Tuesday, October 19, 2010

உலக கை கழுவல் தின நிகழ்வுகள்



     கடந்த 15.10.2010 அன்று உலக கை கழுவுதல் தினமானது யுனிசெப் நிறுவனத்தின் அனுசரனையுடன் அம்பாரை மாவட்டப் பாடசாலைகளில் இடம்பெற்றது.இதன் ஓரங்கமாக சேரங்கட நவோதயா பாடசாலையின் மூவின மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.இதன்போது மகோயா கல்விப் பணிபாளர் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகளுடன் கப்சோ நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ஜ்ப்பார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படத்தை படத்தில் காணலாம்.                                                                   

Monday, October 18, 2010

சம்மாந்துறையில் பெரும்போக நெற்ச் செய்கைக்கான பணிகள் ஆரம்பம்



சம்மாந்துறை பொலிஸ் வீதியில் விபத்துச் சம்பவம்


சம்மாந்துறை பொலிஸ் வீதியில் மக்கள் வங்கி எதிரில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் இன்று விபத்துகு உள்ளாகியது இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமுற்ற நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

மற்றுமொரு ஹஜ் யாத்திரைக் குழுவானது இன்று பயணமாகிறது சம்மாந்துறையில் இருந்து


இன்று அதாவது 18.10.2010 ஆகிய இன்று 85 பேரைக் கொண்ட ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று சம்மாந்துறையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.இவர்கள் சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன் புறப்பட்டுச் சென்றனர்.

பிரமாண்டமான வெள்ளைப் பிரம்பு தினம்


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு 18.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு அற்றோர் அமைப்பினால் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக - சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர்,கெளரவ அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,விழிப்புனர்வற்றோர் சங்க தலைவர் உஸாமா சியாத், சிறப்பு அதிதியாக இலங்கை வானொலி கூட்டுத்தாபன அறிவிப்பாளர் யூனுஸ் கே.றஹ்மான் வீற்றிருப்பதைக் காணலாம்.

Sunday, October 17, 2010

வாசகர்களின் கவனத்திற்கு

எமது இச் சம்மாந்துறை செய்தித் தளமானது எதுவித பக்கச் சார்புமன்றி எமது தனிப்பட்ட ஆக்கமாகும் அத்துடன் எதுவித பொருளாதார உதவியும் யாரிடமும் பெற்றும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது தங்களது அதாவது F &  F Media இனது தனிப்பட்ட செலவில் சமூகத்திற்காக செய்யும் தொண்டு என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

Friday, October 15, 2010

இலங்கை பாடசாலை கிரிக்கட் சிறான் வீரர்கள் தேசிய மட்ட அணிக்கு தெரிவு

இலங்கை பாடசாலை கிரிக்கட் சிறான் வீரர்கள் (வயது 13-15) தேசிய மட்ட அணிக்காக தெரிவு செய்யும் போட்டிக்கு 2010.10.15 அன்று சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.


பயிற்சிக்காக மாவட்ட பயிற்றுவிப்பாளர் வஹரகொட அவர்களும் சம்மாந்துறை பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம். ஷகீ அவர்களும் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டனர்.

இப்போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையிலிருந்து மாவட்ட அணிக்காக மூன்று துடுப்பாட்ட வீரர்களும், மூன்று பந்து வீச்சாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


Thursday, October 14, 2010

சம்மாந்துறையில் இருந்து முதலாவது ஹஜ் யாத்திரைக் குழு இன்று புறப்படுகிறது


சம்மாந்துறையில் இருந்து புனித ஹஜ் யாத்திரியை மேற்கொள்வதற்காக 15.10.2010 ஆகிய இன்று முதலாவது ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று காலை 10.00 மணியளவில் எமது ஊரின் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன்  தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ஐரிஸ் ரெட் குரோசின் 45 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் ஆண்,பெண்களுக்கான தங்குமிட வாட்டும்,சத்திர சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டு இன்று பூர்த்தியாக்காப்பட்டுள்ளது.இது 9 மாத கால செயற்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.



