்றது.

எமது சம்மாந்துறை இணையத்தளத்தினதும் சீதனத்திற்கு எதிரான www.saynotodowry.tkஇணையத்தளத்தினதும் காரியாலயமானது இன்று முதல் சம்மாந்துறை மத்திய வீதியில் இயங்கி வருகின்றது. இது தொடர்பான நிகழ்வு இன்று மாலை காரியாலத்தில் இடம்பெறவுள்ளது. மேலும் எம்து இணையத்தள முகவரியினை முடக்குவத்தற்காக பாரிய முயற்சித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. எது எவ்வாஆறாயினும் எமது இணையத்தளமான்து எவ்விட தடைகள் வந்தாலும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயார் என சவால் விடுகின்றோம்.

Monday, February 28, 2011

கிழக்கு மாகாணத்திற்கான “வேலைக்காக காசு’ திட்டத்தில் அனைவரும் பங்குதாரராக வேண்டும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக்கட்டியெழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அம்பாறை கச்சேரி மண்டபத்தில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ;
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.அதிலும் குறிப்பாக விவசாயத்துறையில் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.விவசாயத்துறை மட்டுமல்லாமல் நீர்ப்பாசனம், சிறுகைத்தொழில், வீதிப்போக்குவரத்து, கல்விபோன்ற துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வெள்ளம் என்பது நமது நாட்டில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை மாறாக கால நிலை மாற்றத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயத்துறையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.நுவரெலியா மற்றும் மலைநாட்டு பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒருவகை அதிர்ஷ்டசாலிகள் ஏனெனில் அங்கு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் அம்மக்களுக்கான மாற்று இருப்பிடங்களை கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் தோன்றின. ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் வறிய மக்களின் வாழ்வாதார நிலையை விருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் வேலைக்காக காசு ( இச்ண்ட ஞூணிணூ தீணிணூடு) திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திற்கு உடனடியாக 40 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத் திட்டத்தின் கீழ் குளங்கள், வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இதன் மூலம் வேலையில் ஈடுபடும் தொழிலாளிக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக வேலைக்காக உணவு ( ஊணிணிஞீ ஊணிணூ ஙிணிணூடு) திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது.இதன் மூலம் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் ஆகியனவும் வழங்கப்படவுள்ளது.வெள்ளத்தால் நாட்டுக்கும் அரசுக்கும் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ஆகையால் சகலரும் இதில் பங்குதாரர்களாக ஆகவேண்டும்.வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகரங்களும் எதிர்காலத்தில் வழங்கப்படும்.
கடல்கோள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இம்மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நாம் அரசியல் வேறுபாடுகளை மறந்து செயல்பட வேண்டும்.தற்போது தேர்தல் காலம் என்பதால் அரசால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தேர்தல் வாக்குகளை மையப்படுத்தி வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நமது அரசியல் முறையில் இவற்றை முற்றாகத் தவிர்க்கவும் முடியாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதில் அமைச்சரான பீ.தயாரட்ண,ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், எஸ்.எம்.சந்திரசேகரன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம, முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சி.பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், சரத்வீரசேகர ஷிரியானி விஜயவிக்ரம், பியசேன அனோமாகமகே, மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, நவரட்ணராஜா, விமல வீரதிஸா நாயக, மாகாண சபை உறுப்பினர்களான அப்துல் மஜீத், புஸ்பராஜா, தயாகமகே, தேவராப்பெரும, அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, February 24, 2011

75 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம்




சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு 20அ அனுமதியின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் காணி உத்தியோகஸ்தர் எம்.ஏ.எம்.றாபி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 65 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

Wednesday, February 23, 2011

கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு பிரேரணை

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கான மாகாண பொலிஸ் ஆணைக்குழு அமைப்பது தொடர் பிலான பிரேரணையை நிறைவேற்றுவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. இது தொடர்பான பிரேரணையயான்று கிழக்கு மாகாண சபையில் விரைவில் நிறைவேற்றப் பட்டு மாகாண ஆளுநர் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவிற்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைவராகச் செயற்படு வார். ஜனாதிபதி மற்றும் மாகாண முதலமைச்சர் ஆகியோரால் தலா ஒருவர் இந்த ஆணைக் குழுவிற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்படு வார். இந்த மாகாண பொலிஸ் ஆணைக்குழு மாகாணத்திலுள்ள பொலிஸாரின் இடமாற் றங்கள், பதிவியுயர்வுகள், ஒழுக்காற்றுக் கட்டுப் பாடுகள் போன்றவற்றிற்கு பொறுப்பாகச் செயற்படும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை வழங்கப்படவில்லை.

