சம்மாந்துறை தேசிய பாடாசாலை மைதானத்தில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்திற்கும்,காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டியானது 22.10.2010 ஆகிய இன்று பி.ப.4.00 மணிக்கு ஆரம்பமாகியது.மிகவும் உற்சாகமான எதிர்பார்ப்புகள் பல ரசிகர்களின் முகத்தில் முகபாவனைக் காட்டும் வகையில் இறுதிவரைப் போட்டியானது விறு விறுப்பான முறையில் அரங்கேரியது.இதில் ஏசியன் அணியானது 2 கோல்களையும் காரைதீவு விளையாட்டுக் கழத்தினர் ஒரு கோலினையும் பெற்று சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி வாகை சூடினர்.
Friday, October 22, 2010
நட்புறவுக்கான மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி
சம்மாந்துறை தேசிய பாடாசாலை மைதானத்தில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்திற்கும்,காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டியானது 22.10.2010 ஆகிய இன்று பி.ப.4.00 மணிக்கு ஆரம்பமாகியது.மிகவும் உற்சாகமான எதிர்பார்ப்புகள் பல ரசிகர்களின் முகத்தில் முகபாவனைக் காட்டும் வகையில் இறுதிவரைப் போட்டியானது விறு விறுப்பான முறையில் அரங்கேரியது.இதில் ஏசியன் அணியானது 2 கோல்களையும் காரைதீவு விளையாட்டுக் கழத்தினர் ஒரு கோலினையும் பெற்று சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி வாகை சூடினர்.
சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தொழிற்ப் பயிற்ச்சி நிலையத்திற்கு திடீர் விஜயம்.
Thursday, October 21, 2010
தகவல் தொழிநுட்ப விழிப்புணர்வூட்டும் பயிற்ச்சிப் பட்டறை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் e-Village ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்ச்சிப் பட்டறையானது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் 21.10.2010 ம் திகதி இடம்பெற்றது.இதில் மாகாண செயற்திட்ட முகாமையாளர் E.K.S.P.கலாநிதி,e-Village நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நந்தசிறீ மற்றும் மாண்புமிகு மாகாண கல்வி,கலச்சார அலுவல்கள்,நிலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மாகணக் கல்விப் பணிப்பாளர் M.T.A.ஹிசாம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சுகாதாரக் கழகங்களுக்கு இடையிலான போட்டிப் பரிசளிப்பு விழா
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சுகாதாரக் கழகங்களை மேம்படுத்தும் செயற்திட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் கழகங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வில் வெற்றி ஈட்டிய பாடசாலைக் கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.
2010.10.20ம் திகதி ச்ம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வில் ச்ம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியலாயம்,வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்,வீரச்சோலை அ.த.க பாடசாலை,மல்வத்தை புது நகர் அ.த.க. பாடசாலை,சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி போன்ற பாடசாலை சுகாதாரக் கழக உறுப்பினர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர்.
இவர்களுக்கான விருது,சான்றிதழ்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் V.T.சகாதேவன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.அஸீஸ் முகைதீன்,சுகாதாரக் கழக செயற்பாட்டாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
Wednesday, October 20, 2010
சம்மாந்துறை அல்-உஸ்வா பகல் பராமரிப்பு நிலையப் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்
சம்மாந்துறை அல்-உஸ்வா பகல் பராமரிப்பு பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மாகா வித்தியாலய மைதானத்தில் பாடசாலையின் அதிபர் ரசூல் B.A அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக கல்முனைக் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M.P.A.தெளபீக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.கெளரவ அதிதியாக GAFSO அமைப்பின் பணிப்பாளார் A.J.காமில் இம்தாட் உம் சமாதான கற்கை நிலையப் பணிப்பாளர் கலாநிதி S.L.A.றியாஸ் சிறப்பு அதிதிகளாக ஜெனீஸ் வித்தியாலய அதிபர் K.M.ரபீக், ஊடகவியலாளர்களான J.M.ஹனீபா, சுடர் ஒளி உதவி ஆசிரியர் வரலாற்று ஆய்வாளர் ஜலீல்-ஜீ மற்றும் அல்-உஸ்வா சமூக சேவை அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் மெளலவி முஸ்தபா அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tuesday, October 19, 2010
உலக கை கழுவல் தின நிகழ்வுகள்

கடந்த 15.10.2010 அன்று உலக கை கழுவுதல் தினமானது யுனிசெப் நிறுவனத்தின்
அனுசரனையுடன் அம்பாரை மாவட்டப் பாடசாலைகளில் இடம்பெற்றது.இதன் ஓரங்கமாக
சேரங்கட நவோதயா பாடசாலையின் மூவின மாணவர்களின் பங்களிப்புடன்
நடைபெற்றது.இதன்போது மகோயா கல்விப் பணிபாளர் மற்றும் யுனிசெப்
பிரதிநிதிகளுடன் கப்சோ நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ஜ்ப்பார்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படத்தை
படத்தில் காணலாம்.