Wednesday, October 13, 2010

சம்மாந்துறை இலாகாவுக்கு உற்பட்ட பெரும் போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்

சம்மாந்துறை இலாகாவுக்கு உட்பட்ட சம்மாந்துறை-நிந்தவூர் வரையான பெரும்போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் 12.10.2010 ஆகிய இன்று அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் A.மன்சூரின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.இதில் பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள்,விவசாய உத்தியோகத்தர்கள்,நீர்ப்பாசன இலாகு உத்தியோகத்தர்கள்,மேலும் இதனுடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Monday, October 11, 2010

உதைப்பந்தாட்டப் போட்டி


சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் 11.10.2010 ஆகிய நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் சம்மாந்துறை ஏசியன்-B அணியினருக்கும் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் சினேகபூர்வ போட்டியானது இடம்பெற்றது.இது 1 இற்கு 1 என்ற நிலையில் போட்டியானது விறு விறுப்புமிக்கதாக சமனிலையில் முடிவடைந்தது.

புனித ஹஜ் : இலங்கையர் 5800 பேருக்கு இம்முறை சவூதி அரசு அனுமதி

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 5800 பேருக்கு சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதென இஸ்லாமிய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். நபவி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை இலங்கை ஹஜ் விவகாரக் குழ மேற்கொண்டு வருகிறது.

முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, October 10, 2010

சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஹாலினது கட்டிட நிர்மான பணிகளானது தீவிரமாக இடம்பெறுகிறது.


சம்மாந்துறை கைகாட்டி மஜீத்புர வீதியில் அன்வர் இஸ்மாயில் வித்தியாலத்திற்கு அருகாமையில் நீண்ட கால தேவையாகக் காணப்பட்ட ஓர் பள்ளியானது தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.இதன் கட்டிட நிர்மாணத்திற்கு உதவ விரும்புவோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Saturday, October 9, 2010

சம்மாந்துறையில் மாபெரும் இசை நிகழ்ச்சி


சம்மாந்துறை வீரமுனை ஆர்.கே.எம். மகா வித்தியாலய மைதானத்தில் 09.10.2010 ஆகிய இன்று சுமார் 06.00 மணியளவில் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வண்டியுடன் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியானது இடம்பெற்றது.இதில் இலங்கையின் பிரபல இசைக் குழுவான நாவலப்பிட்டி கிரிசானனின் இசைக் குழுவானது கலந்து கொண்டு பெருந் திரலான மக்களை சந்தோசப்படுத்தினர்.

Friday, October 8, 2010

மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி

சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை 01.10.2010 அன்று பி.ப.3.00 மணியளவில் மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி சம்மாந்துறை ஏசியன்    விளையாட்டுக் கழகத்திற்கும் காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இவ் உதைப்பாந்தாட்டப் போட்டியானது இடம்பெற்றது இதில் 2 இற்கு 1 என்ற அடிப்படையில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி பெற்றனர்.

Thursday, October 7, 2010

கல்முனை அக்கரைப்பற்று வீதியில் பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிலும் விபத்து

கல்முனை அக்கரைப்பற்று வீதியில் நிந்தவூர் அல்லிமுல்லை சந்தி பாலத்திற்கு முன்னாக 07.10.2010 ஆகிய இன்று சுமார் 2 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்றும் கல்முனை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் விபத்துக்கு உள்ளாகியது.இதில் பஸ்ஸில் பிரயாணம் செய்த அனேகர் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.

Wednesday, October 6, 2010

பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு நாளை


நாளை சம்மாந்துறை பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு  உற்சவமானது இடம்பெற உள்ளது.இது தொடர்பான செய்திகள் நாளை புகைப்படங்களுடன் வெளிவரும் காத்திருங்கள்.

06.10.2010 சிறப்பான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்.

சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது தற்பொழுது.அத்துடன் 96.1 MHz அலைவரிசையில் தாறுஸ்ஸலாம் F.Mஅங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை காற்றலையில் தவழ்ந்து 
                                                                            கொண்டிருக்கின்றது.