Tuesday, February 22, 2011

தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.

எமது சம்மாந்துறைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தற்பொழுது சூடு பிடித்துள்ளது. தற்பொழுது எமது ஊரில் பிரதான கட்சிகளில் மூன்றான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியானது சூடு பிடித்துள்ளது. இம்முறை தேர்தல் மிகப் பலமானதொரு களமாகவே அமையவுள்ளது என்பதில் ஐயமில்லை.

Sunday, February 20, 2011

நீதவான் நீதிமன்றமும், இலங்கையின் முதலாவது குவாசி மன்றமும் திறந்து வைப்பு







சம்மாந்துறையில் இன்று பொன்னாளாகவே கருதலாம். இன்று இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. எமது சம்மாந்துறை பிரதேசத்தில் இதுவரை காலமும் அதாவாது நீதவான் நீதிமன்றம் இன்று நிரந்தரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையிலே முதல் முறையாக சம்மாந்துறையிலேயே குவாசி நீதிமன்றத்திற்கு என்று நீதிமன்றத்திறகான நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதியாக  பிரதம நீதியரசர் அசோகடி சில்வா மற்றும் நீதியமைசர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம், மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் நபா தாஹீர், மாவட்ட ந்திமன்ற நீதிபதி இள்ஞ்செலியன் மற்றும் பிரதேசசெயலாலர், பிரதேச சபை உறுப்பினர்க்கள், சட்டத்தரணிகள், பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Friday, February 18, 2011

எமது இணையத்தளமானது 100000 வாசகர்களைக் கடந்துள்ளது

எமது இணையத்தளமானது உருவாக்கப்பட்டு 06 மாத காலத்தினுள் 100000 வாசகர்களை கடந்துள்ளது இன்றுடன். இவ்வாறு எமது இணையத்தளமானது குறுகிய காலத்தினுள் அடைந்துள்ள வளர்ச்சியானது அபரிதமானது. இவ்வாறு எமது இணையத்தளமானது தொடர்ந்து பல சாதனைகள் படைக்கும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் களமிறங்குகின்றது. வாசகர்களாகிய நீங்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என்க் கேட்டுக் கொள்கின்றோம். 

Wednesday, February 16, 2011

சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றது


சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் சேனை நிலம் ஒன்றினுள் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றது. இதனை பொதுமக்கள் பொல்லிஸாருக்கு தெரிவித்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து தற்பொழுது மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பெரும்போக அறுவடையானது சூடுபிடித்துள்ளது.



எமது பிரதேசத்தில் தற்பொழுது பெரு வெள்ளத்தை தொடர்ந்து அறுவடையானது மிகவும் விரைவாக இடம்பெற்று வருகின்றது. மேலும் எமது பகுதி விவசாயமானது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பெருமளவான நெல் வயல்கள் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
               

Monday, February 14, 2011

2011-2013ம் ஆண்டிற்கான புதிய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் விபரம்

பிரதம நம்பிக்கையாளர்-
ஐ.அப்துல் ஜப்பார்

உப தலைவர்-
ஏ.எல்.ஹபீபு முஹம்மது

செயலாளர்-
யூ.எல்.அப்துல் றஸீட்

உப செயலாளர்-
எஸ்.சின்னலெவ்வை

பொருளாளர்-
கே.எல்.சுலைமாலெவ்வை

அங்கத்தவர்கள்-
கே.எம்.கே.ஏ.றம்ஸின் காரியப்பர்
யூ.எல்.மஹ்றூப்
எம்.ரீ.முகம்மது நஸீர்
எம்.ரீ.முகம்மது றாஸீக்
எம்.ஐ.முஹம்மது தம்பி
எஸ்.சுலைமாலெவ்வை
கே.எம்.முஸ்தபா
எஸ்.எல்.உசனார்
ஏ.ஆப்தீன்
எம்.ஏ.எம்.ஹுஸைன்
எம்.பி.நளீம்
பீ.ரீ.முகம்மது இஸ்மாயில்
                                                       

