சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்ட முன்றலானது பூ மரக் கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சம்மாந்துறை பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எமது சம்மாந்துறை நகர முன்றலை அழகுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அழகுபடுத்தும் முயற்சியை மேற்கொண்ட சம்மாந்துறைப் பொலிஸாருக்கு எமது செய்திப் பிரிவு சார்பாக மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
Saturday, November 20, 2010
சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்டமானது மரக்கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்ட முன்றலானது பூ மரக் கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது சம்மாந்துறை பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எமது சம்மாந்துறை நகர முன்றலை அழகுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான அழகுபடுத்தும் முயற்சியை மேற்கொண்ட சம்மாந்துறைப் பொலிஸாருக்கு எமது செய்திப் பிரிவு சார்பாக மனமுவர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
Wednesday, November 17, 2010
சம்மாந்துறை நகர மண்டபத்தில் பல அரிய சாதனைகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு
Tuesday, November 16, 2010
சம்மாந்துறை இணையத்தளத்தின் பெயர்ப் பலகையானது ஹிஜ்ரா சந்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை இணையத்தளத்தினுடைய பெயர்ப்பலகையானது இன்று வெகு விமர்சையாக கெளரவ பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இவ் விழாவில் கெளரவ அதிதிகள் வரிசையில் ஜனாதிபதி இணைப்பாளர்கள் ஜனாப் ஏ.எல்.எம்.றசீன், ஜனாப் எம்.எம்.ஏ. காதர்(BSC) ,ஜனாப் எம்.டீ.ஏ.கரீம், ஜனாப் எம்.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் விசேட அதிதிளாக சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆசிரியர் ஏ.எல்.ஏ.றஹீம் அவர்களும் சட்டத்தரனி யூ.கே.சலீம் மற்றும் ஊடகவியளாலர் ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.எல்.எம்.இர்சாத், இணையத்தள ஆலோசகர் எம்.எப்.எம்.பர்ஹான் மற்றும் எம்.எம்.சபியுல்லா அவர்களும் சிடா அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை இன்று திடலில் நிறைவேற்றப்பட்டது.
அண்ணல் நபிகளார் சொல்லிவிட்டு சென்ற சுன்னத்துக்களை பின்பற்றுகின்ற எம் சகோதரர்களை வாழ்த்துகிறோம். அண்ணல் நபி சொல்லியவாறு பெருநாள் தொழுகைகைகளை பொது திடலில் தொழ வேண்டும் அதனடிப்படையில் இன்றுசம்மாந்துறையில் இரு இடங்களில் பொதுத்திடலில் பெருநாள் தொழுகையானது இடம்பெற்றது. அதாவது அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. இவ்வாறான நபி வழி தொழுகைகள் இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டிய விடயமே.
Sunday, November 14, 2010
பிறை எப்.எம் ஏற்பாட்டில் புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

சம்மாந்துறை வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 110 மாணவரளுக்கு பிறை எப்.எம் வானொலியானது பரிசில் வழங்கி கெளரவித்தது. இவ்விழாவில் பிரதம அதிதியாக மாண்புமிகு அமைச்சர் கெளரவ ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களும், கெளரவ அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹத்சன் சமரசிங்க மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள்,ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இவ்விழாவனது அக்கரைப்பற்று மண்ணில் உள்ள அதாவுல்லா அரங்கத்தில் விழாக் கோலம் பூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, November 13, 2010
ஹிஜ்றா சந்தியில் பெருநாள் கொள்வனவுகள் களைகட்டியுள்ளது.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஹிஜ்றா சந்தியில் பெருநாள் கொள்வனவானது மக்களினால் மும்முறமாக மேற்கொள்ளப்படுகிறது.மேலும் வீதியோரக் கடைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமே.