Monday, October 4, 2010

இளைஞர் சேவை மன்ற கபடிப் போட்டி

03.10.2010 ஆம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் இளைஞர் சேவை மன்றத்தின் வலய  மட்டத்திலான கபடி இறுதிப் போட்டியானது இடம்பெற்றது.இதில் சம்மாந்துறையைச் சேர்ந்த நிவ்சன் விளையாட்டுக் கழகமும் முபோ ஈகில் அணியும் மோதின.போட்டியானது விறுவிறுப்புத் தன்மை குறையாததாக அரங்கேறி முபோ ஈகில் அணியானாது வெற்றி வாகை சூடியது.28 இற்கு 12,22 இற்கு 23 என்ற புள்ளிகள் அடிப்படையில் இரு சுற்றுக்களும் முடிவுற்றது.மேலும் இதில் வெற்றி ஈட்டிய முபோ ஈகில் அணியினர் மாவட்ட மட்டப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, October 3, 2010

கடந்த 28.09.2010 ஆகிய அன்று சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவில் கண்டெடுக்கப்பட்ட சடலமானது இனங்காணப்பட்டுள்ளது.


2010.10.03  ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் தொடர்பாக சந்தேகம் எழுந்தது.26 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறையைச் சேர்ந்த பரவலாகப் பேசப்படும் நெளசாட் என்பவர் கடந்த 2010.10.02ம் திகதி சம்மாந்துறை பொலிஸில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார் அதாவது தனது மதினி முறையானவரும் பிள்ளையையும் காணவில்லை குறிப்பாக அவரது கணவருடன் ஓடிவிட்டார் எனவும் முறைப்பாடு செய்திருந்தார்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து குறித்த முறைப்பாடு செய்த நபரையும்,அவரது செயற்பாடுகளையும் இரககியப் பொலிஸார் புலனாய்வு செய்யத் தொடங்கினர் இதனடிப்படையில் காணாமல் போனது எனக் கூறப்படும் சம்மாந்துறை கீச்சார் லேன் இல் வசித்த சுபைர் ரப்னா வயது 25 என்பவரும்,11/2 வயது பெண் குழந்தை ஐனாஸ் என்பவருமே காணாமல் போனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.முறைப்பாடு செய்த நெளசாட்டிற்கும் காணாமல் போன ரப்னாவிற்கும் 28.09.2010ம் திகதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இனம் தெரியாத சடலத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதை அறிந்த இரகசிய பொலிஸார் உடனே நேற்று இரவு 7 மணிக்கு சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்தனர்.பொலிஸாரின் தொடர் விசாரணையைத் தொடர்ந்து இன்னும் பல மர்மங்கள் துலங்கின.அதாவது இவருக்கு உதவியாக கூலி ஆளாக இன்னுமொரு நபர் இயங்கினார் என்றும் தாயும்,மகளும் 27.09.2010ம் திகதி இரவு கொலை செய்யப்பட்டு ஆற்றில் இரகசியமான முறையில் புதைக்கப்பட்டார் எனவும் இருவரும் கட்சிதமாக காரியங்களை செய்தனர் எனவும்  விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் அடையாளப்படுத்தப்பட்ட பெண்ணின் அக்காவின் கணவரும் ஆகும்.இக்கொலைக்கான காரணங்கள்,மேலதிக விசாரணைகள் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் சம்மாந்துறைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.மர்மங்கள் புழங்கும் போது வெளிவரும்.

