சம்மாந்துறையில் இருந்து புனித ஹஜ் யாத்திரியை மேற்கொள்வதற்காக 15.10.2010 ஆகிய இன்று முதலாவது ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று காலை 10.00 மணியளவில் எமது ஊரின் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
Thursday, October 14, 2010
சம்மாந்துறையில் இருந்து முதலாவது ஹஜ் யாத்திரைக் குழு இன்று புறப்படுகிறது
சம்மாந்துறையில் இருந்து புனித ஹஜ் யாத்திரியை மேற்கொள்வதற்காக 15.10.2010 ஆகிய இன்று முதலாவது ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று காலை 10.00 மணியளவில் எமது ஊரின் ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலும் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
Wednesday, October 13, 2010
சம்மாந்துறை இலாகாவுக்கு உற்பட்ட பெரும் போக நெற்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்
சம்மாந்துறை
இலாகாவுக்கு உட்பட்ட சம்மாந்துறை-நிந்தவூர் வரையான பெரும்போக நெற்ச்
செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் 12.10.2010 ஆகிய இன்று அம்பாரை மாவட்ட
அரசாங்க அதிபருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் A.மன்சூரின் தலைமையில்
சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.இதில் பிரதேச
செயலாளர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள்,விவசாய
உத்தியோகத்தர்கள்,நீர்ப்பாசன இலாகு உத்தியோகத்தர்கள்,மேலும் இதனுடன்
தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Monday, October 11, 2010
உதைப்பந்தாட்டப் போட்டி
புனித ஹஜ் : இலங்கையர் 5800 பேருக்கு இம்முறை சவூதி அரசு அனுமதி
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 5800 பேருக்கு
சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. முதலாவது ஹஜ் குழு
எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதென இஸ்லாமிய
கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். நபவி தெரிவித்தார். இதற்கான
ஏற்பாடுகளை இலங்கை ஹஜ் விவகாரக் குழ மேற்கொண்டு வருகிறது.
முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sunday, October 10, 2010
சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஹாலினது கட்டிட நிர்மான பணிகளானது தீவிரமாக இடம்பெறுகிறது.
Saturday, October 9, 2010
சம்மாந்துறையில் மாபெரும் இசை நிகழ்ச்சி

சம்மாந்துறை வீரமுனை ஆர்.கே.எம். மகா வித்தியாலய மைதானத்தில் 09.10.2010 ஆகிய இன்று சுமார் 06.00 மணியளவில் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வண்டியுடன் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியானது இடம்பெற்றது.இதில் இலங்கையின் பிரபல இசைக் குழுவான நாவலப்பிட்டி கிரிசானனின் இசைக் குழுவானது கலந்து கொண்டு பெருந் திரலான மக்களை சந்தோசப்படுத்தினர்.
Friday, October 8, 2010
மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி
Thursday, October 7, 2010
கல்முனை அக்கரைப்பற்று வீதியில் பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிலும் விபத்து
கல்முனை அக்கரைப்பற்று வீதியில் நிந்தவூர் அல்லிமுல்லை சந்தி பாலத்திற்கு முன்னாக 07.10.2010 ஆகிய இன்று சுமார் 2 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்றும் கல்முனை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் விபத்துக்கு உள்ளாகியது.இதில் பஸ்ஸில் பிரயாணம் செய்த அனேகர் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.
Wednesday, October 6, 2010
பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு நாளை
06.10.2010 சிறப்பான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்.
சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது தற்பொழுது.அத்துடன் 96.1
MHz அலைவரிசையில் தாறுஸ்ஸலாம் F.Mஅங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை காற்றலையில்
தவழ்ந்து
கொண்டிருக்கின்றது.
Monday, October 4, 2010
இளைஞர் சேவை மன்ற கபடிப் போட்டி
03.10.2010 ஆம் திகதி சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் இளைஞர் சேவை
மன்றத்தின் வலய மட்டத்திலான கபடி இறுதிப் போட்டியானது இடம்பெற்றது.இதில்
சம்மாந்துறையைச் சேர்ந்த நிவ்சன் விளையாட்டுக் கழகமும் முபோ ஈகில் அணியும்
மோதின.போட்டியானது விறுவிறுப்புத் தன்மை குறையாததாக அரங்கேறி முபோ ஈகில்
அணியானாது வெற்றி வாகை சூடியது.28 இற்கு 12,22 இற்கு 23 என்ற புள்ளிகள்
அடிப்படையில் இரு சுற்றுக்களும் முடிவுற்றது.மேலும் இதில் வெற்றி ஈட்டிய
முபோ ஈகில் அணியினர் மாவட்ட மட்டப் போட்டிகளுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, October 3, 2010
கடந்த 28.09.2010 ஆகிய அன்று சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவில் கண்டெடுக்கப்பட்ட சடலமானது இனங்காணப்பட்டுள்ளது.