சம்மாந்துறை ஸ்டார் கொமியுனிகேசன் முன்பாக எயார்டலின் வர்த்தக விரிவாக்கம்
Thursday, November 11, 2010
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா
மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற 504 மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் அஸ்ரப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பீ.பீ.சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக எம்.கே.எம்.மன்சூர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்மினைப் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் சம்மாந்துறை வலய உதவி கல்விப் பணிப்பாளர் வீ.டி.சகாதேவராஜா,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
Wednesday, November 10, 2010
இளைஞர் பாராளுமன்றத்துக்கான வேட்புமனுத் தாக்கல்
Tuesday, November 9, 2010
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 23ம் வருட மாணவர்கள் மெளலவி பட்டம் பெற்றனர்
Monday, November 8, 2010
தந்தையிழந்த வறிய சிறார்களுக்கான பாராமரிப்பு நிதியுதவி

ஜமியதுல் அன்ஸார் சுன்னதுல் அன்சாரி அமைப்பினால் குவைத் நாட்டின் பைதுஸ் ஸகாத் நிதியுதவியின் கீழ் இலங்கையில் 1250 தந்தையை இழந்த சிறார்களுக்கான வறுமையான சிறார்களுக்கான நிதியுதவியை வழங்குகின்றது. இத்திட்டத்தின் அடிப்படையில் 08.11.2010 ஆகிய இன்று சம்மாந்துறை மர்கஸ் தாறுல் ஈமான் கலாபீடத்தில் இடம்பெற்றது.இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த 345 பேர் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டனர். இதில் நிதியுதவியை பொறுப்பதிகாரி கலாபூஷணம் செய்னுதீன் எஸ்.பரீட் அவர்கள் கையழித்தார். இந் நிகழ்வை சாம-சிறீ தேசிய கீர்த்தி மெளலவி ஐ.எல்.எம்.முஸ்தபா அவர்கள் ஏற்பாடு செய்தார்.
Sunday, November 7, 2010
கட்டாக்கலி மாட்டு உரிமையாளர்களுக்கு
தற்போது சம்மாந்துறை ஹிஜ்ரா
சந்தியில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.இக் கட்டாக்
காலி மாடுகள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் எமது
நகரத்தையும் சாணம் இட்டு அசுத்தமாக்குகின்றது.இது குறித்து கட்டாக்காலி
மாட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவு
எச்சரிக்கை விடுக்கின்றது.Saturday, November 6, 2010
EDC இன் இலவசக் கல்விக் கருத்தரங்கு
Friday, November 5, 2010
தெளஹீத் பிரச்சாரம்
சம்மாந்துறை அம்பாரை வீதியில் 05.11.2010 ஆகிய இன்று இரவு சுமார் 07.00 மணியளவில் தேசிய சேமிப்பு வங்கிக்கு எதிரே தெளஹீத் ஜமாஅத் இனுடைய இஸ்லாமிய பிரச்சார மார்க்கச் சொற்பொழிவானது இடம்பெற்றது.
Thursday, November 4, 2010
சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் விபத்துச் சம்பவம்
வாசகர் பார்வை வட்டம் உருவாக்க ஆரம்ப நிகழ்வு



சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நல்லாட்சிக்கான இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் வாசகர் பார்வை வட்டம் உருவாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வானது 04.10.2010 ஆகிய இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில்,கெளரவ அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மற்றும் விசேட அதிதிகளாக எம்.எம்.றிபாய்டீன்,எம்.எம்.முனப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இவ் விழாவை கல்லூரி முதல்வர் எச்.எம்.பாறூக் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைத்தார். இச் செயற்திட்டத்தின் மூலம் நூலகர் வட்டம் ஒன்றை உறுவாக்குதல்.
Wednesday, November 3, 2010
நுளம்பு பரவும் இடங்களை அழிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்
தற்பொழுது எமது ஊரில் நுளம்பு பரவும் இடங்கள் அதிகமாக காணப்படுகிறது. இது டெங்குக் காய்ச்சலை பரப்பக் கூடிய ஓர் உற்பத்திக் கூடமாக நாம் உருவாக்குவது கவலைக்குரிய விடயமே. எனவே நாம் எமது சூழலை சுத்தமாக வைத்திருந்து இவ்வாறான நோய் விளைவாக்கிகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
Tuesday, November 2, 2010
வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ எம்.எல்.ஏ.அமீர் அவர்கள் விஜயம்
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலை கட்டிட நிர்மாணப் பணிகளையும், அங்கு உள்ள நோயாளிகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ அமீர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும் எம்து வைத்தியசாலைக்கு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை எடுத்து வந்தவர் கெளரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, November 1, 2010
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு ஆனது திறந்து வைக்கப்பட்டுள்ளது

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவானது இன்று கெளரவ கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்(T.A) அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இது சுமார் மூன்று மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்களின் அயராத முயற்ச்சியினதும், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகரி வைத்தியர் இஸ்ஸதீன் அவர்களின் முயற்ச்சியின் காரணமாகவும் இப் பிரிவானது நிர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் எமது சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையானது அபிவிருத்தியடைந்து வருகிறது.இதற்கு அயராது உழைக்கும் வைத்தியர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் அனைவருக்கும் எமது செய்திப் பிரிவானது நன்றிப் பூக்களை சமர்ப்பிக்கின்றது.