சம்மாந்துறையில் சிறுவர் தினப் பெருவிழா


சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக சம்மாந்துறைக் கல்வி வலயமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து சம்மாந்துறையில் பெருவிழா கொண்டாடியது.சம்மாந்துறை மகளிர் கல்லூரியில் காலை 07.30 இற்கு ஆரம்பித்த ஊர்வலம் விளினையடி ஊடாக ஹிஜ்றா சந்தியை காலை 09.30 இற்கு வந்தடைந்தது. ஹிஜ்றா சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் அத்தனை மாணவர்களுக்கும் தாகசாந்தி ,குடிபானம் என்பன வழங்கி சிறுவர்களுடைய முயற்சிக்கு சங்கத்தில் உள்ள அத்தனை வர்த்தகர்களும் வீதியோரம் நின்று சிறுவர்களை உபசரித்ததை காணக் கூடியதாக இருந்தது.ஊர்வலம் அங்கிருந்து தொடர்ந்து சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தை 10.50 இற்கு அவ்விடத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் M.T.A.தெளபீக்,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர்,பிறை f.m வனொலி பணிப்பாளர்,கட்டுப்பாளர்,சந்தைப்படுத்தல் பிரிவு பொறுப்பதிகாரி ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,சகல பாடசாலை அதிபர்கள் உட்பட ஆசிரியர்களும் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.பிரதம அதிதிககள்,கெளரவ அதிதிகள்,அதிபர் குலாத்தினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பேன்ட் வாத்தியக் குழு,பொலிஸ் கடேட் பிரிவு,சாரணியப் படைக்குழு,பொல்லடிக் குழு இன்னும் பல கலாச்சார விழுமியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களினால் வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேசிய பாடசாலை கொடிக்கம்பத்திற்கு அருகில்காலை 10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்தது

Saturday, October 2, 2010

SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா பயணமாகிறார் N.றுஸான் முஹம்மட்.

சம்மாந்துறை தேசிய பாடசாலையைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதியாக இந்தியாவின் சென்னை நகருக்குப் பயணமாகிறார்.மேலும்  இவ் வருடப் போட்டியானது இம் மாதம் ஒக்டோபர் 21-24ம் திகதி வரை இந்தியாவின் சென்னை நகரில் இடம்பெறவுள்ளது.இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எம் ஊரைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் கலந்து கொள்வது எமது சம்மாந்துறை மண்ணுக்குப் பெருமையான விடயம் என்பதில் ஐயமில்லை.இவரை எமது செய்திப் பிரிவானது வெற்றி வாகையுடன் திரும்ப வாழ்த்துகின்றது.

Thursday, September 30, 2010

எமது தளமானது எதுவித பக்க சார்புமின்றி உண்மைத் தகவல்களை மட்டுமே காவுகின்றது. தற்பொழுது எமது தளத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்கள், தொழிநுட்ப பிரச்சினைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உணவகங்கள் திடீர் பரிசோதனை

01.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாரின் உதவியுடன் உணவகங்களின் தரம்,சுகாதார நிலைமைகளை பரிசோதனை செய்தனர்.இவர்கள் ஹிஜ்றா சந்தியில் காணப்படுகின்ற அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளை பரிசோதனை செய்து அறிவுறுத்தல்களை வழங்கினர்.

சிறுவர் துஷ்பிரயோகமும் உலக சிறுவர் தினமும்

முன்ஸிப் பரீட்கெலிஓயா. ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற் கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளை யும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம்  விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம்  என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதி யினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடு அவர்கள் அடுத்தவர் களில் தங்கிவாழ்கின்ற பலவீனர் களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின் றனஇவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிர யோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பதறகாகப் பல கொள்கைகள் மற்றும் பிரக டனங்கள் காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் .நா. சபை யில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய கொள்கையானது சிறுவர்க ளைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் .நா சபையானது 18 வயதுக்குட்பட்ட  அனைவரையும் சிறுவர் கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர் காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும். ஆனால் இன் றைய மனித சமுதாயமா னது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கும் அதேவேளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன் முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்* உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.* பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.குறிப்பாக உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் இவற்றுள்  ஏதாவதொரு துஷ் பிரயோகத்திற்கு முகம் கொடுத்தே வருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர்  துஷ்பிரயோக வடிவங் களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம்  சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகும்.

Wednesday, September 29, 2010

கெளரவ விருது

2010.09.25 இரத்தினபுரி நகர மண்டபத்தில் அகில இன நல்லுறவுகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஆய்வாளருமான ஜலீல் ஜீ அவர்களின் இலக்கிய,ஆய்வு,ஊடக முயற்சிகளைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக பொன்னாடைபோர்த்தி,சாமசிறி தேசமான்ய கெளரவ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது எமது மண் பதிக்கு பெருமையைத் தருகிறது.
                                                                      

Tuesday, September 28, 2010

இனம் தெரியாத பிரேதமானது கண்டுபிடிப்பு

 சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவிற்குட்பட்ட பள்ளாற்றுப் பகுதியில் இனம் தெரியாத பெண் சடலம் ஆற்றில் மிதந்து வந்ததை பொதுமக்கள் 2010.09.29 அவதானித்து சம்மாந்துறைப் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.