Monday, October 18, 2010
சம்மாந்துறை பொலிஸ் வீதியில் விபத்துச் சம்பவம்
மற்றுமொரு ஹஜ் யாத்திரைக் குழுவானது இன்று பயணமாகிறது சம்மாந்துறையில் இருந்து
பிரமாண்டமான வெள்ளைப் பிரம்பு தினம்
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு 18.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு அற்றோர் அமைப்பினால் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக - சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர்,கெளரவ அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,விழிப்புனர்வற்றோர் சங்க தலைவர் உஸாமா சியாத், சிறப்பு அதிதியாக இலங்கை வானொலி கூட்டுத்தாபன அறிவிப்பாளர் யூனுஸ் கே.றஹ்மான் வீற்றிருப்பதைக் காணலாம்.
Sunday, October 17, 2010
வாசகர்களின் கவனத்திற்கு
எமது இச் சம்மாந்துறை செய்தித் தளமானது எதுவித பக்கச் சார்புமன்றி எமது தனிப்பட்ட ஆக்கமாகும் அத்துடன் எதுவித பொருளாதார உதவியும் யாரிடமும் பெற்றும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது தங்களது அதாவது F & F Media இனது தனிப்பட்ட செலவில் சமூகத்திற்காக செய்யும் தொண்டு என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
Friday, October 15, 2010
இலங்கை பாடசாலை கிரிக்கட் சிறான் வீரர்கள் தேசிய மட்ட அணிக்கு தெரிவு
இலங்கை பாடசாலை கிரிக்கட் சிறான் வீரர்கள் (வயது 13-15) தேசிய மட்ட அணிக்காக தெரிவு செய்யும் போட்டிக்கு 2010.10.15 அன்று சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பயிற்சிக்காக மாவட்ட பயிற்றுவிப்பாளர் வஹரகொட அவர்களும் சம்மாந்துறை பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். ஷகீ அவர்களும் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டனர்.
இப்போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையிலிருந்து மாவட்ட அணிக்காக மூன்று துடுப்பாட்ட வீரர்களும், மூன்று பந்து வீச்சாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
பயிற்சிக்காக மாவட்ட பயிற்றுவிப்பாளர் வஹரகொட அவர்களும் சம்மாந்துறை பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். ஷகீ அவர்களும் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டனர்.
![]() |
Thursday, October 14, 2010
சம்மாந்துறையில் இருந்து முதலாவது ஹஜ் யாத்திரைக் குழு இன்று புறப்படுகிறது
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
Wednesday, October 13, 2010
சம்மாந்துறை இலாகாவுக்கு உற்பட்ட பெரும் போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்
சம்மாந்துறை
இலாகாவுக்கு உட்பட்ட சம்மாந்துறை-நிந்தவூர் வரையான பெரும்போக நெற்ச்
செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் 12.10.2010 ஆகிய இன்று அம்பாரை மாவட்ட
அரசாங்க அதிபருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் A.மன்சூரின் தலைமையில்
சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.இதில் பிரதேச
செயலாளர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள்,விவசாய
உத்தியோகத்தர்கள்,நீர்ப்பாசன இலாகு உத்தியோகத்தர்கள்,மேலும் இதனுடன்
தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Monday, October 11, 2010
உதைப்பந்தாட்டப் போட்டி
புனித ஹஜ் : இலங்கையர் 5800 பேருக்கு இம்முறை சவூதி அரசு அனுமதி
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 5800 பேருக்கு
சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. முதலாவது ஹஜ் குழு
எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதென இஸ்லாமிய
கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். நபவி தெரிவித்தார். இதற்கான
ஏற்பாடுகளை இலங்கை ஹஜ் விவகாரக் குழ மேற்கொண்டு வருகிறது.
முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sunday, October 10, 2010
சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஹாலினது கட்டிட நிர்மான பணிகளானது தீவிரமாக இடம்பெறுகிறது.
Saturday, October 9, 2010
சம்மாந்துறையில் மாபெரும் இசை நிகழ்ச்சி

சம்மாந்துறை வீரமுனை ஆர்.கே.எம். மகா வித்தியாலய மைதானத்தில் 09.10.2010 ஆகிய இன்று சுமார் 06.00 மணியளவில் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வண்டியுடன் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியானது இடம்பெற்றது.இதில் இலங்கையின் பிரபல இசைக் குழுவான நாவலப்பிட்டி கிரிசானனின் இசைக் குழுவானது கலந்து கொண்டு பெருந் திரலான மக்களை சந்தோசப்படுத்தினர்.