2010.10.03 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் தொடர்பாக சந்தேகம் எழுந்தது.26 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறையைச் சேர்ந்த பரவலாகப் பேசப்படும் நெளசாட் என்பவர் கடந்த 2010.10.02ம் திகதி சம்மாந்துறை பொலிஸில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார் அதாவது தனது மதினி முறையானவரும் பிள்ளையையும் காணவில்லை குறிப்பாக அவரது கணவருடன் ஓடிவிட்டார் எனவும் முறைப்பாடு செய்திருந்தார்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து குறித்த முறைப்பாடு செய்த நபரையும்,அவரது செயற்பாடுகளையும் இரககியப் பொலிஸார் புலனாய்வு செய்யத் தொடங்கினர் இதனடிப்படையில் காணாமல் போனது எனக் கூறப்படும் சம்மாந்துறை கீச்சார் லேன் இல் வசித்த சுபைர் ரப்னா வயது 25 என்பவரும்,11/2 வயது பெண் குழந்தை ஐனாஸ் என்பவருமே காணாமல் போனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.முறைப்பாடு செய்த நெளசாட்டிற்கும் காணாமல் போன ரப்னாவிற்கும் 28.09.2010ம் திகதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இனம் தெரியாத சடலத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதை அறிந்த இரகசிய பொலிஸார் உடனே நேற்று இரவு 7 மணிக்கு சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்தனர்.பொலிஸாரின் தொடர் விசாரணையைத் தொடர்ந்து இன்னும் பல மர்மங்கள் துலங்கின.அதாவது இவருக்கு உதவியாக கூலி ஆளாக இன்னுமொரு நபர் இயங்கினார் என்றும் தாயும்,மகளும் 27.09.2010ம் திகதி இரவு கொலை செய்யப்பட்டு ஆற்றில் இரகசியமான முறையில் புதைக்கப்பட்டார் எனவும் இருவரும் கட்சிதமாக காரியங்களை செய்தனர் எனவும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் அடையாளப்படுத்தப்பட்ட பெண்ணின் அக்காவின் கணவரும் ஆகும்.இக்கொலைக்கான காரணங்கள்,மேலதிக விசாரணைகள் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் சம்மாந்துறைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.மர்மங்கள் புழங்கும் போது வெளிவரும்.
சம்மாந்துறையில் சிறுவர் தினப் பெருவிழா
சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக சம்மாந்துறைக் கல்வி
வலயமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து சம்மாந்துறையில்
பெருவிழா கொண்டாடியது.சம்மாந்துறை மகளிர் கல்லூரியில் காலை 07.30 இற்கு
ஆரம்பித்த ஊர்வலம் விளினையடி ஊடாக ஹிஜ்றா சந்தியை காலை 09.30 இற்கு
வந்தடைந்தது. ஹிஜ்றா சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் அத்தனை
மாணவர்களுக்கும் தாகசாந்தி ,குடிபானம் என்பன வழங்கி சிறுவர்களுடைய
முயற்சிக்கு சங்கத்தில் உள்ள அத்தனை வர்த்தகர்களும் வீதியோரம் நின்று
சிறுவர்களை உபசரித்ததை காணக் கூடியதாக இருந்தது.ஊர்வலம் அங்கிருந்து
தொடர்ந்து சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தை 10.50 இற்கு அவ்விடத்தில்
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம்,கல்முனை வலயக் கல்விப்
பணிப்பாளர் M.T.A.தெளபீக்,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்
M.K.M.மன்சூர்,பிறை f.m வனொலி பணிப்பாளர்,கட்டுப்பாளர்,சந்தைப்படுத்தல்
பிரிவு பொறுப்பதிகாரி ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்,உதவிக் கல்விப்
பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,சகல பாடசாலை அதிபர்கள் உட்பட
ஆசிரியர்களும் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.பிரதம அதிதிககள்,கெளரவ
அதிதிகள்,அதிபர் குலாத்தினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பேன்ட் வாத்தியக்
குழு,பொலிஸ் கடேட் பிரிவு,சாரணியப் படைக்குழு,பொல்லடிக் குழு இன்னும் பல
கலாச்சார விழுமியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களினால்
வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.தேசிய பாடசாலை கொடிக்கம்பத்திற்கு அருகில்காலை 10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்தது
Saturday, October 2, 2010
SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா பயணமாகிறார் N.றுஸான் முஹம்மட்.
