Sunday, September 5, 2010

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து


எமது ஊரில் நிறையவே பயிர்ச் செய்கை நிலங்கள் காணப்படுகின எனினும் அதை தரிசு நிலமாக மாற்றும் கூட்டமே அதிகம் காணப்படுகின்றன.இவ்வாறான ஓர் நிலைப்பாட்டில் தனது மூன்றாவது மொட்டை மாடியில் பயிர் செய்து புதிய பயிர்ப் பேதம் உருவாக்கிய வரலாறு உண்டு.இது உங்களுக்கு தெரியுமா?அதுவே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம்.சம்மாந்துறை விளினியடிச் சந்தியில் ஓய்வு பெற்ற முன்னால் பல-நோக்குக் கூட்டுறவுச் சங்க சபைச் செயலாளர் திரு.றசீத் அவர்களின் பொழுது போக்கு முயற்ச்சியே ஆகும்.இவர் குடியிருப்பது பிரதான வீதியில் ஆகும்.எனவே இவர் பயிர் செய்வதற்கு ஓர் அங்குல இடம் காணப்படவில்லை.இருந்தும் மன்முன்டால் இடமுண்டு எனும் பழமொழிக்கு உயிப்பூட்டியுள்ளார்.இவர் தனது கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஓர் அரையடிக்கு மண்ணிட்டு தனது பயிர்ச் செய்கையை மேற்க் கொண்டார்.தற்பொழுது அது ஓர் பல் நாட்டு மரக்கறிகளின் இராச்சியமாக மாறியுள்ளது.அவர் கூறுகையில்-
தான் சென்ற வருடம் இத் தோட்டத்தைச் செய்ய ஆரம்பித்ததாகவும் தற்பொழுது தனது பயிர்ச் செய்கையில் பூரண வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறினார்.மேலும் இவர் கூறுகையில் தான் ஓர் புதிய இன வெண்டி ஒன்றைக் கலப்புச் செய்து உருவாக்கியுள்ளதாகவும்,அது சிறிய பருவத்திலேயே காய்க்கக் கூடியது எனவும் அத்துடன் சிறந்த நோய் எதிர்ப்புள்ள வீரியமான இனம் இது எனக் குறிப்பிட்டார்.இவ்வாறான திறமையுள்ள எத்தனையோ திறமைசாலிகள் எமது ஊரிலே காணப்பட்ட பொழுதும் அவர்களுடைய திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.எனவே இவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வர எமது செய்திப் பிரிவு தொடர்ச்சியாக உழைக்கும் என்பதில் ஐயமில்லை.எனவே இவ்வாறான திறமைகளை நீங்களும் இனங்காட்டலாம்.



















நோன்பின் கொண்டாட்டம் பள்ளிவாசல்களின் அழகில்

சம்மாந்துறை புதுப் பள்ளிவாசல்
சம்மாந்துறை புதுப் பள்ளிவாசல்
நோன்பின் தரிசனம் பள்ளிகளின் ஆனந்த அழகை ஆர்ப்பரிக்க வைக்கின்றன.இவ்வாறான நோன்பின் தரிசன அழகைச் சுட்டும் அழகான வர்ண ஜாலங்கள் நாளை வெளி வரும்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் துரித வளர்ச்சி

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியானது தற்பொழுது  மிக வளர்ச்சி கண்டுள்ளது.இது DR.A.இஸ்ஸதீன் அவர்களின் வருகையை தொடர்ந்தே இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.இவ் அபிவிருத்தி தொடர்பான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.






Friday, September 3, 2010

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்


இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

வெகு விரைவில் வரலாற்று ஆய்வு நூல்

சம்மாந்துறை வரலாற்று ஆய்வாளர் ஜலீல் ஜீ இன் சம்மாந்துறை மண்பதியின் கலை இலக்கிய பிரசவங்கள் என்ற சம்மாந்துறையின் வரலாற்று அலசல் நூல்  




Thursday, September 2, 2010

விவசாய ஆராய்ச்சி நிலையம் தொடர்பான அறிவுறுத்தல்

சம்மாந்துறை வாழ் மக்களுக்கு விவசாய ஆராய்ச்சி நிலையம் தொடர்பாக விளக்கம் தருகிறார் சம்மாந்துறை விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி திரு.இக்பால் அவர்கள்.செவ்வி கீழே இணைக்கப்பட்டுள்ளது
பாகம்-1



எமது செய்திப் பிரிவினர் அங்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.