Sunday, February 13, 2011

மிக விரைவில் கேள்வி பதில் தேர்தல் களம்

சம்மாந்துறையில் தற்பொழுது தேர்தல் காலம் என்பதால் பிரச்சாரங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எனவே பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான கேள்வி பதில் தேர்தல் களம் வீடியோ பதிவானது மிக விரைவில் வெளிவரவுள்ளது. காத்திருங்கள். எம்மோடு இணைந்திருங்கள் புதுமைகள் பல படைப்போம்.

க.பொ.த உ/த பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு



2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதியினை நீடித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலையினை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரீட்சை விண்ணப்பதாரிகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம்


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து சம்மாந்துறை அஸ்ஸமா வித்தியாலயத்தில் 2011/02/13ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் பி.ப. 4.00 மணி வரை  இடம்பெற்றது. இதில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ் வைத்திய முகாமில் பின்வரும் வைத்தியர்கள் தமது சேவையை வழங்கினர். ஆசில் அஹமட், ஏ.ஏ.கபூர், எம்.எல்.கபூர், இஸானா ஆகிய வைத்தியர்கள். இம் மருத்துவ முகாமானது சம்மாந்துறை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொறுப்பாளர் மெளலவி யூ.எல்.எம். ஸலாஹுதீன் தலைமையில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 6, 2011

கிழக்கு மாகாண பாடசாலைகள் புதன் கிழமைவரை மூடப்படும் : முதலமைச்சர் சிபாரிசு

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அசாதாரண வெள்ள நிலைமை காரணமாக வருகின்ற புதன் கிழமை வரை பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் சிபாரிசுக்கமைய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் எமது கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரைக்கும் தொடர்ந்தேர்ச்சியான வெள்ள நிலைமை நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
                                                                       

Saturday, February 5, 2011

வெள்ளம் காரணமாக குடை சாய்ந்தது பஸ் வண்டி



சம்மாந்துறை பள்ளாற்றை அண்டிய பிரதேசத்தில் இன்று காலை கொழும்பில் இருந்து ஊர் நோக்கி வந்த அதி சொகுசு பஸ் வண்டியானது இழுவை நீர் காரணமாக குடை சாய்ந்துள்ளது. இவ்வாறு இவ் வெள்ளம் காரணமாக எமது பிரதேசத்தின் பல்வேறு வீதிப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுடைய அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.                                                    

சம்மாந்துறையில் 22,352 ஏக்கர் விவசாய நிலம் முற்றாக அழிவு பிரதேச செயலர் தெரிவிப்பு

கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு 45 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 63 ஆவது தேசிய சுதந்திரதின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய ஜீவனோபாய தொழிலாகக் காணப்படும் விவசாயத்துறை முற்றாக சேதமடைந்துள்ளது. இதுவொரு நீண்டகால பொருளாதார தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று சுயதொழில் துறைகளும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது.
சம்மாந்துறை பிரதேசத்தில் 384 வீடுகள் முற்றாகவும் 1180 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. இதற்கான செலவு மதிப்பீடாக 35.65 மில்லியன் ரூபாவாகவும் இதுவரை கிடைத்த தகவலின்படி 22352 ஏக்கர் விவசாயக் காணிகள் முற்றாக சேதமடைந்துள்ளது. சேத விபரங்கள் 137 மில்லியன் ரூபாவாகவும் 2700 சுயதொழில் முயற்சியாளர் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. நன்னீர் மீன்பிடித் தொழில் ரீதியாக 23.5 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதேசமயம் சொத்துகள் பாதிப்பு ஆர்.டி.டி.வீதிகள்,நீர்ப்பாசன பிரிவு, வீதிகள்,பாடசாலைகள்,மதரசாக்கள் ஏனைய பொதுக்கட்டிடங்கள் சேதப்பட்டதனால் 255 மில்லியன் ரூபாவும் பிரதேசசபைக்குட்பட்ட சொத்துகள் 38 மில்லியன் ரூபாவுமாக 489 மில்லியன் ரூபா சம்மாந்துறைப் பிரதேசத்தில் மாத்திரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடையுமானால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.