சம்மாந்துறை தேசிய பாடசாலையைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் SEARCC 2010 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பாடசாலை மென்பொருள் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதியாக இந்தியாவின் சென்னை நகருக்குப் பயணமாகிறார்.மேலும் இவ் வருடப் போட்டியானது இம் மாதம் ஒக்டோபர் 21-24ம் திகதி வரை இந்தியாவின் சென்னை நகரில் இடம்பெறவுள்ளது.இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எம் ஊரைச் சேர்ந்த N.றுஸான் முஹம்மட் கலந்து கொள்வது எமது சம்மாந்துறை மண்ணுக்குப் பெருமையான விடயம் என்பதில் ஐயமில்லை.இவரை எமது செய்திப் பிரிவானது வெற்றி வாகையுடன் திரும்ப வாழ்த்துகின்றது.
Thursday, September 30, 2010
உணவகங்கள் திடீர் பரிசோதனை
01.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாரின் உதவியுடன் உணவகங்களின் தரம்,சுகாதார நிலைமைகளை பரிசோதனை செய்தனர்.இவர்கள் ஹிஜ்றா சந்தியில் காணப்படுகின்ற அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளை பரிசோதனை செய்து அறிவுறுத்தல்களை வழங்கினர்.
சிறுவர் துஷ்பிரயோகமும் உலக சிறுவர் தினமும்
முன்ஸிப் பரீட்கெலிஓயா. ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற் கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளை யும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதி யினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடு அவர்கள் அடுத்தவர் களில் தங்கிவாழ்கின்ற பலவீனர் களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின் றன. இவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிர யோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பதறகாகப் பல கொள்கைகள் மற்றும் பிரக டனங்கள் காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபை யில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய கொள்கையானது சிறுவர்க ளைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் ஐ.நா சபையானது 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் சிறுவர் கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர் காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும். ஆனால் இன் றைய மனித சமுதாயமா னது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக் கும் அதேவேளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன் முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்* உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.* பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்.* உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.குறிப்பாக உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் இவற்றுள் ஏதாவதொரு துஷ் பிரயோகத்திற்கு முகம் கொடுத்தே வருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர் துஷ்பிரயோக வடிவங் களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேற்படி அனைத்து நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகும்.
Wednesday, September 29, 2010
கெளரவ விருது
2010.09.25 இரத்தினபுரி நகர மண்டபத்தில் அகில இன நல்லுறவுகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஆய்வாளருமான ஜலீல் ஜீ அவர்களின் இலக்கிய,ஆய்வு,ஊடக முயற்சிகளைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக பொன்னாடைபோர்த்தி,சாமசிறி தேசமான்ய கெளரவ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது எமது மண் பதிக்கு பெருமையைத் தருகிறது.
Tuesday, September 28, 2010
இனம் தெரியாத பிரேதமானது கண்டுபிடிப்பு
சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவிற்குட்பட்ட பள்ளாற்றுப்
பகுதியில் இனம் தெரியாத பெண் சடலம் ஆற்றில் மிதந்து வந்ததை பொதுமக்கள்
2010.09.29 அவதானித்து சம்மாந்துறைப் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.
ஸ்தலத்துக்கு
சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஜெயந்த தஹனாக்க மற்றும் கல்முனை உதவி
பொலிஸ் அத்தியகட்சகர் மெண்டிஸ்,கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர்
பிரசன்னமாகி சடலத்தை ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தினர்.சடலம் இனம்
காணப்படாமல் வைத்தியப் பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.விசாரணைகள் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர்
திரு.மெண்டிஸிணால் முடுக்கி விடப்பட்டுள்ளது. Monday, September 27, 2010
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அலசல்
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம்
இப் பாடசாலையில் சுமார் 40 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.இதில் அதிக புள்ளியாக 183 புள்ளிகளைப் பெற்று மாகண நிலையாக 3 ஐ அச்சி முஹமட் சுஹைப் அத்னான் என்கின்ற மாணவன் பெற்றுள்ளார்.மேலும் இப் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்பு ஆசிரியர்களான MRS.RBM.MANSOOR, MRS.MM.TAHIR, MRS.AU.RIMLAN, ஆகிய ஆசிரியர்களும்,பாடசாலை அதிபர் MR.TM.THOWFEEK அவர்களும் உதவி அதிபர் MR.M.MUSTHAFFA LEBBE அவர்களும் இணைந்த புகைப்படமானது இங்கே இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக செய்திகள் வெகு விரைவில் வெளிவரும்.மேலும் ஒவ்வொரு பாடசாலையிலும் சித்தியெய்திய மாணவர்கள் தொடர்பான செய்திகள் வெளிவரும்.