Friday, October 8, 2010
மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி
Thursday, October 7, 2010
கல்முனை அக்கரைப்பற்று வீதியில் பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிலும் விபத்து
கல்முனை அக்கரைப்பற்று வீதியில் நிந்தவூர் அல்லிமுல்லை சந்தி பாலத்திற்கு முன்னாக 07.10.2010 ஆகிய இன்று சுமார் 2 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்றும் கல்முனை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் விபத்துக்கு உள்ளாகியது.இதில் பஸ்ஸில் பிரயாணம் செய்த அனேகர் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.
Wednesday, October 6, 2010
பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு நாளை
06.10.2010 சிறப்பான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்.
சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது தற்பொழுது.அத்துடன் 96.1
MHz அலைவரிசையில் தாறுஸ்ஸலாம் F.Mஅங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை காற்றலையில்
தவழ்ந்து
கொண்டிருக்கின்றது.
Monday, October 4, 2010
இளைஞர் சேவை மன்ற கபடிப் போட்டி
03.10.2010 ஆம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் இளைஞர் சேவை
மன்றத்தின் வலய மட்டத்திலான கபடி இறுதிப் போட்டியானது இடம்பெற்றது.இதில்
சம்மாந்துறையைச் சேர்ந்த நிவ்சன் விளையாட்டுக் கழகமும் முபோ ஈகில் அணியும்
மோதின.போட்டியானது விறுவிறுப்புத் தன்மை குறையாததாக அரங்கேறி முபோ ஈகில்
அணியானாது வெற்றி வாகை சூடியது.28 இற்கு 12,22 இற்கு 23 என்ற புள்ளிகள்
அடிப்படையில் இரு சுற்றுக்களும் முடிவுற்றது.மேலும் இதில் வெற்றி ஈட்டிய
முபோ ஈகில் அணியினர் மாவட்ட மட்டப் போட்டிகளுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, October 3, 2010
கடந்த 28.09.2010 ஆகிய அன்று சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவில் கண்டெடுக்கப்பட்ட சடலமானது இனங்காணப்பட்டுள்ளது.
2010.10.03 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் தொடர்பாக சந்தேகம் எழுந்தது.26 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறையைச் சேர்ந்த பரவலாகப் பேசப்படும் நெளசாட் என்பவர் கடந்த 2010.10.02ம் திகதி சம்மாந்துறை பொலிஸில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார் அதாவது தனது மதினி முறையானவரும் பிள்ளையையும் காணவில்லை குறிப்பாக அவரது கணவருடன் ஓடிவிட்டார் எனவும் முறைப்பாடு செய்திருந்தார்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து குறித்த முறைப்பாடு செய்த நபரையும்,அவரது செயற்பாடுகளையும் இரககியப் பொலிஸார் புலனாய்வு செய்யத் தொடங்கினர் இதனடிப்படையில் காணாமல் போனது எனக் கூறப்படும் சம்மாந்துறை கீச்சார் லேன் இல் வசித்த சுபைர் ரப்னா வயது 25 என்பவரும்,11/2 வயது பெண் குழந்தை ஐனாஸ் என்பவருமே காணாமல் போனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.முறைப்பாடு செய்த நெளசாட்டிற்கும் காணாமல் போன ரப்னாவிற்கும் 28.09.2010ம் திகதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இனம் தெரியாத சடலத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதை அறிந்த இரகசிய பொலிஸார் உடனே நேற்று இரவு 7 மணிக்கு சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்தனர்.பொலிஸாரின் தொடர் விசாரணையைத் தொடர்ந்து இன்னும் பல மர்மங்கள் துலங்கின.அதாவது இவருக்கு உதவியாக கூலி ஆளாக இன்னுமொரு நபர் இயங்கினார் என்றும் தாயும்,மகளும் 27.09.2010ம் திகதி இரவு கொலை செய்யப்பட்டு ஆற்றில் இரகசியமான முறையில் புதைக்கப்பட்டார் எனவும் இருவரும் கட்சிதமாக காரியங்களை செய்தனர் எனவும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் அடையாளப்படுத்தப்பட்ட பெண்ணின் அக்காவின் கணவரும் ஆகும்.இக்கொலைக்கான காரணங்கள்,மேலதிக விசாரணைகள் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் சம்மாந்துறைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.மர்மங்கள் புழங்கும் போது வெளிவரும்.