Sunday, October 31, 2010
சம்மாந்துறை இணையத்தளத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் M.L.A.அமீர் T.A அவர்கள் ஆசிச் செய்தி.
www.sammanthurai.tk என்ற இணையத் தளத்தின் மூலம் எமது ஊர் நடப்புகளை உலகளாவிய ரீதியில் எடுத்துக் கூறும் தங்களின் முயற்ச்சி வெற்றியடைய இவ்விணைய்யத் தளத்திற்கு எனது ஆசிச் செய்தியை வழங்குவதில் உளப்பூரிப்படைகிறேன்.
ஒரு சமூகம் மேன்மையடைய வேண்டுமானால் அச்சமூகத்தைப் பற்றிய நாட்டு நடப்புகள் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தை விழிப்படையச் செய்ய, நீங்கள் அதி உச்சமான சேவையை முன்னெடுக்கின்றீர்கள். இச் சேவை நெடுங்காலம் நிலைத்திருக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
எமது சமூகத்தின் இளைஞர்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.எமது சமூக நலனுக்காக சுறு சுறுப்பாக இயங்க களமியங்கியிறுக்கின்றார்கள்.முன்னேற்றப் பாதையில் மிகச் சிறப்பாகப் புறப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையிலும்,தொழிநுட்பத் துறையிலும் இன்னும்மின்னும் எத்தனையோ துறைகளிலும் உயர்வடைந்திருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற-சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது.
எனவே, சமூகப்பணியில் இவர்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும். புதுவொளி பிறக்கட்டும் எனக்கூறி இவ்விணைய தளம் நின்று நீடுழிகாலம் வாழ வளர வாழ்த்துகின்றேன்.
இது-
M.L.A.அமீர் T.A
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகணசபை.
2010.10.31
ஒரு சமூகம் மேன்மையடைய வேண்டுமானால் அச்சமூகத்தைப் பற்றிய நாட்டு நடப்புகள் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் எமது சமூகத்தை விழிப்படையச் செய்ய, நீங்கள் அதி உச்சமான சேவையை முன்னெடுக்கின்றீர்கள். இச் சேவை நெடுங்காலம் நிலைத்திருக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
எமது சமூகத்தின் இளைஞர்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள்.எமது சமூக நலனுக்காக சுறு சுறுப்பாக இயங்க களமியங்கியிறுக்கின்றார்கள்.முன்னேற்றப் பாதையில் மிகச் சிறப்பாகப் புறப்பட்டிருக்கிறார்கள். கல்வித் துறையிலும்,தொழிநுட்பத் துறையிலும் இன்னும்மின்னும் எத்தனையோ துறைகளிலும் உயர்வடைந்திருக்கிறார்கள்.இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற-சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது.
எனவே, சமூகப்பணியில் இவர்களின் பணி மென்மேலும் சிறக்கட்டும். புதுவொளி பிறக்கட்டும் எனக்கூறி இவ்விணைய தளம் நின்று நீடுழிகாலம் வாழ வளர வாழ்த்துகின்றேன்.
இது-
M.L.A.அமீர் T.A
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகணசபை.
2010.10.31
Saturday, October 30, 2010
ஐக்கிய அமெரிக்கா தூதரகத்தின் அதிகாரிகளால் லொத்தரி வீசா பற்றிய அறிவுறுத்தல் கருத்தரங்கு
ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளினால் லொத்தர் வீசா நிகழ்ச்சி பற்றிய விளக்கவுரை சம்மாந்துறையில் நடைபெறவுள்ளது.இலவசமாக எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றிய விளக்கவுரை தமிழ்,சிங்கள மொழிபெயர்ப்புடன் வழங்கப்படும்.அனைவருக்கும் அனுமதி இலவசம்.
இடம்:அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
திகதி : ஒக்டோபர் 31.2010
மாலை: 03.00 மணி
இடம்:அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி
திகதி : ஒக்டோபர் 31.2010
மாலை: 03.00 மணி
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு நிதி ஒதுக்கீடு
சது/கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலய முன்பள்ளிக் கட்டிடம் திருத்துவதற்காகவும், வகுப்பறைத் தரையை செப்பனிடுவதற்காகவும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ எச்.எம்.ஹரீஸ் அவர்கள் ஒதுக்கித் தந்துள்ளார்.
பாடசாலைக் கட்டிட சிறு திருத்தத்திற்காக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள்.
மேலும் பாடசாலை அபிவிருத்திற்காக கெளரவ விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள் என பாடசாலை அதிபர்கள் ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவித்தார்.
பாடசாலைக் கட்டிட சிறு திருத்தத்திற்காக, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள்.
மேலும் பாடசாலை அபிவிருத்திற்காக கெளரவ விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்கள் என பாடசாலை அதிபர்கள் ஜனாப்.அப்துல் ஜப்பார் அவர்கள் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.