இப் பாடசாலையில் சுமார் 40 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.இதில் அதிக புள்ளியாக 183 புள்ளிகளைப் பெற்று மாகண நிலையாக 3 ஐ அச்சி முஹமட் சுஹைப் அத்னான் என்கின்ற மாணவன் பெற்றுள்ளார்.மேலும் இப் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சை வகுப்பு ஆசிரியர்களான MRS.RBM.MANSOOR, MRS.MM.TAHIR, MRS.AU.RIMLAN, ஆகிய ஆசிரியர்களும்,பாடசாலை அதிபர் MR.TM.THOWFEEK அவர்களும் உதவி அதிபர் MR.M.MUSTHAFFA LEBBE அவர்களும் இணைந்த புகைப்படமானது இங்கே இணைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக செய்திகள் வெகு விரைவில் வெளிவரும்.மேலும் ஒவ்வொரு பாடசாலையிலும் சித்தியெய்திய மாணவர்கள் தொடர்பான செய்திகள் வெளிவரும்.
சட்டவிரோதமான ஆயுதங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் l
அம்பாறை
மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான
ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர்
ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா
வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது குறித்த திகதிக்கு
முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப்
பத்திரமின்றி சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும்
இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக
வேண்டிவரும் எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்
என்று தெரிவிக்கபட்டுள்ளது.
Saturday, September 25, 2010
மாபெரும் இஜ்திமா
25.09.2010 ஆகிய இன்று மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வாகிய இஜ்திமா ஆனது இன்று சம்மாந்துறை பத்ர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.இதில் பெறும் எண்ணிக்கையான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஏற்பாட்டுக் குழுவினரால் சுமார் 18000 பேர் எதிர்பார்க்கப்பட்டனர்.இவர்களின் எதிர்பார்ப்பானது நிராசை ஆக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியான விடயமே.
Friday, September 24, 2010
மாபெரும் ஒன்று கூடல்
25.09.2010 சம்மாந்துறை ஹிஜ்ரா ஜும்மாப் பள்ளிவாசலில் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு இஜ்திமா ஆனது இடம்பெற உள்ளது.எனவே அனைவரையும் வருக வருக என அழைக்கின்றனர்.இவ் ஒன்று கூடல் நிகழ்வானது அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு இஷாத் தொழுகையுடன் முடிவடையும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
செந்நெல் கிராமத்தில் 30 வருடங்களின் பின் சபூர் சனசக் கட்டிடம் திறக்கப்படவுள்ளது.
25.09.2010 நாளை செந்நெல் கிராமம்-1,11 ஆகிய பிரதேசங்களுக்கு உரித்தான சனச கட்டிடத் தொகுதியானாது 1980ம் ஆண்டிற்குப் பின நாளை 30 வருடங்களுக்குப் பின் திறக்கப்படவுள்ளது.இதற்காக அனைத்து மக்களையும் காலை 9.00 மணிக்கு சமூகமளிக்குமாறு சனச பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
Wednesday, September 22, 2010
இயந்திர உற்பத்தியில் சாதனை படைக்கும் ஹிலால் என்ஜினியரிங் வேர்க்சொப்
எமது ஊரில் மட்டுமன்றி உலகப்புகழ் பெறும் அளவுக்கு அதி வினைத்திறனான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது.இவர்களின் மற்றுமோர் பாரிய கண்டுபிடிப்பாக வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அதாவது எதுவித மனிதத் தலையீடும் இன்றி சுயமாக அதாவது மின்சக்தியைக் கொண்டு காற்றினால் இயங்கக் கூடிய நெசவு உபகரணம் உற்பத்தி செய்யப்பட்டு வ்ருகின்றது.உண்மையில் இது தன்னியக்க இயந்திரத் தொகுதியாகும்.
Tuesday, September 21, 2010
எமது ஊர் பாடசாலைகளில் பணிக்கூற்றுக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எமது ஊரில் புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் வருகையைத் தொடர்ந்து எமது ஊரில் பல்வேறு கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள் இடம் பெற்றுள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டு நிகழ்ச்சி ஊர் மக்கள் சார்பாகவும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
Monday, September 20, 2010
கிழக்கு மாகாண கராட்டி சுற்றுப் போட்டி
சோட்டோகன் கராதே தோ கென்சின்காய்
அசோசியேசனின் கிழக்கு மாகாணக் கிழையின் 11வது ஆண்டு நிறைவை முன்னிட்டு
(18.09.2010) சனிக் கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில்
மாபெரும் கராட்டி சுற்றுப் போட்டி ஒன்று இடம்பெற்றது. இதில் பல
அமைப்புக்களையும் பல கழகங்களையும் சேர்ந்த போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகள் வயது அடிப்படையிலும் நிறை அடிப்படையிலும் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம் அவர்களும், மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், மற்றும்பல
பிரமுவர்களும் கலந்துகொண்டனர்.