சம்மாந்துறையில் சிறுவர் தினப் பெருவிழா
சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக சம்மாந்துறைக் கல்வி
வலயமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து சம்மாந்துறையில்
பெருவிழா கொண்டாடியது.சம்மாந்துறை மகளிர் கல்லூரியில் காலை 07.30 இற்கு
ஆரம்பித்த ஊர்வலம் விளினையடி ஊடாக ஹிஜ்றா சந்தியை காலை 09.30 இற்கு
வந்தடைந்தது. ஹிஜ்றா சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் அத்தனை
மாணவர்களுக்கும் தாகசாந்தி ,குடிபானம் என்பன வழங்கி சிறுவர்களுடைய
முயற்சிக்கு சங்கத்தில் உள்ள அத்தனை வர்த்தகர்களும் வீதியோரம் நின்று
சிறுவர்களை உபசரித்ததை காணக் கூடியதாக இருந்தது.ஊர்வலம் அங்கிருந்து
தொடர்ந்து சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தை 10.50 இற்கு அவ்விடத்தில்
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம்,கல்முனை வலயக் கல்விப்
பணிப்பாளர் M.T.A.தெளபீக்,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்
M.K.M.மன்சூர்,பிறை f.m வனொலி பணிப்பாளர்,கட்டுப்பாளர்,சந்தைப்படுத்தல்
பிரிவு பொறுப்பதிகாரி ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்,உதவிக் கல்விப்
பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,சகல பாடசாலை அதிபர்கள் உட்பட
ஆசிரியர்களும் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.பிரதம அதிதிககள்,கெளரவ
அதிதிகள்,அதிபர் குலாத்தினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பேன்ட் வாத்தியக்
குழு,பொலிஸ் கடேட் பிரிவு,சாரணியப் படைக்குழு,பொல்லடிக் குழு இன்னும் பல
கலாச்சார விழுமியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களினால்
வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.தேசிய பாடசாலை கொடிக்கம்பத்திற்கு அருகில்காலை 10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்தது
Saturday, October 2, 2010
SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா பயணமாகிறார் N.றுஸான் முஹம்மட்.
சம்மாந்துறை தேசிய பாடசாலையைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதியாக இந்தியாவின் சென்னை நகருக்குப் பயணமாகிறார்.மேலும் இவ் வருடப் போட்டியானது இம் மாதம் ஒக்டோபர் 21-24ம் திகதி வரை இந்தியாவின் சென்னை நகரில் இடம்பெறவுள்ளது.இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எம் ஊரைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் கலந்து கொள்வது எமது சம்மாந்துறை மண்ணுக்குப் பெருமையான விடயம் என்பதில் ஐயமில்லை.இவரை எமது செய்திப் பிரிவானது வெற்றி வாகையுடன் திரும்ப வாழ்த்துகின்றது.
Thursday, September 30, 2010
உணவகங்கள் திடீர் பரிசோதனை
01.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாரின் உதவியுடன் உணவகங்களின் தரம்,சுகாதார நிலைமைகளை பரிசோதனை செய்தனர்.இவர்கள் ஹிஜ்றா சந்தியில் காணப்படுகின்ற அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளை பரிசோதனை செய்து அறிவுறுத்தல்களை வழங்கினர்.
சிறுவர் துஷ்பிரயோகமும் உலக சிறுவர் தினமும்
முன்ஸிப் பரீட்கெலிஓயா. ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற் கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளை யும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதி யினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடு அவர்கள் அடுத்தவர் களில் தங்கிவாழ்கின்ற பலவீனர் களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின் றன. இவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிர யோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பதறகாகப் பல கொள்கைகள் மற்றும் பிரக டனங்கள் காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபை யில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய கொள்கையானது சிறுவர்க ளைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் ஐ.நா சபையானது 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் சிறுவர் கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர் காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும். ஆனால் இன் றைய மனித சமுதாயமா னது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கும் அதேவேளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன் முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்* உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.* பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.குறிப்பாக உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் இவற்றுள் ஏதாவதொரு துஷ் பிரயோகத்திற்கு முகம் கொடுத்தே வருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர் துஷ்பிரயோக வடிவங் களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகும்.
Wednesday, September 29, 2010
கெளரவ விருது
2010.09.25 இரத்தினபுரி நகர மண்டபத்தில் அகில இன நல்லுறவுகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஆய்வாளருமான ஜலீல் ஜீ அவர்களின் இலக்கிய,ஆய்வு,ஊடக முயற்சிகளைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக பொன்னாடைபோர்த்தி,சாமசிறி தேசமான்ய கெளரவ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது எமது மண் பதிக்கு பெருமையைத் தருகிறது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.



