தற்பொழுது நிர்மாணிக்கப்படுகின்ற புதிய கட்டிடத் தொகுதி

சம்மாந்துறை ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப்பின் மற்றுமோர் மைல் கல்

M.I.M.MAJEED (M.D)











எமது ஊரின் தலை சிறந்த எஞ்சினியரிங் வேர்க் சொப்பான ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப் நிருவனத்தினர் தமது உற்பத்திகளின் மற்றுமோர் வெற்றிப் பாதையின் மற்றுமோர் இலக்கை எட்டியுள்ளனர்.இவர்களது நெசவுத் தொழிலில் பயனபடும் நூல் சுற்றும் எந்திர உற்பத்தியானது உலகளவில் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.ஏனெனில் இவ் இயந்திரத்தை இந்தியா மற்றும் சைனா போன்ற நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.எனினும் எமது மண்ணில் பிறந்த ஹிப்கோ அச்சகம்,ஹிலால் எஞ்சினியரிங் வேர்க் சொப் நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ்-M.I.M.மஜீத் அவர்களின் அயராத முயற்ச்சியின் பயனாகவே இன்று ஓர் உலகப் புகழுக்குரிய உற்பத்தியை உருவாக்கி எம் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளது.இவ்வாறான உற்பத்திகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் மற்றும் மக்களாகிய நாம் அனைவரும் ஊக்கம் அளிக்க வேண்டும் என எமது செய்திப் பிரிவு கேட்டுக் கொள்கிறது.மேலும் இவ் இயந்திர உற்பத்தியாளர் ஓர் சிறந்த சிக்கனப் பொருள் உற்பத்தியாளர் கூட.இவர் மின்சாரனம் இன்றி விறகினால் குறைந்த விறகுச் செலவுடன் oven ஒன்றினைக் கூட உருவாக்கியுள்ளார்.
.மேலும் எமது ஊரின் கண்டுபிடிப்பாளர் அவருடைய இவ் உற்பத்தியில் உதவிய அனைவருகும் நன்றியைத் தெரிவித்தார்.. குறிப்பாக ஆசிக் (ஹிப்கோ) அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.இவற்றின் புகைப்படங்களானது  கீழே இணைக்கப்பட்டுள்ளது.எனவே இவ்வாறான ஓர் ஆக்க பூர்வமான ஓர் உற்பத்தியாளரை எமது ஊரான சம்மாந்துறை கொண்டுள்ளதையிட்டு பெருமையடைகிறது.இவருடன் நீங்கள் தொடர்பு கொள்ள-0772301817,0672260326












Tuesday, August 31, 2010

விளையாட்டு வளம்

எமது ஊரான சம்மாந்துறையில் உள்ள விளையாட்டு பல் மாடிக் கட்டிடத் தொகுதியை எமது இளைஞர்கள் பயன்படுத்தும் அளவு போதாது என நிருவாகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே இளைஞர்களே தாங்கள் படிப்புடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி இருக்கும் வளத்தைக் கொண்டு உச்ச பயனைப் பெறுவோமாக.





         

மண் ஏற்றும் பார ஊர்தியால் ஏற்பட்ட வினை

சம்மாந்துறை பெளசி மாவத்தையில் இருந்து செந்நெல் கிராமத்தை இணைக்கும் பாதையானது பார ஊர்திகளின் கூடுதலான போக்குவரத்துக் காரணமாக மக்கள் பாவனைக்கு இடரான பாதையாக மாறியுள்ளது.இது கரடு முரடான கற்பாறையாக உருமாறியுள்ளதைப் படத்தில் காணலாம்.இதன் மூலம் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.எனவே உரிய அதிகாரிகள் கருத்திற்க் கொண்டு பாதையை திருத்தி அமைக்குமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் புதிய நிலைப் புகைப்படங்கள் இதோ


சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலின் பழைய நிலைப் புகைப்படங்கள் இதோ





சம்மாந்துறை செட்டைவட்டை வீதியில் மக்கள் திடீர் பதற்றமுற்றுள்ளனர்

இன்று சம்மாந்துறை முகைதீன் மாவத்தையில் மக்கள் திடீர் பதற்றமுற்றுள்ளனர்.ஏனெனில் அங்கு ஒரு சிறுமியினால் இனங்காட்டபட்டுள்ள ஓர் இறந்த பெட்டியில் காணப்பட்ட கைக்குண்டே காரணமாகும்.இவ் இறந்த பெட்டி ஒன்றினுள் கைகுண்டு ஒன்று காணப்படுகிறது இதை புகைப்படதில் காணலாம்.இதை ஒரு சிறுமியே இனங்காட்டியுள்ளார்.இது குறித்து அச் சிறுமி கூறுகையில்-
தான் விளையாடுவதற்காக சுமார் 11.30 அளவில் பக்கது வளவிற்குச் சென்றதாகவும்
அங்கு உமி குமித்துக் காணப்பட்டதாகவும் அதற்கு பின்னால் ஓர் இறந்த பெட்டி ஒன்றினுள் எதோ இறந்த பொருள் ஒன்ரு காணப்பட்டதாக்வும் அதை அம்மா அக்கம் பக்கதில் உள்ளவர்களிடம் கூறியதாகவும் அச்சிறுமி கருத்து தெரிவித்தார்.

பின் பொலிஸார் சம்பவ இடதிற்கு விரைந்து குண்டு செயலிழக்கும் பிரிவினரால் சுமார் 3.45 அளவில் கைக்குண்டானது  செயழிலக்கப்பட்டது.   
                                                                      

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.