கீழே படத்தில் போட்டியாளர்கள் போட்டியிடுவதையும், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படுவதையும்,
சோட்டோகன் கராதே தோ கென்சின்காய் அசோசியேசனின் கிழக்குப் பிரதிநிதி
Sensie.A.R.M.இக்பால் அவர்களால் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்படுவதையும் ரவூப் ஹக்கீம் அவர்களால் சம்மாந்துறைப் பிரதேசசபைத் தவிசாளர் M.I.M.மன்சூர் அவர்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கப்படுவதையும் படத்தில் காணலாம்.
இஸ்லாத்தை தழுவினார் சிங்கள சகோதரர்.
எமது ஊரில் நேற்று ஓர் சிங்கள நண்பர் ஒருவர் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டார்.இவரை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று பதஹ் பள்ளிவாசலில் இடம் பெற்றது.மேலும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இச் சகோதரருக்கு உதவிய செய்ய விரும்புவோர் பதஹ் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அங்கீகாரம் இல்லா சுகவீனப் போராட்டமும் மக்களின் கொந்தளிப்பும்
இன்று எமது ஊரின் தேசிய பாடசாலை மற்றும்,அல் மர்ஜான் மகளிர் வித்தியாலய
ஆசிரியர்கள் சட்டபூர்வமற்ற ஓர் சுகவீனப் போராட்டம் நிகழ்த்தப்பட்டது.இது
தொடர்பாக எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர் அவர்கள் இது ஓர்
தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் மேலும் இது
தொடர்பான விளக்கங்களை பொது மக்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கினார்.மேலும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தேவையான ஆதரவை
பொது மக்கள் பெருவாரியாக வழங்கினர்.மேலும் 400 இற்கும் மேலான மக்கள்
கையப்பமிட்டு ஆதரவு வழங்கும் மகஜர் ஒன்றும் கையழிக்கப்பட்டது.Sunday, September 19, 2010
தனிப்பட்ட குரோதங்கள் துண்டுப் பிரசுரங்களில்
எமது ஊரில் தற்பொழுது வளர்ந்து வரும் புதுவித கலாச்சாரமாக தனது தனிப்பட்ட பகைகளை பழிவாங்கும் களமாக துண்டுப் பிரசுரம் மாறியுள்ளது.எனவே இவ்வாறான ஓர் கேவலமான கலாச்சார முறையை சில நாசகாரச் செயல்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று கூட ஓர் இவ்வாறான துண்டுப் பிரசுரமானது பள்ளிகளில் வைக்கப்பட்டு இருந்தது.இவ்வாறான நடவடிக்கைகள் எமது ஊரின் மானத்தை வாங்கக் கூடிய செயலே என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் எமது ஊரின் பெயர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் நடந்து கொள்ளுமாறு எமது செய்திப் பிரிவானது கேட்டுக் கொள்கிறது.
Friday, September 17, 2010
சம்மாந்துறை நெயினாகாடு அல்-அக்ஸா வித்தியாலயம்
சம்மாந்துறைக்கு உட்பட்ட நெயினாகாடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சது/அல் அக்ஸா வித்தியாலயமானது மாணவர்கள் கல்வி கற்பதற்கான பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலையாக இயங்கி வருகின்றது.இது தொடர்பான புகைப்படங்கள் கீழே இணைக்கப்படுகிறது.மேலும் இப் பாடசாலையின் எல்லையை உறுதிப்படுத்துவதற்கா மதில் கூட அமைக்கப்படவில்லை இவ்வாறான ஒரு நிலைமையில் இப் பாடசாலையானது இயங்கி வருகின்றது.எனவே இப் பாடசாலைக்குத் தேவையான அடிப்படை வசதியை செய்து கொடுக்குமாறு எமது செய்திப் பிரிவானது உரிய அதிகாரிகளிடம் விணயமாக கேட்டுக் கொள்கின்றது.


வெகு விரைவில் சம்மாந்துறையில் LB FINANCE
வெகு விரைவில் சம்மாந்துறையில் இஸ்லாமிய ஷரீஆவிற்கு உட்பட்ட முறையிலான வங்கிச் சேவையினை LB FINANCE நிறுவனமானது எமது ஊரில் ஆரம்பிக்கவுள்ளது.
தொடர்புகளுக்கு-
0771562184
தொடர்புகளுக்கு-
0771562184
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.


