ஸ்தலத்துக்கு சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஜெயந்த தஹனாக்க மற்றும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியகட்சகர் மெண்டிஸ்,கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர் பிரசன்னமாகி சடலத்தை ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தினர்.சடலம் இனம் காணப்படாமல் வைத்தியப் பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.விசாரணைகள் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர் திரு.மெண்டிஸிணால் முடுக்கி விடப்பட்டுள்ளது.



Monday, September 27, 2010

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அலசல்

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்
இப் பாடசாலையில் சுமார் 40 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.இதில் அதிக புள்ளியாக 183 புள்ளிகளைப் பெற்று மாகண நிலையாக 3 ஐ அச்சி முஹமட் சுஹைப் அத்னான் என்கின்ற மாணவன் பெற்றுள்ளார்.மேலும் இப் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்பு ஆசிரியர்களான MRS.RBM.MANSOOR, MRS.MM.TAHIR, MRS.AU.RIMLAN, ஆகிய ஆசிரியர்களும்,பாடசாலை அதிபர் MR.TM.THOWFEEK அவர்களும் உதவி அதிபர் MR.M.MUSTHAFFA LEBBE அவர்களும் இணைந்த புகைப்படமானது இங்கே இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக செய்திகள் வெகு விரைவில் வெளிவரும்.மேலும் ஒவ்வொரு பாடசாலையிலும் சித்தியெய்திய மாணவர்கள் தொடர்பான செய்திகள் வெளிவரும்.

சட்டவிரோதமான ஆயுதங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் l

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும் இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Saturday, September 25, 2010

மாபெரும் இஜ்திமா


25.09.2010 ஆகிய இன்று மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வாகிய இஜ்திமா ஆனது இன்று சம்மாந்துறை பத்ர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.இதில் பெறும் எண்ணிக்கையான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஏற்பாட்டுக் குழுவினரால் சுமார் 18000 பேர் எதிர்பார்க்கப்பட்டனர்.இவர்களின் எதிர்பார்ப்பானது நிராசை ஆக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியான விடயமே.

Friday, September 24, 2010

மாபெரும் ஒன்று கூடல்

25.09.2010 சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மாப் பள்ளிவாசலில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு இஜ்திமா ஆனது இடம்பெற உள்ளது.எனவே அனைவரையும் வருக வருக என அழைக்கின்றனர்.இவ் ஒன்று கூடல் நிகழ்வானது அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு இஷாத் தொழுகையுடன் முடிவடையும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

செந்நெல் கிராமத்தில் 30 வருடங்களின் பின் சபூர் சனசக் கட்டிடம் திறக்கப்படவுள்ளது.

25.09.2010 நாளை செந்நெல் கிராமம்-1,11 ஆகிய பிரதேசங்களுக்கு உரித்தான சனச கட்டிடத் தொகுதியானாது 1980ம் ஆண்டிற்குப் பின நாளை 30 வருடங்களுக்குப் பின் திறக்கப்படவுள்ளது.இதற்காக அனைத்து மக்களையும் காலை 9.00 மணிக்கு சமூகமளிக்குமாறு சனச பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
          

Wednesday, September 22, 2010

இயந்திர உற்பத்தியில் சாதனை படைக்கும் ஹிலால் என்ஜினியரிங் வேர்க்சொப்

எமது ஊரில் மட்டுமன்றி உலகப்புகழ் பெறும் அளவுக்கு அதி வினைத்திறனான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது.இவர்களின் மற்றுமோர் பாரிய கண்டுபிடிப்பாக வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அதாவது எதுவித மனிதத் தலையீடும் இன்றி சுயமாக அதாவது மின்சக்தியைக் கொண்டு காற்றினால் இயங்கக் கூடிய நெசவு உபகரணம் உற்பத்தி செய்யப்பட்டு வ்ருகின்றது.உண்மையில் இது தன்னியக்க இயந்திரத் தொகுதியாகும்.
                                                                       

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.